Friday

NIFTY ON FRIDAY

31-07-09

வெளியூர் செல்ல வேண்டியுள்ளதால் இன்று விரிவாக பதிவிட இயலவில்லை, கீழே NIFTY யின் இன்றைய நிலைகளையும் கவனிக்க வேண்டிய பங்குகள் பற்றிய விவரம் மட்டும் தந்துள்ளேன், பயன் படுத்திக்கொள்ளுங்கள் - நன்றி

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4607 TARGET 4615, 4626 TO 4629, 4653, 4692, 4731, 4744, 4767

NIFTY SPOT BELOW 4566 TARGET 4550 TO 547, 4531 TO 528, 4486, 4447, 4439 TO 435, 4428, 4414 TO 4400

NIFTY 4607 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து SUPPORT புள்ளியாக 4592, 4575 என்ற புள்ளிகள் இருக்கும் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்வதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கலாம்,

கவனிக்க வேண்டிய பங்குகள்

TATA COMM

இந்த பங்கில் மேலும் தொடர்ந்து உயருவதக்கான வாய்ப்புகள் அதன் CHART படங்களில் தெரிவதால், இந்த பங்கை 565 என்ற புள்ளியை இலக்காக வைத்து SWING TRADING முறையில் வாங்கலாம், இதன் S/L ஆக 487 என்ற புள்ளி இருப்பதால் கீழே வந்தால் வாங்கலாம், அதே நேரம் 512 என்ற புள்ளியை மேலே கடந்தால் விரைவான உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதால் 512 க்கு மேல் தின வர்த்தகம் செய்பவர்கள் வாங்கலாம், இலக்காக 519, 525, 532 TO 535, 537, 556, 561, 565, S/L 498 OR இன்றைய LOW 498 என்ற புள்ளிக்கு கீழ் இருந்தால் அந்த புள்ளியை S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள்

Thursday

NIFTY ON THURSDAY

30-07-09

அமெரிக்க சந்தைகள் ஒரு சிறிய வீழ்ச்சியுடன் முடிந்து இருந்தாலும் ஒரு பெரிய வீழ்ச்சியில் இருந்து மீண்டு சற்றேறக்குறைய சிறிய வீழ்ச்சி என்ற நிலையில் முடிந்துள்ளது, தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் FUTURE MARKET சற்று உயர்வுடன் நடந்து வருகிறது, இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளிலும் உயர்வுடன் கூடிய மேடு பள்ளங்கள் தெரிகிறது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 10 புள்ளிகளை இழந்து தொடங்கி இருந்தாலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு நடந்து வருவதும் மேலும் அந்த புள்ளியை இன்னும் கீழே உடைக்காமல் தக்கவைத்துக்கொண்டு இருப்பதும் உயரும் வாய்ப்புகள் இருக்கலாம் என்ற என்னத்தை மேலோங்கச்செய்கிறது, அதற்க்கு துணையாக DOW JONES CHANNEL என்ற அமைப்பை சற்று கடந்துள்ளது

மேலும் DOW JONES 9160 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் இருப்பதால் நமது சந்தைகளும் அதற்க்கு தகுந்தார்ப்போல் நகரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் இன்று EXPIRY தினமாக வேறு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், நேற்று நாம் எதிர்பார்த்து போல ஒரு நீண்ட VOLATILE இருந்ததை கவனித்தீர்களா, ஆகவே சற்று விழிப்புடன் இருப்பது நல்லது

NIFTY க்கு 4380 என்ற புள்ளி தற்பொழுது மிகவும் முக்கியமான SUPPORT புள்ளியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உயர்வதற்கு 4615 என்ற புள்ளியை கடந்து 4640 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே சாத்தியம், அப்படி ஏற்ப்பட்டால் ஒரு நல்ல உயர்வுகள் இருக்கும் அதே நேரம் NFITY யின் PE RATIO 20.5 TO 20 என்ற புள்ளிகளில் ஆடிக்கொண்டு இருப்பது இரண்டு பக்கங்களுக்கும் (BULL & BEAR )வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது,

இருந்தாலும் முக்கியமான INDICATOR ஆனா RSI ஒரு முக்கியமான SUPPORT நிலையில் இருப்பதினால் மறுபடியும் 4590 TO 4630 என்ற புள்ளிகள் வரை ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் உலக சந்தைகள் எதிராக இருந்தால் இந்த உயர்வு நடக்க வாய்ப்பில்லை நேற்று நாம் எதிர்பார்த்தது போல சந்தையில் ஒரு நீண்ட VOLATILE இருந்ததை அறிந்து இருப்பீர்கள் ஆகவே சற்று கவனமாக இருப்பது தவறில்லை

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4530 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4557 என்ற புள்ளி வரை அருகருகே தடைகள் இருப்பதினால் 4557 என்ற புள்ளியை கடந்தால் சற்று விரைவான உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உலக சந்தைகள் சாதகமாக இருந்தால் இன்று ஒரு நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது அப்படி இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

அதே நேரம் NIFTY கீழே வர வேண்டுமாயின் 4500 என்ற புள்ளியை கீழே கடந்தாலே வாய்ப்புகள் உருவாகலாம் அதே நேரம் வருசயாக ஒவ்வொரு 20, 25 புள்ளிகளுக்கிடையே SUPPORT இருப்பதினால் தடுமாற்றமான வீழ்ச்சியாகவும் பதட்டமான சூழ்நிலையாகவும் இருக்கும், மேலும் இன்று EXPIRY தினமாக வேறு இருப்பதால் புதிய நிலைகள் எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது,

உயர்வுகள் ஏற்ப்பட்டால் கொஞ்சம் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் உங்கள் பழைய LONG POSITION களை முடிக்கும் முன் சற்று காத்து இருந்து முடிக்கலாம் (உயர்வுகள் வரும் வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே, உயர்வுகளை தடை புள்ளிகளை வைத்து முடிவு செய்யுங்கள்),

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4557 TARGET 4590 TO 592, 4621 TO 623, 4641, 4675 TO 677, 4769

NIFTY SPOT BELOW 4484 TO 4472 TARGET 4456, 4436 TO 4428, 4414, 4378, 4349, 4284, 4254, 4234, 4163

கவனிக்க வேண்டிய பங்குகள்

HINDUSTAN UNILEVER (HUL)

இந்த பங்கில் கடந்த இரண்டு தினங்களாக தற்பொழுது உயர்ந்த உயர்வில் கிட்டத்தட்ட 89% ஐ இழந்துள்ளது, இதுபோன்ற விரைவான வீழ்ச்சிகள் EXPIRY நேரங்களில் எதிர்மறையான நகர்வுகளை கொடுக்கலாம் (தொடர்ந்து இறங்கியே ஆக வேண்டும் என்றாலும் சரி தான்), ஆகவே இந்த பங்கை 265 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 278 TO 285 என்ற புள்ளிகள் இருக்கும் தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் இருந்தால் 301 வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 272 க்கு மேல் விரைவான உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இன்று EXPIRY தினம் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் அல்லது தின வர்த்தகத்தை தவிர்த்து விடுங்கள்

