Tuesday

இந்திய பங்குச்சந்தை - செவ்வாய் கிழமை

30-06-09

அமெரிக்க சந்தைகளின் உற்சாகமான முடிவு ஆசிய சந்தைகளில் தொத்தி கொண்டுள்ளது ஆசிய சந்தைகளின் முக்கியமான INDEX களின் வரைபடங்கள் இந்த உற்சாகம் தொடரும் என்ற என்னத்தை ஏற்படுத்துகிறது, இந்த உற்சாகம் தொடக்கத்தில் நமது சந்தைகளிலும் இருக்கும், அதே நேரம் SINGAPORE NIFTY ஐ பார்க்கும்போது தொடக்கத்தில் 55 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் அதற்க்கு மேல் தொடர்ந்து செல்லமுடியாமல் திணறி வருவதும் மேலும் கீழுமான ஆட்டம் இருப்பதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்..

இன்று GAP UP OPEN இருந்தாலும் அந்த நேர உலக சந்தைகளின் நிலைகளை வைத்து சற்று பொறுத்து வர்த்தகத்தை துவங்கலாம், மேலும் NIFTY க்கு 4450 என்ற புள்ளி உயருவதற்கும், 4350 என்ற புள்ளி கீழே வருவதற்கும் ஏற்ற புள்ளிகளாக இருப்பதால் இந்த புள்ளிகள் வரும் போது சற்று கவனமாக இருங்கள்

NIFTY யில் நாம் நேற்று எதிர்பார்த்து போல 4350 என்ற புள்ளியில் சரியாக SUPPORT எடுத்து மேலே நன்றாக உயர்ந்தது, இருந்தாலும் 4440 என்ற புள்ளியின் அருகில் திடீரென்று வந்த SELLING PRESSURE NIFTY ஐ பழைய நிலைக்கே கொண்டு வந்தது, ஆகவே உயரங்களில் SELLING PRESSURE இனி அடிக்கடி வரும் வாய்ப்புகள் இருப்பதால் உங்கள் லாபங்களில் எப்பொழுதும் கவனமாக இருப்பது சிறந்தது, அதிகமாக ஆசைப்படாமல் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்,

இனி வரும் நாட்களில் BUDGET இன் தாக்கம் இருக்கும் புரளிகளின் அடிப்படையில் சில பங்குகள் திடீரென உயரும், சந்தை மேடுபள்ளங்களை சந்திக்கும், முக்கியமாக POWER SECTOR மற்றும் வங்கிகளுக்கு நல்ல செய்திகள் இருப்பதாக சந்தையில் செய்திகள் உலா வருவதால் இந்த பங்குகள் ஆடி கொண்டுள்ளது, ஆகவே BUDGET முடியும் வரை சந்தை இங்கிருந்து திரும்பும், இல்லை இல்லை தொடர்ந்து உயரும் என்று அறுதி உறுதி இட்டு சொல்வது தவறாகவே இருக்கும்,

எது எப்படி இருந்தாலும் NIFTY TECHNICAL ஆக 4520 என்ற புள்ளியை அடைய வேண்டும் என்று நேற்று நாம் பார்த்து போல கண்டிப்பாக அடையும் வாய்ப்புகள் இருக்கும், மேலும் உயரங்களில் எதிர்பார்க்காத தருணங்களில் SELLING PRESURE வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் STOCK SPECIFIC நகர்வுகளும் இருக்கும், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

நிபிட்டி ஐ பொறுத்த வரை இன்று 4400 என்ற புள்ளிகளுக்கு மேல் உயருவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் வெகு அருகருகே தடைகளும் உள்ளதை குறிப்பிட வேண்டியுள்ளது அதாவது 4420, 4433, 4444, 4450 என்ற புள்ளிகளில் தடைகள் இருப்பதாக தெரிகிறது ஆகவே இந்த 4450 என்ற புள்ளியை மேலே கடந்தால் தான் அடுத்து 4485, 4520 என்றும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது,

அதே போல இன்று நிபிட்டி தொடர்ந்து கீழ் இறங்க வேண்டுமாயின் நேற்று சொன்னது போல 4350 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், அப்படி கீழே கடந்து உலக சந்தைகளும் இறங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துமாயின் NIFTY 4260 TO 4250 என்ற புள்ளிகள் வரை இன்றே வரலாம், ஆகவே இந்த புள்ளிகளில் நீங்கள் சற்று கவனமுடன் செயல் படவேண்டிய சூழ்நிலைகள் வரும் கவனமாக இருங்கள்....

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4420 TARGET 4433, 4450, 4478 TO 485, 4515 TO 4530, 4550, 4600

NIFTY SPOT BELOW 4368 TARGET 4350, 4310, 4293 TO 289, 4260, 4230 TO 228, 4206, 4168

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY ABB ABOVE 811 TARGET 829 TO 830, 834, 840, 844, 851, S/L 802

SELL ABB BELOW 802 TARGET 795, 789 TO 786, 784, 762, S/L 811

BUY BANK OF BARODA ABOVE 458 TARGET 463, 475, 478, 485, S/L 446

BUY BANK OF INDIA ABOVE 365 TARGET 376 TO 378, 388, S/L 356

Monday

NIFTY ON MONDAY

29-06-09

அமெரிக்க சந்தைகள் வெள்ளியன்று கலந்து முடிந்திருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் நடந்து வருகிறது, இதனை பின் தொடர்ந்து ஆசிய சந்தைகளும் தொடக்கத்தில் உயர்ந்து காணப்பட்டாலும் தற்பொழுது கீழ் இறங்கியே நடந்து வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் ஒரு வித பதட்டம் ஏற்ப்படும், மேலும் இன்றைய சந்தைகள் VOLATILE என்ற முறையில் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தென்படுகிறது, மேலும் SINGAPORE NIFTY இன நிலையிலும் இது வெளிப்படுகிறது,

இன்றைய சந்தைகளில் NIFTY க்கு 4350 TO 4330 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது, ஆகவே இந்த புள்ளிகளில் NIFTY SUPPORT எடுக்கும் பட்சத்தில் இந்த புள்ளியின் அருகில் பங்குகளை வாங்கலாம் இன்று NIFTY க்கு 4350 TO 4330 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும், அதே போல் உயருவதற்கான ஏற்பாடாக NIFTY இன INTRADAY CHART இல HEAD & SHOULDER அமைப்பு உருவாகியுள்ளதை படத்தில் குறிப்பிட்டு உள்ளேன், மேலும் நமது சந்தைகளில் இறக்கங்கள் வந்தால் 4140 என்ற புள்ளியை S/L ஆக வைத்து நல்ல பங்குகளை வாங்கலாம், ஆனால்

NIFTY INTRA DAY CHART


கடந்த இரண்டு தினங்களாக சந்தைகளில் சொல்லிக்கொள்ளும்படியான VOLUME உடன் எந்த பங்குகளும் ஏற வில்லை, மேலும் MIDCAP மற்றும் SMALL CAP பங்குகள் சுத்தமாக உயரவில்லை, மொத்தத்தில் வெள்ளியன்றைய உயர்வு எதோ வலுக்கட்டாயமாக உயர்த்தி வைத்தது போல் தான் அமைந்தது. முக்கியாமான கீழ் இறங்கியுள்ள பங்குகளை VOLUME மே இல்லாமல் உயர்த்தி இருந்தது சற்று கவலை கொள்ள செய்கிறது, ஆகவே நீங்கள் வாங்கிய பங்குகளில் லாபங்கள் வரும் போது அடிக்கடி லாபம் பார்த்துவிடுங்கள், தின வர்த்தகர்கள் S/L ஐ கண்டிப்பாக கடை பிடியுங்கள்

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4390 க்கு மேல் உயர்வுகள் இருக்கும் அதாவது4520 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் 4450, 4480 என்ற புள்ளிகள் தடைகளையும் தரலாம், அதே போல் 4350 க்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் மேலும்4290 என்ற புள்ளிகள் வரைக்கும் விரைவான வீழ்ச்சிகள் இருந்தாலும் அதன் பிறகு4200 வரைக்கும் ஒரு மந்தமான போக்குகளும் தெளிவற்ற நகர்வுகளுமே காணப்படும், இந்த புள்ளிகளுக்கு இடையே சந்தை மாட்டிக்கொண்டால் ஒரு போரான சந்தையை சந்திக்க வேண்டிவரும், மேலும் இது போன்ற சூழ்நிலைகள் இருப்பதானால் சந்தையில் வீழ்ச்சிகள் இருப்பதை விட உயர்வுகள் சாத்தியமானதாக தெரிகிறது இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்தே நமது சந்தைகளிலும் இன்றைய நகர்வுகள் இருக்கும்

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4390 TARGET 4420 TO 421, 4450, 4480, 4520, 4537, 4550, 4580

NIFTY SPOT BELOW 4352 TARGET 4332, 4293, 4280, 4273, 4260, 4243, 4223 TO 220, 4214 TO 4206, 4155, 4150, 4143, 3985

கவனிக்க வேண்டிய பங்குகள்

STRIDES ARCO LAB (STAR)

இந்த பங்கில் தொடர்ந்து நல்ல VOLUME மற்றும் மேலும் தொடர்ந்து உயருவதற்கான அமைப்புகள் உள்ளதால் இந்த பங்கை 156 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 165, 180 என்று வைத்துக்கொள்ளுங்கள் S/L 151


