Wednesday

தேசிய பங்கு சந்தை 04-11-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் நேற்றைய முடிவு, தற்போதைய Future market நிலைமை, ஆசிய சந்தைகளின் நிலைமை, இதனை தொடர்ந்து Singapore nifty யின் நிலைமை, இவைகள் எல்லாம் நமது சந்தைக்கு தொடக்கத்தில் சில உயர்வுகளை தந்தாலும், பதட்டம் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை, பொதுவாக தொடர் உயர்வுகளுக்கு தடையாக 4610 to 4635 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகளும், தொடர் வீழ்ச்சிக்கு support ஆக 4470 to 4450 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்,,,

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை இன்று 4583 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் தொடர்ந்து உயரும் வாய்ப்பகள் ஏற்படுமாயின், 4612, 4673 என்ற புள்ளிகள் முக்கியமான தடையை இன்று தரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இதே போல் 4561 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து கீழ் இறங்கும் வாய்ப்புகள் உருவாகலாம், அப்படி தொடர்ந்து கீழ் இறங்க நேர்ந்தால் 4470 to 4458 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக இருக்கலாம்,,,

இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடருமானால், அடுத்த support ஆக 4397, 4330 என்ற புள்ளிகளை சொல்லும் வாய்ப்புகளும் உள்ளது, பொதுப்படையாக nifty ஐ பற்றி சொல்ல வேண்டுமானால் 4539 என்ற புள்ளியை கீழே கடக்காமல், தொடர்ந்து முன்னேறினால் 4610, 4670 to 4680, 4700, 4735 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம், மேலும் 4820 to 4860 என்ற புள்ளிகள் Fibonacci அளவுகளின் படி முக்கியமான தடைகளாக செயல்படும் வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது, அதே போல் 4538 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4450, 4330 என்ற புள்ளிகள் வரை கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது ….

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4583 Target 4596 to 4600, 4612, 4629, 4640, 4658, 4666, 4673, 4734, 4756

Nifty Spot below 4561 Target 4546, 4538 to 4532, 4508, 4500, 4480, 4470, 4458, 4409, 4400 to 4397, 4330

கவனிக்க வேண்டிய பங்குகள்

Axis Bank

Buy above 888 Target 914, 917, 920, 930, 935, 943, 947, s/l 886

Sell below 886 Target 877, 871, 865 to 864, 858, 850, 843, s/l 888

Tuesday

தேசிய பங்கு சந்தை 03-11-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை Dow Jones 9850 என்ற புள்ளியில் தடைகளை பெரும் வாய்ப்புகள் உள்ளது, அமெரிக்க future market, ஆசிய சந்தைகள், Singapore nifty இவற்றின் நிலைகளை வைத்து பார்க்கும் போது, 4621 என்ற புள்ளி நமக்கு முக்கியமான support புள்ளியாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் ,,,

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை இன்று 4728 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கலாம், மேலும் 4812 என்ற புள்ளி முக்கியமான தடைகளை தரலாம், அதே போல் 4708 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் அடுத்த முக்கியமான support ஆக 4621 என்ற புள்ளி செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை,

மேலும் இனி வரும் தினங்களில் nifty 4687 என்ற புள்ளியை கீழே கடக்காமல் தொடர்ந்து முன்னேற முற்பட்டால், பின் வரும் புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் (4812, 4855, 4877, 4897, 4936, 4994 ), அதே போல் 4650 to 4621 என்ற புள்ளிகள் முக்கியமான support இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளிகளை கடந்து தொடர்ந்து எதிர்மறையான போக்கில் nifty நகரும் பட்சத்தில் 4450 என்ற புள்ளி உடனடி சாத்தியமாகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது...

