Monday

NIFTY ON MONDAY

31-08-09

நீண்ட பதிவு தான் ஆனால் தேவையான ஒன்று பொறுமையாக படியுங்கள்

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தை DOW JONES 9440 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 9225 TO 9200 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும், மேலும் ஆசிய சந்தைகள் எல்லாம் கீழே வருவதற்கான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதும், நமது சந்தைக்கு பாதகமான விசயமாக இருக்கும், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பார்க்கும் போது இதுவரை 60 புள்ளிகளை இழந்து வர்த்தகம் நடந்து வந்தாலும் மேலும் கீழுமான நகர்வுகள் இருப்பதினால், நமது சந்தைகளில் VOLATILE என்ற நிலையில் வீழ்ச்சிகள் இருக்கலாம், மேலும் 4660 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT பொதுவாக

NIFTY SPOT இல் தற்பொழுது ஒரு பதட்டமான சூழ்நிலைகள் இருப்பது CHART படங்களில் தெளிவாக தெரிகிறது, கீழே கொடுத்துள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் CORRECTION வருவதற்கு முன் ஒரு விதமான RAISING WEDGE அமைப்பு அமைந்து வந்ததும் அந்த TRIANGLE அமைப்பு FALSE BREAK OUT என்ற நிலையை பெற்று (தொடர்ந்து உயரும் என்ற மாயயை காட்டி), பிறகு அதிகமான வீழ்ச்சியை சந்தித்தது, தற்பொழுது அதே போன்றதொரு RAISING WEDGE அமைப்பு உருவாக்கி வருகிறது, மேலும் 4750 TO 4820 என்ற புள்ளிகளில் அதிக பலம் வாய்ந்த தடைகளும் இருப்பது நம்மை எச்சரிக்கையாக இருக்க சொல்வதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்,

அதே நேரம் இதற்க்கு உறுதுணையாக சில முக்கியமான INDICATOR களும் OVER BOUGHT என்ற சூழ்நிலையில் உள்ளது, மேலும் NIFTY தற்பொழுது உயர்ந்தால் 4758, 4790 TO 4800, 4820, என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் அடுத்து 4890, 4970 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் ஆகவே NIFTY உயர முற்ப்பட்டால் உங்களின் பழைய LONG POSITION களை மெல்ல மெல்ல முடித்துக்கொள்வது சால சிறந்தது, மேலும் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தால் 4500 TO 4480 என்ற புள்ளிகளும், அதற்கு கீழ் 4300 என்ற புள்ளியும், தொடர்ந்து 4200, 4100, 3900 என்ற இந்த புள்ளிகளும் நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது,

இந்த 3900 என்ற புள்ளி நன்றாக உடைபட்டு அதற்க்கு கீழ் முடிவடயுமானால் அடுத்து நிபிட்டி 3400 TO 3100 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர ஏற்பாடுகள் நடந்து விடும் ஆகவே மேலே உள்ள புள்ளிகள் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய புள்ளிகள் ஆகும், சரி தற்பொழுது மேலே சொன்ன விசயங்களை படத்தில் பாருங்கள், இதனை தொடர்ந்து DOW JONES இன் நிலைமையும் நமக்கு முக்கியம் என்பதால் அதன் வரைபட விளக்கங்களும் தந்துள்ளேன் பாருங்கள்

NIFTY SPOT EOD CHART



NIFTY EOD CHART -2

INDICATORS CHART





DOW JONES ஐ பொறுத்தவரை 9750 TO 9800 என்ற புள்ளிகள் முக்கியமான தடை புள்ளிகளாக இருக்கும் மேலும் 9840 என்ற இந்த புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 10375 என்ற புள்ளியை நோக்கி உயரும் வாய்ப்புகள் உள்ளது, மொத்தத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது, பழைய நிலைகளை உயரங்கள் வந்தால் முடித்துக்கொள்வதும், புதிய நிலைகள் ஏதும் எடுக்காமல் இருப்பதும் அப்படியே எடுத்தாலும் மிக குறிகிய லாபத்தில் வெளியே வருவதும் மிக மிக நன்று, அப்படி ஒரு வேலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் வந்தால் நாமும் மாறிக்கொள்ளலாம்,

DOW CHART 1


DOW CHART 2


NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4733 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமானாலும் 4758 என்ற புள்ளிக்கு மேல் தான் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், அதேபோல் 4743 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றாலே வீழ்ச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேலும் தொடர்ந்து கீழே இறங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது, உலக சந்தைகளின் போக்குகளை கவனித்து வர்த்தகம் செய்யுங்கள் LONG POSITION இல இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4733 TARGET 4743, 4758, 4779, 4785, 4817, 4878.5

NIFTY SPOT BELOW 4730 TARGET 4691.6, 4673.5, 4665, 4622, 4591, 4586, 4567 TO 565, 4550

நண்பர்களே எனது 10 ஆம் ஆண்டு பங்குச்சந்தை பிரவேசத்தை முன்னிட்டு மிக மிக குறைந்த விலையில் தின வர்த்தக பரிந்துரை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளேன், அதற்கென கீழே உள்ள பதிவில் விளக்கங்கள் கொடுத்துள்ளேன், விருப்பம் உள்ளவர்கள் பங்குகொள்ளுங்கள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

SELL WITH S/L OF 2372 TARGET 2298, 2286, 2274, 2259

BUY ABOVE 2372 TARGET 2398 TO 2400, 2450, S/L 2360

Saturday

எனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள்

முக்கியமான நிகழ்வுகள் என்று அனைவரின் வாழ்கையிலும் சில விஷயங்கள் எப்பொழுதும் முக்கியத்துவம் பெரும், அதில் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வுகள் என்று சிலவைகள் இருக்கும், போற்றி கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வுகள் என்று சில நிகழ்வுகள் இருக்கும், மேலும் அந்த நிகழ்வுகள் நமது வாழ்க்கை பயணத்தையும், நமது எண்ணத்தையும் மாற்றி அமைக்க கூடிய சக்தியை பெற்று இருக்கும், இந்த வகையில் நாம் சுதந்திரம் அடைந்ததையும், ஒருவன் தகப்பனாக மாறும் நிமிடங்களும் கொண்டாடும் நிகழ்வுகளாக கொள்ளலாம், ஏனெனில் அந்த நிமிடத்தில் இருந்து நமக்கு இருந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீங்கி இனிமேல் நமது வாழ்க்கை பயணம் வேறு ஒரு கோணத்தில் செல்லும் வாய்ப்புகளும், ஒரு உயிர் இவ்வுலகத்தில் படைக்கப்பட்டதின் முக்கியமான நோக்கமான தன்னை ஒத்த உயிரியை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்ற நிகழ்வுகளும் சாத்தியமான நிமிடங்களாக கொள்ளலாம்,