Sunday

உலக சந்தைகளின் தார்போதைய நிலைகள்


இந்த வார கேள்வி பதில் பதிவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை எந்த கேள்விகளும் வரவில்லை, மேலும் நேற்று தான் 1 கேள்வி வந்தது ஆகவே உலக சந்தைகளின் நிலைகளை பற்றி பார்ப்போம் என்று முக்கியமான உலக INDEX களின் வரைபடங்களை கொடுத்துள்ளேன் பாருங்கள், உலக சந்தைகளின் தற்போதைய நிலைகள், மேலும் அவைகளில் உயர்வோ அல்லது வீழ்ச்சியோ ஏற்பட வேண்டுமாயின் எந்த புள்ளிகளை கீழே அல்லது மேலே கடக்க வேண்டும் என்ற விசயங்களை படத்திலே ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்

DOW JONES CHART

FTSE 100 CHART


NIKKEI 225 CHART

SENSEX CHART


Friday

NIFTY ON FRIDAY

27-06-09

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்திருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் வர்த்தகம் செய்து வருவது ஆசிய சந்தைகளில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் உயர்ந்து இருந்தாலும் தற்பொழுது கீழே வர முயற்சி செய்து கொண்டிருப்பது, நமது சந்தைகளில் ஒரு சில இக்கட்டான, பதற்றமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம்,

இதை போலவே SINGAPORE NIFTY யும் தொடக்கத்தில் 50 புள்ளிகள் உயர்ந்து இருந்தாலும் தற்பொழுது வெறும் 2 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருப்பது, கவலை தரும் நிகழ்வாகவே இருக்கும், இருந்தாலும் 4173 என்ற புள்ளி NIFTY க்கு நல்ல SUPPORT குடுக்கும் வாய்ப்புகள் உண்டு இந்த புள்ளிகளை கீழே கடக்கும் பட்சத்தில் 4143, 4126 என்று கீழே வர வாய்ப்புகள் உள்ளதால் இந்த புள்ளிகளில் கவனமாக S/L கடை பிடிக்கவும்

NIFTY இன்று உலக சந்தைகளின் போக்குகளை கடை பிடிக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4173 என்ற புள்ளியை கீழே கடந்தால் 4126 என்ற புள்ளிக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த புள்ளியில் நல்ல SUPPORT ஐ NIFTY பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, இதனை S/L ஆக வைத்து இந்த புள்ளிகள் அருகில் வரும்போது வாங்குங்கள்

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4256 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் அதிகம் அதே போல் 4234 க்கு கீழ் வீழ்ச்சிகள் வந்தாலும் 4173 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும், ஆகவே இந்த புள்ளிகள் வரும்போது பங்குகளை வாங்கலாம்,

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4256 TARGET 4280 TO 294, 4314, 4333 TO 338, 4358, 4376, 4410, 4430, 4480 TO 4490, 4550

NIFTY SPOT BELOW 4234 TARGET 4221 TO 218, 4206, 4173, 4143, 4126, 4110, 4072, 3995

கவனிக்க வேண்டிய பங்குகள்


STRIDES ARCO LAB

இந்த பங்கை 154 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 180, 190 என்ற புள்ளிகள் இருக்கும், S/L 149, இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 142, TO 137 என்ற புள்ளிகளை நோக்கி வரலாம், அப்படி வந்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், இதன் S/L 135

STAR CHART

PTC

இந்த பங்கை நேற்றும் சொல்லி இருந்தேன், இதில் தொடர்ந்து VOLUME அதிகரித்து வருவதாலும், உயரங்களில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாலும், இந்த பங்கை கீழ் வரும் போது வாங்குங்கள் இதில் 97 என்ற புள்ளிகளுக்கு மேல் நல்ல உயர்வு இருக்கும் அதாவது 105, 115 வரைக்கும் செல்லலாம் இதன் S/L ஆக முதலில் 92.70 ஐ வைத்துக்கொள்ளுங்கள், இதற்க்கு கீழ் வந்தால் 90, 88 என்ற புள்ளிகளில் வாங்குங்கள் இதன் S/L 87.5

PTC CHART


DEWAN HOUSING

இந்த பங்கை 147 என்ற புள்ளியை S/L வைத்து வாங்கலாம் இலக்காக 180 TO 183 இருக்கும்

PATNI COMPUTER AB 270 TARGET 275, 280, 287, 300, S/L 260

நண்பர்களே தின வர்த்தக பரிந்துரைகள் வேண்டுவோர் எனது மின் அஞ்சலுக்கு தகவேல் கேட்டு அனுப்புங்கள் அல்லது 9487103329 என்ற என்னில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

FOR PAID SERVICE PLEASE CALL ME ON 9487103329 OR MAIL ME TO SARAVANABALAAJI@GMAIL.COM

Thursday

NIFTY ON THURSDAY

25-06-09

அமெரிக்க சந்தைகள் கலந்து சிறிய உயர்வு தாழ்வுகளை கொண்டு முடிந்து இருந்தாலும், உயரங்களில் இருந்து கீழே வந்து FLAT என்னும் நிலையில் முடிந்துள்ளது, இது கவனிக்க வேண்டிய விஷயம், இருந்தாலும் அடுத்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் நல்ல உயரங்களில் இருப்பதும் இதனை தொடர்ந்து அமெரிக்க FUTURE MARKET சற்று சிறிய உயரங்களில் இருப்பதும் தொடக்கத்தில் சில உயரங்களை நமக்கு தரலாம், இதனை வெளிப்படுத்தும் விதமாக SINGAPORE NIFTY 20 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி மேலும் 20 புள்ளிகளை கடந்து தற்பொழுது 45 புள்ளிகள் என்ற நிலையில் ஆடி வருகிறது, எப்படி பார்த்தாலும் நமக்கு 4356 TO 4375 என்ற புள்ளிகள் முக்கியமானதாக தெரிகிறது,

இந்த 4375 என்ற புள்ளிகளுக்கு மேல் நல்ல சக்தியுடன் முடிந்தால் இங்கு உயர்வுகள் தொடரும், அப்படி இருக்கும் பட்சத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அப்படி இல்லை என்றால் உங்கள் லாபங்களில் உறுதியாக இருங்கள், இன்றைக்கு EXPIRY தினம் அதுவும் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் சந்தையில் EXPIRY எப்படி இருக்கும் , நினைக்கவே சற்று ஒரு மாதிரி தான் இருக்கின்றது, இன்றைக்கு கீழே வந்தால் வாங்க மட்டும் உள்ளே நுழையலாம் மேலும் அதற்கான S/L கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்...

NIFTY ஐ பொறுத்த வரை 4375 மற்றும் 4140 மற்றும் 4090 இந்த புள்ளிகள் தான் NIFTY இன திசையை முடிவும் செய்யும் முக்கியமான புள்ளிகள் ஆகும், தற்பொழுது உயர்வதக்கான வாய்ப்புகள் இருந்தாலும் கொஞ்சமான லாபங்களில் வெளியேறிவிடுங்கள், இது ஒன்றும் மிகப்பெரிய உயர்வு அல்ல, 4700 என்ற புள்ளியை மேலே கடந்தால் மட்டுமே இந்த வீழ்ச்சி உருகுலயுமே தவிர வேற எந்த காரணிகளும் இந்த வீழ்ச்சியை கட்டு படுத்த முடியாது என்றே தோன்றும் அளவுக்கு FII களின் விற்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவது கவனிக்க வேண்டிய விஷயம், ஆகவே எப்படி போன நமக்கு என்ன கொஞ்சம் லாபம் போதுமே, வெளியில் SAFE ஆக நிற்கலாமே....

NIFTY 4331 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் அதன் இலக்காக 4351 TO 4375, இந்த 4375 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடக்கும் பட்சத்தில் அடுத்த உயர்வுகள் 4428, 4450, 4520 என்று செல்லும், ஆனால் FII களின் விற்கும் அளவுகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நாம் கீழ் கண்ட புள்ளிகளில் எல்லாம் கவனமாக இருந்து வங்கி வைத்து இருக்கும் பங்குகளில் லாபம் பார்த்து விடுவது சிறந்தது அதாவது 4356, 4420, 4485, 4520, இந்த புள்ளிகளில் எந்த புள்ளிகளிலும் NIFTY RESISTANCE எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது,

அதே போல் இன்று NIFTY 4290 என்ற புள்ளியை கீழே கடந்தாலே விழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து விடும் அபாயம் இருப்பதால் இந்த புள்ளியை முக்கியமானதாக வைத்துக்கொள்ளலாம், மேலும் இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 4245 TO 4235 மற்றும் 4218 என்று கீழே வரலாம் மேலும் இதன் பிறகு 4187 இந்த புள்ளியின் சுற்று வட்டாரங்களில் நல்ல SUPPORT NIFTY க்கு இருப்பதினால், ஒரு வேலை NIFTY இந்த புள்ளியை நோக்கி வந்தால் இங்கிருந்து திரும்பும் வாய்ப்புகள் அதிகம், அப்படி வந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்...