PFC ABOVE 232 TAR 245, S/L 225

Wednesday

NIFTY ON WEDNESDAY

29-07-09

அமெரிக்க சந்தைகள் FLAT என்ற நிலையில் முடிந்து இருந்தாலும், தொடக்கத்தில் வீழ்ச்சிகளில் இருந்து முன்னேறி FLAT என்ற நிலையில் முடிந்துள்ளது, ஆனால் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET சற்று கீழே இருப்பது ஆசிய சந்தைகள் உயர்ந்து தொடங்கி இருந்தாலும் மேலும் கீழும் ஆடும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஆசிய சந்தைகள் இன்று உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 30 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் OPEN மற்றும் HIGH என்ற இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தொடர்ந்து அந்த புள்ளிகளை உடைத்து முன்னேற முடியாமல் தற்பொழுது 25 புள்ளிகள் வீழ்ச்சிகள் என்ற நிலையில் நடந்து வருகிறது, எப்பொழுதும் போலவே இன்று நமது சந்தைகளில் VOLATILE என்ற நிலை இருக்கும் இருந்தாலும் இன்று நன்றாக ஏறி பிறகு நன்றாக இறங்கி என்று நீண்ட VOLATILE இருக்கும் வாய்ப்புகள் இருப்பது போல தெரிகிறது, அதே நேரம் உலக சந்தைகள் நல்ல முறையில் முன்னேறினால் நமது சந்தைகளில்லும் நல்ல முன்னேற்றம் இருக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை

தினமும் NIFTY பற்றி சொன்னதையே சொல்ல வேண்டியுள்ளது 4640 ஐ கடந்தால் தொடர்ந்து உயர்வு, 4440 ஐ கடந்தால் வீழ்ச்சிகள், இருந்தாலும் பெரிய வீழ்ச்சிகள் வரும் என்று சொல்லிவிட முடியவில்லை, மேலும் அமெரிக்க சந்தைகள் NORMAL MARKET இல் சில நம்பிக்கைகளுடனும், பகலில் நடக்கும் FUTURE MARKET இல் நம்பிக்கையற்றும் நடந்து வருவது நமது சந்தைகளில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது மேலும் EXPIRY வாரமாக இருப்பதினாலும் இந்த பிரச்சனைகள் இருந்து வருகிறது, EXPIRY முடியும் வரை சற்று பொறுமையாக இருந்து வர்த்தகம் செய்வது சிறந்தது,

இன்றைக்கு பொறுத்தவரை நேற்றைப்போல் FLAT MARKET ஆக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது நீண்ட தூர VOLATILE, NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4576 என்ற புள்ளியை கடந்தாலே உயரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் இன்றைக்கு உயரும் சூழ்நிலைகள் வந்தால் 4628 TO 4646 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம், NIFTY கீழே வர 4546 என்ற புள்ளியை உடைத்து கீழே செல்ல வேண்டும் மேலும் 4446 என்ற புள்ளியை கடந்தால் வீழ்ச்சிகள் சற்று விரைவாக இருக்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4576 TARGET 4598, 4618, 4628, 4646, 4655 TO 4661, 4706

NIFTY SPOT BELOW 4546 TARGET 4523 TO 4518, 4505, 4474, 4446, 4382

கவனிக்க வேண்டிய பங்குகள்

ADANI ENTERPRISES - RISKY CALL

BUY ABOVE 851 TARGET 865, 877, 896, S/L 842

SELL BELOW 841 TARGET 812, 799, 770

NAGAR CONSTRUCTION, STERLITE IND, IFLEX ABOVE 1345, APIL ABOVE 550

GOOD FOR SWING TRADING

Tuesday

NIFTY ON TUESDAY

28-07-09

அமெரிக்க சந்தைகள் கீழே வீழ்ந்து மறுபடியும் முன்னேறி FLAT என்ற நிலையில் முடிந்துள்ளது, அனால் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் நடந்து வருவதின் தாக்கமாக ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் உள்ளது இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் அதிகமாக உள்ளது,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 55 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி OPEN மற்றும் HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தொடர்ந்து HIGH புள்ளியை உடைத்து முன்னேற முடியாமல் தற்பொழுது 10 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் இருப்பது நமது சந்தைகள் இந்த EXPIRY யில் என்ன பாடு படப்போகிறதோ தெரியவில்லை, தொடர்ந்து நடந்து வரும் VOLATILE மற்றும் FLAT MARKET இன்றும் தொடரும் என்றே சொல்ல தோனுகிறது, எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யுங்கள் கண்டிப்பாக தின வர்த்தகம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில் இரண்டு பக்கமும் S/L HIT ஆகும் வாய்ப்புகள் அதிகம்

NIFTY 1 HR CHART இல் INVERTED HEAD & SHOULDER அமைப்பை உருவாக்கி வருவது என்னமோ உண்மை தான் இருந்தாலும் அதற்கான உறுதிகள் இன்னும் கிடைக்காமல் இருப்பது ஒரு சிறிய வீழ்ச்சிகள் இருக்கும் அறிகுறிகளை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் இது EXPIRY வாரமாக இருப்பதினால், எது எப்படி நகரும் என்று கணிப்பது தவறாகவே முடியும், ஆகவே கீழே கொடுத்துள்ள CHART இன் படி NIFTY SPOT க்கு 4610 TO 4640 என்ற புள்ளிகளுக்கிடையே அநேக தடைகள் இருப்பதினால் தொடர்ந்து முன்னேற வேண்டுமானால் இந்த 4640 என்ற புள்ளியை கடந்து அடுத்துள்ள 4700 என்ற தடையையும் உடைத்தால் மட்டுமே சாத்தியம், அது வரைக்கும் பொறுமையாக இருப்பது நன்று அல்லது 4460, 4360 TO 4340 என்ற புள்ளிகள் வரும்பொழுது அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கலாம், அதுவரை பொறுமையாக இருப்பதே நன்று

NIFTY CHART


NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4576 என்ற புள்ளிக்கு மேலே உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4630 மற்றும் 4640 என்ற புள்ளிகளுக்கு மேல் தான் உயர்வுகள் விரைவாக இருக்கும், அதே போல் 4570 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பதனால் நேற்று நாம் சந்தித்த அதே நிலைமை தான் தொடரும் மேலும் 4470 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடக்கும் பட்சத்தில் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும், என்னை பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் தின வர்த்தகத்தை தவிர்த்தல் நலமாகும்.

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4576 TARGET 4586, 4596, 4602 TO 610, 4621 TO 4630, 4640, 4680, 4695, 4750

NIFTY SPOT BELOW 4562 TARGET 4547 TO 4532, 4529 TO 4510, 4505 TO 4498, 4483 TO 4470, 4436 TO 4434

கவனிக்க வேண்டிய பங்குகள்

MARUTI

இந்த பங்கில் தொடர்ந்து ஏற்ப்பட்ட உயர்வுகளின் காரணமாக PROFIT BOOKING வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 1358 க்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் RISK எடுப்பவர்கள் மட்டும் (F&O STOCK, F&O EXPIRY, எது வேண்டுமானாலும் நடக்கலாம்) 1358 க்கு கீழ் SHORT SELL பண்ணலாம் இலக்காக1348, 1318, 1305, 1294, 1281 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள், S/L 1370 OR 1380

F&O EXPIRY வாரங்களில் இரண்டு பக்கங்களிலும் S/L HIT ஆகும் வாய்ப்புகள் எப்பொழுதும் அதிகமாக இருக்கும்

Monday

NIFTY ON MONDAY

27-07-09

அமெரிக்க சந்தைகளின் வெள்ளியன்றைய முடிவின் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் உயரங்களில் உள்ளது, இருந்தாலும் அமெரிக்க சந்தைகளின் FUTURE MARKET இன் மேலும் கீழுமான ஒரு சிறிய ஆட்டம் ஆசிய சந்தைகளிலும் இதே போன்ற சிறிய ஆட்டத்தை தந்து கொண்டுள்ளது, இருந்தாலும் ஆசிய சந்தைகள் தொடர்ந்து முன்னேற முயற்சி செய்யும் வாய்ப்புகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY OPEN மற்றும் HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக வைத்து தொடங்கி அந்த புள்ளிகளை தொடர்ந்து மேலே கடக்க முடியாமல் மேலும் கீழும் ஆடி வருகிறது, இருந்தாலும் இன்னும் அதன் சக்தியை இழக்க வில்லை என்றே தோன்றுகிறது, அதே நேரம் உலக சந்தைகளின் வழியை அப்பட்டமாக பின் பற்றும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதினால் அந்த பக்கமும் நமது கவனம் இருக்க வேண்டியது அவசியமாகிறது,

