Monday

தேசிய பங்குச்சந்தை 30 - 11 - 09

உலக சந்தைகள்

உலகசந்தைகள் அனைத்தும் உயர்வில் இருப்பதினால், நமது சந்தைகளில் தொடக்கத்தில் சில உயர்வுகள் ஏற்ப்படும் வாய்ப்புகள் உருவாகலாம் , அதே நேரம் 5020 to 5030 என்ற புள்ளிகள் பலமான தடையாக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது, அதேபோல் 4811 க்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படலாம்,,,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 4949 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் 5000 to 5030 என்ற புள்ளிகளின் இடையே சில தடைகள் இருப்பது போலும் தெரிகிறது, ஆகவே 5035 என்ற புள்ளிக்கு மேல் nifty யின் இலக்காக 5095 to 5100 என்ற புள்ளிகள் இருக்கலாம், அதே நேரம் இந்த 5035 என்ற புள்ளியை நல்ல சங்கதியுடன் மேலே கடந்து தொடர்ந்து 2, 3 நாட்கள் முடிவடயுமானால், தற்பொழுது ஏற்பட்டிற்கும் வீழ்ச்சிக்கான அறிகுறிகள் சக்தியற்று போவதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கலாம், இருந்தாலும் 5200 என்ற புள்ளிக்கு மேல் தான் உறுதியாக இந்த வீழ்ச்சி முடிவுற்றது என்று சொல்ல முடியும்,

அதே போல் இன்று 4941 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகலாம், அதே நேரம் 4811 to 4805 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும், இந்த புள்ளிகளை கடந்து கீழே செல்லும் பட்சத்தில் பலமான வீழ்ச்சிகள் உண்டாகலாம்! இலக்காக முதலில் 4765, 4720, 4631 to 4600 என்ற புள்ளிகள் செயல்படலாம், அதே நேரம் இந்த 4600 க்கும் கீழ் தொடர்ந்து சக்தியுடன் முடிவடைந்தால் அடுத்த இலக்கு நாம் முன்னர் பார்த்தது போல இருக்கலாம் ( 4050), அதே நேரம் 5200 க்கு மேல் எதிர்மறையான போக்குகள் ஏற்படலாம் ,,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4949 Target 4961, 4981, 4987 to 4990, 4992, 5003, 5010, 5015, 5021, 5025, 5028, 5033, 5053, 5060, 5068, 5098

Nifty Spot below 4941 Target 4908, 4893, 4887, 4867, 4811, 4766, 4730 to 4720, 4631, 4578 to 70, 4511, 4498, 4453

கவனிக்க வண்டிய பங்குகள்

JINDAL STEEL

Buy above 685 Targets 695, 698, 706, 709, s/l 683

Sell below 683 Targets 560 to 658.5, 652, 649 to 648, 641, 633, 628, 616, s/l 685

Friday

தேசிய பங்குச்சந்தை 27 - 11 - 09

உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நேற்று Flat என்ற நிலையில் முடிந்து இருந்தாலும், தற்பொழுது நடந்து வரும் Future Market ரத்த களறியாக உள்ளது, இதன் வெளிப்பாடு உலக சந்தைகளில் நன்றாக தெரிகிறது, நமது சந்தைகளிலும் இந்த கதி நேர்வதற்கு அநேக விஷயங்கள் துணை நிற்பது போல் அதன் வரை படங்களில் தெரிகிறது, கீழே அதன் விளக்கங்கள் படத்துடன் கொடுத்து உள்ளேன், கொஞ்சம் அதிக்கப்படியான இறக்கம் இருக்கும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது கீழே கொடுத்துள்ளது எனது கண்ணோட்டம் மட்டுமே மாற்று கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன,,,

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5031 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது, அதேபோல் 4996 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே நேரம் 4922 என்ற புள்ளி முக்கியமானதாக தெரிகிறது, இந்த புள்ளி உடைப்படுமானால் அடுத்த முக்கியமான support ஆக 4885 என்ற புள்ளியை சொல்லலாம், அதற்க்கு அடுத்து Nifty Spot இன் நேரிடையான Support ஆக 4737 என்ற புள்ளியை தான் அழுத்தி சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது, ஆகவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்,,,

இதற்க்கு உறுதுணையாக Nifty Spot இன் chart படங்களில் மிக முக்கியமான சில விஷயங்கள் ஏற்பட்டு உள்ளது, அவைகளை கொஞ்சம் பார்ப்போம், கீழே கொடுத்துள்ள Nifty Spot இன் படத்தை பாருங்கள், இதில் rising wedge என்ற அமைப்பை நேற்று நன்றாகவே Break down ஆகி இருப்பதை பாருங்கள், இந்த அமைப்பின் படி nifty கீழே வரவேண்டுமாயின் அதன் இலக்காக 4620 to 4600 என்ற புள்ளிகள் இருக்க வேண்டும்,

அதே நேரம் இதற்க்கு முன் நடந்த correction சரியாக channel என்ற அமைப்பில் support எடுத்து உயர்ந்து இருப்பதினால், 4735 to 4710 என்ற புள்ளிகளுக்கு இடையேயான பகுதிகளில் support எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதே நேரம் இந்த 4710 என்ற புள்ளியை கடந்து அடுத்து 4600 என்ற புள்ளியையும் கீழே கடந்து தொடர்ந்தார்ப்போல் எதிர்மறையான போக்கில்! உலக சந்தைகளின் துணையுடன் முடிவடயுமானால் nifty Spot இன் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 4050 to 3950 என்ற புள்ளிகளை சொல்லும் சூழ்நிலைகள் Nifty யின் chart படங்களில் தெரிகிறது,