NIFTY LEVELS

NIFTY SPOT ABOVE 4331 TARGT 4355 TO 4365, 4375, 4428, 4455, 4517, 4537

NIFTY SPOT BELOW 4290 TARGET 4245, 4235, 4218 TO 216, 4206, 4187 TO 185, 4166 TO 164, 4155, 4116, 4090, 4040

கவனிக்க வேண்டிய பங்குகள்

PTC INDIA

இந்த பங்கை 95 என்ற புள்ளிக்கு மேல் நல்ல VOLUME உடன் உயர்ந்தால் வாங்கலாம் இலக்காக 112 TO 114 என்று அமையும் (வரும் நாட்களில்), மேலும் 93.5 என்ற புள்ளியை கீழே கடக்குமானால் அடுத்து 91, 89, 87 என்று கீழே வர வாய்ப்புகள் இருப்பதினால், நீங்கள் 95 என்ற புள்ளியில் வாங்கிய பிறகு 93.5 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விட்டு பிறகு முன்னர் சொன்ன புள்ளிகள் வரும்பொழுது வாங்கிக்கொள்ளுங்கள் இதன் S/L 83.75

SUNPHARMA BUY ABOVE 1355 TARGET 1374, 1380, 1394 TO 1400, S/L 1345

ஐயா நண்பர்களே நான் ரொம்ப கதை சொல்கிறேன் என்று நினைத்தால் கண்டிப்பாக பின்னோட்டம் மூலம் தெரிவித்து விடுங்கள், என்னுடைய கலை தாகத்தை என்னை அறியாமலேயே இங்கு காட்டிவிடும் அபாயம் அதிகம் இருப்பதினால் வெந்து நொந்து நூலாக வேண்டி இருக்கும்

Wednesday

NIFTY ON WEDNESDAY

24-06-09

அமெரிக்க சந்தைகள் சிறிய அளவு வீழ்ச்சிகளுடனும் ஐரோப்பிய சந்தைகள் கலந்தும் முடிந்துள்ளன, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் கலந்து காணப்பட்டாலும் GAP UP என்ற முறையில் துடங்கி தற்பொழுது சிறிய அளவு இறக்கத்துடன் உள்ளது, இவைகளில் இன்னும் 50 முதல் 100 புள்ளிகள் வந்தால் வீச்சிகள் தொடரும் அதே நேரம் SUPPORT எடுத்து திரும்பும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை,,,,

மேலும் SINGAPORE NIFTY ஐ பார்க்கும் போது 20 புள்ளிகளை இழந்து தொடங்கினாலும் தற்பொழுது மீண்டுள்ளது, ஆகவே நமது சந்தைகளில் தொடக்கத்தில் FLAT OPEN ஆனாலும் உயர்வு தாழ்வுகள் அதிகம் இருக்கும் என்றே தோன்றுகிறது, இந்த வாரம் தின வர்த்தகர்களுக்கு சவாலாகவே இருக்கும் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் இல்லை ஒதுக்கி விடுங்கள் இறங்கினால் 4092 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 4450, 4530 என்ற இலக்கை வைத்து வாங்குங்கள்,,,,

NIFTY நேற்று, (FOR 3500) தான் கீழ் இறங்குவதற்கான முன்னேர்பாடுகளை செய்துள்ளது, அதாவது தற்பொழுது நடந்து முடிந்த இந்த மொத்த உயர்வில், நேற்று 23.6%, யும் மேலும் MOMENTUM TREND LINE யும் கடந்து பிறகு மீண்டுள்ளது, மேலும் நேற்றைய மீட்சி ஒரு உயர்வுக்கு வழிவகுக்கும் அதாவது DEAD RALLY என்ற அடிப்படையில்,மேலும் அதன் இலக்காக 4480, 4520 TO 4537 என்ற புள்ளிகள் இருக்கும்,,,

ஆகவே தற்பொழுது SHORT TERM எனும் முறையில் (10 TO 15 நாட்கள்), நல்ல பங்குகளை வாங்குங்கள், மேலும் CALL OPTION ல் கவனம் செலுத்துபவர்கள் 4300, 4400 இந்த STRIKE PRICE இல் கவனம் செலுத்துங்கள், இவை அனைத்திற்கும் S/L ஆக 4092 என்ற புள்ளியை NIFTY கீழே கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், மேலும் இந்த வாரம் F&O EXPIRY இருப்பதால் கீழே வந்தால் பயன் படுத்தி வாங்கிக்கொள்ளுங்கள், கீழே உள்ள படத்தில் FIBONACCI அளவுகள் மற்றும் TREND LINE ஐ உடைத்து மீண்டு உள்ளதை குறிப்பிட்டு உள்ளேன்,,,,

NIFTY EOD CHART

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4273, 4288 என்ற இந்த புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் வேகமாக இருக்கும் அதாவது 4350, 4375 என்று செல்லும் 4375 க்கு மேல் NIFTY யில் உயர்வுகள் அதிகப்படும் அதாவது நாம் எதிர்பார்த்தது போல4480, 4520 TO 4537 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே இந்த உயர்வை பயன் படுத்திக்கொள்ளுங்கள், NIFTY இந்த EXPIRY ஆட்டத்துக்காக கீழே வந்தால் நல்ல பங்குகளாக வாங்கிப்போடுங்கள், NIFTY யில் நாம் முன்னர் எதிர்பார்த்தது போல ஒரு 200, 300 புள்ளிகள் உயர்வுகள் இருக்கும்,,,,

அதேபோல் கீழே இந்த புள்ளியை கடந்தால் வீழ்ச்சிகள் வேகமாக இருக்கும் என்று சொல்லும் புள்ளியாக 4143 என்ற புள்ளி தான் தெரிகிறது அதுவரை FLAT ஆகவும் வேகம் குறைந்த இறக்கமாகவும் இருக்கும், மேலும் 4092 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் ஆகவே நீங்கள் தற்பொழுது வாங்கப்போகும் பங்குகளுக்கு S/L ஆக 4092 ON CLOSING BASIS என்று வைத்துக்கொள்ளுங்கள், CALL OPTION வாங்குபவர்கள் இறக்கம் வந்தால் 4300, 4400 இது போன்ற STRIKE PRICE களில் கவனம் செலுத்தலாம், நான் ஒரு உயர்வை எதிர்பார்க்கின்றேன்,,,

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4268 TARGET 4288, 4314 TO 316, 4326, 4353 TO 356, 4375, 4400, 4430, 4500, 4520, 4540, 4566

NIFTY SPOT BELOW 4244 TARGET 4222, 4215, 4206 TO 200, 4190 TO 4187, 4176, 4153, 4143, 4114 TO 4105, 4092, 3965

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY TATAMOTOR ABOVE 350 (NORMAL TRADER CAN BUY AB 355) TARGET 373 TO 375, 380, 383, 400, 403, S/L 347 OR 342

BUY YES BANK ABOVE 143 TARGET 145, 149, 153.5, 160, 163, 169, 175, S/L 139

BUY IDBI ABOVE 113.5 TARGET 130, S/L 104.5

BUY MOSER BEAR ABOVE 95 TARGET 101, 104, S/L 92 OR 90

BUY DABUR AB 120, GDL AB 111, GOOD FOR ANOTHER 10% UP MOVE POSSIBLE, S/L 4%

Tuesday

NIFTY ON TUESDAY

23-06-09

உலக சந்தைகளின் போக்குகள் அதிரடியாக இருப்பதால் இங்கும் GAP DOWN OPEN இருக்கும் வாய்ப்பை தரும், இதை உறுதி செய்யும் விதமாக SINGAPORE NIFTY 100 புள்ளிகளை இழந்து தொடங்கியுள்ளது, மேலும் VOLATILE என்ற முறையில் ஆட்டம் தென்படுகிறது, அதே நேரம் உலக சந்தைகளில் ஏதும் மாற்றங்கள் தென்படுமாயின் அது இங்கு அதிகப்படியாக வெளிப்படும் ஏனெனில் நாம் F&O EXPIRY மற்றும் BUDGET என்ற இரண்டு முக்கியமான நிகழ்வுகளை சந்திக்க வேண்டியுள்ளது அதே சமயம் நாம் தொடர்ந்து இறங்கு முகமான சந்தையிலும் இருப்பதால் EXPIRY இன் முடிவு எப்படி இருக்கும் என்று முடிவு செய்ய முடியாததாகவே இருக்கும், எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யுங்கள் அல்லது சந்தையை வேடிக்கை பாருங்கள்...

உலக சந்தைகளின் போக்குகள் இங்கு தொடக்கத்தில் பிரதிபலிக்கும், இருந்தாலும் 4180 TO 4150 என்ற புள்ளிகள் முக்கியமானதாக கொள்ளலாம் இந்த புள்ளியை கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் அடுத்து 4090 என்ற புள்ளியை நோக்கி NIFTY நகரும் அதற்கும் கீழ் 3977 அடுத்த நல்ல SUPPORT ஐ கொடுக்கலாம், அதே போல் 4250 க்கு மேல் உயர்வுகள் தொடரலாம் அதே போல் 4375 என்ற புள்ளியை கடந்து முடிவடயுமானால் பிறகு நிபிட்டி 4525 என்ற புள்ளியை நோக்கி நகரும் ….

நாம் நேற்று எதிர்பார்த்து போல இன்று தொடக்கத்திலே MOMENTUM SUPPORTIVE TREND LINE உடைபடும் இன்று 4220 என்ற புள்ளியில் அந்த SUPPORT உள்ளது, மேலும் இந்த வாரம் F&O EXPIRY இருப்பதும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் BUDGET இருப்பதும் சந்தையை அலைக்கழிக்கும் என்றே தோன்றுகிறது, எந்த பக்கம் போனாலும் உதைக்கும் சந்தையாக இருப்பது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதை காட்டினாலும் சந்தையை வேடிக்கை பார்ப்பது சிறந்தது….