அதன் மேற்க்கொண்டு நமது வாழ்க்கை பயணம் திசை மாறும் வாய்ப்புகள் 100% உண்டு (விதி விளக்குகள் எப்பொழுதும் உண்டு), இது போன்ற நமது வாழ்க்கை பயணத்தை, பயணத்தின் திசையை மாற்றியமைத்த நிகழ்வுகளை நாம் கொண்டாடுவது இயற்கையே, மேலும் அது போன்று நாம் வருடா வருடம் கொண்டாடும் நிகழ்வுகளில் மிகச்சிறப்பை பெரும் வருடங்கள் வரும்பொழுது நமது கொண்டாட்டம் அதிகமாகும், அருகில் உள்ளவர்களை எல்லாம் இந்த இன்பத்தில் கலந்து கொள்ள அழைத்து விருந்து கொடுத்து உபசரித்து நமது சந்தோசத்தை அவர்களுக்கும் கொடுத்து நமது வாழ்கையை மாற்றியமைத்த நிகழ்வுகளை சொல்லி சந்தோசப்படுவோம் அது போலவே

எனது வாழ்கையை மாற்றியமைத்த முக்கியமான விசயமாக நான் கருதுகின்ற “பங்குசந்தையில் என் பிரவேசம்” நடந்து சரியாக வரும் செப்டம்பர் 5 தேதி பத்தாவது வருட தொடக்கம், இந்த நிகழ்வு எனது வாழ்கையின் பாதையை அதிகமாகவே மாற்றியமைத்தது, எண்ணிலடங்கா விசயங்களை கற்று தந்தது, என்னாலும் நாலு பேருக்கு உதவ முடியும் என்ற நம்பிகையை தந்தது, சமுதாயத்தில் எனக்கென்று ஒரு இடத்தை இந்த நிகழ்வின் மூலம் நான் இன்று மிக குறிகிய வட்டத்தில் பெற்று இருந்தாலும் இன்னும் பெரிய இடங்களுக்கு என்னால் செல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்துகொண்டிருக்கிறது, இன்னும் சொல்லமுடியாத, சொல்லக்கூடாத அநேக விசயங்களை இந்த நிகழ்வின் மூலம் நான் பெற்றுள்ளேன் என்பது மறுக்க முடியாத உண்மை,

இவளவு விசயங்களை எனக்கு பெற்று தந்த இந்த நிகழ்வை நான் போற்றி கொண்டாடுவது நான் இந்த நிகழ்வுக்கு ஆற்றும் நன்றி, மேலும் எனது உழைப்பை இன்னும் அதிகமாக்குவது அந்த நிகழ்வுக்கு ஆற்றும் கைமாறு, அந்த நிகழ்வின் மூலம் நான் அநேக நண்பர்களுக்கு எனக்கு தெரிந்த விசயங்களை செய்வது அந்த நிகழ்வுக்கு நான் சேர்க்கும் புகழ், ஆகவே நான் இந்த நிகழ்வை இங்கு என் உற்றார், சுற்றார், நண்பர்கள் உடன் கொண்டாட ஏற்ப்பாடு செய்துள்ளேன், இந்த நிகழ்வுகளுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றேன், அதோடு நமது வலைதள பார்வையாளர்களுக்கும் என்னால் ஆனா ஒரு சிறிய செயலாக சில விசயங்களை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன், இந்த செயல்கள் நான் விருந்து கொடுத்து அந்த நிகழ்வை கொண்டாடுவதை விட சிறந்ததாக கருதிகிறேன், ஆகவே இரண்டு செயல்களை செய்யலாம் என்று கருதிகிறேன்,

அதாவது இந்த 10 ஆம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக தற்பொழுது நான் செய்து வரும் PAID SERVICE ஐ மிக மிக குறைந்த ரூபாய்க்கு கொடுப்பது, மேலும் எங்களுடன் இணைந்து இந்த PAID SERVICE இல் பங்கு பெரும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் TECHNICAL ANALYSING வகுப்புகளை எடுப்பது, இந்த இரண்டு விஷயங்களை செய்வதின் மூலம் உங்களையும் எனது இந்த நிகழ்வின் விருந்துக்கு அழைக்கின்றேன்

புதிய PAID SERVICE இன் விளக்கங்கள்

FOR 1 MONTH - 1500

FOR 3 MONTHS - 3000

FOR 6MONTH - 5000

FOR 1 YEAR - 10000

இந்த PAID SERVICE இல் அனைத்து பரிந்துரைகளும் அதாவது CASH, F&O, NIFTY AND COMMODITY என்று அனைத்து பரிந்துரைகளும் அனுப்பப்படும், முக்கியமாக CASH, NIFTY FUTURE க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்,

இந்த புதிய சலுகை இன்று முதல் (29 -08 -09) அடுத்த மாதம் 5- 09 - 09 வரை தொடரும்,

THECHNICAL ANALYSING வகுப்புகள் ஒரு குறிப்பிட்ட தினத்தையும் இடத்தையும் நமது அனைத்து PAID CLIENTS க்கும் தெரிவித்து இரண்டு நாட்கள் வகுப்புகள் எடுக்கப்படும்

உங்கள் அனைவரையும் இந்த விருந்தில் (மிக குறைந்த PAID SERVICE இல்) பங்கு கொண்டு பயனடையும் படி மிக அன்புடன் அழைக்கின்றேன், இந்த வாய்ப்ப்களை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் பயன் பெற சொல்லுங்கள்,