ஆகவே எச்சரிக்கையாக இருக்க விரும்பினால் கவனமுடன் இருங்கள், இதை உறுதி செய்யும் விதமாக Singapore nifty யின் நிலை கவலை கிடமாக உள்ளது, மேலே சொன்ன கருத்துகள் எல்லாம் எனது சொந்த கருத்துகள் மட்டுமே, இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள், மேலும் இந்த வீழ்ச்சிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் nifty 5185 to 5200 என்ற புள்ளிகளை கடந்து சீக்கிரமே முடிவடைய வேண்டும், சரி படத்தை பாருங்கள்

NIFTY SPOT CHART



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5030.5 Target 5051, 5061, 5069, 5083, 5098, 5109, 5118, 5127, 5145, 5166, 5183, 5245

Nifty Spot below 4996 Target 4970, 4944, 4928, 4922, 4897, 4885, 4737


கவனிக்க வேண்டிய பங்குகள்

KOTAK BANK (only for risky traders due to huge difference in s/l )

Sell below 780 Targets 760, 750, 725 to 722, 712, s/l 798

Buy above 798 Targets 810, 830, 840, s/l 780

Thursday


Expiry தினங்களில் வர்த்தகத்தை தவிர்க்கலாம் என்று கடந்த மாதத்தில் இருந்து முடிவு எடுக்கப்பட்டு, அதை கடை பிடித்தும் வருகிறேன், ஆகவே இன்று வேறொரு சுவாரசியமான விஷயம் உங்களுக்காக, கண்டிப்பாக பாருங்கள் ,,,

THE GREAT INDIAN

முதலில் TED என்ற அமைப்பை பற்றி சொல்லி விடுகிறேன், புதுமையான கருத்துகள், கண்டுபிடிப்புகள், அனுபவங்கள் யாருக்கேனும் தோன்றினால், அதை உங்களால் நிரூபிக்க முடியுமானால், இந்த அமைப்பில் உங்கள் கருத்துகள், கண்டுபிடிப்புகள், அனுபவங்களை சொல்லலாம், இதன் மூலம் உங்கள் விஷயம் உலகிற்கு அழுத்தமாக சொல்லப்படும், சிறந்தவைகளுக்கு பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன,

சரி விசயத்திற்கு வருவோம், நமது இந்தியர் திரு பிரணாவ் மிஸ்ட்ரி என்பவர் சமீபத்தில் Computer சார்ந்த சில விசயங்களை கண்டுபிடித்து உள்ளார், அதற்க்கு அவர் வைத்த பெயர் Sixth Sense Technology, இவரின் கண்டுபிடிப்பின் படி இனி Computer பயன் படுத்துபவர்களுக்கு Monitor, Key Board, Mouse போன்ற எந்த சாதனங்களும் தேவைபடாது போல,

ரோட்டில் கிடக்கும் காகிதங்களை கூட Computer Monitor ஆக பயன்படுத்தலாம் போல, கைகளிளாலே கேமரா இல்லாமல் படம் பிடிக்கிறார்! புத்தகங்களில் உள்ள படங்களை கைகளிளாலே அப்படியே கில்லி Computer க்குள் விசுகிறார்! மறு நொடி அங்கு தெரிகிறது (copy & paste), பேப்பர்களில் TV பார்க்கின்றார், இப்படி அனேக விசயங்களை செய்து கொண்டு இருக்கிறார்,

இவை எல்லாம் Magic இல்லை! உண்மையான அவரின் கண்டு பிடிப்பு, ஏது Bill Gates எல்லாம் காலின்னு நினைக்கும் போது! இந்த விஷயத்தை Open Source இல் வெளியிடப்போவதாக சொல்லி புல்லரிக்க வைக்கின்றார்! Really Great Indian, நீங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ,


Video :

Wednesday

தேசிய பங்குச்சந்தை 25 - 11 - 09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் அதிகப்படியான மேலும் கீழுமான ஆட்டங்கள் தெரிகிறது, இதனை தொடர்ந்து நமது சந்தைகளும் உலக சந்தைகளை ஒட்டி தொடங்கினாலும்! ஆட்டங்கள் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் உருவாகலாம், பொதுவில் 5123 என்ற புள்ளி தொடர்ந்து உயர்வதற்கு தடையாகவும், 5025 என்ற புள்ளி தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கு தடையாகவும் செயல்படலாம், மொத்தத்தில் மேடு பள்ளங்கள் நிறைந்த சந்தையாக இருக்கும் வாய்புகள் தெரிகிறது,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5103 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், தொடர் உயர்வுகள் 5123 என்ற புள்ளியை மேலே கடந்தால் மட்டுமே ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது, இவ்வாறு ஏற்படுமாயின் 5163, 5175 என்ற புள்ளிகளில் சில தடைகள் ஏற்படலாம், இந்த புள்ளிகளுக்கும் மேல் நல்ல உயர்வுகள் 5230 என்ற இலக்கை வைத்து நகரலாம்,

அதே போல் 5089 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும், அருகருகே support இருப்பதினால் 5025 என்ற புள்ளியை சக்தியுடன் கடந்தால் மட்டுமே நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், ஆகவே 5025 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் உருவாகும் என்றே தெரிகிறது, இதனை பொறுத்து உங்கள் வர்த்தகத்தை செயல் படுத்துங்கள்....

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5102.5 Targets 5121 to 123, 5164, 5175, 5197, 5205, 5231

Nifty Spot below 5077 Target 5069, 5058, 5050 to 5048, 5040, 5031, 5027 to 5025,
4973, 4961, 4945 to 43, 4924, 4911

கவனிக்கவேண்டிய பங்குகள்

DLF

Buy around 373 to 374 Targets 378 to 379, 383 to 384, 388, 395, 400, 402 to 404, s/l 372.5

Sell below 372 Target 364, 362, 360, 344, s/l 374 (for risky trader s/l is 384)

Tuesday

தேசிய பங்குச்சந்தை 24 - 11 - 09


இன்றைய பதிவு 300 என்ற எண்ணை பூர்த்தி செய்கிறது, இது வெறும் எண்களின் கடத்தலா, அல்லது சில நண்பர்களுக்காவாவது உதவியாக உள்ளதா என்பதினை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.....