மேலும் 4150 க்கு கீழ் முடிவடையும் பட்சத்தில் வீழ்ச்சிகள் POST BUDGET CORRECTION என்ற வகையில் வரலாம் 4375 மேல் முடிவடையும் பட்சத்தில் PRE BUDGET RALLY என்ற வகையில் வரலாம், ஆகவே 4150 மற்றும் 4375 இந்த இரண்டு புள்ளிகளை நிபிட்டி எப்படி எதிர் கொள்கிறது என்பதை வைத்து அடுத்த கட்ட நகர்வுகள் தெளிவாக தெரியும் ,

இன்று தொடக்கத்தில் அவசரப்பட்டு SHORT SELLING இல் இறங்க வேண்டாம் சந்தையின் நகர்வுகளை கொஞ்ச நேரம் கவனித்து பிறகு வர்த்தகம் ஆரம்பிக்கலாம்

NIFTY 1 HOUR CHART


NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4243 TARGET 4268, 4300, 4314 TO 320, 4352, 4375 ABOVE 4375 TR 4525

NIFTY SPOT BELOW 4233 TARGET 4188, 4167, 4155 TO 4150, 4115, 4100, 4090, 3977

கவனிக்க வேண்டிய பங்குகள்

DABUR

இந்த பங்கை 111 என்ற புள்ளியில் வாங்கலாம் இதன் S/L 110 க்கு கீழ் CLOSING ஆக முயற்சி செய்தால் விற்று விடுங்கள்

RCOM BELOW 292 TO 286 WEEK

INFOSYS BELOW 1743 WEEK

RELIANCE IND 1900 TO 1850 SUPPORT

BELOW 1800 WEEK TARGET 1650 TO 1700

Monday

NIFTY ON MONDAY

22-06-09

உலக சந்தைகளில் ஆசிய சந்தைகள் உயரங்களில் உள்ளது, தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 25 புள்ளிகளை இழந்து தொடங்கினாலும் மறுபடியும் 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலைக்கு வந்து (LOW புள்ளியில் இருந்து 45 புள்ளிகள் உயர்வு ) தற்பொழுது 20 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் உள்ளது, இதன் தாக்கமாக நமது சந்தைகளிலும் நல்ல தொடக்கம் இருக்கும், இருந்தாலும் சில தடுமாற்றங்கள், திடீரென உயர்வு இப்படி மாறி மாறி வரும் மேலும் F&O EXPIRY வேறு அருகில் இருப்பதானாலும் தொடர்ந்து கீழே இறங்கி வந்த சந்தை தற்பொழுது இந்த EXPIRY ஐ எப்படி முடிக்கும் என்ற குழப்பங்களினாலும் சில தடுமாற்றங்கள் இருக்கும் இருந்தாலும் உயர்வுகளில் முடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம், பார்த்து வர்த்தக் செய்யுங்கள்...

NIFTY கடந்த வெள்ளியன்று தொடர்ந்து கீழே இறங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தி தொடர்ந்து உயர்ந்துள்ளது, இதே போல தான் 2539 என்ற புள்ளியில் தொடர்ந்து இறங்குவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உயர்ந்தது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, சரி தற்பொழுது NIFTY இன் நிலை என்ன அது தொடர்ந்து என்ன செய்யும் அதில் நாம் எப்படி பங்கு கொள்வது என்று பார்ப்போம், அதாவது கீழே NIFTY இன் CHART படம் கொடுத்துள்ளேன், அந்த படத்தில் இரண்டு FIBONACCI அளவுகளும், இரண்டு MOMENTUM TREND LINE உம் கொடுத்துள்ளேன், இந்த விசயங்களை நாம் இப்பொழுது மிகவும் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டியுள்ளது,

அதாவது NIFTY யில் 2539 என்ற புள்ளியில் இருந்து 4693 என்ற புள்ளி வரைக்குமான FIBONACCI அளவுகளின் படி 23.6% SUPPORT புள்ளி சரியாக 4185 என்ற புள்ளியில் இருக்கின்றது, அதே நேரம் NIFTY யில் 4092 என்ற புள்ளியில் இருந்து 4693 என்ற புள்ளி வரைக்குமான FIBONACCI அளவுகளின் படி 85.4% SUPPORT புள்ளி சரியாக 4180 என்ற புள்ளியில் இருக்கின்றது, இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த இரண்டு புள்ளிகளையும் இன்னும் NIFTY கீழே கடக்கவில்லை, தற்பொழுது அருகில் வந்து SUPPORT (4205) எடுத்து பலமாக திரும்பியுள்ளது,

மேலும் நான் முன்னர் MOMENTUM TREND LINE பற்றி சொல்லி அதை NIFTY 4250 என்ற புள்ளிகளில் கீழே கடந்துள்ளது என்று சொல்லி இருந்தேன் இல்லையா, இந்த TREND LINE ஐ CHART இல் நாம் இரண்டு முறையில் வரையலாம் அதாவது SEMI LOG TREND LINE TOOL மூலமாகவும் AND NORMAL TREND LINE TOOL மூலமாகவும், அப்படி SEMI LOG TREND LINE TOOL ஐ பயன்படுத்தி நான் வரைந்ததில் 4250 என்ற புள்ளி SUPPORT ஆக இருந்தது ஆனால் NORMAL TREND LINE TOOL மூலம் வரைந்ததில் தற்பொழுது NIFTY க்கு 4202 என்ற புள்ளி இந்த MOMENTUM TREND SUPPORT ஐ தருகிறது மேலும் அந்த கோட்டினை NIFTY இன்னும் கீழே உடைக்க வில்லை, இந்த இரண்டு படங்களையும் கொடுத்துள்ளேன் பாருங்கள், நான் பொதுவாக SEMI LOG TREND LINE TOOL ஐ தான் பயன் படுத்துவது மேலும் அதன் ACCURACY நன்றாக இருக்கும், அதன் படி பார்த்தால் MOMENTUM TREND LINE ஏற்கனவே உடைபட்டுள்ளது(பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று),

ஆகவே இந்த உயர்வானது 4460, 4520, 4550 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரலாம், இதில் முக்கியமானது என்ன வென்றால் NIFTY 4693 என்ற புள்ளியை மேலே கடந்தால் NIFTY புதிய உயரங்களை அடையும் அதாவது 4800, 4900 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது, அப்படி இல்லாமல் கீழே வந்து இந்த முக்கியமான புள்ளிகளான 4150, 4090 என்ற புள்ளிகளை எல்லாம் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் நாம் எதிர்பார்த்தது போல 3500 ஐ நோக்கி வரும், ஆகவே இப்பொழுது உங்களின் SHORT POSITION களை முடித்துக் கொள்ளுங்கள் மறுபடியும் CONFORMATION கிடைத்த பிறகு மாறிக்கொள்ளலாம்...

NIFTY CHART



NIFTY இன்றைக்கு பொறுத்த வரை 4445 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து 4375 என்ற புள்ளிகள் வரை உயரும் அதே நேரம் இந்த புள்ளிகளுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும், அதே நேரம் கீழே 4295 TO 4280 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் மேலும் 4220, 4200, 4180, 4160 என்று வரிசையாக அருகருகே SUPPORT இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4337 TO 4345 TAR 4375, 4406 TO 4415, 4446, 4520, 4535 TO 4550

NIFTY SPOT BELOW 4295 TARGET 4275, 4255TO 4245, 4220, 4200, 4188, 4160, 4150, 4100 TO 4090

கவனிக்க வேண்டிய பங்குகள்

INDIA INFO LINE

இந்த 120 க்கு அருகில் வந்தால் வாங்கலாம் இதன் S/L ஆக 109 என்று வைத்துக்கொள்ளுங்கள் 120 க்கு கீழ் 115, 112 என்று கீழ் வரவும் வாய்ப்புகள் இருப்பதால் கீழே வந்தாலும் வாங்கலாம் இதன் இலக்கு 135, 145, 155 என்று இருக்கும் இதை SWING TREAD என்ற முறையில் வர்த்தகம் செய்யலாம் (1 WEEK HOLDING)

COLGATE ABOVE 556 TR 567, 572, S/L 543

வங்கி பங்குகள் மற்றும் IT பங்குகளில் கவனம் செலுத்தலாம்

Sunday

கேள்வி பதில் பகுதி – 4

கேள்வி பதில் பகுதி – 4

21-06-09

1-skumar4777 has sent you this email in tamil.

vanakam sir

weekly once technical analayis patri oru paadam sollithanthal nalla irrukkum
oru pangin velayai utharanamaga vaithu fibonacci retracement level i sollitharavum.


nantri senthoor velan.