மேலும் இது சம்பந்தமான விளக்கங்கள் பெற 9486518735 என்ற என்னில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது SARAVANABALAAJI@GMAIL.COM என்ற மினஞ்சல் முகவரிக்கு மினஞ்சல் செய்யுங்கள்

நன்றி

சரவணபாலாஜி

Wednesday

NIFTY SPOT ABOVE 4689 TARGET 4696 TO 4700, 4714, 4718 TO 4720, 4768, 4828

NIFTY SPOT BELOW 4673 TARGET 4615, 4563, 4537, 4513 TO 4510, 4999, 4484

எனது தாத்த (எனது தாயின் தகப்பனார்) இன்று (புதன் கிழமை) இறைவனடி சேர்ந்தார், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், இன்னும் சில தினங்களுக்கு பதிவிட முடியாத சூழ்நிலை, நன்றி

Tuesday

NIFTY ON TUESDAY

25-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் FLAT என்ற நிலையில் முடிந்து இருந்தாலும் மேலிருந்து கீழே வந்துள்ளதை கவனிக்க வேண்டும், அடுத்து DOW JONES க்கு 9455 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் மெல்ல மெல்ல தொடரும், இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகள் முக்கியமான புள்ளிகளை இழந்து மேலும் கீழும் ஆடி வருகிறது, இன்னும் 50, 100 புள்ளிகளை இழந்தால் வீழ்ச்சிகள் தொடரும், அடுத்து SINGAPORE NIFTY 35 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி OPEN மற்றும் HIGH ஆகிய நிலைகளை ஒரே புள்ளியாக பெற்று தற்பொழுது 25 புள்ளிகளை இழந்து நடந்து வருவது நமது சந்தையின் பலவீனத்தை உறுதி செய்வதாகவே உள்ளது மேலும் F&O EXPIRY வாரமாக இருப்பதினால் ஆட்டங்கள் அதிக அளவு இருக்கலாம், அடுத்து நமது சந்தை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து இருப்பதும் சில பதட்டத்தை தரலாம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY SPOT பொதுவாக

NIFTY ஐ பற்றி நாம் முன்னர் பார்த்தது போல 4300 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் தற்பொழுது NIFTY தொடர்ந்து உயரவேண்டுமானால் இரண்டு மூன்று முக்கியமான நிலைகளை கடக்க வேண்டும் அதாவது 4680, 4695, 4732, இந்த எல்லா புள்ளிகளையும் கடந்தால் தான் அடுத்து உயர்வுகள் இருக்கும் அதுவரையில் உயர்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சிகளுக்கு மாறும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது, மேலும் 4732 ஐ கடந்தாலும் அடுத்து 4800 TO 4835 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் மிகப்பெரிய தடை இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்..

NIFTY CHART


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று உயர்வுகள் வேண்டுமானால் 4641 என்ற புள்ளியை கீழே கடக்காமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும் மேலும் தொடர்ந்து 4670 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து முக்கியமாக 4680, 4695 என்ற புள்ளிகள் நல்ல தடையை கொடுக்கும் சூழ்நிலைகள் இருப்பதும் உண்மையே, ஆகவே இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் எளிதாக இருக்கும், ஆனால் உலக சந்தைகள் இதற்க்கு துணையாக இருப்பது போல தெரியவில்லை பார்ப்போம்,

இதேபோல் NIFTY தொடர்ந்து வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் 4638 என்ற புள்ளியை கடக்கவேண்டும் அப்படி ஆகும் பட்சத்தில் இறக்கங்கள் சர சரவென இருக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, அதே நேரம் F&O EXPIRY வாரமாக இருப்பதினால் VOLATILE என்ற நிலைக்கும் வாய்ப்புகள் இருப்பதை அறிந்து எதற்கும் தயாராக வர்த்தகம் செய்யுங்கள்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4671 TARGET 4680, 4695, 4712, 4725, 4750, 4805

NIFTY SPOT BELOW 4638 TARGET 4592, 4578, 4562, 4554, 4545, 4539, 4511, 4502, 4496, 4485

கவனிக்க வேண்டிய பங்குகள்

APTECH LTD

இந்த பங்கில் 400 ரூபாய் என்ற இலக்கை அடையும் வாய்ப்பை CHART படங்களில் TECHNICAL ஆக பெற்றுள்ளது, அதாவது சில வாரங்களுக்கு முன்பே INVERTED HNS அமைப்பு BREAK OUT பெற்றுள்ளது, மேலும் இந்த பங்கில் VOLUME நல்ல விதத்தில் உயர்ந்து வருவதும் சாதகமான வாய்ப்பாக பார்க்கலாம், ஆகவே இந்த பங்கை ஒவ்வொரு இறக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம், மேலும் சந்தையின் இறக்கத்தினால் இந்த பங்கு கீழே வந்தால் 162 என்ற புள்ளி வரை வரலாம், ஆகவே இந்த 162 என்ற புள்ளி வரை வாங்கலாம், மேலும் இதன் S/L ஆக155 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த பங்கில் SHORT TERM என்ற முறையில் முதலீடு செய்யலாம் (2 TO 3 MONTHS TIME), இந்த விளக்கங்களை கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள்

APTECH CHART

AXIS BANK

BUY ABOVE 918 TARGET 940, 956, 960, 970, 982, S/L 915

SELL IF NOT CROSS 918 S/L 918.5 TR 896, 888, 865, 843, 833

Monday

NIFTY ON MONDAY

24-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் ஆசிய சந்தைகளில் தெளிவாக தெரிகிறது, இன்னும் ஒரு சில நூறு புள்ளிகளை மேலே கடக்கும் வாய்ப்புகள் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளில் ஏற்ப்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கம் முதல் உயர்வுகளுடன் இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் இருப்பது நமது சந்தைகளில் VOLATILE சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்புகளை தான் காட்டுகிறது, ஆகவே தற்பொழுது நமக்கு 4590 என்ற புள்ளி முக்கியமாக இருக்கும் இந்த புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் இல்லையேல் 4567 TO 4590 என்ற புள்ளிகளில் இருந்து VOLATILE என்ற நிலைக்கு தள்ளப்படலாம். EXPIRY வாரம் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள்,