EXPIRY வாரமாகவும், கடந்த ஒரு வாரமாக சந்தை பதற்றமான நிலையில் இருப்பதினாலும் சற்று பொறுமையாக நிலைகளை எடுக்கும் முன் யோசித்து செயல் படுங்கள் பொதிவில் சந்தை உயர்வுகளை நோக்கி இருப்பதையும் அதே நேரம் வீழ்ச்சிகள் சிறிய அளவில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளத்தையும் மனதில் கொண்டு அதற்க்கு ஏற்றார்ப்போல் கீழே வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்

NIFTY நாம் எதிர்பார்த்தது போல மேலும் தொடர்ந்து உயருவதற்கு முயற்சி செய்வது உலக சந்தைகளின் வழியை பின் தொடர்ந்தே ஆகும் மேலும் DOW JONES மீண்டும் மீண்டும் அதற்க்கு சாதகமான சூழ்நிலைகளில் முடிவடைந்து வருவதும், அமெரிக்க FUTURE MARKET களின் போக்குகளால் நமது சந்தைகளில் ஒரு தெளிவற்ற போக்குகள் காணப்படுவதும் நாம் அறிந்ததே, இனி வரு தினங்களில் என்றாவது ஒரு நாள் திடீரென்று நமது சந்தைகளில் ஒரு நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது,

மேலும் தற்பொழுது NIFTY க்கு 4640 TO 4650 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கும் மேலும் 4700 என்ற புள்ளியையும் கடந்து முடிவடையும் பட்சத்தில் நாம் எதிர்பார்க்கும் நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, மேலும் தற்பொழுது F&O EXPIRY வாரமாக இருப்பது நமது சந்தைகளில் தெளிவற்ற போக்கை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரலாம், RIL RESULT சந்தையின் எதிர்பார்ப்பிற்கு கீழ் இருப்பது சற்று உறுத்தலாக உள்ளது, ஆகவே சந்தையின் தொடக்கம் உலக சந்தைகளை ஒட்டி இருந்தாலும் அதன் பிறகு ஒரு 30 நிமிடங்கள் சந்தையின் போக்குகளை கவனித்து பின் வர்த்தகம் தொடங்குவது சிறந்ததாக படுகிறது

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4575 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியம் இருந்தாலும் அருகருகே சில தடைகள் இருப்பது கடந்த சில தினங்களாக நாம் நினைத்தது போல் நடந்து வரும் VOLATILE மற்றும் FLAT MARKET ஐ இன்னும் தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது, NIFTY 4550 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் 4394 என்ற புள்ளிகள் வரை ஒவ்வொரு 20 புள்ளிகளிலும் SUPPORT இருப்பது VOLATILE நிலைமையை நமக்கு உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் 4394 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று விரைவாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, பொதுவாக நாம் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உலக சந்தைகளை அப்படியே பின் பற்றுவதால் அவர்களின் வழியையே நாம் தொடரும் வாய்ப்புகள் அதிகம் அங்கு உயர்வு என்றால் இங்கும், வீழ்ச்சி என்றாலும் அப்படியே தான்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4575 TARGET 4598, 4612, 4620 TO 4630, 4655 TO 4660, 4690, 4757

NIFTY SPOT BELOW 4550 TARGET 4523, 4497, 4472 TO 4463, 4448 TO 4442, 4411, 4400 TO 4394, 4337

கவனிக்க வேண்டிய பங்குகள்

INFOSYS

இந்த பங்கை 2035 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 2060, 2100, 2120 என்ற புள்ளிகளை கொள்ளலாம், S/L 2029

AUTO SECTOR பங்குகளில் கவனம் கொள்ளலாம், உதாரணமாக

BHARAT FORGE, MUNJAL AUTO, CLUTCH AUTO இது போன்ற பங்குகளை SHORT TERM முறையில் வாங்கலாம், விளக்கமாக வரைபடங்களுடன் விரைவில் தருகிறேன்

Saturday

இன்று முக்கியமான வேலையாக வெளியூர் செல்வதால் கேள்வி பதில் பதிவை அடுத்த வாரம் பார்ப்போம்

நன்றி - சரவணபாலாஜி

Friday

NIFTY ON FRIDAY

24-07-09

அமெரிக்க சந்தைகள் நல்ல முறையில் உயர்ந்து இருந்தாலும் முடிவடையும் நேரங்களில் சற்று சிறிய வீழ்ச்சியை சந்தித்து உள்ளது, மேலும் இதனை தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் தற்பொழுது சிறிய வீழ்ச்சிகளுடன் நடந்து வருவதன் தாக்கமாக தொடக்கத்தில் நல்ல உயர்வுடன் தொடங்கிய ஆசிய சந்தைகள் தற்பொழுது தொடர்ந்து முன்னேற முடியாமல் தடுமாறி வருகிறது, இருந்தாலும் அமெரிக்க FUTURE சந்தைகள் முன்னேற தொடங்கினால் ஆசிய சந்தைகளில் விரைவான மீட்ச்சிகள் இருக்கும், மேலும் ஆசிய சந்தைகளில் இன்னும் ஒரு 100 புள்ளிகளை மேலே கடந்தாலே நல்ல உயர்வுகள் அங்கு சாத்தியம்,

நாம் கடந்த தினங்களில் எதிர்பார்த்த DOW JONES இல் ஏற்படும் உயர்வு வர வர உருதிப்பட்டுக்கொண்டே இருப்பதால், ஒவ்வொரு வீழ்ச்சியிலும் நாம் நல்ல பங்குகளை பார்த்து வாங்கலாம் (நீண்ட கால முதலீட்டிற்காக), இன்றைய சந்தையை பொறுத்த வரை உலக சந்தைகளை பின் பற்றினாலும் நாம் கடந்த சில தினங்களாக VOLATILE என்ற நிலையில் இருப்பது தொடரும் என்றே தோன்றுகிறது, மொத்தத்தில் சந்தை உயர்வுகளை நோக்கி நடை போட காத்து இருக்கிறது, இருந்தாலும் அதற்க்கு முன் ஒரு CORRECTION இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது,

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 60 புள்ளிகளை உயர்வாகவும் OPEN மாறும் HIGH என்ற நிலைகளை ஒரே புள்ளியாகவும் பெற்று OPEN செய்து தற்பொழுது தொடர்ந்து முன்னேற முடியாமல் தடுமாறி வெறும் 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருப்பது உலக சந்தைகளை பின் பற்றி நடந்து வருவதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இன்றைய நமது சந்தைகளில் நேற்று போன்ற ஒரு தடுமாற்றம் காணப்படலாம் அதே நேரம் உலக சந்தைகளில் மீட்சி இருக்கும் சூழ்நிலை வந்தால் கட கட வென உயர ஆரம்பிக்கும் பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

கீழே கொடுத்துள்ள NIFTY யின் வரை படத்தில் NIFTY சேனல் என்ற அமைப்பை BREAK செய்ய கடந்த இரண்டு மூன்று தினங்களாக முயன்று வருவதை வட்டமிட்டு காட்டியுள்ளேன், மேலும் இந்த 4620 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர்ந்து நல்ல BUYING சக்தியுடன் முடிவடயுமானால் நமது சந்தைகளில் நல்ல உயர்வுகள் இருக்கும் அதாவது இந்த CHANNEL அமைப்பின் படி 5170 TO 5230 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரும் வாய்ப்புகள் இருக்கும்,