கண்டிப்பா பண்ணலாம் Mr குமார் முதலில் என்னுடன் இருப்பவர்களுக்கு (PAID CLIENTS) WEBINAR முறையில் சொல்லித்தரலாம் என்று இருக்கின்றேன் அந்த முறையை முடிந்த பின்னர் BLOG படிப்பவர்களுக்கு ஆரம்பிக்கலாம் என்று இருக்கின்றேன் அதோடு அதிகமான நண்பர்கள் BLOG படிக்க ஆரம்பித்தவுடன் நடத்தலாம் என்றும் ஒரு எண்ணமும் உண்டு, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நமது BLOG பற்றி சொல்லுங்கள் நிறைய நண்பர்கள் வந்தால் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும் ஏனெனில் ஒரு பாடம் முடிந்த உடன் கேள்விகள் எழும் அகவே அதை தனித்தனியாக நிவர்த்தி செய்வது கடினம் மேலும் பின்னால் வந்து படிப்பவர்களுக்கு புதிய கேள்விகள் எழுந்தால் அதை நிவர்த்தி செய்வது சற்று கடினமாக இருக்கும் சூட்டோடு சூடாக நிவர்த்தி செய்வது தான் நலமாக இருக்கும் அதனால் தான் காத்துக்கொண்டு இருக்கின்றேன், முதலில் PAID CLIENTS க்கு முடித்து விடுகிறேன் பிறகு அனைவருக்கும் ஆரமிப்போம்



2-வணக்கம் ,

1. LARGE CAP, MID CAP ,SMALL CAP என ஷேர்கலை எந்த அடிபடையில் கூறுகிறார்கள் ?

2. SMALL CAP ,MID CAP SHARE இல் 10 நல்ல ஷேர்கலை கூறவும்

நன்றி சார் ...
ஈஸ்வரன் .ஜெ

அதாவது அந்த குறிப்பிட்ட நிறுவனமானது IPO எனப்படும் INITIAL PUBLIC OFFER என்ற முறையில் பொது மக்கள் மற்றும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அதற்க்கு பதில் அவர்களுக்கு அதற்க்கு ஈடான பங்குகளை வழங்குவார்கள் இல்லையா அப்படி வழங்கப்படும் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு 250 கோடிகளுக்குள் இருந்தால் அது SMALL CAP (SMALL CAPITALIZATION ) பங்கு ஆகும், இந்த SMALL CAP வகை பங்குகளை நீண்ட நாட்கள் முதலீட்டின் அடிப்படையில் வாங்குவார்கள் வாங்கலாம் அனால் இதில் DIVIDEND போன்ற சமாச்சாரங்களை எதிர் பார்க்க முடியாது, மேலும் IPO வில் வரும் அநேக நிறுவனங்கள் SMALL CAP வகையை சேர்ந்த பங்குகளாக இருக்கும், மேலும் அவர்களின் வியாபாரம் ஒரு தொலை நோக்கப் பார்வையில் வளரும் என்று தோன்றினால் வாங்கிப்போடலாம், அதேபோல் 250 கோடிகளிலிருந்து 4000 கோடிகள் வரை சந்தை மதிப்பை கொண்டுள்ள பங்குகள் மிட்கப் வகையை சேர்ந்த பங்குகள் ஆகும், இந்த வகைப்பங்குகள் நமக்கு ஓரளவு அறிமுகமான பங்குகளாக இருக்கும் மேலும் அவர்களை பற்றியும் அவர்களின் வியாபாரம் பற்றியும் நாம் அறிந்து இருப்போம், அதேபோல் 4000 கோடிகளுக்கு மேல் சந்தை மதிப்பை வைத்துள்ள நிறுவனங்கள் LARGE CAP பங்குகள் ஆகும், இந்த நிறுவனங்கள் வெகு விமர்சையாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு பங்காகவும் இருக்கும் உதாரணமாக RELIANCE, ICICI BANK இது போன்ற பங்குகள், இந்த SMALL CAP, MID CAP, LARGE CAP பங்குகளை பிரிப்பதில் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறு வேறு வித்தியாசங்கள் இருக்கும்... இந்த CORRECTION முடிந்த வுடன் சில பங்குகளின் பட்டியல் தருகிறேன் அதில் நீங்கள் கேட்டது போல நல்ல SMALL CAP, MID CAP பங்குகளும் வரும்....

3- SURENDHER.S

Hai Sir

I have already asked some questions to you.I am following your delivery tips that is really helpful and i have earned some money by using your tips.Sir i am very much interesting to learn technical analysis.You are following Fibonacci Method.I am also want to know this i am having some basic knowledge about candlestick stock.Please clarify my following doubts

Please tell me is there any class is going for learning Fibonacci method in chennai?

Please refer any good book for Fibonacci?

I have learned some basic about candle stick by using MartinPring Video.Is there any video tutorials like that for fibonnaci..i have searched net by i am getting lot of result i did not know which is good.Please help me on this..

Whether i have to use any software for trading.. I am not a full time trader but i am will to learn some techniques..Please refer me some good software and data provider..

Sorry yesterday only i came form my native so i am not able to send this questions earlier... If possible please answer this questions today or tomorrow.

Waiting for your valuable reply..

Thanks for your wonderful work..

நான் வெறும் FIBONACCI RETRACEMENT ஐ மட்டும் பின்பற்றுவதில்லை அதும் ஒரு முக்கியமான அங்கம்….
அநேக நண்பர்கள் இதுபோன்ற வகுப்புகள் எடுக்கின்றார்கள், மேலும் TECHNICAL வகுப்புகளில் நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இல்லை சும்மா SHARP பா இருந்தீங்கன்னா 2 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம், ஆனால் அதை பயிற்ச்சி செய்யும் முறை தான் முக்கியம், எனக்கு தெரிந்து என்னிடம் தொலை பேசியில் பேசிய நண்பர்கள் அனைவரும் TECHNICAL ANALYZING பயின்றவர்கள் தான், இப்பொழுது 3000 ரூபாய்க்கு TECHNICAL CLASS ஐ நிறைய நண்பர்கள் எடுக்கின்றார்கள், நான் இங்கு யாரிடமும் TECHNICAL கற்றுக்கொள்ள வில்லை எனக்கு அனுபவம் கிடைத்து இருந்தால் சொல்லலாம் எனக்கு இல்லை, வேறு யாருக்கும் சென்னை யை சேர்ந்தவர் யாரும் நன்றாக சொல்லித்தருபவராக இருந்தால் நண்பருக்கு பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள், தமிழில் FIBONACCI பற்றி புத்தகம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை, ஆங்கிலத்திலும் FIBONACCI க்கென்று தனியாக ஏதும் புத்தகம் இல்லை (தெரிந்தது இருந்தால் யாரும் சொல்லுங்கள்) FIBONAACCI பற்றிய VEDIO பதிவு இதை பாருங்கள் FIBONACCI இது கொஞ்சம் நல்ல இருக்கு, TRADING SOFTWARE என்றால் எனக்கு புரிய வில்லை எதுக்காக PRICE MOVEMENT பார்க்கவா அல்லது CHART MOVEMENT பார்க்கவா, CHART MOVEMENT என்றால் WWW.ICHARTS.IN OK



4-Dear Sir,

Thanks for the good job that you are doing.

கேள்வி-1

For Swing trading and short term trading what are the moving average that i should use. Please suggest a suitable Moving average crossover to predict short term trends and mainly to avoid whipshaws and false breakouts.

கேள்வி-2

While reading many blogs(both north indians and foreigners)they say “Trading Systems”.
I don’t understand whats that. Is there any particular software for that. How to create our own trading system.Please explain.

Thanks a lot,
Vigneshkumar


நான் 26 EMA, 36 EMA, 18 EMA வை பயன் படுத்துகிறேன், ஆனாலும் என்னால் அதை 100% நம்பகமானது என்று சொல்ல முடிய வில்லை, அதிலும் சில WHIPSAWS AND FALSE BREAK OUTS வருது ஆனாலும் அதை RSI, STS, BOLINGER BONDS, PARABOLIC SAR, போன்ற INDICATORS களை பயன் படுத்தி சரி செய்ய முடிகின்றது ஆனால் அதற்க்கு உங்களுக்கு கொஞ்சமாவது TECHNICAL ANALYZING தெரிந்து இருந்தால் இன்னும் நலமாக இருக்கும், என்ன இருந்தாலும் நீங்களே MOVING AVERAGE களின் கலவைகளை போட்டு, மாற்றி மாற்றி பாருங்கள் ஏதாவது ஒன்று SET ஆகி விடும் பிறகு அதை இன்னும் மேலும் அதை சரி படுத்துங்கள், 100% சரியாக வரும் வரை விடாதீர்கள், முயற்சி செய்யுங்கள் மனம் தளராதீர்கள் உங்கள் இலக்கை அடைந்து விடலாம், வாழ்த்துக்கள், TRADING SOFTWARE என்பது இந்து தான் MOVING AVERAGE இன் கலவைகளில் BUY SIGNAL, மற்றும் SELL SIGNAL களை கண்டு பிடிப்பது, அது மட்டும் இல்லை ஏதாவது ஒரு முறையை பயன் படுத்தி ஒரு பங்கை இந்த புள்ளியில் வாங்கலாம், விற்கலாம் என்ற முடிவுக்கு வர பயன் படும் முறைகளே TRADING SYSTEM ஆகும்


5-Hi Mr.Balaji

I am NMP.

தங்களின் தன்னலமற்ற சேவைக்கு மிகவும் நன்றி பாலாஜி.

எனக்கு மூன்று சந்தேகங்கள் ரொம்ப நாளாகவே புரியாமல் இருக்கிறது சார்.இதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

1.Is there any difference between Volume and Quantity.

2.Rectangle Bottom Upside breakout,Rectangle Top Downside Breakout இந்த மாதிரி Pattern ல் Breakout ஆனா Uptrend,Downtrend அப்டின்னு எடுக்கலாம்.அந்த uptrend and downtrend க்கு target எப்படிங்க கண்டுபிடிக்கறது?

3.Nifty Future ல் வரும் premium and discount என்றால் என்ன? spot nifty யை பார்க்கும் போது அது previous close ல் இருந்து இவ்வளவு points உயர்வு அல்லது குறைவு என்று தெரிகிறது.ஆனால் இந்த premium and discount ஒரே நாளில் வெவ்வேறு numbers வருகிறதே. அது எப்படி சார்.

(கேள்விகளை தெளிவாக கேட்டேனான்னே தெரியலை.புரிந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி :) )


தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

மிகவும் நன்றி.