NIFTY SPOT பொதுவாக

NIFTY ஐ தற்பொழுது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது 4630 TO 4650 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, அதற்க்கு மேல் நல்ல முறையில் தாக்கு பிடிக்கும் சூழ்நிலைகள் வந்தால் அடுத்து 4730 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் தடைகளை சந்திக்கலாம் அடுத்து முக்கியமான தடை புள்ளியாக 4800 TO 4830 என்ற புள்ளிகளை சொல்லலாம் ஆகவே இந்த புள்ளிகளை எல்லாம் கடந்து நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் மட்டுமே அடுத்த உயர்வுகளை பற்றி பேசமுடியும்,

அதே போல் 4300 என்ற புள்ளி தற்பொழுது முக்கியமான SUPPORT புள்ளியாக இருக்கும் இந்த புள்ளிக்கு கீழ் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பது உண்மையே

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4560 TO 4567 என்ற புள்ளிகளை கடந்தால் அடுத்து உயர்வுகள் 4589 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் தடைகளை சந்திக்கலாம், இந்த புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது, ஆகவே இந்த 4590 என்ற புள்ளியை மிக முக்கியமானதாக கொள்ளலாம்,

அதே போல் NIFTY இன்று 4485 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமென தோன்றுகிறது, மேலும் 4400 வரை வீழ்ச்சிகள் சற்று விரைவாக இருந்தாலும் 4400 க்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று FLAT மற்றும் VOLATILE என்ற விதத்தில் மாறும் வாய்ப்புகளும் தெரிகிறது, மேலும் இந்த வாரம் F&O EXPIRY வாரமாக இருப்பத்தின் காரணமாக VOLATILE இருக்கலாம் மேலும் எதிர்பார்க்காத நகர்வுகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கில்லை

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4559 TARGET 4567, 4589, 4648, 4731

NIFTY SPOT BELOW 4485 TARGET 4460, 4430, 4409, 4404, 4396, 4382, 4371, 4354, 4354, 4328

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY TATA STEEL (TISCO) ABOVE 451 TARGET 463 TO 466, 476, 483, 490, S/L 443,

SELL TATA STEEL BELOW 443 TARGET 436, 427 TO 425, 421, 414, S/L 451

IFCI ABOVE 54 TARGET 60, 62, S/L 51

GHCL BUY WITH S/L OF 39 ON CLOSING BASIS TARGET 46, 49

Friday

NIFTY ON FRIDAY

21-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

நேற்றைக்கு அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள் உயர்வுகளுடன் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்துடன் இருப்பதின் காரணமாக ஆசிய சந்தைகள் மேலும் கீழுமாய் ஆடி வருகிறது, இருந்தாலும் சில முக்கியமான புள்ளிகளை கீழே கடந்தால் மட்டுமே வீழ்ச்சிகள் என்ற நிலையில் இருப்பது சாதகமான விஷயம், அந்த வகையில் NIKKEI 10140 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், அடுத்து HANG SENG 19770 TO 19600 என்ற புள்ளிகளை கடக்க வேண்டும், DOW JONES ஐ பொறுத்தவரை 9230 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 9070, மற்றும் 9030 என்ற புள்ளிகள் வரைக்கும் மீண்டும் வரலாம் மேலும் 9030 என்ற புள்ளியை கீழே கடந்தால் மட்டுமே பெரிய அளவில் வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளிகளை எல்லாம் பார்த்துக்கொண்டே வர்த்தக முடிவுகளை எடுப்பது நல்லது (FOR POSITIONAL TRADE),

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 30 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி சற்று உயர்ந்து தற்பொழுது 14 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருப்பது நமது சந்தையில் VOLATILE மற்றும் FLAT நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் உலக சந்தைகள் உயர முற்ப்பட்டால் இங்கும் உயர்வுகள் கண்டிப்பாக இருக்கும், மேலும் இப்பொழுதைய சூழ்நிலையை வைத்து பார்த்தால் 4440 என்ற புள்ளிகள் NIFTY க்கு SUPPORT கொடுக்கலாம் இருந்தாலும் அந்த நேர சூழ்நிலைகளை பொறுத்து தொடக்கமும் நகர்வுகளும் இருக்கும்

NIFTY பொதுவாக

முன்னர் சொன்னதையே தற்பொழுதும் சொல்லவேண்டியுள்ளது கீழே 4300 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து முடிவடைந்தால் மட்டுமே TREND REVERSAL ஆகும் வாய்ப்புகளும் 4520 என்ற புள்ளியை மேலே கட்ந்தால் உயர்வுகள் 4580, 4620 என்று தொடர்ந்து செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, இந்த 4630 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்தால் அடுத்து 4730 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4452 என்ற புள்ளியை கீழே உடைக்காமல் இருந்தாலே உயரும் வாய்ப்புகள் இருக்கும் சூழ்நிலைகள் உள்ளது மேலும் 4467 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சற்று எளிதாக வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் அடுத்து முக்கியமான தடையாக 4507 என்ற புள்ளி இருக்கலாம் இந்த புள்ளியையும் மேலே கடந்தால் அடுத்து உயர்வுகள் நல்ல முறையில் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 4520 என்ற புள்ளி FIBONACCI அளவுகளின் படி ஒரு சிறிய தடைகளை தரலாம்,

NIFTY கீழே இறங்குவதற்கு 4442 என்ற புள்ளிகளை கடக்க வேண்டும் அப்படியே கடந்தாலும் வெகு அருகருகே நல்ல நல்ல SUPPORT இருப்பதயும் கவனிக்க வேண்டியுள்ளது இந்த அனைத்து SUPPORT களையும் கடந்து சக்தியுடன் கீழே வரவேண்டுமாயின் உலக சந்தைகளும், RELIANCE IND 1880 என்ற புள்ளியையும் சக்தியுடன் கடந்து உறுதுணையாக இருக்கவேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில் வீழ்ச்சிகள் விரைவாகவும் VOLATILE என்ற முறையிலும் இருக்கும், அப்படி இல்லாமல் வீழ்ச்சிகள் வந்தால் FLAT மற்றும் VOLATILE என்ற முறையில் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4467 TARGET 4485, 4507, 4548.5, 4553.5, 4560, 4567, 4603.5, 4654