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4728 Target 4744, 4771 to 4778, 4801 to 803, 4812, 4821, 4832, 4855, 4877, 4902, 4917, 4933, 4961

Nifty Spot below 4708 Target 4697, 4678,4660, 4648, 4621, 4575, 4450, 4366

கவனிக்க வேண்டிய பங்குகள்

Hindalco

Buy around 121 to 120 Target 125, 126.5, 1328, 130, 134 s/l 120

Sell below 120 Target 117.5, 115.5, 111, 103.5, 98.7, s/l 121.5

Monday

Dow Jones ஒரு பார்வை – 02-11-09


அமெரிக்க சந்தைகள் தடுமாற்றக்த்துடன் இருக்கும் இந்த நேரத்தில், அதன் அடுத்த கட்ட நகர்வுகள் Technical ஆக எப்படி இருக்கலாம் என்பதினை வரை படங்களுடன் காணலாம், கீழே உள்ள Dow Jones இன் படத்தை பாருங்கள், இந்த படத்தில் சில அமைப்புகள் உடைபட்டு இருப்பதும், சில அமைப்புகள் இன்னும் உடைபடாமல் support கொடுத்து கொண்டு இருப்பதும் தெரியும், ஆகவே எந்த எந்த விஷயங்கள் சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கின்றது என்பதினை பார்ப்போம்,

கீழே கொடுத்துள்ள முதல் படத்தில் கீழ் கண்ட விஷயங்கள் அமைந்துள்ளன

Rising Wedge - Red Colour

Channel - Green Colour

Trend line - Blue Colour

Moving Ave - Black Colour

Dow 1st picture


Dow Jones 2nd picture (enlarge picture of squared area of 1st picture)




Rising Wedge:-

கடந்த 27-10-09 அன்று 9850 என்ற புள்ளியை உடைத்து கீழே கடந்து இருப்பதை பாருங்கள், இந்த அமைப்பின்படி Dow Jones கீழ் இறங்க வேண்டுமாயின், இதன் கீழ் நோக்கிய இலக்கு 8470 என்ற புள்ளி இருக்கலாம், (இவ்வாறு இறங்க இன்னும் சில விஷயங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்)…

Channel:-

செப்டம்பர் மாதத்தில் இருந்து Dow Jones, பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள channel என்ற அமைப்பில் நகர்ந்து வருவதை படத்தில் பாருங்கள், இந்த அமைப்பின் படி channel support ஆக 9689 என்ற புள்ளியில் support பெற்றுள்ளது, (கடந்த வெள்ளியன்று (30-10-09) இந்த புள்ளியில் support எடுத்து, அந்த புள்ளியில் முடிந்துள்ளது, இந்த அமைப்பின் படி 9680 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து முடிவடைந்தால், இதன் கீழ் நோக்கிய இலக்காக 9200 என்ற புள்ளி இருக்கும்…

Trend Line Support:-

நீல நிறத்தில் அமைந்துள்ள channel support line ஐ ஒட்டியே அமைந்து இருக்கும் இந்த Trend line support ஆனது, 9678 என்ற புள்ளியில் அமைந்து உள்ளது,

Moving Average supports:-

கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள இரண்டு Moving average கோடுகள் முறையே 50 நாள் DEMA ஆகவும் மற்றது 200 DEMA ஆகவும் செயல்படுகிறது, இந்த புள்ளிகள் முறையே 9678 இல் 50 DEMA support ம் 9200 to 9180 என்ற புள்ளிகள் 200 DEMA support ஆகவும் இருந்து வருகிறது, இந்த support புள்ளிகள் முக்கியமானது

Fibonacci Support :-

இதனை தொடர்ந்து Fibonacci support களாக 9642, 9346, 9255, 9109, 8863, என்ற புள்ளிகள் இருக்கும்

மேற்கண்டவைகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது :-

மேற்கண்ட விசயங்களில் இருந்து நாம் சில விசயங்களை உறுதி செய்து கொள்ளலாம், அதாவது 9670, மற்றும் 9640 என்ற புள்ளிகளை கீழே கடந்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் எதிர்மறையான போக்கில் Dow Jones முடிவடயுமானால், அதன் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 9345, 9250 to 9200 என்ற புள்ளிகள் அமையலாம், அதே போல் தொடர்ந்து 9100 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடயுமானால், அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 8860, 8470 என்ற புள்ளிகள் அமையலாம் மேலும் 8300 to 8275 என்ற புள்ளிகளுக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இவைகள் என் ஆய்வின் அடிப்படையில் ஏற்ப்பட்ட கருத்துகளே...