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய நிலை சற்று பதட்டம் மிகுந்ததாக உள்ளது, இதனை ஒட்டி ஆசிய சந்தைகளிலும் இதே நிலைமை தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளிலும் இந்த பட்டத்திற்கு குறைவில்லாமல் நகர்வுகள் இருக்கும் என்றே என்ன தோன்றுகிறது, முக்கியமான தடையாக 5112, 5121, 5138 என்ற புள்ளிகள் செயல்படலாம் ….

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5106 க்கு மேல் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும், நல்ல உயர்வு 5138 என்ற புள்ளிக்கு மேல் தான் கிடைக்கலாம் என்ற சூழ்நிலைகள் தெரிகிறது, தொடர்ந்து nifty யின் இன்றைய நிலைகளை ஒட்டி மேல் நகரும் வாய்ப்புகளும் தென்படுகிறது, அதே போல் 5112 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றாலே! கீழ் வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம், தொடர்ந்து nifty இன் இன்றைய நிலைகளை ஒட்டி கீழே இறங்கவும் வாய்ப்புகள் தெரிகிறது,

அப்படியே கீழ் நோக்கி வந்தாலும் 5018 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் ஏற்படலாம், மேலும் இது expiry வாரமாக இருப்பதினால் எந்தளவிற்கு இது போன்ற நுட்பக்கூறுகள் தனது வேலையே சரியாக செய்யும்! என்பது அனுபவத்தினால் சிறு சந்தேகமும் ஏற்படுகிறது! ஆகவே பார்த்து வர்த்தகம் செய்யுங்கள், இருந்தாலும் நமது சந்தை தொடர்ந்து உயருவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது, expiry முடிந்த பின் உறுதியான போக்குகளை நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம் ,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5106 Target 5121, 5138, 5180, 5189, 5213, 5254, 5267

Nifty Spot below 5091 Target 5083, 5078, 5061, 5052 to 50, 5037, 5018, 4975, 4968, 4959, 4934, 4805

கவனிக்க வேண்டிய பங்குகள்

CAIRN INDIA

Buy above 288 Target 296, 300, 303, 317, s/l 275 positional call, add on decline around 280 to 276 also

Monday

தேசிய பங்குச்சந்தை - 23 - 11 - 09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் Dow Jones 10420 என்ற புள்ளியை மேலே கடந்து தொடர்ந்து முடிவடையும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின், தொடர் உயர்வுக்கு அங்கு வாய்ப்புகள் ஏற்படலாம், அதே போல் 10230 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் ஏற்படலாம், தற்பொழுது உள்ள உலக சந்தைகளின் சூழ்நிலையை பார்க்கும் போது, நமது சந்தைகளிலும் சற்று உயர்வுகள் ஏற்பட்டாலும், உயரங்களில் பதட்டங்கள் உருவாகும் வாய்ப்புகள் இருக்கலாம்,

Nifty Spot இன்று

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5055 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், அருகருகே தடைகள் இருப்பதன் எதிரொலியாக மேல் நோக்கிய உயர்வுகள் சற்று பதட்டம் நிறைந்ததாக இருக்கலாம், மேலும் முக்கியமான தடை புள்ளிகள் என்று அநேக புள்ளிகளை குறிப்பிட்டு காட்டும் சூழ்நிலைகளும் ஏற்பட்டு இருப்பதாலும், வெள்ளியன்று திடீர் உயர்வுகள் ஏற்பட்டதினாலும், இந்த வாரம் expiry வாரமாக இருப்பதினாலும், மேல் நோக்கிய பயணங்களில் பதட்டங்கள் சற்று கூடுதலாகவே இருக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், 5088 to 5095 என்ற புள்ளிகளை கடந்து முடிவடைந்தால் உயர்வுகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் சற்று பிரகாசமாகலாம்,

அதே போல் 5046 என்ற புள்ளியை கீழே கடக்கும் சூழ்நிலைகள் வருமாயின் தொடர் வீழ்ச்சிகளுக்கு சந்தை வாய்ப்பை வழங்கலாம், மேலும் தொடர்ந்து இன்றைய nifty யின் நிலைகளை ஒட்டி கீழ் இறங்கும் வாய்ப்புகள் உருவாகலாம், தொடர்ந்து உயர்வதில் இருக்கும் தடைகளை விட இறங்குவதில் இருக்கும் தடைகள் சற்று கம்மியாகவே இருப்பது போல் தெரிகிறது! இருந்தாலும், உலக சந்தைகளின் புண்ணியத்தில் உயர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, இந்த வாரம் முடியட்டும் nifty தனது அடுத்த கட்ட நகர்வுகளை தெளிவாக சொல்லிவிடும் என்றே எதிர்பார்க்கின்றேன், expiry தினங்களில் தினவர்தகர்களை எப்படி படுத்துவார்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியது இல்லை, ஆககூடிய மட்டும் சற்று எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யுங்கள்,,,,


Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5055 Target 5062, 5068, 5071 to 73, 5077 to 79, 5088, 5114, 5125, 5162, 5169, 5187

Nifty Spot below 5046 Target 5022 to 21, 4974, 4963, 4949 to 47, 4930, 4922 to 18, 4890, 4871, 4864, 4850 to 48, 4826, 4800

