Monday

NIFTY SPOT ON 01-11-11



NIFTY SPOT இன்று:-

இன்று 5339 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 5360 என்ற புள்ளியை நோக்கி மெல்ல நகரும் வாய்ப்புகள் கூடிவரும், இதனை தொடர்ந்து 5360 க்கு மேல் பலமுடன் நிலைத்து நின்றால் அடுத்து நல்ல உயர்வை 5400 ஐ நோக்கி எதிர்பார்க்கலாம், இதற்கும் மேல் இன்றைய நிலைகளை பொறுத்து நகர்வுகளை எதிர்பார்க்கலாம், 

அதே போல் இன்று 5314 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கங்கள் சந்தையில் நிலைபெறும் அதே நேரம் இறக்கங்கள் சற்று மேடுபள்ளங்களுடன் நடைபெற சிறிய வாய்ப்புகளும் தென்படுகிறது, இவ்வாறு இறங்கும் சந்தைக்கு 5293 , 5272 , 5258 என்ற புள்ளிகள் எல்லாம் இலக்காகவும் சப்போர்ட் ஆகவும் செயல்படும்    

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்:-

Nifty Spot AB 5339 Target 5352, 5360, 5398, 5408, 5422, 5428, 5444, 5486

Nifty Spot BL 5314 Target 5300, 5293, 5284, 5268, 5253, 5236, 5223, 5194, 5173, 5135, 5107

Saturday

NIFTY SPOT ON 31-10-11



Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5340 என்ற புள்ளி முக்கியமான சப்போர்ட் புள்ளியாக செயல்படும், இதற்கும் கீழ் அருகருகே சப்போர்ட் இருந்தாலும் அடுத்த முக்கியமான சப்போர்ட் ஆக 5310 ஐ சொல்லலாம்,இந்த 5310 ஐ பலமுடன் கீழே கடந்து சற்று நேரம் அதிக volume உடன் நிலைத்து நின்றால் அடுத்து கீழ் நோக்கிய இலக்காக 5269, 5246 ++ என்ற புள்ளிகளை சொல்லலாம், 

அதே நேரம் இன்று 5340 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டு முன்னேற முயற்சி செய்தால் தொடர் உயர்வுகள் 5385,5405 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், கூடுதலாக 5415 என்ற புள்ளியை பலமுடன் கடந்து தனது முழு சக்தியையும் காண்பித்தால் அடுத்த இலக்காக 5482, 5501, 5535, 5577 என்று சொல்லிக்கொண்டே செல்லலாம். 

அதே நேரம் அனைத்து புள்ளிகளும் தடைகளாகவும் செயல்படும் சக்தியினை பெற்றுள்ளதையும் மனதில் கொண்டு வர்த்தகம் செய்யவும் , முக்கியமாக 5500 மற்றும் 5535 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் சற்று முக்கியமான தடைபுள்ளியாக செயல்படும். 

 NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்:- 

 NIFTY SPOT AB 5385 TARGET 5405, 5413, 5482, 5501, 5522, 5535, 5577 

 NIFTY SPOT BL 5352 TARGET 5347, 5340, 5327, 5319, 5310, 5269, 5246, 5240, 5227

Thursday





Nifty Spot What Next :-

Nifty spot அநேக  தடைகளை கடந்து தொடர்ந்து முன்னேறக்கூடிய  நிலையில் இருந்தாலும் மேலே உள்ள படத்தை பார்க்கும்பொழுது இனி வரும் தினங்களில் சக்தியுடன் தொடர்ந்து முன்னேறுமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது, ஏனெனில் Raising Wedge என்ற வடிவம் மிக துல்லியமாக அமைந்து வருவதாலும், Channel top resistance line அருகிலே அமைந்து வருகின்ற காரணத்தினாலும் சந்தையில் எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் இறக்கங்கள் சாத்தியப்படும் நிலையில் தான் உள்ளது,

அதே நேரம் 5280, 5320 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும் என்ற நிலையிலும் சந்தை மாட்டிக்கொண்டுள்ளதையும்  மறுக்க முடியாது, ஆகவே இன்னும் சில தினங்களில் சந்தை இந்த புள்ளிகளை மெல்ல அடையலாம், அதே நேரம் இந்த நகர்வுகளும் நாம் மேலே பார்த்த Raising Wedge மற்றும் Channel top resistance line க்கு உட்பட்டே இருக்கும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், அதன் பிறகு  வீழ்ச்சிகள் தொடரலாம், அதே நேரம் 5350 என்ற புள்ளியை மேலே பலமுடன் கடந்து செல்லும் வாய்ப்புகள் வந்தால் அடுத்து 5550 ஐ நோக்கிய பயணம் எளிதாகும், கூடவே 5600 to 5650 க்கும் வாய்ப்புகள் உள்ளதையும்  மறுக்க முடியாது.

மேற்சொன்ன புள்ளிகளை தொட்டோ அல்லது தொடாமலோ கீழே இறங்கும் சூழ்நிலைகள் வந்தால் 5135, 5100 என்ற புள்ளிகள் முதல் நிலை சப்போர்ட் ஆகவும், தொடர்ந்து இதக்ற்கும் கீழ் வந்தால் அடுத்து 4990, 4900, 4850 என்ற புள்ளிகள் அடுத்த நிலை இலக்காகவும், சப்போர்ட் ஆகவும் செயல்படும்   



Monday

NIFTY SPOT ON 25-10-11

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் மிக நீண்ட இடைவெளி, சரி சந்தையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சற்று பார்க்கலாம்..

தற்பொழுதுள்ள நிலையில் 5170, 5200, 5230 என்ற புள்ளிகள் எல்லாம் கடந்து நின்றால் தான் அடுத்து 5310, 5420 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் உருவாகும், 

அதே நேரம் 5020, 4985 என்ற புள்ளிகள் நேர்த்தியான support ஆக செயல்படும், இதற்கும் கீழ் 4890, 4830 என்ற புள்ளிகள் அடுத்த நிலை support ஆக செயல்படும். 

இன்றைய சந்தையின் நிலைகளை பற்றி சற்று பார்க்கலாம் : 

 இன்று 5116 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 5132 , 5152 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் உருவாகும், தொடர்ந்து 5152 என்ற புள்ளியை மேலே கடந்து பலமுடன் நின்றால் அடுத்து 5170 , 5215, 5228 போன்ற முக்கியமான புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகும்.  

அதே போல் இன்று 5092, 5080 , 5064 , மற்றும் 5050 என்ற புள்ளிகள் எல்லாம் நல்ல சப்போர்ட் ஆக செயல்படும், இதற்கும் கீழ் 5009 என்ற புள்ளி அடுத்த நிலை சப்போர்ட் என்று சொல்லலாம்