NIFTY CHART


அதே நேரம் 4620 என்ற புள்ளிக்கு மேல் 4820 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் 2252 TO 6357 என்ற புள்ளிகளுக்கு இடையேயான FIBONACCI அளவுகளில் முக்கியமான அளவான 61.8% என்ற அளவு வருவதால் இந்த புள்ளி STRONG ஆனா தடைகளை NIFTY கொடுக்கும் மேலும் இந்த புள்ளியில் இருந்து ஒரு சிறிய CORRECTION கொடுத்து மறுபடியும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது, இதற்க்கு துணையாக உலக சந்தைகள் தொடர்ந்து முன்னேரி வருவதை நாம் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம், ஆகவே SHORT POSITION இல் இருப்பவர்கள் உங்கள் நிலைகளை முடித்துக்கொள்ளுங்கள்,

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4535 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும் மேலும் தொடர்ந்து 4555, 4585, 4600 TO 4620 என்ற புள்ளிகளை நோக்கி நகரலாம். இன்று 4625 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து உயருவதற்கான தடைகள் இருக்கும் வாய்ப்புகள் CHART களில் தெரிகிறது, இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் 4750, 4820 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், NIFTY இன்று கீழே வர வேண்டுமாயின் 4515 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும் மேலும் கீழ் நோக்கிய இலக்காக 4487, 4465, 4439 என்று அருகருகே சப்போர்ட் இருப்பதால், NIFTY யின் கீழே நோக்கிய நகர்வுகள் கடந்த மூன்று தினங்களாக நாம் பார்த்த FLAT WITH VOLATILE சந்தையாகவே இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4535 TARGET 4553 TO 4555, 4602, 4620 TO 623, 4765, 4820

NIFTY SPOT BELOW 4515 TARGET 4487, 4467, 4446, 4439, 4425, 4395, 4381, 4360, 4330, 4315

கவனிக்க வேண்டிய பங்குகள்

SUZLON

இந்த பங்கில் நல்ல உயர்வு இன்று வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து இனி வரும் நாட்களிலும் உயரும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த பங்கை 94 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 98.5 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 106 TO 108, 114, 119 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்

LIC HOUSING

இந்த பங்கில் 575 என்ற புள்ளி நல்ல சப்போர்ட் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த புள்ளியை S/L ஆக வைத்து SWING TRADING முறையில் வாங்கலாம் இலக்காக 625, 650, 700 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்

Thursday

NIFTY ON THURSDAY

23-07-09

அமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரத்தில் இருக்கின்றது மேலும் DOW JONES தொடர்ந்து 8880 என்ற புள்ளியை சுற்றி சுற்றி வருவது ஒரு பெரிய உயர்வு அங்கு இனி வரும் நாட்களில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது (அதே நேரம் அதற்க்கு முன் ஒரு சிறிய CORRECTION வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது), இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் நல்ல முறையில் உயர்வதற்கான வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 40 புள்ளிகள் உயர்வு என்ற முறையில் தொடங்கினாலும் இதுவரை OPEN / HIGH ஒரே புள்ளியாக இருந்த நிலையில் இருந்து தற்பொழுது புதிய உயரங்களை எட்டி மேலும் கீழும் ஆடி வருவது ஒரு உயர்வு இன்று இருக்கும் வாய்ப்புகளை நமக்கு தருவதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம், அதே நேரம் 4402 என்ற புள்ளிகளுக்கு மேலேயே உயர்வுகள் வரும் வாய்ப்புகள் நமக்கு இருப்பதினால் இன்று நமது சந்தை தொடங்கும் நேரத்தில் உலக சந்தைகளின் நிலயை பொறுத்து GAP UP OPEN இருக்கும் என்றே தோன்றுகிறது

அதே நேரம் உலக சந்தைகளில் தடுமாற்றம் வந்து NIFTY 4397 மற்றும் 4380 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் மிக விரைவாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் நாம் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான VOLATILE என்ற வர்த்தகத்தில் இருப்பதையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்

நாம் முன்னரே பார்த்து போல நமது சந்தைகள் அப்பட்டமாக உலக சந்தைகளை பின் பற்றுவது தெளிவாக தெரிகிறது அந்த வகையில் DOW JONES தனது முக்கியமான தடைப்புள்ளியான 8880 என்ற புள்ளியை கடந்து கடந்து தொடர்ந்து அதன் அருகில் முடிந்து வருவது இனி வரும் நாட்களில் ஒரு மிகப்பெரிய உயர்வுக்கு அங்கு வழி வகுக்கும் அதாவது 11300 TO 11500 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள்,

அதே நேரம் நாம் நமது ஞாயிறு பதிவில் DOW JONES க்கு HNS அமைப்பு 8880 என்ற புள்ளியை கடந்தால் BREAK OUT ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதையும் அதே நேரம் அதிகமான INDICATOR கள் OVER BOUGHT சூழ்நிலையில் இருப்பதி காரணமாகவும் மேலும் இந்த HNS அமைப்பின் BREAK OUT ஐ RETEST செய்வதற்காகவும் 8480 TO 8380 என்ற புள்ளிகள் வரை கீழே வரலாம் என்று சொல்லி இருந்தேன், அதே போல் இப்பொழுது நடந்து வருவதால் நமது சந்தைகள் அதிக அளவு கீழ் இறங்கும் வாய்ப்புகள் இல்லையோ என்று தோன்றுகிறது,

அதாவது இங்கு 4315, 4240 என்ற புள்ளிகளின் அருகே NIFTY சப்போர்ட் எடுத்து திரும்பலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4165 மற்றும் 4080 புள்ளிகள் சப்போர்ட் கொடுக்கலாம் அதே நேரம் கீழே கொடுத்துள்ள NIFTY இன படத்தில் TREND LINE SUPPORT உள்ளத்தையும் குறிப்பிட்டு உள்ளேன் மேலும் NIFTY ஒரு சேனல் அமைப்பில் நகர்ந்து வருவதையும் பாருங்கள், சரி இன்றைய தினம் சந்தை எப்படி இருக்கலாம் என்று பார்ப்போம் வாருங்கள்

NIFTY CHART



NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4402 என்ற புள்ளிகளுக்கு மேலே உயர்வுகள் சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது. மேலும் 4455 TO 4466, 4482 என்று செல்லலாம், 4500 TO 4530 என்ற புள்ளிகள் தொடர்ந்து உயருவதற்கு தடைகளை கொடுக்கும் என்றே தெரிகிறது, மேலும் கீழே வரவேண்டுமாயின் NIFTY 4397 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருக்கும் அதே நேரம் நேற்றைய LOW என்ற வகையில் 4380 என்ற புள்ளி சப்போர்ட் கொடுக்கலாம் இந்த புள்ளியை கடந்தால் 4350, 4315 TO 4300 என்ற அளவில் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4402 TARGET 4410, 4420 TO 4430, 4455 TO 4466, 4482, 4510, 4531, 4547 TO 4560, 4584, 4636 TO 640

NIFTY SPOT BELOW 4397 TARGET 4380, 4350, 4330, 4321, 4309, 4294, 4289 TO 83, 4269 TO 264, 4247, 4207 TO 4198

கவனிக்க வேண்டிய பங்குகள்

PFC

இந்த பங்கை 212 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 215 என்ற புள்ளியின் அருகில் வாங்குங்கள் இலக்காக 220, 230, 240 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்

AXIS BANK

இந்த பங்கில் 856 என்ற புள்ளியை கடந்தால் 850 TO 849 என்ற புள்ளியில் சப்போர்ட் உள்ளது, இந்த 849 என்ற புள்ளியை கடந்தால் SHORT SELL பண்ணலாம், அப்படி இல்லாமல் இந்த புள்ளியில் சப்போர்ட் எடுத்து திரும்பினால் 849 ஐ S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்காக 867, 875, 884, இதற்க்கு மேல் நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 907 TO 910, அதே நேரம் 849 க்கு கீழ் விரைவான வீழ்ச்சிகள் இருக்கும் மேலும் இலக்குகளாக 828, 817, 813, 800என்ற புள்ளிகள் இருக்கும்.

