Wednesday

NIFTY FUTURE 04-04-2019


NIFTY FUTURE 

நாம்  எதிர்பார்த்தது போல் NIFTY FUTURE 11600 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வந்து 11350 என்ற புள்ளியின் அருகில் சப்போர்ட் எடுத்து தற்பொழுது 11800 டு 11850 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வர முயற்சிக்கின்றது, 

தற்பொழுது இதன் தொடர்ச்சியாக 11840 டு 11900 என்ற புள்ளிகள் மிக மிக முக்கியமான தடைகளாக இருக்கும் ஆகவே ஒவ்வொரு உயர்வையும் SHORT SELLING என்ற வர்த்தகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம், 

இவ்வாறு செய்யும் SHORT SELLING இன்  இலக்காக 11630 என்ற புள்ளி முதல் இலக்காகவும், இந்த புள்ளியை கடந்து கீழே தொடர்ந்து 2 நாட்கள் CLOSE ஆகும் சூழ்நிலையில் அடுத்து இலக்காக 11230 என்ற புள்ளி  இருக்கும் அதற்கும்  கீழ் 11100 என்ற புள்ளி நல்ல சப்போர்ட் ஆக செயல்படும். 

அடுத்த மூன்று நான்கு தினங்கள் இறக்கமாக இருந்தாலும் திடீர் உயர்வுகளும் 11800 டு 11850 என்ற புள்ளிகளை நோக்கி ஏற்படலாம் , அப்படி நடந்தால் அதனை SHORT SELLING செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் , இதற்கான STOP LOSS ஆக 11880 டு 11900 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம். 

பொதுவாக இப்பொழுது 12000 க்கு மேலான தொடர் CLOSE என்ற நிலையே அடுத்த தொடர் உயர்வுகளை நமக்கு உறுதி செய்யும் அதுவரை இறக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் ...

இந்த மாதம் முன் பின் நகர்வுகள் இருந்தாலும் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே நல்ல இறக்கங்களை எதிர் பார்க்கலாம் ஆகவே DELIVERY TRADE செய்பவர்கள் சற்று பொறுமை காத்து நல்ல பங்குகளை இனம் காண்பது நல்லது இறங்கும் பொது நல்ல விலையில் வாங்கலாம் ...

NIFTY FUTURE EOD CHARTS 





Tuesday

NIFTY FUTURE HERE AFTER (12-03-19)


NIFTY FUTURE HERE AFTER (12-03-19)


முக்கியமான புள்ளியான 11200 ஐ NIFTY FUTURE எளிதாக கடந்து அதற்கும் மேல் முடிவடைந்து இருப்பதால் இனி இதன் நகர்வுகள் கீழ் கண்டது போல் இருக்கும், 

அதாவது 11375, 11425 என்ற புள்ளிகள் சில தடைகளை கொடுத்து NIFTY FUTURE ஐ கீழ் நோக்கி இழுக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் , ஒருவேளை இந்த புள்ளிகளை கடந்து நல்ல பலத்துடன் CLOSE ஆகும் நிலையில், அடுத்த தடை புள்ளிகளாக 11550, 11600 என்ற புள்ளிகள் செயல்படும். 

இதற்கும்  மேல் பலத்துடன் CLOSE  ஆனால் அடுத்து 11800 என்ற புள்ளி இலக்காக இருக்கும்... 

ஒருவேளை மேற்கண்ட எந்த புள்ளிகளிலாவது தடைகளை சந்தித்து கீழே வருமானால் அதற்கான முதல் SUPPORT ஆக 11000 என்ற புள்ளி இருக்கும்.

தற்பொழுது முக்கியமான பங்குகளை  கவனமாக பாருங்கள் உயர் நிலைகளில் செல்லிங் PRESSURE இருக்குமேயானால் மிகவும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டிய தருணமாகவே சந்தையை அணுக வேண்டும்,  

NIFTY FUTURE EOD 



தின வர்த்தகம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், இன்றய நட்டம் இன்றோடு மட்டுமே, வீட்டிற்கு  எடுத்து செல்ல கூடாது , அதே போல் சிறிய லாபங்களை உடனடியாக புக் செய்வதும் சிறந்ததே  

Monday

NIFTY FUTURE 04-03-19




ELECTION RESULT  வரும் வரைக்குமான நகர்வுகள் 10600 - 10650 TO 11150 - 11200 என்ற புள்ளிகளின் இடையே இருக்கும் , 

11200 க்கு மேல் 11800 என்ற புள்ளியை நோக்கியும் , 10600 க்கு கீழ் 10000 என்ற புள்ளியை நோக்கியும்  ELECTION RESULT க்கு பிறகான நகர்வுகள் இருக்கும் ... 


NIFTY FUTURE EOD CHART