Monday

NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள் 15/10/18


NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள்  15/10/18

நாம் எதிர்பார்த்தது போல் NIFTY SPOT 10675 ஐ உடைத்து கீழே 10138 என்ற புள்ளியை வந்தடைந்து தற்பொழுது உயர்ந்து வருகிறது, இந்த உயர்வு தொடர்ந்து உயருமா அல்லது மாற்றங்கள் இருக்குமா என்று பார்ப்போம்... 

தற்பொழுதைய நிலை அதாவது தொடர் உயர்வுக்கான வாய்ப்புகள் 10580 டு 10600 என்ற புள்ளிகளில்  சில தடுமாற்றங்களை சந்திக்கும் என்றே தோன்றுகிறது , ஒருவேளை இந்த புள்ளிகளை கடந்து மேலே சென்றாலும் அடுத்து முக்கியமான தடையாக 10750 என்ற புள்ளி  இருக்கும் ...

ஆகவே 10750 என்ற புள்ளியை  மிக பலத்துடன் கடந்தால் மட்டுமே அடுத்து தொடர் உயர்வுகள் அதாவது 13500 என்ற புள்ளியை நோக்கி NIFTY SPOT நகரும், 

அப்படி இல்லாமல் மேற்கண்ட இரண்டு புள்ளிகளில் எந்த புள்ளியில் தடைகளை சந்தித்தாலும்  கீழே வரும் வாய்ப்புகள் அதிகம், அதாவது தற்பொழுதைய LOW புள்ளியான 10138 ஐ கீழே கடந்து 10100 டு 10090 என்ற புள்ளிகளில் சப்போர்ட் எடுத்து திரும்பும் வாய்ப்புகள் ஏற்படும்...

ஆகவே இந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதாவது 10100 டு 10090 என்ற  புள்ளிகளை நீங்கள் கண்டால் தைரியமாக உங்களின் முதலீடுகளை செய்யலாம் அடுத்து தொடர் உயர்வு இருக்கும்...

அதே நேரம் நீங்கள் 10100 டு 10090 என்ற புள்ளிகளில் வாங்கும் அனைத்து பங்குகளுக்கும்   NIFTY SPOT இன் 10050 க்கு கீழ் CLOSE என்ற சூழ்நிலை   STOP LOSE ஆக இருக்கும், 

அவ்வாறு நிகழ்ந்தால் அனைத்து பங்குகளையும் சிறிய நட்டங்களில் அல்லது வாங்கிய விலையிலோ விற்று விட்டு NIFTY SPOT இன்  அடுத்த சப்போர்ட்க்காக காத்து இருங்கள் ...