கவனிக்க வேண்டிய பங்குகள்

Acc

Buy above 770 Targets 776, 778 to 779, 784, 799 to 801, 810, s/l 763

Sell below 763 Targets 758, 755, 751, 746, 743, 737, 731, 725, s/l 770

Friday

தேசிய பங்குச்சந்தை 20 - 11 - 09

உலகசந்தைகள்

உலக சந்தைகளில் அதே பதட்டம் தென்படுகிறது, இந்த பதட்டம் சற்று தொடரும் சூழ்நிலைகளும் இனி வரும் தினங்களில் ஏற்படலாம், அதே நேரம் மேலும் கீழுமான நகர்வுகளுக்கும் வாய்ப்புகள் இருப்பதினாலும், நமது சந்தை இறங்கும் வாய்ப்புகளை பெற்று இருப்பதினாலும், support புள்ளிகள் வெகு அருகருகே இருப்பதினாலும், இன்றைய சந்தை சற்று volatile என்ற வழியினை பின்பற்றும் வாய்ப்புகள் தெரிகிறது, தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இன்று 4947 to 4945 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக செயல்படலாம், மேலும் மேடு பள்ளமான ஆட்டங்களும் அதிகம் இருக்கலாம் ,,,

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4990 என்ற புள்ளியை இழந்தால், தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவானாலும், 4945 என்ற புள்ளி முக்கியமான support புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளியை கீழே கடந்தால் அடுத்து நல்ல support என 4870 to 4869 என்ற புள்ளிகளை சொல்லலாம், அடுத்து வருசயாக 4800, 4740 என்ற புள்ளிகளையும் support ஆக சொல்லலாம்,

அதே போல் இன்று 4987 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் ஏற்படும் வாய்புகள் உருவாகும் , அதன் படி 5016, 5040 என்று மேலே உயரும் வாய்ப்புகளும், 5085 என்ற புள்ளியை மேலே கடக்கும் போது அடுத்து நல்ல உயர்வும் ஏற்படலாம், மொத்தத்தில் சந்தை இறக்கத்தில் இருப்பது உறுதியாக இருந்தாலும், support புள்ளிகள் அருகருகே இருப்பதினால் volatile என்ற அடிப்படையில் இன்றய நகர்வுகள் இருக்கலாம்,

தின வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் என்று கூட சொல்லலாம், இறக்குவது போல் இறக்கி உயர்த்தும் வாய்ப்புகளும் இருப்பதால்! கவனமுடன் செயல்படுங்கள், பொதுவில் nifty spot க்கு 4820 to 4750 என்ற புள்ளிகள் தற்பொழுது கீழ் நோக்கிய இலக்காக உறுதி செய்யப்பட்டு இருப்பது உண்மையே....

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4987 Target 5016, 5053, 5062, 5084, 5198

Nifty Spot below 4990 Target 4967, to 4961, 4957 to 955,

4939, 4924, 4914, 4893, 4885, 4869, 4857, 4837, 4815

Thursday

தேசிய பங்கு சந்தை 19 - 11 - 09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு வகையான பதட்டம், இவ்வாறான சூழ்நிலையில் நமது சந்தைகள் மேலும் கீழும் ஆடி Flat என்ற நிலையில் இருப்பது மேலும் பதட்டத்தை தரும், ஆகவே 5090 க்கு மேல் முடிவடைந்தால் நமது நிலைகளை தொடரலாம் அப்படி இல்லாமல் 5040, 5003 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் நமது நிலைகளை விற்று விடுவது நல்லது ….

Nifty Spot

Nifty ஐ பொறுத்து வரை இன்று 5086 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், அதே நேரம் உலக சந்தைகளின் இன்றய போக்குகள் , மற்றும் நமது சந்தையின் வாங்கும் திறன், இவற்றை வைத்து இரண்டு விதமாக இன்றைய உயர்வை நாம் ஓரளவு அனுமானிக்கலாம், அதாவது உலக சந்தைகளில் உயர்வுகள், நமது சந்தைகளில் volume உடன் கூடிய Buying, இப்படி இருந்தால் 5086 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படலாம், இலக்காக 5205 என்ற புள்ளியை கூட சொல்லலாம்,

அப்படி இல்லாமல் கடந்த இரண்டு தினங்களாக சந்தை நகரும் தனது போக்கை இன்றும் கடை பிடித்தால், சற்று சிரமம் தான், மேலும் 5049 என்ற புள்ளியை கீழே கடக்காமல் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் உண்டு , அடுத்த வழியான 5048 என்ற புள்ளியை கீழே கடந்தால் கீழ் நோக்கிய நகர்வுக்கான வாய்ப்புகளும், அதனை தொடர்ந்து 5035 என்ற புள்ளியையும், 5003 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் பலமான வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் தொடரலாம், இலக்காக 4750 என்ற புள்ளி இருக்கும் வாய்புகள் உண்டு, ஆகவே உயரங்களில் (5085 to 5095) உங்கள் நிலைகளில் பாதியை முடித்து கொள்ளுங்கள், மற்றதை பிறகு யோசிக்கலாம்

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5086, 5098, 5119, 5137, 5144, 5149, 5163 to 163, 5173, 5193, 5215

Nifty Spot below 5048 Target 5048, 5038, 5022, 5015, 5003, 4981, 4972, 4955, 4940, 4872

கவனிக்க வேண்டிய பங்குகள்

DLF

Buy above 383 Target 388.5, 395, 400, 403, 405, 407, 427, 433 ++, s/l 380

Sell below 380 Target 375 to 374.5, 371, 367, 363, 358, 355, 352, 343, 322, s/l 383

Wednesday

தேசிய பங்குச்சந்தை - 18 - 11 - 09

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய (இன்றைய) நிலையை பார்க்கும் போது, நமது சந்தைகள் ஒரு மாதிரியான Flat மற்றும் Volatile என்ற நிலைக்கு தள்ளப்படலாம், தொடர்ந்து 5050 to 5040 என்ற புள்ளிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த Support புள்ளியாக செயல்படலாம், இந்த புள்ளிகளை இழந்தால் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம்....

