Monday

NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள் 15/10/18


NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள்  15/10/18

நாம் எதிர்பார்த்தது போல் NIFTY SPOT 10675 ஐ உடைத்து கீழே 10138 என்ற புள்ளியை வந்தடைந்து தற்பொழுது உயர்ந்து வருகிறது, இந்த உயர்வு தொடர்ந்து உயருமா அல்லது மாற்றங்கள் இருக்குமா என்று பார்ப்போம்... 

தற்பொழுதைய நிலை அதாவது தொடர் உயர்வுக்கான வாய்ப்புகள் 10580 டு 10600 என்ற புள்ளிகளில்  சில தடுமாற்றங்களை சந்திக்கும் என்றே தோன்றுகிறது , ஒருவேளை இந்த புள்ளிகளை கடந்து மேலே சென்றாலும் அடுத்து முக்கியமான தடையாக 10750 என்ற புள்ளி  இருக்கும் ...

ஆகவே 10750 என்ற புள்ளியை  மிக பலத்துடன் கடந்தால் மட்டுமே அடுத்து தொடர் உயர்வுகள் அதாவது 13500 என்ற புள்ளியை நோக்கி NIFTY SPOT நகரும், 

அப்படி இல்லாமல் மேற்கண்ட இரண்டு புள்ளிகளில் எந்த புள்ளியில் தடைகளை சந்தித்தாலும்  கீழே வரும் வாய்ப்புகள் அதிகம், அதாவது தற்பொழுதைய LOW புள்ளியான 10138 ஐ கீழே கடந்து 10100 டு 10090 என்ற புள்ளிகளில் சப்போர்ட் எடுத்து திரும்பும் வாய்ப்புகள் ஏற்படும்...

ஆகவே இந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதாவது 10100 டு 10090 என்ற  புள்ளிகளை நீங்கள் கண்டால் தைரியமாக உங்களின் முதலீடுகளை செய்யலாம் அடுத்து தொடர் உயர்வு இருக்கும்...

அதே நேரம் நீங்கள் 10100 டு 10090 என்ற புள்ளிகளில் வாங்கும் அனைத்து பங்குகளுக்கும்   NIFTY SPOT இன் 10050 க்கு கீழ் CLOSE என்ற சூழ்நிலை   STOP LOSE ஆக இருக்கும், 

அவ்வாறு நிகழ்ந்தால் அனைத்து பங்குகளையும் சிறிய நட்டங்களில் அல்லது வாங்கிய விலையிலோ விற்று விட்டு NIFTY SPOT இன்  அடுத்த சப்போர்ட்க்காக காத்து இருங்கள் ... 

NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள் 01/10/2018


NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள் 


NIFTY SPOT 10850 என்ற புள்ளியை சற்று தடுமாற்றத்துடன் கையாள்வதால் கீழ்கண்ட புள்ளிகள் அடுத்த முக்கியமான நகர்வுகளை தீர்மானிக்கும் 

அதாவது 10700 முதல் 10675 என்ற புள்ளிகளை கீழே விடாமல் திரும்பும் பட்சத்தில் தொடர் உயர்வுகளையும், அப்படி அல்லாமல் 10675 என்ற புள்ளியையே கடந்து கீழே முடிவடையுமானால், அடுத்து நேரடியாக 10100 முதல் 10090 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

அதே நேரம் 11180 க்கு மேல் நிலையாக நின்றால்  NIFTY  தனது மேல் நோக்கிய பயணத்தை மீண்டும் தொடரும் இலக்காக நாம் முன் பதிவில் சொன்ன புள்ளிகள் இருக்கும் 

இனி வரும் மாதங்கள்  நிறுவனங்கள் தங்களின் RESULT வெளியிடும் மாதங்களாக இருப்பதினால் தனிப்பட்ட பங்குகளின் உயர்வு தாழ்வுகள் ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ளலாம் 

Thursday

NIFTY SPOT இனி வரும் நாட்களில் எப்படி நகரும்



21-09-2018

வணக்கம் நண்பர்களே வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தையின் நகர்வை பற்றி பதிவிடுவதில்  மகிழ்ச்சி 

கடந்த 15 தினங்களாக தொடர்ந்து சந்தையில் இறக்கங்களை காணும்பொழுது பழைய தொடர் வீழ்ச்சிகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் பயம் காட்டி வருகிறது , இந்த நேரத்தில் இந்த பதிவு தேவை என்ற  காரணத்தினால் படத்துடன் கூடிய விளக்கம் கொடுக்கின்றேன், கீழே உள்ள படத்தினை பெரிதாக்கி பாருங்கள் 


                                 


கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை NIFTY SPOT   UPWARD RAISING CHANNEL  என்ற வடிவத்தின் வழியே பயணம் செய்வதை காணலாம் , இதில் நான்கு முறை தடைகளையும் , நான்காவது முறையாக இப்பொழுது சப்போர்ட்  எடுக்கும் நிலையில்  இருப்பதையும்  காணலாம், 

இந்த சப்போர்ட் நிலை என்பது சரியாக 11210 என்ற புள்ளியில் உள்ளது, ஒருவேளை இந்த 11210 என்ற புள்ளியையும் கடந்து கீழே சென்றால் அடுத்ததாக 11165, 11146 என்ற புள்ளிகள் மிக முக்கியமான சப்போர்ட் நிலையாக செயல்படும்,

அப்படி இல்லாமல் தொடர்ந்து கீழே வந்து 11100 என்ற புள்ளியை உடைத்து 11050 என்ற புள்ளிக்கும்  கீழே CLOSE ஆனால் அடுத்து தொடர் இறக்கத்தை நாம்  எதிர்பார்க்கலாம், அதன் TARGET ஆக  10850, 10675, 10550 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம். 

அப்படி இல்லாமல்  11210 அல்லது 11165 டு 11145 என்ற புள்ளிகளுக்குள் சப்போர்ட் எடுத்து திரும்பினால் 11450 என்ற புள்ளி தடையாக இருக்கும், அதை தொடர்ந்து மேலே சென்று  11650 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் CLOSE ஆகுமேயானால்! நாம் 13500 டு 13900 என்ற புள்ளிகளை மிக மிக விரைவில் எதிர்பார்க்கலாம் (இந்த வருடத்திற்குள் வந்தால் கூட ஆச்சர்யம் இல்லை )..


எனது இலக்கு 16500 டு 17000 மிக மிக விரைவில் (2019 ன்  பாதிக்குள் )

ஆகவே நல்ல பங்குகளில் முதலீடு செய்ய தயாராக இருக்கலாம் 

நன்றி