சந்தையின் போக்குகளை பொறுத்து உங்கள் வர்த்தக திசைகளை முடிவு செய்து வர்த்தகம் செய்யுங்கள்

Wednesday

NIFTY ON WEDNESDAY

22-07-09

அமெரிக்க சந்தைகளில் உயர்வு இதனை தொடர்ந்து நடந்து வரும் அதன் FUTURE MARKET சற்று கீழே இறங்கி வர்த்தகம் செய்வது இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் உயர்வுகளுடன் தொடங்கினாலும் சற்று மேலும் கீழும் ஆடி வருகிறது இருந்தாலும் இன்னும் ஒரு 50, 100 புள்ளிகளை மேலே கடந்தாலே தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஆசிய சந்தைகளின் CHART இல் உள்ளதால் மீள்வதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை,

மேலும் அமெரிக்க FUTURE MARKET உயர்வுகளுக்கு திரும்பினால் ஆசிய சந்தைகளும் உயர ஆரம்பித்து விடும், மேலும் DOW JONES தனது முக்கியமான தடை புள்ளியான 8880 என்ற இடத்தில் இருப்பதை கவனிக்க வேண்டும் இந்த புள்ளிகளை தொடர்ந்து உடைத்து முன்னேறினால் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும்,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY OPEN மற்றும் LOW இந்த நிலைகளை ஒரே புள்ளியாக கொண்டு தொடங்கி மேலும் 40 புள்ளிகள் உயர்ந்து தற்பொழுது 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் ஆசிய சந்தைகளின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது, ஆகவே உலக சந்தைகளின் போக்குகள் அப்படியே இங்கு நடக்கும் சூழ்நிலைகள் உள்ளதால், அங்கு ஒரு கண் வைத்து வர்த்தகம் செய்யுங்கள். உலக சந்தைகளில் ஏதும் பிரச்சனை என்றால் இங்கு அதன் அதிர்வுகள் அதிகமாக இருக்கும், கவனமாக இருங்கள்...

NIFTY யில் எந்த வித பெரிய மாற்றமும் இல்லை 4540, 4580 என்ற புள்ளிகளை கடந்தால் அடுத்து 4693 ஐ நோக்கி நகரும், நேற்றைய அமெரிக்க சந்தைகளின் உயர்வு அதன் FUTURE MARKET லும் தொடர்ந்தாள் இங்கும் உயர்வுகள் தொடரும் இல்லையேல் நேற்றைக்கு போல் தடுமாற்றம் தான்

NIFTY ஐ பொறுத்தவரை 4476 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் அருகருகே தடைகளும் உள்ளது, ஒரு வேலை DOW JONES 8900 என்ற புள்ளிகளை கடந்து உயருமானால் இங்கும் விரைவான உயர்வுகள் இருக்கும், அதே போல் 4418 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் கொஞ்சம் இருக்கும், இருந்தாலும் இன்றைய சந்தை நேற்று நாம் எதிர்பார்த்து போல VOLATILE என்ற முறையில் இருக்கலாம் இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்து இங்கும் நகர்வுகள் தீர்மானிக்கப்படலாம்..

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4476 TARGET 4509, 4515, 4521 TO 4526, 4545 TO 4550, 4571, 4584, 4600, 4607, 4613 TO 4620, 4638, 4668

NIFTY SPOT BELOW 4460 TARGET 4450, 4435, 4419 TO 4418, 4383, 4369, 4349, 4339 TO 4333, 4314, 4285

கவனிக்க வேண்டிய பங்குகள்

TISCO

இந்த பங்கை 418 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 430 TO 432, 440, 445, 450, S/L 411

TISCO CHART


HDFC LTD

இந்த பங்கை 2565 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 2650, 2675, 2745என்ற புள்ளிகள் இருக்கும் S/L 2522 , கொஞ்சம் ரிஸ்க் எடுப்பவர்கள் 2530 என்ற புள்ளிக்கு மேலும் வாங்கலாம்

HDFC CHART


UNITECH

இந்த பங்கை 78 என்ற புள்ளியை CLOSE செய்தால் S/L ஆக வைத்து வாங்கலாம் இதன் இலக்கு 87, 89.5, 92, 95, 100

Tuesday

NIFTY ON TUESDAY

21-07-09

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் நடந்து வருகிறது, இதன் தாக்கமாக தொடக்கத்தில் உயர்வுகளுடம் தொடங்கிய ஆசிய சந்தைகள் தற்பொழுது தொடர்ந்து உயர முடியாமல் தடுமாறி இறங்கிக்கொண்டுள்ளது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் கிட்டதட்ட 40 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் OPEN HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தொடங்கி அதற்க்கு மேல் உயர முடியாமல் தற்பொழுது 25 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் நடந்து வருவது நமது சந்தைகளில் SELLING PRESSURE வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதை நமக்கு சொல்வதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்,

மேலும் நமது NIFTY க்கு 4500 என்ற புள்ளிகளுக்கு கீழ் அடுத்த நல்ல SUPPORT 4457, 4404 என்ற புள்ளிகளில் இருப்பதினால் இந்த புள்ளிகளில் NIFTY யின் நடவடிக்கைகளை வைத்து LONG POSITION இல் கவனம் செலுத்தலாம், மேலும் 4370 என்ற புள்ளி அடுத்த மிக முக்கியமான SUPPORT நிலையாகும், இந்த நிலைகளை வைத்து உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள், இன்று ஒரு VOLATILE இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY ஐ பொறுத்தவரை உயர்ந்து வரும் இந்த உயர்வுக்கு அடுத்த தடையாக நாம் முன்னர் பார்த்த 4511 என்ற புள்ளி FIBONACCI அளவுகளின் படி தடைகளை கொடுக்கலாம், மேலும் 4517, 4537, இந்த புள்ளிகள் TOP RESISTANCE என்ற முறையில் தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் முந்தய HIGH புள்ளியான 4580, 4693 ஐ நோக்கி இருக்கும், அதே சமயம் கீழே 4500 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் வரலாம் மேலும் 4370, 4270 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4511 என்ற புள்ளியை கடந்தால் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் 4527, 4555 TO 4558, 4576 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதினால் இந்த 4576 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து நல்ல ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 4650 என்ற புள்ளியை நோக்கி நகரும்,

அதே சமயம் NIFTY 4500 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் CHART இல் இருப்பதினால் 4457, 4404 என்று கீழே வரலாம் மேலும் இந்த 4404 மற்றும் 4371 என்ற புள்ளிகள் வரை சற்று FLAT மற்றும் தடுமாற்றமான சந்தையாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, இதனை தொடர்ந்து 4371 என்ற புள்ளியை கீழே நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து 4316 வரைக்கும் ஒரு விரைவான வீழ்ச்சிகள் இருக்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4511 TARGET 4527, 4546, 4555 TO 4558, 4576, 4643 TO 650, 4662, 4676, 4690

