Thursday





Nifty Spot What Next :-

Nifty spot அநேக  தடைகளை கடந்து தொடர்ந்து முன்னேறக்கூடிய  நிலையில் இருந்தாலும் மேலே உள்ள படத்தை பார்க்கும்பொழுது இனி வரும் தினங்களில் சக்தியுடன் தொடர்ந்து முன்னேறுமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது, ஏனெனில் Raising Wedge என்ற வடிவம் மிக துல்லியமாக அமைந்து வருவதாலும், Channel top resistance line அருகிலே அமைந்து வருகின்ற காரணத்தினாலும் சந்தையில் எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் இறக்கங்கள் சாத்தியப்படும் நிலையில் தான் உள்ளது,

அதே நேரம் 5280, 5320 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும் என்ற நிலையிலும் சந்தை மாட்டிக்கொண்டுள்ளதையும்  மறுக்க முடியாது, ஆகவே இன்னும் சில தினங்களில் சந்தை இந்த புள்ளிகளை மெல்ல அடையலாம், அதே நேரம் இந்த நகர்வுகளும் நாம் மேலே பார்த்த Raising Wedge மற்றும் Channel top resistance line க்கு உட்பட்டே இருக்கும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், அதன் பிறகு  வீழ்ச்சிகள் தொடரலாம், அதே நேரம் 5350 என்ற புள்ளியை மேலே பலமுடன் கடந்து செல்லும் வாய்ப்புகள் வந்தால் அடுத்து 5550 ஐ நோக்கிய பயணம் எளிதாகும், கூடவே 5600 to 5650 க்கும் வாய்ப்புகள் உள்ளதையும்  மறுக்க முடியாது.

மேற்சொன்ன புள்ளிகளை தொட்டோ அல்லது தொடாமலோ கீழே இறங்கும் சூழ்நிலைகள் வந்தால் 5135, 5100 என்ற புள்ளிகள் முதல் நிலை சப்போர்ட் ஆகவும், தொடர்ந்து இதக்ற்கும் கீழ் வந்தால் அடுத்து 4990, 4900, 4850 என்ற புள்ளிகள் அடுத்த நிலை இலக்காகவும், சப்போர்ட் ஆகவும் செயல்படும்   



Monday

NIFTY SPOT ON 25-10-11

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் மிக நீண்ட இடைவெளி, சரி சந்தையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சற்று பார்க்கலாம்..

தற்பொழுதுள்ள நிலையில் 5170, 5200, 5230 என்ற புள்ளிகள் எல்லாம் கடந்து நின்றால் தான் அடுத்து 5310, 5420 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் உருவாகும், 

அதே நேரம் 5020, 4985 என்ற புள்ளிகள் நேர்த்தியான support ஆக செயல்படும், இதற்கும் கீழ் 4890, 4830 என்ற புள்ளிகள் அடுத்த நிலை support ஆக செயல்படும். 

இன்றைய சந்தையின் நிலைகளை பற்றி சற்று பார்க்கலாம் : 

 இன்று 5116 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 5132 , 5152 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் உருவாகும், தொடர்ந்து 5152 என்ற புள்ளியை மேலே கடந்து பலமுடன் நின்றால் அடுத்து 5170 , 5215, 5228 போன்ற முக்கியமான புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகும்.  

அதே போல் இன்று 5092, 5080 , 5064 , மற்றும் 5050 என்ற புள்ளிகள் எல்லாம் நல்ல சப்போர்ட் ஆக செயல்படும், இதற்கும் கீழ் 5009 என்ற புள்ளி அடுத்த நிலை சப்போர்ட் என்று சொல்லலாம்

Sunday

விரைவில் இன்றைய சந்தை எப்படி நகரும் என்ற Pre Market Alert பகுதி தொடங்கப்படும்