Priya


VOLUME மற்றும் QUANTITY என்ற இரண்டுமே ஒன்று தான்,

BREAK OUT, BREAK DOWN ஆகும் போது வெறும் TRIANGLE அமைப்பு மட்டுமில்லாமல் வேறு சில அமைப்புகளும் அதற்குள் வரும் அதாவது CUP என்ற அமைப்போ, அல்லது H&S, என்ற அமைப்போ வரும் அவைகளின் உயரங்களை வைத்து நாம் இலக்குகளை அளந்து விடலாம்

PREMIUM AND DISCOUNT என்பது SPOT NIFTY கும் FUTURE NIFTY க்கும் இடையே உள்ள புள்ளிகளின் வித்தியாசம் தான் அதற்கென்று வேறு தனியாக அளவுகோல் இல்லை SPOT NIFTY ஐ விட FUTURE NIFTY அதிகமான புள்ளியில் இருந்தால் PREMIUM என்றும் குறைவாக இருந்தால் DISCOUNT என்றும் சொல்லுவார்கள், உதாரணமாக SPOT NIFTY 4300 என்று வர்த்தகம் ஆகும் போது FUTURE NIFTY 4320 என்று வர்த்தகம் ஆனால் 20 புள்ளிகள் PREMIUM என்றும் ஒருவேளை FUTURE NIFTY 4280 என்று வர்த்தகம் ஆனால் 20 புள்ளிகள் DISCOUNT என்றும் சொல்லுவார்கள்


6- Hai Sir

Sorry For asking my 2nd question.I have planned to do mini nifty trading from next month onwards so only i am asking please answer for this question also

Sir from the previous post i have learned about open interest.But i need some clarification about the basic future trading

I have collected the following details about nifty trading in web Please tell me weather this is correct or not For buying/Selling any nifty(50 count)/mini nifty(20 count) we need 2 kind of margins

1,intial margin – This is used to buy/sell futures
2,span margin – This is used to close the position on every day

These 2 margins are varying based upon the market situation and also these are varying among the brokers

I will explain this as detail below

Today nifty close @4517.80 so
Intial margin for mininifty = [4527.80 * 20 (lot count)]*11%(may vary) = 9939.16
Span margin for mininifty = [4527.80 * 20 (lot count)]*8%%(may vary) =7244.48
So for buying 1 lot of mininifty we need = 9939.16+7244.48 = 17183.64

Here is the example of trade

1,Suppose tomorrow if we bought 1 lot of mininifty @ 4517.80 and if we sell that same @ 4532.8 means we will get 15 pts as profit so Our profit is (15*20) = 300 Rs, So in our account we will have 17183.64(span+intial margin)+300(profit) = 17483.64

2,Suppose if we get 15 pts loss means then Our loss is (-15*20) = -300 So in our account we will have 9939.16 (intial margin) + [7244.48 (span margin) – 300(loss)] = 16883.64

Some broker like ICICI is giving intraday in mininifty for intraday they will give some less span margin now its rate is 2%

if we bought any nifty or mini nifty means we can keep that till the expiry if suppose loss means they will take that amount form our span margin if we lose all our span margin means they will ask us to pay.. if we came at that point means we will get our initial margin

Here is my question

Sir where i can get the percentage details for initial and span margin ???

What are the things we need to consider while trading in nifty/mininifty??

What is mininum investment required for doing nifty/mininifty now?

Sir if possible please explain this questions first

Thanks
S.Surenther

உங்களின் இந்த கேள்வி TECHNICAL ஆக கேட்கின்றீர்களா இல்லை பொதுவாக கேட்கின்றீர்களா என்று எனக்கு சரியாக தெளிவாக வில்லை, ஒரு வேலை TECHNICAL ஆக நீங்கள் கேட்டு இருந்தால் சரியான ENTRY POINT, மேலும் நிபிட்டி இன்னும் எவளவு புள்ளிகளை மேலேயோ அல்லது கீழேயோ கடக்கும் என்ற இலக்கு நிர்ணயிக்கும் புள்ளிகளை சரியாக தெரிந்து வைத்து இருத்தல், மேலும் தற்பொழுது நீங்கள் செய்யப்போகும் வர்த்தகத்தின் S/L என்ன என்பதினையும் தெரிந்து கொண்டு அந்த S/L க்கு அருகில் வந்தாலும் அந்த இழப்புகளை தாக்குப்பிடிக்கும் SPAN MARGIN போன்றவைகளை தயார்ப்படுத்திக்கொண்டு வர்த்தகம் செய்ய ஆரம்பியுங்கள்,,

மற்ற உங்களின் இரண்டு கேள்விகளுக்கும் உங்களின் பங்கு தரகர்களின் வலை தளங்களிலேயே காணப்படும், அதை உங்களால் கண்டு பிடிக்க முடிய வில்லை என்றால், உங்கள் தரகர்களிடம் தாராளமாக MARGIN DETAILS எப்படி உங்களின் வலைத்தளங்களில் பார்ப்பது என்று கேளுங்கள், மேலும் MARGIN ஐ பொறுத்த வரை பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் மாற்றங்களை பொறுத்து தினமும் மாறிக்கொண்டே இருக்கும், ஆகவே இதற்காக நீங்கள் % போட்டு கணக்கிட வேண்டியதில்லை உங்களின் தரகர்களே அதை செய்து தருவார்கள் மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விசயங்களும் அதில் இருக்கும், தெரிந்து கொள்ளுங்கள், கீழே ஒரு படம் கொடுத்துள்ளேன் இதே போல் தான் உங்களின் பங்கு தரகர்களின் வலை தளங்களில் MARGIN விளக்கங்கள் இருக்கும்

MARGIN DETAIL



7- Dear Saravanan


Why sometimes market doesn't opens from the previous day's close?. I have seen sometimes it is higher or lower than the previous day's close. Please explain and advance thanks for your answers.

Thanks and regards,

RENGANATHAN . M
Singapore

பங்குகளில் மற்றும் சந்தைகளின் INDEX களில் தொடக்கத்தில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்கள் என்பது அவைகளில் ஏற்ப்படும் DEMAND ஐ பொறுத்தது அதாவது சந்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கோ உயர வேண்டும் அல்லது கீழே விழ வேண்டும் என்ற சூழ்நிலைகளை பொறுத்து (அதாவது வர்த்தகம் செய்யும் நபர்களின் தேவை அல்லது தேவையின்மையை பொறுத்து பங்குகளில் மற்றும் INDEX களில் ஏற்ற இறக்கமான மாற்றங்கள் இருக்கும்) மேலும் முடிவடைந்த புள்ளியில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை, நீங்கள் ஒரு குறிப்பிட்ட பங்கை என்ன விலைக்கு வாங்க வேண்டும் என்று முடிவு செய்து சரியாக 9.55AM க்கு BULK ORDER என்ற முறையில் ORDER PLACE செய்து அந்த உங்களின் ORDER சந்தையில் முதலில் சென்றால் மேலும் நீங்கள் வாங்க நினைத்த விலைக்கு யாரும் கொடுக்க (seller) நினைத்தால் நீங்கள் செய்த வர்த்தக விலை தான் அந்த குறிப்பிட்ட பங்கின் அல்லது INDEX இன் OPEN PRICE ஆக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள், ஆனால் பெரிய ஆட்கள் CD ஐ பயன் படுத்தி BULK ORDER போடுவார்கள் உங்களால் அவர்களுடன் போட்டி போடா முடியாது மேலும் அது ஆரோக்கியமான செயலும் இல்லை……..


MAYA SHARE மற்றும் PAID CLIENTS க்கு இடையே வர்த்தக இலக்குகளை அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக நடந்த மின் அஞ்சல் பரிமாற்றங்கள்……


நண்பர்களே இங்கு கீழே கொடுத்துள்ள விஷயங்கள் அல்லது கேட்டுள்ள விஷயங்கள் என்னுடன் இணைந்து இருக்கும் PAID CLIENTS க்காக உருவாக்கப்பட்ட சில விஷயங்கள், இது அனைவருக்கும் பயன் படக்கூடியது தான், நாங்கள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி நகரும் வேளைகளில் இறங்கியுள்ளோம், அதேபோல் நீங்களும் அமைத்து செயல் படவேண்டும் என்றாலும் செயல் படலாம் முயற்சி செய்து பாருங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள், எங்களது இலக்கை அடைய சில விசயங்களை எங்கள் வர்த்தக குடும்பத்தில் இணைந்துள்ள நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்து சில கேள்விகளையும், மேலும் அதற்கான பதில்களையும் மின் அஞ்சல் வாயிலாக கடந்த இரண்டு வாரமாக நாங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள்தான் கீழே நீங்கள் படிக்கப்போவது, இதே போன்று நீங்களும் முயற்சி செய்து பார்த்தால் உங்களின் வர்த்த பாதை சரியான முறையில் செல்லும் பயனை அடையலாம், பயன்படுத்திக்கொள்ளுங்கள்

முதல் பகுதி

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - பகுதி 1"

நண்பர்களே இந்த தருணத்தில் நாம் நம்மை, நமது வர்த்தக பயணங்களை, முறைப்படுத்தி நமது இலக்கு என்ன என்பதை முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. தினமும் இலக்கே இல்லாமல் நாம் வர்த்தக பயணத்தை மேற்கொள்வது போர்க்களத்தில் என்னைபோல் லட்சோப லட்ச வீரர்கள் என்னுடன் வருகிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருப்பதை ஒத்தது ஆகும். (மதிப்பு மிக்க, திரும்பி பெற முடியாத நமது உயிர் நமக்கு முக்கியம் இல்லையா அந்த உயிர் இருந்தால் தானே இன்னும் எத்தினையோ ஆயிரம் வீரர்களை வெற்றிகொள்ள முடியும், போர் என்பது ஒரே நாளில் முடிந்து விடுவதும் இல்லை, வேறு ஒரு அரசனோடு வேறு ஒரு போர் வாராமல் இருக்கவும் போவதில்லை)