NIFTY SPOT BELOW 4500 TARGET 4457, 4404 TO 4394, 4383, 4371, 4316, 4304, 4290 TO 4289, 4267

கவனிக்க வேண்டிய பங்குகள்

GLENMARK PHARMA

இந்த பங்கை 252 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 255 TO 256.5, என்ற புள்ளிகள் இருக்கும் மேலும் 257 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த இலக்காக 264, 269 என்ற புள்ளிகள் இருக்கும் (POSITIONAL CALL ) S/L 249

PUNJLLOYD

இந்த பங்கை 226.5 TO 227 என்ற புள்ளிகளுக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 229, 232 என்ற புள்ளிகள் இருக்கும் 232 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த இலக்கு 240 TO 242 S/L 220, 220 ஐ கீழே கடந்தால் அடுத்து 214, 207 என்று கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது

UNITECH

இந்த பங்கை 82 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 86 TO 87, 89, 92, 95 என்று இருக்கும்

மேலே உள்ள அனைத்து பங்குகளும் தின வர்த்தகத்திற்காக மட்டும் தரப்படுவதில்லை

Monday

NIFTY ON MONDAY

20-07-09

உலக சந்தைகள் அனைத்தும் உயரங்களில் இருப்பது நமது சந்தைகளுக்கு உயர்வையே கொடுக்கும் சூழ்நிலைகள் உள்ளது மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக SINGAPORE NIFTY தொடக்கம் முதல் OPEN மற்றும் HIGH ஆகிய இரண்டையும் ஒரே புள்ளியாக பெற்று நடந்து வந்த நிலையில் இருந்து தற்பொழுது HIGH புள்ளிகளை உடைத்து மேலே சென்று கொண்டிருக்கிறது, இதன் தாக்கம் நமது சந்தைகளில் இருக்கும்

மேலும் தற்பொழுது நமது NIFTY க்கு 4418, 4440 TO 4453, 4477 TO 4480 இந்த புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் உலக சந்தைகள் தொடர்ந்து சாதகமாக இருந்தால் 4440, 4480 என்ற புள்ளிகள் சாத்தியமாகலாம், எப்பொழுதும் லாபங்களில் உறுதியாக இருப்பது நன்று NIFTY மற்றும் DOW JONES இந்த இரண்டு INDEX களையும் சேர்த்து நமது சந்தைகளில் உயர்வு மற்றும் வீழ்ச்சி வந்ருவதற்கான வாய்ப்புகளை பற்றி சற்று விரிவாக இதற்க்கு முந்தய பதிவில் (SUNDAY THOUGHTS) குறிப்பிட்டு உள்ளேன், படியுங்கள்...

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4405 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்த போதிலும் 4418 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர்ந்து உயரவும் மேலும் ஒரு விரைவான உயர்வுகளை பெரும் வாய்ப்புகள் உள்ளது இலக்காக 4450, 4465 TO 477, 4500 என்று புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் NIFTY யில் ஒரு வீழ்ச்சி வர வேண்டுமாயின் 4398 என்ற புள்ளியை கடக்காமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும் மேலும் தொடர்ந்து 4360, 4332, 4296, 4264 என்ற புள்ளிகளில் SUPPORT பெரும் வாய்ப்புகளும் உள்ளது..

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4418 TARGET 4432, 4452, 4466 TO 4477, 4500, 4529 TO 4540, 4562

NIFTY SPOT BELOW 4360 TR 4332 TO 330, 4315, 4307, 4296, 4264, 4241, 4185 TO 183, 4157, 4144 TO 4140, 4081 TO 4078

கவனிக்க வேண்டிய பங்குகள்

BEL

இந்த பங்கில் சேனல் மற்றும் FLAG என்ற அமைப்புகள் உருவாக்கி வருகிறது மேலும் 1458 என்ற புள்ளிக்கு மேல் இந்த அமைப்புகள் BREAK OUT பெரும் அதே நேரம் முந்தய HIGH புள்ளி என்ற வகையில் 1468 என்ற புள்ளியும் தடைகளை தரலாம் ஆகவே 1468 க்கு மேல் நல்ல VOLUME உடன் உயர்ந்தால் வாங்கலாம் இதன் இலக்காக 1650 என்ற புள்ளிகள் இருக்கும் இதன் S/L ஆக 1380 இருக்கும் இனி வரும் தினங்களில் இந்த உயர்வுகள் இருக்கும், அதே நேரம் 1458 க்கு மேல் உயர செல்ல முடியாமல் தடுமாறினால் 1468 என்ற புள்ளியை S/L ஆக வைத்து SHORT SELL பண்ணலாம் இலக்காக 1380, 1350

BEL CHART


Saturday

SUNDAY THOUGHTS

19-07-09

NIFTY 4370 என்ற முக்கியமான புள்ளியை கடந்து நிற்கும் இந்த நேரத்தில் NIFTY யின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும், தொடர்ந்து உயரவேண்டுமானால் எந்த புள்ளிகளை கடக்க வேண்டும் அல்லது மறுபடியும் நாம் முன்னர் எதிர்பார்த்த கீழ் நோக்கிய இலக்கான 3500 என்ற புள்ளிகளை நோக்கி வருவதற்கு என்ன விதமான வாய்ப்புகள் உள்ளது மேலும் தற்பொழுது அமெரிக்க சந்தையின் நிலைமை என்ன என்ற விசயங்களை வரைபடங்களுடன் பார்ப்போம்,

அதற்க்கு முன் சில முக்கியமான விசயங்களை பார்ப்போம், நேற்று நாம் எதிர்பார்த்தது போல சந்தை உயர்ந்து இருந்தாலும் முக்கியமான புள்ளியாக நாம் கருதிய 4370 என்ற புள்ளியை கடந்தவுடன் மிக விரைவான உயர்வுகள் இருந்து இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் சற்று மேலே சென்றாலும் தொடர்ந்து முன்னேற முடியாமல் தடுமாறி நின்றதை அனைவரும் கவனித்து இருக்கலாம் இருந்தாலும் 4370 க்கு மேல் முடிந்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்,

மேலும் நேற்றைய பதிவில் கொடுத்த வரைபடத்தில் ஒரு CHANNEL அமைப்பை குறிப்பிட்டு அந்த CHANNEL அமைப்பின் BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்து சென்று மறுபடியும் (கடந்த திங்கள் அன்று ஒரு உயர்வு இருக்கும் என்று நாம் 3950 என்ற புள்ளியின் அருகில் எதிர்பார்த்தது போல) தொடர்ந்து உயர்ந்து தற்பொழுது 4390 என்ற புள்ளியில் இருக்கின்றது, மேலும் NIFTY நேற்று நாம் எதிர்பார்த்தது போல அந்த CHANNEL TOP LINE ஐ மேலே கடந்துள்ளது,

மேலும் முன்னர் நடந்தது போல அதாவது CHANNEL BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்து மறுபடியும் உயர்ந்தது போல மேலே உள்ள CHANNEL TOP LINE ஐ கடந்து மறுபடியும் கீழே வருமா அல்லது தொடர்ந்து உயருமா என்ற கேள்வி தற்பொழுது நம் முன் நிற்பதையும் மனதில் கொண்டு தற்பொழுது NIFTY க்கு உள்ள தடைகள் என்ன என்ன, உயர்வதற்கான வாய்ப்புகள் என்ன என்ன, இதற்க்கு உலக சந்தையின் முக்கியமான INDEX DOW JONES எப்படி எல்லாம் வழி நடத்தலாம் என்பதினை பார்ப்போம்…

கீழே நான்கு படங்கள் கொடுத்துள்ளேன் அதில் இரண்டு நமது NIFTY யின் படம் மற்ற இரண்டு DOW JONES இன் படம், இந்த இரண்டிலும் DAY CHART மற்றும் WEEKLY CHART கொடுத்து விளக்கம் கொடுத்துள்ளேன், முதலில் NIFTY இன் நிலையை பார்ப்போம்

