Thursday





Nifty Spot What Next :-

Nifty spot அநேக  தடைகளை கடந்து தொடர்ந்து முன்னேறக்கூடிய  நிலையில் இருந்தாலும் மேலே உள்ள படத்தை பார்க்கும்பொழுது இனி வரும் தினங்களில் சக்தியுடன் தொடர்ந்து முன்னேறுமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது, ஏனெனில் Raising Wedge என்ற வடிவம் மிக துல்லியமாக அமைந்து வருவதாலும், Channel top resistance line அருகிலே அமைந்து வருகின்ற காரணத்தினாலும் சந்தையில் எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் இறக்கங்கள் சாத்தியப்படும் நிலையில் தான் உள்ளது,

அதே நேரம் 5280, 5320 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும் என்ற நிலையிலும் சந்தை மாட்டிக்கொண்டுள்ளதையும்  மறுக்க முடியாது, ஆகவே இன்னும் சில தினங்களில் சந்தை இந்த புள்ளிகளை மெல்ல அடையலாம், அதே நேரம் இந்த நகர்வுகளும் நாம் மேலே பார்த்த Raising Wedge மற்றும் Channel top resistance line க்கு உட்பட்டே இருக்கும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், அதன் பிறகு  வீழ்ச்சிகள் தொடரலாம், அதே நேரம் 5350 என்ற புள்ளியை மேலே பலமுடன் கடந்து செல்லும் வாய்ப்புகள் வந்தால் அடுத்து 5550 ஐ நோக்கிய பயணம் எளிதாகும், கூடவே 5600 to 5650 க்கும் வாய்ப்புகள் உள்ளதையும்  மறுக்க முடியாது.

மேற்சொன்ன புள்ளிகளை தொட்டோ அல்லது தொடாமலோ கீழே இறங்கும் சூழ்நிலைகள் வந்தால் 5135, 5100 என்ற புள்ளிகள் முதல் நிலை சப்போர்ட் ஆகவும், தொடர்ந்து இதக்ற்கும் கீழ் வந்தால் அடுத்து 4990, 4900, 4850 என்ற புள்ளிகள் அடுத்த நிலை இலக்காகவும், சப்போர்ட் ஆகவும் செயல்படும்