Nifty Spot

Nifty spot ஐ பொறுத்தவரை இன்று 5082 என்ற புள்ளியை மேலே கடந்தாலே உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும், 5098 க்கு மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் நேற்றைக்கு போலவே அருகருகே தடைகள் இருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது, மேலும் தொடர்ந்து உயர வேண்டும் என்றாலும் மெல்ல Volatile என்ற முறையில் உயரும் வாய்ப்புகள் தான் இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது,

அதே நேரம் வீழ்ச்சிகள் ஏற்பட வேண்டும் என்ற சூழ்நிலைகள் வர வேண்டுமாயின் 5077 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், அப்படி ஏற்பட்டாலும் அடுத்து மிக மிக்கியமான Support ஆக 5050 to 5040 என்ற இந்த இரண்டு புள்ளிகள் செயல்படலாம் , இந்த புள்ளிகளை கீழே கடந்து அதற்கும் கீழ் முடிவடயுமானால் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், இலக்காக 4800 to 4750 என்ற புள்ளிகள் அமையும் வாய்ப்புகள் உள்ளது,

ஆகவே நேற்று நாம் பார்த்த முக்கியமான புள்ளியான 4999 போன்றது இந்த புள்ளி, இதனால் 5040 என்ற புள்ளியை கீழே கடந்து ஓரிரு நாள் முடியும் சூழ்நிலை ஏற்படுமாயின், உங்கள் அனைத்து Long Position களையும் முடித்து கொள்வது நன்று, அப்படி இல்லாமல் தொடர் உயர்வுகள் ஏற்படுமாயின் முன்னர் சொன்னது போல 5250 என்ற புள்ளியும், அடுத்து 5350, 5400, 5450 என்ற புள்ளிகளும் இலக்காக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5093 to 5098 Target 5114, 5130 to 5140, 5155, 5167, 5177, 5187

Nifty Spot below 5077 Target 5041, 5015, 4982, 4960, 4955, 4917

கவனிக்க வேண்டிய பங்குகள் :

Hero Honda

Buy above 1696 Target 1712, 1720, 1734, 1748, 1755, 1770, s/l 1681

Sell below 1681 Target 1671, 1663, 1653, 1640, 1635, 1629, s/l 1696

அநேக நண்பர்கள் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும், கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் Technical Analysis வகுப்புகள் நடத்தும் படி கேட்டு இருப்பதால், இந்த மாத கடைசி வாரத்தில் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் வகுப்புகள் நடத்தும் திட்டம் உள்ளது , விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம், தொடர்ந்து மற்ற ஊர்களிலும் வகுப்புகள் எடுக்கும் திட்டமும் உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்....

Tuesday

தேசிய பங்கு சந்தை - 17 - 11 - 09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நாம் எதிர்பார்த்தது போல உயர்வை நோக்கி நகர்ந்து வருவதும், தொடர்ந்து 10400 TO 10500 என்ற புள்ளிகளில் சில தடைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், தற்பொழுது உள்ள நிலை பார்க்கும் போது, இன்று நமது சந்தைகளில் பதட்டங்கள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, முக்கியமாக 4999 என்ற புள்ளிகள் SUPPORT ஆக இருக்கலாம், உடைபட்டால் வீழ்ச்சிகள், உடைபடாமல் உயர்ந்தால் தொடர் உயர்வு …

NIFTY SPOT

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 5084 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, அதே நேரம் மேல் நோக்கிய நகர்வுகள் அவளவு நிதானத்துடன் இருக்கும் என்று சொல்ல வார்த்தை வரவில்லை, தொடர்ந்து அருகருகே தடைகள் இருப்பதையும் சற்று கவனிக்க வேண்டியுள்ளது, மேலும் 5020 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது,

அடுத்த முக்கியமான புள்ளியாக 4999 என்ற புள்ளியை சொல்லலாம், இந்த புள்ளியை கீழே கடந்து ஒரு நாள் முடிவடைந்தால் கூட அடுத்து ஒரு 200 TO 250 புள்ளிகள் கீழ் நோக்கி வந்து விடுமோ என்ற ஐயப்பாடும் உள்ளது, ஆகவே தற்பொழுது நீங்கள் வைத்து இருக்கும் LONG POSITION களுக்கு S/L ஆக இந்த 4999 என்ற புள்ளியை வைத்து கொள்ளுங்கள், மேலும் 4999 என்ற புள்ளியை கடந்து 4780 TO 4750 என்ற புள்ளியை நோக்கி வந்தால் 4750 முக்கியமான SUPPORT ஆக இருக்கும், மேலும் அங்கிருந்து திரும்பி உயரும் வாய்ப்புகள் ஏற்படலாம் ,

அதே நேரம் 4999 என்ற புள்ளி உடைபடாமல் தொடர்ந்து உயருமானால் 5220 TO 5230 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம், இந்த புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து மேலே தொடர்ந்து முடிவடைந்தால் அடுத்து 5350 TO 5450 என்ற புள்ளிகளை நோக்கி எளிதாக நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம், இந்த புள்ளிகளை பயன்படுத்தி உங்கள் வர்த்தக முடிவுகளை எடுத்து கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5084 TARGET 5104, 5119, 5125 TO 5130, 5134, 5147, 5153, 5170, 5179, 5197, 5219

NIFTY SPOT BELOW 5021 TARGET 4999, 4923, 4866, 4780, 4708

கவனிக்க வேண்டிய பங்குகள்

DLF

BUY FOR SHORT TERM GAINS AROUND 378 TO 372, AND 365, S/L 360 ON CLOSING BASIS TARGET 425, 460 TO 470

ABOVE 392 THERE WILL BE SOME INTRA DAY MOVE UP TO 403, 409, 413, 425, S/L 375

Monday

திருச்சியில் நடந்த TECHNICAL ANALYSIS பயிற்சி


திருச்சியில் நவம்பர் மாதம் 14 TO 15 ஆம் தேதிகளில், நாம் நடத்திய TECHNICAL ANALYSIS வகுப்புகளில் கலந்து கொண்ட நண்பர்கள், நமது வகுப்புகள் பற்றிய தங்களது கருத்துகளை தந்துள்ளார்கள், அதை உங்களின் பார்வைக்கும் வைக்க விருப்பப்பட்டு தந்துள்ளோம், மேலும் சில புகைப்படங்களும் தந்துள்ளோம்,,, நன்றி - சரவணபாலாஜி