கீழே கொடுத்துள்ள முதல் படத்தில் NIFTY 4693 என்ற புள்ளியில் இருந்து 4143 என்ற புள்ளி வரை ஒரு பெரிய வீழ்ச்சியை சந்தித்து அங்கிருந்து நம் எதிர்பார்த்தது போல இந்த வீழ்ச்சியில் 61.8% அளவிற்கு உயர்ந்து (4143 TO 4480) மறுபடியும் 3918 என்ற புள்ளிகள் வரை கீழே வந்தது, மேலும் இந்த நிலையில் NIFTY தான் ஒரு சேனல் என்ற அமைப்பின் படி நகர்வதை நமக்கு CHART படங்களில் சுட்டிக்காட்டியது மறுபடியும் CHANNEL BOTTOM LINE ஐ தொட்டு (சற்று கீழே கடந்து – (3918) கடந்த திங்கள் பதிவில் நாம் எதிர்பார்த்தது போல ஒரு உயர்வை 3918 என்ற புள்ளியில் இருந்து சந்தித்து தற்பொழுது அந்த சேனல் அமைப்பின் TOP RESISTANCE LINE ஐ சற்று கடந்து முடிந்துள்ளது,

இவைகள் அனைத்தையும் கீழே உள்ள முதல் படத்தில் குறிப்பிட்டு உள்ளேன், மேலும் வெள்ளியன்றைய பதிவில் சேனல் BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்தது போல மேலே உள்ள TOP LINE ஐ கடந்து கீழே வருமா, அல்லது கடந்து விரைவாக உயருமா என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தோம் மேலும் அந்த சேனல் TOP LINE RESISTANCE 4370 என்ற புள்ளியில் இருப்பதையும், மேலும் அந்த புள்ளியை கடந்தால் விரைவான உயர்வு அன்றைய தினமே 4484 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் என்றும் பார்த்தோம்

ஆனால் அந்த 4370 என்ற புள்ளியை கடந்து மேலும் 20 புள்ளிகளை உயரே கடந்து இருந்தாலும் தொடர்ந்து விரைவாக ஏறுவதற்கு RELIANCE IND உதவாததினால் தொடர்ந்து முன்னேற முடியாமல் திணறி நின்றது, ஆனால் இந்த புள்ளியை கடந்தவுடன் பெரிய அளவில் முன்னேறி இருக்க வேண்டும் அப்படி செய்யாதது சற்று உறுத்தலாக தோன்றுகிறது, இருந்தாலும் 4370 க்கு மேல் முடிந்து இருப்பதையும் கவனித்தாக வேண்டும், இந்த உறுத்தலை மேலும் உறுதி செய்யும் விதமாக NIFTY க்கு வெகு அருகருகே இப்பொழுது இரண்டு விதமான FIBONACCI RETRACEMENT தடைகளும் சில TOPS எனப்படும் தடைகளும் உள்ளது அவைகளைப்பற்றி பார்ப்போம்

முதல் FIBONACCI தடை 1 : தற்பொழுது உள்ள LOW புள்ளியான 3918 இல் இருந்து இதற்க்கு முன் உள்ள HIGH புள்ளியான 4693 வரைக்கும் அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 61.8% அளவு சரியாக 4398 என்ற புள்ளியில் தடையை கொடுக்கலாம்,

இரண்டாவது FIBONACCI தடை 2 : அதே போல் 3918 என்ற புள்ளியில் இருந்து 4480 என்ற (06-07-09) HIGH புள்ளி வரை அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 85.4% என்ற அளவு சரியாக 4400 என்ற புள்ளியில் தடைகளை கொடுக்கலாம்

ஆக இந்த இரண்டு தடைகளும் சரியாக 4400 என்ற புள்ளியின் அருகில் இருப்பதை கவனிக்க வேண்டும், அடுத்து இந்த புள்ளியை NIFTY கடந்தால் அடுத்த தடை 4480 என்ற புள்ளியில் முன்னர் வந்த TOP RESISTANCE என்ற வகையில் தடையை தரலாம், மேலும் இந்த 4480 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 4520 TO 4540 என்ற புள்ளிகளில் FIBONACCI அளவுகளின் படி அடுத்த தடையை சந்திக்கலாம் (இந்த புள்ளிகளை கடந்தாலே தற்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் 3500 ஐ நோக்கிய CORRECTION இல்லாமல் போகும், அதே நேரம் 4693 TO 4700 என்ற புள்ளியை கடந்தால் முற்றிலும் இந்த வாய்ப்புகள் உருக்குலைந்து போகும்)

ஆகவே இந்த 4700 என்ற புள்ளியை கடந்தால் மேலும் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகளும் நன்றாக உருவாக்கி விடும், அதே நேரம் 4200 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரலாம் மேலும் இந்த படத்தில் NIFTY CHANNEL அமைப்பின் SUPPORT மற்றும் RESISTANCE கோடுகளை இரண்டு பக்கங்களிலும் கடந்து இருப்பதை குறிப்பிட்டுள்ளேன் இப்பொழுது முதல் படத்தை பாருங்கள்


NIFTY CHART


அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள NIFTY யின் WEEKLY CHART இன் படி பார்க்கும் போது ஒரு வேளை NIFTY 4700 என்ற புள்ளியை மேலே கடந்தால் அதன் அடுத்த இலக்கு கடந்த வருடம் உண்டான LOW புள்ளியான 2252 இல் இருந்து NIFTY யின் LIFE HIGH புள்ளியான 6357 என்ற புள்ளி வரை அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 61.8% அளவு சரியாக 4820 என்ற புள்ளியில் வருவதால் இந்த புள்ளியில் தடைகளை சந்திக்கலாம் இந்த புள்ளியையும் மேலே கடந்து தொடர்ந்து நல்ல BUYING PRESSURE வருமானால் NIFTY க்கு புதிய இலக்குகள் காத்து இருப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது 7000 புள்ளிகளுக்கு மேல் சென்றுவிடும் சரி NIFTY WEEKLY CHART படத்தை பாருங்கள்...

NIFTY WEEKLY CHART


சரி தற்பொழுது இறங்கு முகத்தில் இருந்து கொண்டிருந்த அனைத்து சந்தைகளும் திரும்பி ஏறு முகத்தில் இருப்பதிற்கு முக்கிய காரணமாக விளங்கியது அமெரிக்க சந்தைகள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் அமெரிக்க சந்தைகளின் முக்கியமான INDEX ஆனா DOW JONES இன் நிலையை பற்றி பார்ப்போம்,

கீழே கொடுத்துள்ள DOW JONES படத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதுவரை 8600 TO 8650 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளை கொடுத்து வந்தது மேலும் சில தினங்களுக்கு முன் DOW JONES இந்த புள்ளிகளை நல்ல முறையில் மேலே கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இருந்தாலும் இன்னும் சில முக்கியமான புள்ளிகள் DOW JONES க்கு தடைகளை கொடுக்கலாம் என்ற நிலையில் எஞ்சி இருக்கிறது, அந்த வகையில் DOW JONES க்கு தடைகளை கொடுக்கும் புள்ளிகள் எவை, மேலும் DOW JONES தற்போதைய நிலையில் இருந்து அதன் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்,

