21-09-2018
வணக்கம் நண்பர்களே வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தையின் நகர்வை பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி
வணக்கம் நண்பர்களே வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தையின் நகர்வை பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி
கடந்த 15 தினங்களாக தொடர்ந்து சந்தையில் இறக்கங்களை காணும்பொழுது பழைய தொடர் வீழ்ச்சிகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் பயம் காட்டி வருகிறது , இந்த நேரத்தில் இந்த பதிவு தேவை என்ற காரணத்தினால் படத்துடன் கூடிய விளக்கம் கொடுக்கின்றேன், கீழே உள்ள படத்தினை பெரிதாக்கி பாருங்கள்
கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை NIFTY SPOT UPWARD RAISING CHANNEL என்ற வடிவத்தின் வழியே பயணம் செய்வதை காணலாம் , இதில் நான்கு முறை தடைகளையும் , நான்காவது முறையாக இப்பொழுது சப்போர்ட் எடுக்கும் நிலையில் இருப்பதையும் காணலாம்,
இந்த சப்போர்ட் நிலை என்பது சரியாக 11210 என்ற புள்ளியில் உள்ளது, ஒருவேளை இந்த 11210 என்ற புள்ளியையும் கடந்து கீழே சென்றால் அடுத்ததாக 11165, 11146 என்ற புள்ளிகள் மிக முக்கியமான சப்போர்ட் நிலையாக செயல்படும்,
அப்படி இல்லாமல் தொடர்ந்து கீழே வந்து 11100 என்ற புள்ளியை உடைத்து 11050 என்ற புள்ளிக்கும் கீழே CLOSE ஆனால் அடுத்து தொடர் இறக்கத்தை நாம் எதிர்பார்க்கலாம், அதன் TARGET ஆக 10850, 10675, 10550 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்.
அப்படி இல்லாமல் 11210 அல்லது 11165 டு 11145 என்ற புள்ளிகளுக்குள் சப்போர்ட் எடுத்து திரும்பினால் 11450 என்ற புள்ளி தடையாக இருக்கும், அதை தொடர்ந்து மேலே சென்று 11650 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் CLOSE ஆகுமேயானால்! நாம் 13500 டு 13900 என்ற புள்ளிகளை மிக மிக விரைவில் எதிர்பார்க்கலாம் (இந்த வருடத்திற்குள் வந்தால் கூட ஆச்சர்யம் இல்லை )..
எனது இலக்கு 16500 டு 17000 மிக மிக விரைவில் (2019 ன் பாதிக்குள் )
ஆகவே நல்ல பங்குகளில் முதலீடு செய்ய தயாராக இருக்கலாம்
நன்றி