திரு M. ஜெயக்குமார் , சேலம் - 9842718875

நான் இந்த வகுப்பில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், இது வரை CANDLE, DOJI, TOPS, BOTTOMS, மேலும் பல வடிவங்களை பற்றி அறிந்து இருந்தேனே தவிர, அவைகளை எப்பொழுது எந்த இடத்தில் பயபடுத்த வேண்டும், அவைகள் எங்கு பலம் நிறைந்தவை என்பதினையும், எப்படி பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பன போன்ற அநேக முக்கியமான விசயங்களை இந்த வகுப்பில் தான் கற்று கொண்டேன், கண்டிப்பாக இந்த FORMULA வை பயன் படுத்தி MARKET இல் வெற்றி பெறுவேன், மேலும் திரு சரவனபலாஜி அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்


திரு M. சதீஷ், செங்கோட்டை - 9865133930

தேடல்

தேடல் என்பது துவக்கம் - தேடியதில் !
விலங்கு மனிதனாக இருந்தவன், இன்று பங்குச்சந்தை வரை கண்டான் !
என் பார்வையில் கற்று கொள்வதற்காக தேடியது ,
பாலாஜியில் இருந்து ... புதிதாய் இன்று முதல்
நுழைந்தேன் , வெல்வேன் …
நன்றி

திரு P. ஆனந்த கேசவன் - சேலம் - 9865996677
SIR

இது போன்ற TECHNICAL வகுப்புகளில் கலந்து கொள்வது இது தான் முதல் முறை, இந்த இரண்டு தினங்களில் நாங்கள் தின வர்த்தகத்திற்கும் SHORT TERM TRADE க்கும் பயன்படக்கூடிய அநேக விசயங்களை கற்று கொண்டோம் , இந்த நவம்பர் 14, மற்றும் 15 ஆம் தேதிகள் எனது வாழ்கையின் மிகவும் முக்கியத்துவம் நிறைந்த நாட்களாகும், இந்த தேதிகளில் தான் எனது தாய் மொழியில் TECHNICAL வகுப்புகளை மிகவும் தெளிவாக கற்று கொண்டேன், எனது வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நிகழ்வை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்,
நன்றி

திரு M . குமார் - திருவனத்தபுரம் - (DON'T PUBLISH MY NUMBER)

IT IS A GOOD TRAINING PROGRAM IN TECHNICAL ANALYSIS FOR THE PEOPLE WHO WANT TO INVEST IN SHARE MARKET, VERY USEFUL AND INFORMATIVE, MR BALAJI WAS DOWN TO EARTH IN EXPLAINS TOOLS IN SIMPLEST WAY, I LOOK FORWARD TO HIS FURTHER SUPPORT& ASSISTANCE TILL I BECOME A CONFIDENT & SUCCESS FULL INVESTOR,

திரு G - பாலாஜி - திருச்சி - 93451-00459

I AM REALLY THANK GOD TO MEET MR SARAVANABAALAAJI IN MY LIFE, NOV 14, 15, THESE TWO DAYS ARE GREAT DAY IN MY LIFE, I AM FULLY SATISFIED WITH YOUR CLASS, AND THANKING YOU TO SHARE THE SECRETE OF THE MARKET
THANK U

திரு செல்வகுமார் , திருச்சி - 9443303777

இதுவரை கடினமாக இருந்த சந்தையின் தொழில்நுட்ப்ப ஆய்வுகள் பற்றிய முழுமையான விவரங்களை எளிமையாக, தெளிவாக, தெரிந்து கொள்ள முடிந்தது, கணினி பட விளக்கம், தேவையான இடத்தில் வரைபடம் மூலம் விளக்கிய விதம் அருமை, சந்தை தொழில் நுட்பத்தை தெளிவாக கற்க இந்த வகையான வகுப்பு பெரும் உதவியாக இருக்கும்,
திரு சரவணா பாலாஜி அவர்கள் எங்களுக்கு புதிய பாதையை தெளிவு படுத்தி உள்ளார், நன்றி

திரு முகமது அப்பாஸ் - திருச்சி - 9443101490

SIR

பங்கு சந்தை சம்பந்தமாக முதல் முதல் உங்கள் வகுப்புக்கே வந்துள்ளேன், எனக்கு தெரியாத பல விசயங்களை, புது புது விசயங்களை, உங்கள் வகுப்பில் கற்று உள்ளேன், உங்கள் இந்த TECHNICAL வகுப்பு கண்டிப்பாக எனது பங்கு சந்தை வியாபாரத்திற்கு அஸ்திவாரமாக இருக்கும், இதை விட எளிமையாக யாரும் எனக்கு இந்த விசயங்களை விளக்கி இருக்க முடியாது,
நன்றி

திரு. சிக்கந்தர் காசிம் - சென்னை - 9884549477

I HAPPY TO INTRODUCE MY SELF AS SIKKANDAR KAASIM, AND I AM EVEN MORE HAPPY TO SAY I BELONG TO 1ST BATCH TECHNICAL ANALYSIS CLASS CONDUCTED BY MR SARAVANABALAAJI IN TRICHY,

I TRAVELED ALL THE WAY FROM CHENNAI TO ATTEND THE CLASS, TOOK ROOM ALONG AND TOOK SOME PAINS, BUT IN THE END OF THE DAY I AM HAPPY, THAT I KNOW THE TECHNICAL SIDE OF STOCK MARKET, THE WAY MR SARAVANABAALAAJI EXPLAINED WITH THE CORRECT EXAMPLES MAKE THE TOPIC FIX IN MY MIND,