NIFTY SPOT BELOW 4442 TARGET 4432, 429, 427, 4421, 4407 TO 4405, 4396, 4391, 4384, 4377, 4362 TO 360, 4354, 4349, 4334, 4319, 4278

கவனிக்க வேண்டிய பங்குகள்

IDEA CELLULAR

இந்த பங்கில் உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவருகிறது, மேலும் 83 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்து முடிவடைந்தால் உயர்வுகள் தொடர்ந்து நடைபெறும் அந்த வகையில் 83 என்ற புள்ளி முக்கியமான தடையாகவும், கடந்தால் BREAK OUT புள்ளியாகவும் அமையும் வாய்ப்புகள் உள்ளதை படத்தில் காட்டியுள்ளேன், மேலும் சந்தையில் இறக்கங்கள் வந்தால் 75 என்ற புள்ளியில் நல்ல SUPPORT இருப்பதினால் 79 TO 77, மற்றும் 75 என்ற புள்ளிகள் வந்தாலும் வாங்கலாம் இதன் S/L ஆக 75 என்ற புள்ளியை கடந்து முடிவடையவேண்டும் என்று வைத்துக்கொண்டு வாங்கலாம், இலக்காக 88 TO 89, 92, 98 TO 100 என்ற புள்ளிகள் அமையும்....

IDEA CELL CHART



Thursday

NIFTY ON THURSDAY

20-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

உயர்ந்து முடிந்துள்ள அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து அதன் FUTURE MARKET லும் சற்று உயர்வை காட்டிக்கொண்டுள்ளது, மேலும் உலக சந்தைகளின் சில முக்கியமான புள்ளிகளை பார்ப்போம், அதாவது DOW 9300 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 9080, 9030 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆசிய சந்தைகளை பொறுத்தவரை NIKKEI 10320 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 10140 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து HANG SENG ஐ பொறுத்தவரை 20400 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 19700 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகளில் இந்த சந்தைகள் என்ன விதமான நிலைகளை எடுக்கின்றதோ அதனை பொறுத்தே நமது சந்தைகளின் நகர்வுகள் இருக்கும்,

மேலும் அனைத்து சந்தைகளும் வீழ்ச்சிகளை சந்தித்து தற்பொழுது மீள முயற்சி செய்வது கவனிக்க வேண்டிய விஷயம், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை உலக சந்தைகளை தொடர்ந்து தொடக்கம் முதல் உயர்ந்து வருவது நமது சந்தைகளில் உயர்வுகளுக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கும் அதேநேரம் உலக சந்தைகள் இன்னும் முழு வீச்சிலான உயர்வுக்கு தேவையான சக்திகளை பெறாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும் ஆகவே இந்த நிலை தொடருமானால் NIFTY க்கு 4442, 4457 என்ற புள்ளிகள் ஒரு சிறிய தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் மேலும் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, அங்கு ஏதும் பிரச்சனை என்றால் 4350, 4320, 4310 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கும்...

NIFTY பொதுவாக

NIFTY ஐ பொறுத்தவரை தற்பொழுது முக்கியமான SUPPORT புள்ளியாக இருப்பது 4320 TO 4310 என்ற புள்ளிகள் என்று நாம் கடந்த சில தினங்களாக பார்த்து வருகிறோம், மேலும் இந்த புள்ளிகளை நல்ல முறையில் கீழே கடந்து முடிவடைந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும், மேலும் தற்பொழுது NIFTY 4730 என்ற புள்ளியில் இருந்து தடைகளை சந்தித்து கீழே வந்து கொண்டுள்ளது, இந்த 4730 என்ற புள்ளி 2008 ஆண்டு நடைபெற்ற பெரிய வீழ்ச்சியில் முக்கியமான FIBONACCI அளவான 61.8% என்ற அளவின் மிக அருகில் உள்ள (4800) புள்ளி ஆகவே இங்கிருந்து நல்ல CORRECTION ஐ சந்திக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அதற்க்கு ஒரு சில முக்கியமான புள்ளிகளை கடந்து ஒரு பெரிய CORRECTION வரப்போகிறது என்று வெளிப்படுத்த வேண்டும்

அவ்வகையில் முக்கியமான புள்ளிகளாக நாம் கருதும் புள்ளிகள் 4300, 4200, 3900 இந்த புள்ளிகளை எல்லாம் கடந்து முடிவடைந்தால் 3200 TO 3100 என்ற புள்ளியை நோக்கி வந்துவிடும், ஆகவே தற்பொழுது நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய புள்ளி 4300 இதற்கான படம் கீழே கொடுத்துள்ளேன் மேலும் NIFTY இந்த 4320 என்ற புள்ளியை SUPPORT ஆக பெற்று உயர முற்ப்பட்டால் கீழே வரும் புள்ளிகள் சில தடைகளை கொடுக்கலாம் அதாவது 4520, 4580, 4620 TO 4630 இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல முறையில் கடந்து சென்றால் தான் அடுத்த உயர்வை பற்றி நாம் சிந்திக்க முடியும், மேலும் அடுத்த வாரம் F&O EXPIRY வேறு உள்ளது ஆகவே தின வர்த்தகர்களும் SWING TRADE செய்பவர்களும் எப்பொழுதும் உங்கள் லாபங்களில் உறுதியாக இருப்பது சிறந்தது.... கீழே உள்ள படத்தை பாருங்கள்

NIFTY EOD CHART



NIFTY WEEKLY CHART


NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY யை பொறுத்த வரை 4403 என்ற புள்ளியை மேலே கடந்தாலே தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் 4442 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதின் காரணமாக 4443 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து 4475, 4498 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகளும் 4500 என்ற அடுத்த தடைப்புள்ளியை கடந்தால் மேலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் உள்ளது, அது போன்று நிகழும் வாய்ப்புகள் உருவானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