நம்மீது ஒரு விச அம்பு தைத்து நாம் இறப்பதற்கு முன் ஆயிரம் வீரர்களை ஒரே நாளில் கொன்றிருந்தாலும் தற்பொழுது நம் உயிரை வாங்கியது ஒரு விச அம்பு என்பது உண்மை தானே, அதற்கு பதில் இன்று நான் 100 வீரர்களை வெற்றிகொள்வேன் என்று முடிவெடுத்து அதற்கான முன்னேர்ப்பாடுடன் சென்று வென்று அத்துடன் அடுத்தநாள் போரில் உங்களின் இலக்கை அடைவதற்காக ஓய்வெடுக்க சென்றால், அல்லது நமது இலக்கை அடைந்தவுடன் எந்த எந்த வீரர் எப்படி எல்லாம் வெற்றி கொள்கிறார்கள் எப்படி எல்லாம் வீழ்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்து போர்யுக்தியை கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியதின் விளைவு இதோ உங்கள் முன்னாள் இந்த கேள்விகள்

இதே போல் நாம் தினமும் நமக்கு சந்தையில் என்ன வேண்டும் என்பதை முடிவெடுத்து அதற்காக நாம் பயணம் செய்து நமது இலக்கு வந்தவுடன் பொறுமையாக அடுத்த நாளுக்கான ஓய்வயோ அல்லது சந்தையில் பங்குகளில் என்ன என்ன எப்படி எப்படி நடக்கிறது என்பதை பார்த்து கற்றுக்கொள்ளவோ செய்யலாம், அல்லது நமது அளவுகளை குறைத்து சந்தையை சோதனை செய்து பார்க்கலாமே இதனால் சந்தை பற்றிய நமது பயம் ஒளியும் தெளிவு பிறக்கும், இதற்க்கு முன்னாள் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்து இருந்தாலும் இனிமேல் நாம் நமது பயண இலக்கை ஒரு முறை சரியான முறையில் வகைப்படுத்த வேண்டிய நேரத்தில் உள்ளோம், ஆகவே நான் கீழே கேட்டுள்ள கேள்விகளுக்கு தவறாமல் விடையளித்து எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

கேள்விகள்

1-நீங்கள் சந்தையில் தின வர்த்தகத்திற்காக எவளவு முதலீடு செய்துள்ளீர்கள்

2-தற்பொழுது நீங்கள் சந்தையில் செய்துவரும் தினப்படி வருமானம் என்ன

3-நீங்கள் வேறு யாரிடமும் தினவர்த்தக பரிந்துரை வாங்குகிறீர்களா

4-நீங்கள் இதுவரை தின வர்த்தகத்தில் செய்துள்ள LOSE எவளவு

5-உங்களுக்கு மாத மாதம் இவளவு தேவை என்ற கடுமையான கட்டாயம் ஏதும் உள்ளதா (அதாவது உங்கள் கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய தொல்லைகள் உள்ளதா)

6-உங்களின் வருமானம் சந்தையை மட்டுமே நம்பி உள்ளதா, (நீங்கள் ஒரு PROFESSIONAL TRADER ஆ)


7-இனிமேல் தினமும் சந்தையில் இருந்து எவளவு எதிர்பார்க்கின்றீர்கள்

8-அதற்கான முதலீடு தேவையை உங்களால் பூர்த்தி செய்யமுடியுமா (உதாரணமாக தினமும் 1000 ரூபாய் வருமானம் வேண்டும் என்றால் குறைந்தது 30000 TO 50000 முதலீடு தேவை)

9-உங்களின் RISK எடுக்கும் எல்லைக்கோடு எது (உங்களால் எந்த அளவுக்கான நட்டத்தை தாங்கிக்கொள்ள முடியும்)

10-நீங்கள் எந்த SEGMENT லும் வர்த்தகம் செய்ய தயாராக இருக்கின்றீர்களா அல்லது ஏதாவது குறிப்பிட்ட SEGMENT இல் மட்டும் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா (CASH, F&O, COMMODITY)

11-நீங்கள் உங்கள் தின இலக்குகளை தொடர்ந்து 1 மாதம் அடைந்தால் உங்களின் மன நிலை என்ன ?

12-நீங்கள் உங்கள் தின இலக்குகளை 50% மேல் 1 மாதம் அடைந்தால் உங்களின் மன நிலை என்ன ?

13-நீங்கள் எனக்கு வேறு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா

இந்த கேள்விகளுக்கெல்லாம் மறுக்காமல் விடையளியுங்கள், இவைகளை பொறுத்து என்னால் உங்களின் இலக்கை நோக்கி பயணிக்க 100% உறுதுணையாக இருக்க முடியும், அப்படியே உங்களின் இலக்குகளில் ஏதும் தடை ஏற்ப்பட்டால் அது என்ன எங்கு எப்படி ஏற்ப்பட்டது என்று ஆராயவும், அதை சரி செய்வதற்கு தோதான வழிகளையும் நாம் கண்டு வெற்றியின் இலக்கை அடையலாம்,

"நாம் வெற்றியடைய வில்லை என்றால் வேறு யார் வெற்றியடைய முடியும்"


பதில்கள் கிடைத்தவுடன் அனுப்பிய இரண்டாம் பகுதி

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - பகுதி 2"

நண்பர்களே எனது "இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - பகுதி 1" மின் அஞ்சலுக்கான தங்களின் பதில் மின் அஞ்சல் கிடைத்தது மிக்க நன்றி, உங்களிடமிருந்து வந்த மின் அஞ்சல்களின் மூலம் உங்களின் நிலை, உங்களின் தேவை, உங்களின் கை இருப்பு, உங்களின் ஆர்வம், இவை அனைத்தும் சற்றேறக்குறைய தெளிவாக கிடைத்தது இது போன்ற நண்பர்கள் உங்கள் அனைவரின் தேவைகள், சூழ்நிலைகள் ஆகிய அனைத்தின் முழு வடிவமும் கிடைத்ததால் என்னால் இன்னும் தெளிவாக உங்களுக்கான வர்த்தக பாதையை அமைத்து எந்த வித பதற்றமும் இல்லாமல் சுலபமாக உங்களின் ஒரு நாளைய தேவையை எடுத்து தருவதற்கான செயல்கள் முடிந்து கொண்டே இருக்கின்றது,

எனது வருங்கால இலக்காக S/L இல்லாத பரிந்துரைகள் தர வேண்டும் என்பதை கொண்டுள்ளேன் (நட்டமே வராத பரிந்துரைகள் தருவது) அதற்கான எனது முயற்ச்சிகளில் 75 % ஐ கடந்து வந்து விட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன், (இப்பொழுதே நமது பரிந்துரைகளின் நடவடிக்கைகள், நான் உங்கள் வர்த்தகத்தின் மீது காட்டும் அக்கறை, ஒவ்வொருவரையும் தனித்தனியாக தங்களின் வர்த்தக செயல்பாடுகளை பற்றி கேட்டு வருவது எல்லாம் நமக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதை விட உங்களின் வர்த்தகம் பாதுகாப்பாக செல்கின்றதா என்பதினை அறிந்து கொள்வதற்காகவே ஆகும், இதனால் எனக்கு சந்தையின் போக்குகளை கவனிப்பதிலிருந்து சற்று நேரம் விலகி வரும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும், அதனால் உங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று பரிந்துரைகள் வருவது இல்லாமல் போனாலும் நாம் அனைவரும் நாம் வகுத்த இலக்கை நோக்கி பாதுகாப்பாக நகர்கின்றோமா என்பதை அறிந்து கொள்ள முக்கியமாக படுகிறது அதுவும் கொஞ்ச நாட்கள் வரையும் தான், அதன் பிறகு உங்களுக்கே எப்படி எனது பரிந்துரைகளில் வர்த்தகம் செய்யவேண்டும் எப்படி லாபத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கை வந்த கலையாக வந்து விடும் சூழ்நிலை இருப்பதால் நமது எதிர்காலத்தில் நமது முழு நோக்கமுமே லாபத்தை பற்றியதாக மட்டுமே இருக்கும்,

என்னிடம் உள்ள நண்பர்கள் நீங்கள் அனைவரும் சந்தை பற்றிய துளி பயமும் இல்லாமல் அதே நேரம் சரியான இலக்குடன் சந்தையை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்பதே, அதை நோக்கி நாம் நகர்வோம் இப்பொழுதே அது உங்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்றே நான் நம்புகிறேன் (விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று பழமொழி உள்ளது) நாம் இப்படி எல்லாம் நமது வர்த்தக பயணத்தை மேற்கொள்வதற்கு இன்னும் சில விஷயங்கள் நீங்கள் செய்ய வேண்டியுள்ளது, உங்கள் அனைவரின் இலக்குகள் வெவ்வேறாக இருப்பதினால் நான் பொதுவாக ஒரு நாளைக்கு ரூபாய் 1000 என்று உதாரணத்திற்காக எடுத்துக்கொண்டு இந்த 1000 ரூபாயை நாம் லாபமாக இட்டுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை கூறுகிறேன், இதில் நீங்கள் ருபாய் 2000 இலக்காக வைத்து இருந்தால் அதற்க்கு தகுந்தார்ப்போல் உங்கள் QUANTITY களை உயர்த்திக் கொள்ளுங்கள்