I CAN EVEN SAY NO ONE ELSE CAN EXPLAIN BETTER THAN HIM, I LEARNT HOW TO SEE THE MARKET IN A DIFFERENT VIEW, THANKS TO MR BALAJI, HE TAUGHT ME HOW TO UNDERSTAND THE MARKET,

MARKET ALWAYS GIVING SIGN BEFORE A BULL OR A BEAR WHICH MAKES ME LIKE THE MARKET, SO MANY DAY I WATCH THE MARKET, AND I GOT HEAD ACHE, BUT NOW I LEARNT TO LIKE AND HANDLE THE MARKET
THANK U

திரு V. சங்கர், திருவனந்தபுரம் - 09037091064

EXTREMELY HAPPY TO GIVE MY THANKS TO MR SARAVANABALAJI FOR THE TECHNICAL CLASS CONDUCTED BY HIM AT TRICHY, MY EXPERIENCE WITH HIS CLASS WAS OPENED MY VIEWS AND HELPED ME TO CLEAR ALL MY DOUBTS ABOUT THE APPLICATION OF TECHNICAL ANALYSIS,

EARLIER I HAD ATTENDED SEVERAL OTHER T. CLASSES, BUT WHERE THEY FAILED TO HELP ME TO MAKE TRADE DECISION WITH T. A, WHERE AS MR SARAVANABALAJI HAD TAKEN THE PAIN TO EXPLAIN EACH AND EVERY POINT OF APPLICATION OF T. A, AND THE METHOD HE WAS TOOK TO CONDUCT THE CLASS WAS RALLY AMEZING AND RIGHT,

ALSO HE HAD COVERED DETAILS OTHER THAN T.A, SUCH AS FUNDAMENTAL RULES, AND MARKET DYNAMICS TO UNDERSTAND THE COMPLEX THINGS HAPPENING IN THE MARKET, THANK U VERY MUCH MR SARAVANABALAJI


உங்கள் பார்வைக்கு சில புகைப்படங்கள் :-






















தேசியபங்கு சந்தை - 16 - 11 - 09

இன்று NIFTY இல் கவனிக்க வேண்டிய புள்ளிகளாக 5024, 5040 என்ற புள்ளிகளை எடுத்துக்கொள்ளலாம், இந்த புள்ளிகளை கடந்து மேலே செல்லும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் அடுத்த தடையாக 5112, 5135, 5182, 5196 என்ற புள்ளிகள் செயல்படலாம் , அதே நேரம் 5016, 5022 என்ற புள்ளியை மேலே கடக்காமல் திணறும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின் தொடர் வீழ்ச்சிகள் சாத்தியமாகலாம்,

மேலும் வரும் வீழ்ச்சிக்கு! அடுத்த நேரிடையான support ஆக 4958 to 4945 என்ற புள்ளிகள் தான் இருக்குமோ என்ற ஐயப்பாடும் எனக்கு ஏற்படுகிறது, ஆகவே 5016 என்ற புள்ளியில் Nifty spot இன் நகர்வுகளை வைத்து உங்கள் வர்த்தக முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், அதே போல் 5040 க்கு மேல் தடை இல்லா உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்....

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5024 Target 5035 to 5040, 5112, 5136, 5182, 5196

Nifty spot if not cross 5016 and 5022 it may come down so

Nifty spot below 5016 Target 4958, 4947 to 45, 4894, 4759, 4751, 4687

Technical வகுப்புகள் முடிந்து வருவதற்கு தாமதமானதால் விரிவாக எழுதிட முடியவில்லை!

திருச்சியில் நடைபெற்ற நமது Technical Analysis பயிற்ச்சி வகுப்புகள் சிறப்பான முறையில், கலந்தது கொண்ட அனைவருக்கும் முழு திருப்த்தியுடன் முடிவடைந்தது, மேலும் வகுப்புகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், நகர் படங்களையும் (video) இன்று மாலை அல்லது நாளை பதிவேற்றி உங்களுக்கும் அறிய தருகிறேன், மேலும் வகுப்புகளில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளையும் தருகிறேன்,

Friday

தேசிய பங்குச்சந்தை -13-11-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டங்கள் தெரிகிறது, இந்த பதட்டம் நமது சந்தைகளுக்கும் ஏற்படலாம், ஒரு வேலை இன்று நமது nifty 4967 to 4923 என்ற புள்ளிகளுக்குள் நகர்ந்தால், சற்று போரான சந்தையாக மாறலாம், அப்படி இல்லாமல் ஏதாவது ஒரு புள்ளிகள் உடைப்படுமாயின், அந்த திசையின் பயணம் சற்று அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், முக்கியமாக உங்கள் long position களை சற்று கவனமாக பார்த்து கொள்ளுங்கள்

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4967 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, தொடார்ந்து 5002 to 5020 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் தடைகள் வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம், இந்த புள்ளியை கடந்தால் உயர்வுகள் நல்ல முறையில் அமையும் வாய்ப்பு ஏற்படலாம், இதேபோல் 4923 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4909 to 4900 என்ற புள்ளிகளில் support ஏற்படலாம், இந்த புள்ளிகளை நல்ல முறையில் கடந்தால் அடுத்து வீழ்ச்சிகள் நல்ல முறையில் ஏற்படலாம்,

பொதுவில் இன்று 4967 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வதற்கான வாய்ப்புகளும், 4923 என்ற புள்ளியை கீழே கடந்தால் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம், அப்படி இல்லாமல் இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் சந்தை மாட்டிக்கொண்டால், கேட்கவே வேண்டாம் சந்தை நம்மை படுத்தி எடுத்து விடும், கீழ் கண்ட புள்ளிகள் nifty spot க்கு நல்ல support ஆக செயல்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்- 4903 to 4900, 4833, 4777, 4720,

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4967 Target 5020, 5067, 5116, 5193 to 197, 5304