அதேபோல் NIFTY வீழ்ச்சியடைய வேண்டுமாயின் 4381 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருக்கும் இருந்தாலும் தொடர்ந்து SUPPORT இருப்பதினால் 4350, 4326, 4311 என்ற புள்ளிகள் எல்லாம் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளலாம், இந்த புள்ளியை கடந்தால் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவோம் என்பதினையும் மனதில் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள், இன்றைக்கு பொறுத்தவரை மேடுபள்ளங்களுடனான சந்தையாகவும் சற்று வேகம் குறைந்த சந்தையாகவும் இருக்குமோ என்று ஒரு ஐயமும் உள்ளது, ஆகவே நகர்வுகளை கவனித்து பின் வர்த்தகத்தை துவங்குங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4403 TARGET 4415, 4421, 423, 426, 4436, 4442, 4457.7, 4476, 4498, 4538, 4543, 4551 TO 4557, 4592, 4641

NIFTY SPOT BELOW 4381, TARGET 4373, 4363, 4350, 4326, 4311, 4306, 4283, 4273, 4260, 4255, 4189

கவனிக்க வேண்டிய பங்குகள்

IFCI

இந்த பங்கில் உயர்வதக்கான வாய்ப்புகள் உருவாக்கி வருவதை அதன் CHART படங்களில் பாருங்கள் மேலும் நல்ல VOLUME நடந்து வருவதையும் கவனிக்கலாம், மேலும் இந்த பங்கில் 57, 58 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினாலும், தற்பொழுதைய சந்தையின் நிலையில் கீழே வந்தால் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் இந்த பங்கில் முதலீடு செய்யலாம், மேலும் 48, 47 என்ற புள்ளிகளில் நல்ல SUPPORT இருப்பதினால் இந்த புள்ளியின் அருகில் வந்தால் வாங்கலாம் இதன் S/L ஆக 44 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொண்டு வாங்கலாம், இலக்காக 60, 67, 77 என்ற புள்ளிகள் இருக்கும், சந்தை உயர ஆரம்பிக்கும் பொது எளிதாக இலக்குகளை அடைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து 4300 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் NIFTY க்கு நல்ல SUPPORT இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்...

IFIC CHART


Wednesday

NIFTY ON WEDNESDAY

19-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் உயர்வுகளில் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET சற்று இறக்கத்துடனும், VOLATILE என்ற நிலையிலும் இருப்பதின் காரணமாக ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி சற்று இறக்கத்துடன் நடந்து வருகிறது, மேலும் உலக சந்தைகளை பொறுத்தவரை இன்னும் ஒரு 50 TO 100 புள்ளிகளை இழந்தாலும் OR பெற்றாலும் அதனை பொறுத்து எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற நிலையில் தான் உள்ளது, ஆகவே அங்கு VOLATILE என்ற மேடுபள்ளங்களுடனான நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY மேலும் கீழும் 20 புள்ளிகள் வித்தியாசத்தில் VOLATILE என்ற சூழ்நிலையில் ஆடி வருகிறது, இந்த நிலைகளை வைத்து பார்க்கும் பொது நமக்கு 4430 மற்றும் 4420 என்ற புள்ளிகள் முக்கிய SUPPORT தரலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4370, 4350, 4330 TO 4320, 4313 என்ற இந்த புள்ளிகள் முக்கிய SUPPORT கொடுக்கலாம், இந்த அனைத்து புள்ளிகளையும் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் அது வரைக்கும் உயர்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும் சாத்தியம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது, ஆகவே இந்த நிலைகளில் கவனமாக பார்த்து முக்கியமான முடிவுகளை எடுங்கள்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 4497 TO 4500 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் சாத்தியமாகும் மேலும் 4530 TO 540, 4557 TO 561, 4581 TO 586, 4611 TO 4615, என்று உயர வாய்ப்புகள் ஏற்ப்படும், ஆகவே 4500 க்கு மேல் BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே நேரம் நேற்றைய இறுதி நேரத்து சந்தை சற்று VOLATILE என்ற நிலையை எடுத்து இருப்பதாலும், இந்த மாதத்தில் உயர்வு தாழ்வுகள் அதிகமாக இருந்ததாலும், வரும் வாரம் சந்தையில் F&O EXPIRY இருப்பதினாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் இரண்டு பக்கமும் S/L HIT ஆகி வேதனையை தரும் சந்தையாக மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யவேண்டிய நேரம் இது,

NIFTY தொடர்ந்து கீழ் இறங்க வேண்டுமாயின் 4435 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4420 என்ற புள்ளியை கீழே கடந்தால் மட்டுமே நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் 4420 என்ற புள்ளியை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் அடுத்து SUPPORT 4375 TO 4370, என்ற புள்ளியிலும் அடுத்து 4350 என்ற புள்ளியிலும் உள்ளது, இதனை தொடர்ந்து 4330, 4320, 4310 இந்த புள்ளிகளை கீழே கடந்தால் மட்டுமே MARKET TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளது, இந்த 4310 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் இலக்காக 4030 என்ற புள்ளியை கொள்ளலாம், ஆகவே 4310 என்ற புள்ளிக்கு கீழ் NIFTY முடிவடையும் வாய்ப்புகள் ஏற்ப்படுமாயின் உங்கள் LONG POSITION களில் இருந்து வெளியேறிவிடுவது சிறந்ததாக இருக்கும்,

NIFTY SPOT இன் இன்றைய முக்கியமான நிலைகள்

தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை ஆதலால் இன்றும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன், சிரமத்திற்கு வருந்துகிறேன்

கவனிக்க வேண்டிய பங்குகள்

UFLEX (I FLEX)

இந்த பங்கில் ஒரு நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதற்கு சந்தை உறுதுணையாக இருக்க வேண்டும், மேலும் இறக்கம் வந்தால் 80 என்ற புள்ளி வரை வாங்கலாம், மேலும் இந்த 80 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் S/L என வைத்துக்கொள்ளலாம், இதன் இலக்காக 97, 103 TO 107 என்ற புள்ளிகள் இருக்கும்