உதாரணமாக உங்களின் இலக்கு 1000 என்றால் நீங்கள் வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 100 என்று இருக்கும், அதே நேரம் உங்கள் இலக்கு 1500 என்றால் நீங்கள் 150 எண்ணிக்கை அளவான பங்குகளை வாங்குங்கள், ஒரு வேலை இலக்கு 2000 என்றால் பங்குகளின் எண்ணிக்கை 200 ஆக வர்த்தகம் செய்யுங்கள், சரி நாம் வர வேண்டிய விசயத்துக்கு வருவோம், பொதுவாக நமது பரிந்துரைகள் எப்பொழுது வந்தாலும் ஒரு குறிப்பிட்ட விலையை கடந்தவுடன் தான் வாங்கவோ அல்லது விற்கவோ சொல்லி வரும் அப்படி வரும்போது, அந்த குறிப்பிட்ட புள்ளியை கடந்தவுடன் நீங்க செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம்

உதாரணமாக ONGC என்ற பங்கை 1000 என்ற புள்ளிகளுக்கு மேல் வாங்கலாம் என்று நான் பரிந்துரை கொடுத்து இருந்தால் நீங்கள் 1000 என்ற புள்ளியை கடந்தவுடன் அந்த பங்கில் வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம் மேலும் அந்த புள்ளிகளுக்கு மேல் அந்த பங்கின் VOLUME இல் சில அதிகப்படியான மாற்றங்கள் வருகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள் அடுத்து நாம் S/L ஆக கொடுக்கும் புள்ளியை தொடும் வரையும் கூட நீங்கள் வாங்கலாம், S/L ஐ கடந்து கீழே போகும் என்றால் வெளியே வந்து விடுங்கள், பதட்டமோ, மறுபடியும் ஏறும் என்ற நினைப்போ வேண்டவே வேண்டாம், ஒரு குறிப்பிட்ட பங்கில் நீங்கள் உள் நுழைந்தவுடன் அந்த பங்கில் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் நான் உங்களுக்கு தெரியப்படுத்தி உங்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விடுவேன்..

அடுத்து ஒரு பங்கு இவளவு தூரம் வரைக்கும் போகலாம் என்று நான் உங்களுக்கு இலக்குகளாக கொடுக்கும் புள்ளிகள் வரைக்கும் காத்து இருக்காமல் முதலில் ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட லாபம் கிடைத்தவுடன் வெளியே வாருங்கள் தொடர்ந்து உயர்ந்தால் அடுத்துள்ள மீதியில் ஒரு பகுதியை கொடுத்து விடுங்கள் இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் லாபங்களில் உறுதியாக கண்கொத்தி பாம்பாக இருங்கள் ஒருவேளை நீங்கள் ஒரு பகுதியை கொடுத்தபின் சற்று கீழே வந்தால் அதாவது நீங்கள் வாங்கிய புள்ளிகளுக்கு அருகில் வந்தால் மறுபடியும் விற்ற அளவிற்கு வாங்கி சற்று ஏறிய பின்பு கொடுத்து விடுங்கள் அல்லது முதலில் நிங்கள் விற்ற புள்ளியில் தடைகளை சந்திக்கின்றதா அல்லது தொடர்ந்து உயர்கின்றதா என்று பார்த்து அதை கடந்தால் சற்று பொறுத்து கொடுத்து விடுங்கள் அல்லது அந்த புள்ளிகளில் மறுபடி மறுபடி தடைகளை சந்தித்தால் முழுவதும் கொடுத்து விடுங்கள்…

நாம் கொடுக்கும் அனைத்து பரிந்துரைகளும் END OF THE DAY CHART களின் அடிப்படையில் BREAK OUT கிடைத்தவுடன் INTRA DAY CHART இல் சில உறுதிகள் பெற்ற பின்பு தரப்படும் பரிந்துரைகளாகும் ஆகவே அதன் நம்பகத்தன்மை அதிகமாகும் ஆகவே நீங்கள் கவலை இன்றி இருக்கலாம் அதே நேரம் அதில் ஏதும் பிரச்சனைகள் வரும் பட்ச்சத்தில் நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வேன் கவலை வேண்டாம்...

சரி நமது தின இலக்குகளை எடுப்பதற்கு நாம் எந்தளவிர்க்கான எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவேண்டும் என்பதை இப்பொழுது சொல்கின்றேன் நமது இலக்குகளை அடைவதற்கு இது மிகவும் முக்கியமானது, இதன் படி நீங்கள் கண்டிப்பாக செயல் பட்டால் தான் எந்தவித தடங்கல்களும் இன்றி உங்களின் இலக்குகளை அடைய முடியும் கீழே எந்த விலையுள்ள பங்குகளில் எந்த அளவு எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவேண்டும் அதில் எவளவு புள்ளிகளை லாபமாக இட்ட வேண்டும் என்று கீழே சொல்லி வருகிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் மேலும் அதன் படி செயல்படுங்கள் வர வர உங்கள் மூளை உங்களை கேட்காமலே அதை செய்து முடித்து வெற்றி என்ற முடிவை மட்டும் உங்களுக்கு சொல்லும்


1-250 ரூபாய்க்கும் அதற்க்கு கீழேயும் உள்ள பங்குகளில் வரும் பரிந்துரைகளில் நீங்கள் குறைந்தது 200 முதல் 250 அளவுக்கான எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவேண்டும், மேலும் அந்த பங்குகளில் நீங்கள் 3 ருபாய் முதல் 5 ருபாய் வரைக்கும் லாபத்திற்காக பொறுத்து இருங்கள், 3 ரூபாய்க்கு அருகில் வந்தவுடன் உங்களின் முதல் பாதியை லாபம் பார்த்து விடுங்கள், அடுத்த பகுதியை 5 ரூபாயில் முடித்துக்கொள்ளுங்கள், நான் 20 ரூபாய் வரை ஏறும் என்று வருசயாக இலக்குகளை கொடுப்பேன் அது வரைக்கும் நீங்கள் பொறுத்து இருக்க வேண்டாம் (நாம் இங்கு இருப்பது வருமானம் செய்வதற்காக மட்டுமே SPECULATE செய்வதற்கு இல்லை, சில நேரங்களில் பொறுத்து இருங்கள் என்று நான் தனியாக ஏதும் செய்தி அனுப்பினால் பொறுத்து இருக்கலாம்)

2-அடுத்து 251 TO 500 வரைக்குமான பங்குகளில் வரும் பரிந்துரைகளில் குறைந்தது 150 TO 200 வரைக்குமான அளவுகளில் வர்த்தகம் செய்யுங்கள் இலக்காக 5 முதல் 8 ரூபாய் வரைக்கும் நீங்கள் காத்து இருங்கள், 4 ரூபாயை கடந்தவுடன் முதல் பாதியை முடித்துக்கொள்ளுங்கள்

3-அடுத்து 500 TO 1250 வரைக்குமான பங்குகளில் வரும் பரிந்துரைகளில் குறைந்தது 100 TO 150 வரைக்குமான அளவுகளில் வர்த்தகம் செய்யுங்கள் இலக்காக 8 TO 15 ரூபாய்களை வைத்துக்கொள்ளுங்கள் 6 ரூபாய்களுக்கு மேல் முதல் லாபம் பார்த்து விடுங்கள்

4-அடுத்து 1250 TO 2000 வரைக்குமான பங்குகளில் குறைந்தது 75 TO 100 என்ற அளவுகளில் பங்குகளை வாங்கி இலக்காக 10 முதல் 20 ரூபாய்களை வைத்துக்கொள்ளுங்கள்

5-2000 ரூபாய்க்கு மேல் உள்ள பங்குகளில் வரும் பரிந்துரைகளில் குறைந்தது 50 எண்ணிக்கை அளவுகளில் பங்குகளை வாங்குங்கள் இலக்காக 10 TO 25 ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்கலாம்…

இது அனைத்தும் 1000 ரூபாயை தினமும் லாபமாக அடைய நாம் செய்ய வேண்டிய வர்த்தக முறைகள், உங்களின் இலக்கு அதிகமாக் இருந்தால் அளவுகளை அதற்க்கு தகுந்தது போல நான் முன் சொல்லியது போல மாற்றிக்கொள்ளுங்கள், இது போன்று ஒரு நாளைக்கு மூன்று வர்த்தகம் செய்தாலே போதும் நாம் நமது சராசரியாக நமது இகக்குகளுக்கு மேல் லாபம் அடையலாம், மேலும் உங்களின் இலக்குகள் அன்றையதினம் அடைந்து விட்டால் அதற்க்கு பிறகு வரும் பரிந்துரைகளில் உங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யுங்கள் அல்லது அதே அளவுகளிலும் செய்யலாம் இது போன்று தொடர்ந்து 10 நாளைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு செய்து விட்டால் பிறகு நமது இலக்குகள் நம் கண்முன்னால் நின்று நம்மிடம் பேசி சாப்பிட்டு விட்டு போகும் முதலில் இதை செய்ய கஷ்டமாக இருந்தாலும் விடாதீர்கள் தொடர்ந்து செய்வோம் வெற்றி பெறுவோம்

நன்றி
சரவணபாலாஜி

உங்களுக்காகாக இரு திருக்குறள்கள்

1வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

(பிறர் பொருளாக இருப்பினும் அதனை தன பொருளை போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே நெறி எனப்படும்)

2-இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

(ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்க்கு பிறகு அந்த காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்)