கீழே உள்ள படத்தில் முன்னர் நாம் NIFTYக்கு பார்த்த FIBONACCI தடைகளைப்போல் இரண்டு விதமான தடைகள் இங்கும் உள்ளது அதாவது தற்பொழுது DOW வில் ஏற்ப்பட்ட LOW புள்ளியான 8087 இருந்து இதற்க்கு முன் ஏற்ப்பட்ட HIGH புள்ளியான 8877 வரைக்கும் அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 85.4% அளவுள்ள தடைப்புள்ளி சரியாக 8763லும், அனுபவத்திலும் DOW JONES அடிக்கடி இந்த 89% அளவிலும் தடைகளையும் SUPPORT களையும் பெற்றிருப்பதால் அந்த முறையில் மேலே உள்ள புள்ளிகளின் அளவுகளிலே அளக்கப்பட்ட 89% அளவு சரியாக 8798 என்ற புள்ளியிலும் தடைகளை கொடுக்கலாம், மேலும் 200 DEMA தற்பொழுது 8805 என்ற புள்ளியிலும் தடைகளை கொடுக்கலாம்,

இந்த புள்ளிகளை எல்லாம் கடந்தால் அடுத்து ஒரு நீண்ட TREND LINE RESISTANCE8840 என்ற புள்ளியிலும், முன்னர் உள்ள HIGH புள்ளியான 8880 என்ற புள்ளி TOP RESISTANCE என்ற முறையில் தடைகளை கொடுக்கும், இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல சக்தியுடன் கடந்து தொடர்ந்து அதற்க்கு மேலே முடியும் சூழ்நிலைகள் வருமாயின் DOW JONES நல்ல உயரங்களை எட்டும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 11300 TO 11500 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த வாய்ப்புகள் எப்படி வரும் அதற்க்கு துணை புரியும் அமைப்பு என்ன என்பதை இரண்டாவது படத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன், இப்பொழுது முதல் படத்தை பாருங்கள்


DOW JONES CHART



முதல் படத்தில் காட்டியது போல 8763, 8798, 8805, 8840, 8880 என்ற புள்ளிகள் எல்லாம் நல்ல தடைகளை கொடுக்கும் என்பதை பார்த்து இருப்பீர்கள் இதில் முக்கியமானது 8805 என்ற புள்ளியாகும் இந்த புள்ளியை கடந்தாலே கீழே 7400என்ற புள்ளியை நோக்கி வரும் என்ற சூழ்நிலைகள் நம்பிக்கையற்று போய்விடும் அதே நேரம் 8880 என்ற புள்ளியை கடந்து விட்டால் மிகப்பெரிய உயரங்களை நோக்கி நகர வேண்டும் என்ற கட்டாயத்திக்கு ஆளாகியும் மேலும் கீழே இறங்க வேண்டும் என்ற நிலையும் முற்றிலும் உருக்குலைந்து விடும், மேலும் உயர்வாக11300 TO 11500 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும் என்ற சூழ்நிலையும் வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாகும்,

சரி தற்ப்பொழுது கீழே உள்ள படத்தில் DOW JONES க்கு ஒரு பெரிய HEAD & SHOULDER அமைப்பு இருப்பதை குறிப்பிட்டு உள்ளேன் இந்த அமைப்பின் படி DOW JONES 8840 மற்றும் 8880 என்ற புள்ளியை கடந்தால் HNS என்ற அமைப்பின் BREAK OUT என்ற நிலையை பெற்று இலக்காக 11300 TO 11500 என்ற புள்ளியை அடைய வேண்டும், அதாவது முதல் இலக்காக 9650 TO 9700 என்ற புள்ளியையும் இரண்டாவது இலக்காக 10620 என்ற புள்ளியையும் அடுத்து இந்த HNS அமைப்பின் படி இறுதி இலக்காக 11300 TO 11500 என்ற புள்ளிகளை அடைய வேண்டும்,

ஆகவே தற்பொழுது 8763, 8798, 8805 என்ற புள்ளிகள் முக்கியமானது அதாவது இனி தொடர்ந்து இறங்குவதற்கு வாய்ப்புகள் உண்டா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும் புள்ளிகள் இந்த மூன்றும், இந்த புள்ளிகளை மேலே கடந்தால் இறங்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகலாம், அதே நேரம் இந்த புள்ளிகளை கடக்க முடியாமலோ அல்லது கடந்தாலும் 8880 என்ற புள்ளியை கடக்காமல் மேலும் 8805 என்ற புள்ளிக்கு மேலே முடிவடயாமலும் இருந்தால் இறங்குவதற்கான வாய்ப்புகள் இன்னும் தொத்திக்கொண்டுள்ளதாக நாம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளை கொடுக்கும்,

மேலும் தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வேண்டுமானால் 8880 என்ற புள்ளியை கடந்து நல்ல BUYING PERSSURE இருக்கும் சூழ்நிலைகள் உருவானால் நாம் முன்னர் பார்த்த உயரங்கள் சாத்தியமாகலாம், 8880 என்ற புள்ளியை கடந்த பின் RE TEST செய்வதற்காகவும் அல்லது CONSOLIDATION க்காகவும் 8480 TO 8380என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது.. சரி நான் சொன்ன அனைத்து விசயங்களையும் CHART இல் குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள்


DOW JONES WEEKLY CHART



சரி அனைத்து விசயங்களையும் பார்த்தாகி விட்டது, தற்பொழுது இறுதியாக சில விசயங்களை கோர்த்து பார்த்து விடுவோம்

நமது NIFTY தொடர்ந்து உயர வேண்டுமானால் :-

NIFTY 4480 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்து அதே நேரம் உலக சந்தைகளில் முக்கியமான INDEX ஆனா DOW JONES 8840, மற்றும் 8880 என்ற புள்ளிகளை கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும் மேலும் 4695, 4820 என்ற புள்ளி NIFTY க்கு முக்கியமான தடையை கொடுக்கலாம் ஆகவே இந்த4820 என்ற புள்ளியையும் கடந்தால் சொல்லிக்கொள்ளும் படியான உயரங்கள் அதாவது புதிய உயரங்களை எட்டலாம், அந்த வகையில் NIFTY 4480, 4695, 4820என்ற புள்ளிகளை உயருவதற்கு கடக்க வேண்டும் கூடவே DOW JONES 8880 என்ற புள்ளியை கடக்க வேண்டும்...

நமது NIFTY கீழே வரவேண்டுமானால் :-

NIFTY 4400 என்ற புள்ளியை மேலே கடக்காமல் இருக்க வேண்டும் அப்படியே கடந்தாலும் கண்டிப்பாக 4480 என்ற புள்ளியை கடக்காமலும் அதே நேரம் 4400என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்தார்ப்போல் இரண்டு மூன்று நாட்கள் நல்ல POSITIVE நிலையில் முடிவடையக்கூடாது, அதே நேரம் உலக சந்தைகளும் முக்கியமாக DOW JONES 8805 க்கு மேல் முடிவடயாமலும் குறிப்பாக 8880 என்ற புள்ளியை கடக்காமலும் இருத்தல் வேண்டும்,

மேலும் இறங்குவதற்கான முன்னேர்ப்பாடாக NIFTY குறைந்தது 4200 என்ற புள்ளியின் கீழே முடிவடைய முயற்சி செய்ய வேண்டும், ஆகவே இந்த இரண்டு நிலைகளில் எது நடக்கின்றதோ அதன் வெளிப்பாடாக உயர்வோ அல்லது வீழ்ச்சியோ சந்தைகளில் இருக்கும், இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதை விட இவைகள் நடந்தால் அதன் விளைவுகள் இப்படி இருக்கலாம் என்று கூறுவது நல்லதாகப்பட்டதினால் இப்படி சொல்ல வேண்டியுள்ளது, நான் கூறியது முழுவதும் எனது சொந்த கருத்து தான் தாங்களுக்கு ஏதும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தாராளமாக உங்கள கருத்துகளை தெரிவியுங்கள்