Tuesday

NIFTY ON TUESDAY

18-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம் அமெரிக்க சந்தைகள் நேற்று இறக்கத்துடன் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET ஏற்றத்தில் உள்ளது இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் அதிகமாக தென்படுகிறது, இதன் தாக்கம் அப்படியே ஆசிய சந்தைகளிலும் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY OPEN மற்றும் LOW நிலைகளை ஒன்றாக பெற்று சற்று உயர்வுடன் தொடங்கினாலும் தற்பொழுது புதிய LOW புள்ளிகளை பெற்று மறுபடியும் உயர்ந்து உள்ளது,

மேலும் உலக சந்தைகளின் மேலும் கீழுமான ஆட்டம் இங்கும் தொடர்வதால் நமது சந்தைகளிலும் இது போன்ற ஆட்டம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் நமது தொடக்கம் உலக சந்தைகளின் அப்போதைய நிலையினை ஒட்டியே தொடங்கும் வாய்ப்புகள் இருப்பதினால், நாம் 4374, 4350, 4315 என்ற புள்ளிகளை நல்ல SUPPORT புள்ளியாகவும் 4403 TO 4410, 4425 TO 4430, 4450 என்ற புள்ளிகளை நல்ல RESISTANCE புள்ளிகளாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4403 TO 4410 என்ற புள்ளிகளுக்கு மேல் 4425 TO 4430 என்ற புள்ளிகளை நோக்கி நகரும், மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் 4450 என்ற புள்ளி அடுத்த தடையாக இருக்கலாம், ஆகவே 4450 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும், மேலும் தொடர்ந்து 4490 TO 4500 என்ற புள்ளியில் அடுத்த தடை வரும், மற்றும் இந்த 4500 என்ற புள்ளி முக்கியமானதும் கூட ஆக இந்த 4500 ஐ கடந்தால் அடுத்து 4600 TO 4620 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகும், அப்படி ஏற்படும் சூழ்நிலை வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

NIFTY தொடர்ந்து வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் 4374 என்ற புள்ளியை வலுவாக கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4350, 4320 TO 4310 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆக 4310 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் மேலும் இலக்காக 4215 TO 4200, 4148, 4107, 4050 TO 4030 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளதால் அதுபோன்ற சூழ்நிலைகள் வந்தால் அதனையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

NIFTY LEVELS

இன்று CHART UPDATE ஆவதில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப்ப கோளாறினால் UPDATE ஆகவில்லை, இதனால் NIFTY இன் நிலைகள் திருப்திகரமாக வரவில்லை ஆதலால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று தவிர்த்து விட்டேன்,

கவனிக்க வேண்டிய பங்குகள்

NDTV

169 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருப்பதால் இந்த புள்ளியை கடந்து CLOSE ஆனால் S/L ஆக வாங்கலாம் இலக்காக 191 என்ற புள்ளியை கொள்ளலாம், மேலும் இதற்க்கு சந்தை SUPPORT செய்யவேண்டும்

Monday

NIFTY ON MONDAY

17-08-09

வெள்ளியன்று வீழ்ச்சியுடன் முடிந்த அமெரிக்க சந்தைகள் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் FUTURE MARKET லும் இறக்கத்துடன் நடந்து வருவது ஆசிய சந்தைகளில் நல்ல பதட்டத்தை உருவாக்கியுள்ளது, மேலும் ஆசிய சந்தைகள் இன்னும் 50, 100 புள்ளிகளை இழந்தால் தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் தெரிகிறது, எப்படியும் நமது சந்தை தொடங்கு முன் உலக சந்தைகளின் நிலைமை தெரிந்து விடும், இதனை கொஞ்சம் பார்த்து வர்த்தகம் தொடங்குங்கள், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 45 புள்ளிகளை இழந்து தொடங்கி தொடர்ந்து இறக்கத்தில் உள்ளது, இந்த நிலைமை தொடர்ந்தால் நமது சந்தைகளில் தொடக்கம் GAP DOWN என்ற முறையில் இருக்கலாம், இன்றைய சந்தைகளில் வர்த்தகம் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள், குழப்பமான VOLATILE உடன் கூடிய இறங்கு சந்தையாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது, பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY பொதுவாக

தற்பொழுதய சூழ்நிலையில் NIFTY 4680 என்ற புள்ளியை கடந்து அடுத்து 4740 என்ற புள்ளிக்கு மேல் சென்றால் மட்டுமே தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருப்பதாக CHART படங்களில் தெரிகிறது, அதே போல் முன்னர் நாம் பார்த்தது போல் 4320 என்ற புள்ளியை கீழே நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் மட்டுமே TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த புள்ளிகள் வரும் போது முக்கியமான முடிவுகளை எடுக்கலாம், இருந்தாலும் உலக சந்தைகள் இறக்கத்துடன் இருப்பது கவலை தருவதாக உள்ளது, ஆசிய சந்தைகள் இன்னும் சில 100 புள்ளிகளை இழந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது...

NIFTY SPOT இன்று

இன்றைக்கு உயர்வுகள் 4600 என்ற புள்ளிக்கும் மேல் வரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4642 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே நல்ல உயர்வுகள் இருக்கும் என்று சொல்லலாம், அதே போல் வீழ்ச்சிகள் 4572 என்ற புள்ளியை கீழே கடந்தாலே வரும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் தொடர்ந்து கீழிறங்கும் வாய்ப்புகள் இருந்தாலும் VOLATILE என்ற முறையில் இருக்கலாம், உலக சந்தைகள் இறக்கத்துடன் இருப்பதினால் பதட்டங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும் மேலும் இதே நிலையில் உலக சந்தைகள் தொடருமானால் நமது சந்தையின் துவக்கமே பதட்டமுடன் ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளது, பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4598 TARGET 4610, 4617 TO 4622, 4633, 4642, 4680, 4719, 4726, 4738, 4755

