Tuesday

அடுத்த நகர்வுகளை 23 ஆம் தேதிக்கு பிறகு வகுத்துக்கொள்வதே சால சிறந்தது



நாம் எதிர்பார்த்தது போல் சந்தை 11150 என்ற புள்ளியில் (11138) இருந்து திரும்பி இருக்கின்றது 

NIFTY FUTURE இன்  அடுத்த நகர்வுகளை 23 ஆம் தேதிக்கு பிறகு வகுத்துக்கொள்வதே சால சிறந்தது 

இந்த உயர்வு தொடர மோடி அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்யவேண்டும் 

இதில் குளறுபடிகள் வந்தால் அதன் அளவுக்கு ஏற்ப சதையில் வீழ்ச்சிகள் இருக்கும் 

அடுத்தவர்களின் துணையோடு மோடி அவர்கள் ஆட்சி அமைத்தலும் கூட சந்தை சற்று ஆட்டம் கண்டாலும் தொடர்ந்து மேலே ஏறும் 

அடுத்தவர்களின் துணையோடு ராகுல் அவர்கள் ஆட்சி அமைத்தலும் கூட சந்தை சற்று ஆட்டம் கண்டாலும் தொடர்ந்து மேலே ஏறும் 

இது இல்லாமல் வேறு நிலை வந்தால் தான் சந்தையை பற்றி பயப்பட வேண்டும் 

ஆகவே 23 க்கு பிறகான முடிவுகள் நல்லவையாக இருக்கும் 




Wednesday

சந்தையில் அடுத்து என்ன நடக்கலாம்


NIFTY FUTURE 08-05-19


நாம் எதிர்பார்த்தது போல்  NIFTY FUTURE 11860 என்ற புள்ளிகளில் இருந்து இந்த மாதம் முதல் வாரத்தில் இறக்கத்தை  சந்தித்து வருகிறது, 

தற்பொழுது 11380 டு 11360 என்ற புள்ளிகள் நல்ல சப்போர்ட் ஐ தரலாம், ஒரு வேளை   11350  என்ற புள்ளிக்கு கீழ் CLOSE  ஆனால் அடுத்து 11170 டு 11150 என்ற புள்ளிகள் முக்கியமான சப்போர்ட் ஆகும், 

அதே நேரம் 11050 டு 11000 என்ற புள்ளிகளின்  இடையே  சந்தையை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் FIBONACCI மற்றும் 200 DAY EMA  என்ற மிக முக்கியமான சப்போர்ட் உள்ளது  

இந்த புள்ளிகளை கடந்து கீழே CLOSE  ஆகாத வரை கவலை இல்லை , இங்கிருந்து REVERSAL ஏற்பட அதிக வாய்ப்புகள் தெரிகிறது அதாவது 11170 டு 11000 என்ற புள்ளிகளின் இடையே 

ஒருவேளை இந்த புள்ளிகளை கடந்து தொடர்ந்து 2 நாள் CLOSE  ஆனால் நமது ELECTION RESULT BJB OR CONGRESS இவர்கள் இருவரும் இல்லாத மூன்றாவது நபர் ஆட்சி  அமைக்கும் சூழ்நிலைகளை  ஏற்படுத்தலாம் 

அப்படி நடந்தால் அது 10400 என்ற புள்ளியை நோக்கியும், ஆட்சி அமைக்கும் நபர் மற்றும் அமைச்சரவை சரி இல்லாத பட்சத்தில் தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் அது 9500, மற்றும்  8500 ஐ நோக்கிய பயணத்துக்கு வழி  வகுக்கும், பொறுத்து இருந்து பார்ப்போம்  

NIFTY FUTURE EOD CHART



   

NIFTY FUTURE 04-04-2019


NIFTY FUTURE 

நாம்  எதிர்பார்த்தது போல் NIFTY FUTURE 11600 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வந்து 11350 என்ற புள்ளியின் அருகில் சப்போர்ட் எடுத்து தற்பொழுது 11800 டு 11850 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வர முயற்சிக்கின்றது, 

தற்பொழுது இதன் தொடர்ச்சியாக 11840 டு 11900 என்ற புள்ளிகள் மிக மிக முக்கியமான தடைகளாக இருக்கும் ஆகவே ஒவ்வொரு உயர்வையும் SHORT SELLING என்ற வர்த்தகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம், 

இவ்வாறு செய்யும் SHORT SELLING இன்  இலக்காக 11630 என்ற புள்ளி முதல் இலக்காகவும், இந்த புள்ளியை கடந்து கீழே தொடர்ந்து 2 நாட்கள் CLOSE ஆகும் சூழ்நிலையில் அடுத்து இலக்காக 11230 என்ற புள்ளி  இருக்கும் அதற்கும்  கீழ் 11100 என்ற புள்ளி நல்ல சப்போர்ட் ஆக செயல்படும். 

அடுத்த மூன்று நான்கு தினங்கள் இறக்கமாக இருந்தாலும் திடீர் உயர்வுகளும் 11800 டு 11850 என்ற புள்ளிகளை நோக்கி ஏற்படலாம் , அப்படி நடந்தால் அதனை SHORT SELLING செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் , இதற்கான STOP LOSS ஆக 11880 டு 11900 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம். 

பொதுவாக இப்பொழுது 12000 க்கு மேலான தொடர் CLOSE என்ற நிலையே அடுத்த தொடர் உயர்வுகளை நமக்கு உறுதி செய்யும் அதுவரை இறக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் ...

இந்த மாதம் முன் பின் நகர்வுகள் இருந்தாலும் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே நல்ல இறக்கங்களை எதிர் பார்க்கலாம் ஆகவே DELIVERY TRADE செய்பவர்கள் சற்று பொறுமை காத்து நல்ல பங்குகளை இனம் காண்பது நல்லது இறங்கும் பொது நல்ல விலையில் வாங்கலாம் ...

NIFTY FUTURE EOD CHARTS