Monday

NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள் 01/10/2018


NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள் 


NIFTY SPOT 10850 என்ற புள்ளியை சற்று தடுமாற்றத்துடன் கையாள்வதால் கீழ்கண்ட புள்ளிகள் அடுத்த முக்கியமான நகர்வுகளை தீர்மானிக்கும் 

அதாவது 10700 முதல் 10675 என்ற புள்ளிகளை கீழே விடாமல் திரும்பும் பட்சத்தில் தொடர் உயர்வுகளையும், அப்படி அல்லாமல் 10675 என்ற புள்ளியையே கடந்து கீழே முடிவடையுமானால், அடுத்து நேரடியாக 10100 முதல் 10090 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

அதே நேரம் 11180 க்கு மேல் நிலையாக நின்றால்  NIFTY  தனது மேல் நோக்கிய பயணத்தை மீண்டும் தொடரும் இலக்காக நாம் முன் பதிவில் சொன்ன புள்ளிகள் இருக்கும் 

இனி வரும் மாதங்கள்  நிறுவனங்கள் தங்களின் RESULT வெளியிடும் மாதங்களாக இருப்பதினால் தனிப்பட்ட பங்குகளின் உயர்வு தாழ்வுகள் ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ளலாம் 

Thursday

NIFTY SPOT இனி வரும் நாட்களில் எப்படி நகரும்



21-09-2018

வணக்கம் நண்பர்களே வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தையின் நகர்வை பற்றி பதிவிடுவதில்  மகிழ்ச்சி 

கடந்த 15 தினங்களாக தொடர்ந்து சந்தையில் இறக்கங்களை காணும்பொழுது பழைய தொடர் வீழ்ச்சிகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் பயம் காட்டி வருகிறது , இந்த நேரத்தில் இந்த பதிவு தேவை என்ற  காரணத்தினால் படத்துடன் கூடிய விளக்கம் கொடுக்கின்றேன், கீழே உள்ள படத்தினை பெரிதாக்கி பாருங்கள் 


                                 


கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை NIFTY SPOT   UPWARD RAISING CHANNEL  என்ற வடிவத்தின் வழியே பயணம் செய்வதை காணலாம் , இதில் நான்கு முறை தடைகளையும் , நான்காவது முறையாக இப்பொழுது சப்போர்ட்  எடுக்கும் நிலையில்  இருப்பதையும்  காணலாம், 

இந்த சப்போர்ட் நிலை என்பது சரியாக 11210 என்ற புள்ளியில் உள்ளது, ஒருவேளை இந்த 11210 என்ற புள்ளியையும் கடந்து கீழே சென்றால் அடுத்ததாக 11165, 11146 என்ற புள்ளிகள் மிக முக்கியமான சப்போர்ட் நிலையாக செயல்படும்,

அப்படி இல்லாமல் தொடர்ந்து கீழே வந்து 11100 என்ற புள்ளியை உடைத்து 11050 என்ற புள்ளிக்கும்  கீழே CLOSE ஆனால் அடுத்து தொடர் இறக்கத்தை நாம்  எதிர்பார்க்கலாம், அதன் TARGET ஆக  10850, 10675, 10550 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம். 

அப்படி இல்லாமல்  11210 அல்லது 11165 டு 11145 என்ற புள்ளிகளுக்குள் சப்போர்ட் எடுத்து திரும்பினால் 11450 என்ற புள்ளி தடையாக இருக்கும், அதை தொடர்ந்து மேலே சென்று  11650 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் CLOSE ஆகுமேயானால்! நாம் 13500 டு 13900 என்ற புள்ளிகளை மிக மிக விரைவில் எதிர்பார்க்கலாம் (இந்த வருடத்திற்குள் வந்தால் கூட ஆச்சர்யம் இல்லை )..


எனது இலக்கு 16500 டு 17000 மிக மிக விரைவில் (2019 ன்  பாதிக்குள் )

ஆகவே நல்ல பங்குகளில் முதலீடு செய்ய தயாராக இருக்கலாம் 

நன்றி 

Wednesday

மீண்டும் பங்கு சந்தை நோக்கி சரவணபாலாஜி



வணக்கம் நண்பர்களே


நீண்ட இடைவெளி, காரணம் குடும்பத்தொழில், அது சம்பந்தமான வெளிநாட்டு பயணம்,  தொடர் போராட்டங்கள்,  இறுதியில் வெற்றி...

மீண்டும் சந்தையை நோக்கி திரும்பும் ஆசை, கடந்த 5 மாதங்களாக சந்தையை தொடர்ந்து பார்த்தும்,  கணித்தும் வருகிறேன், பழைய நிலையில் மீண்டும் தொடர முடியும் என்ற நம்பிக்கை வந்தது, ஆகவே  வலைத்தளத்தை மீண்டும் தொடர்கிறேன், விரைவில் நமது வலைத்தளம் தொடர்ந்து செயல்படும். 

இந்த இடைப்பட்ட 5 மாதங்களில்  சந்தையில் நடந்த மாற்றங்களை கவனிக்கும்பொழுது அடடா அநேக வாய்ப்புகளை இழந்து இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை 

அதேநேரம் தொடர்ந்து கவனித்து வந்ததில் தினவர்த்தகத்தில் வர்த்தகம் செய்வதில் அநேக மாற்றங்களும் பெரிய புள்ளிகள் தங்களது வர்த்தக முறைகளில் அநேக மாற்றங்கள் செய்துள்ளதையும் கவனிக்க முடிந்தது

அதன் தொடர்ச்சியாக அவைகளை உள்வாங்கி ஆராய்ந்து அந்த புதிய முறைகளை கண்டறிந்து ஒரு  80% முதல்  90% வரை சரியான லாபம் தரும் வழிமுறைகளை கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 

முக்கியமாக FUTURE & OPTION  இல்   தின வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எனது மின் அஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள் இலவசமாக நான் செய்யும் வர்தகத்தை  உங்களுக்கும் WHATSAPP  இல் தருகிறேன்... 



எனது மின் அஞ்சல் முகவரி:-


SARAVANABALAAJI@GMAIL.COM

SARAVANABALAAJI@YAHOO.COM

                                                                                                  
                                                                                                                         நன்றி 
                                                                                                                         சரவணபாலாஜி 

x