NIFTY SPOT BELOW 4572 TARGET 4545 TO 4537, 4526, 4521, 4491, 4479, 4468, 4450, 4440 TO 435, 4413, 4410, 4360, 4328

கவனிக்க வேண்டிய பங்குகள்

BEL

BUY ABOVE 1510 TARGET 1563, 1579, 1597, 1614, 1627, S/L 1496

SELL BELOW 1496 TARGET 1460, 1374, S/L 1510

Wednesday

நண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH COLD) காரணத்தால் என்னால் இந்த வாரம் தொடர்ந்து பதிவிட முடியாத நிலைமையில் இருக்கின்றேன், எனது நிலைமையை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

NIFTY புதன் கிழமையில்

12-08-09

உலக சந்தைகள் ஒரு பார்வை

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளின் வீழ்ச்சி ஆசிய சந்தைகளில் தொடக்கம் முதல் வெளிப்படுகிறது, அதே நேரம் அமெரிக்க FUTURE MARKET சற்று உயர்வதற்கு முற்ப்படுவதால் ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி வருகிறது, ஆகவே ஆசிய அமெரிக்க சந்தைகளின் சில முக்கியமான SUPPORT புள்ளிகளை பார்ப்போம், DOW JONES ஐ பொறுத்தவரை 9176 மற்றும் 9160 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 9072 TO 9050 என்ற புள்ளியை நோக்கி நகரும், அதே நேரம் 9250 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 9300 என்ற புள்ளியை நோக்கி நகரும்,

NIKKEI ஐ பொறுத்தவரை 10450 ஐ கீழே கடந்தால் தொடர்ந்து இறங்குவதற்கு வாய்ப்பும், 10600 ஐ மேலே கடந்தால் தொடர்ந்து உயர்வதற்கு வாய்ப்புகளும் உள்ளது, அதே போல் 20230 என்ற புள்ளியை கீழே கடந்தால் HANG SENG தொடர்ந்து இறங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகலாம், ஆகவே இந்த புள்ளிகளை பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை தொடக்கமே 58 புள்ளிகளை இழந்து தொடங்கினாலும் இதுவரை OPEN மற்றும் LOW என்ற நிலைகளை ஒரே புள்ளியாக கொண்டிருந்தது, ஆனால் தற்பொழுது LOW புள்ளியையும் கீழே கடந்து 68 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் இருப்பது நமது சந்தைகளில் பதட்டத்தை தான் தரும் மேலும் 4380 என்ற புள்ளி தற்பொழுது NIFTY க்கு SUPPORT ஆகவும் அதனையும் கீழே கடந்தால் 4320 என்ற புள்ளி அடுத்த SUPPORT ஆகவும் இருக்கும், இருந்தாலும் உலக சந்தைகளில் முன்னேற்றம் ஏற்ப்பட்டால் இந்த பதட்டம் குறையவும் வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது

NIFTY SPOT பொதுவான பார்வை

NIFTY ஐ பொறுத்தவரை நாம் எதிர்பார்த்த TREND REVERSAL புள்ளியான 4320 என்ற புள்ளியை சக்தியுடன் கீழே கடந்து முடிவடைந்தால் மட்டுமே தொடர்ந்து வீழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும், அதுவரை பெரிய வீழ்ச்சியை பற்றி கவலைப்படத் தேவயில்லை, மேலும் கீழே கொடுத்துள்ள படத்தில் NIFTY MOMENTUM TREND LINE, FIBONACCI SUPPORT, NEAR DIFFERENCE BOTTOM SUPPORT ஆகிய விஷயங்கள் இருப்பதை பாருங்கள், NIFTY தொடர்ந்து உயர்வதாக கொண்டால் தற்பொழுது 4610 TO 4630 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம், மேலும் இந்த புள்ளிகளை நல்ல முறையில் கடந்தால் அடுத்த இலக்கை நோக்கி NIFTY நகரும், நேற்று நாம் எதிர்பார்த்தது போல RIL, ACC, MARUTHI போன்ற பங்குகள் சந்தையை உயர்த்தியது, இன்று ?

NIFTY CHART



NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4475 என்ற புள்ளிகளுக்கு மேலே உயரும் வாய்ப்புகள் உள்ளது, தொடர்ந்து 4500, 4520, 4550 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகளும் உள்ளது, அதே நேரம் தற்பொழுது NIFTY நல்ல உயர்வை காட்ட வேண்டும் என்றால் 4555 என்ற புள்ளியை கடந்து நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் அடுத்து ஒரு 100 புள்ளிகளை எளிதாக பெரும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே 4555 க்கு மேல் உங்கள் LONG POSITION களை தொடர்ந்து அதிகமான லாபத்திற்காக வைத்து இருக்கலாம், புதிய நிலைகளையும் எடுப்பதானாலும் சரி தான், மேலும் NIFTY NEAR CALL OPTION லும் கவனம் செலுத்தலாம்,

NIFTY தொடர்ந்து கீழே வர வேண்டும் என்றால் 4475 என்ற புள்ளியை மேலே கடக்காமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும், அதே நேரம் 4457 என்ற புள்ளியை கடந்தால் வீழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும், மேலும் 4380 என்ற புள்ளியை நல்ல சக்தியுடனும் உலக சந்தைகளின் SUPPORT உடனும் கீழே கடந்தால் அடுத்து நாம் TREND REVERSAL புள்ளி என்று கருதிய 4320 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது, அதற்க்கு முன் 4345 என்ற புள்ளியில் ஒரு சிறிய SUPPORT உம் உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4475 TARGET 4504, 4520 TO 21, 4530 TO 4531, 4552, 4625 TO 26

NIFTY SPOT BELOW 4465 TARGET 4456, 4413, 4403, 4392, 4380, 4345, 4325

கவனிக்க வேண்டிய பங்குகள்

MARUTI

BUY ABOVE 1317 TARGET 1351, 1355 TO 1359, 1366.2, 1379, 1408, S/L 1308

SELL WITH S/L OF 1308 TARGET 1277 TO 276, 1262, 1258, 1246, 1232, 1225, 1214, 1206

OR

SELL BELOW 1275 TARGET 1262, 1258, 1246, 1232, 1225, 1214, 1206, S/L 1279