Nifty Spot below 4923 Target 4909 to 4904, 4886, 4842, 4782, 4777, 4763 to 760

கவனிக்க வேண்டிய பங்குகள்

AXISI BANK

Buy above 979.2 Target 985 to 987, 997, 999, 1004 to 1006, 1008 to 1010, 1020, 1035, s/l 969

Sell below 969 Target 960 to 959, 940, 936, 901, s/l 979.2

Thursday

தேசிய பங்கு சந்தை - 12-11-09

உலக சந்தைகள்

உலக சந்தைகள் முன்பு உள்ள அதே நிலைகளை தொடர்ந்து வருகிறது, இருந்தாலும் ஒரு வித மந்தாமான போக்குகளும், பதடங்களும் தெரிகிறது, Singapore nifty யிலும் இதே நிலை தான் தொடர்கிறது, ஆகவே nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து உங்கள் வர்த்தக முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

Nifty Spot பொதுவாக

கீழே உள்ள படத்தில் Nifty யில் ஏற்பட்டிருக்கும் Reversal Head & Shoulder அமைப்பை பாருங்கள், இந்த அமைப்பை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது ஏற்பட்டு மீண்டு இருக்கும் வீழ்ச்சிகள் அமைந்துள்ளதையும் பாருங்கள், ஆகவே தற்பொழுதைய சூழ்நியாலையில் தொடர்ந்து முன்னேறி 5550 என்ற புள்ளிகளை கடந்து முடிவடயுமானால், nifty இன அடுத்த இலக்கு 6500 to 6700 என்ற வகையில் இருக்கலாம், அதே நேரம் 5120 என்ற புள்ளியில் சில தடைகளையும், இதனை கடந்தால் அடுத்து 5350 to 5400 என்ற புள்ளிகளில் சில தடைகளையும் பெரும் வாய்ப்புகளும் வரை படங்களில் தெரிகிறது,

ஆகவே மேற்கண்ட புள்ளிகளில் உள்ள தடைகளை எல்லாம் என்று Nifty உடைத்து தொடர்ந்து 5550 என்ற புள்ளியை கடந்து நிற்கின்றதோ, அன்றிலிருந்து உயர்வுகள் சக்தியுடனும், நேர்த்தியுடனும் நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஆகவே இந்த விஷயத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு இறக்கங்களிலும் நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம், அடுத்து இந்த ஒட்டு மொத்த அமைப்பிற்கும் s/l ஆக 3900 என்ற புள்ளியை கீழே கடந்து nifty குறைந்தது ஒரு வாரம் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம் , அதற்க்கு முன் 4500 to 4450 என்ற புள்ளிகளில் சக்தி வாய்ந்த Support இருப்பதும் உண்மையே, சரி படத்தை பாருங்கள்

Nifty Spot chart


Nifty Spot Today

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5009 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர்ந்து 5018, 5025, 5051 என்று மெல்ல நகரும் வாய்ப்புகள் உருவாக்கலாம், மேலும் 4991 என்ற புள்ளியை கீழே கடந்தால் இறக்கம் ஏற்படும் வாய்ப்புகளும், தொடர்ந்து 4975, 4944, 4913, என்ற புள்ளிகள் முக்கியமான support களாகவும் செயல்படலாம்,

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5009 Target 5018, 5025, 5051, 5060, 5096, 5112, 5130, 5145, 5176, 5238

Nifty Spot below 4991 Target 4975, 4957, 4953, 4944, 4928, 4913, 4874, 4842, 4838, 4829, 4808, 4756,

கவனிக்க வேண்டிய பங்குகள்

Ranbaxy

Buy above 419.5 Target 425, 443, 465, s/l 403 Positional Call, if chance buy near at s/l too

Wednesday

தேசிய பங்குச்சந்தை - 11-11-09

உலக சந்தைகள்

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அமெரிக்க சந்தைகள், ஆசிய சந்தைகள், Singapore nifty ஆகியவற்றில் உயர்வுகள் சற்று தெரிகிறது, இதன் பொருட்டு நமது nifty க்கு 4930 to 4951 என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், இதனை கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம்,, ,

Nifty Spot இன்று

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4883 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரலாம், மேலும் தொடர்ந்து நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இதே போல் 4874 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவானாலும், வெகு அருகருகே support இருப்பதினால், சற்று மந்தமான flat போன்ற நகர்வுகளும், அதனுடன் volatile என்ற நிலைமையும் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, அப்படி ஏற்படுமானால் வர்த்தகம் செய்வதற்கு பேசாமல் இருப்பது நிம்மதியை தரலாம்,

பொதுவாக நாம் முன்னர் பேசிக்கொண்டது போல 4947 to 4951 என்ற புள்ளிகளை கடந்து முடிவடைந்தால் மட்டுமே தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், அப்படி சென்றால் முந்தய high புள்ளியான 5120 என்ற புள்ளியில் தடைகளை சந்திக்கலாம், அதற்க்கு அடுத்து 5350 to 5400 என்ற இலக்குகள் சாத்தியமாகலாம், அப்படி இல்லை எனில் 4850, 4789, 4749, 4690 என்று கீழே நகர்வதற்கு வாய்ப்புகள் தெரிகிறது,

பொதுவில் 4550 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 4450 என்ற புள்ளியில் நல்ல support எடுக்கலாம், இந்த 4450 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் மட்டுமே தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருப்பது போல் வரை படங்களில் தெரிகிறது, பொதுவில் உயர்வுகளில் சற்று எச்சரிக்கையாக இருந்து லாபங்களை உறுதி செய்துகொண்டே இருப்பது நல்லதாக இருக்கும் என்று தோன்றுகிறது,,,

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4883 Target 4930, 4951, 4969, 4974, 4978, 5010, 5023

Nifty Spot below 4874 Target 4862, 4837, 4827, 4821, 4803, 4777, 4763, 4747, 4721,

கவனிக்க வேண்டிய பங்குகள்

BPCL

Buy above 533 Targets 539 to 540, 550, 564 to 565, s/l 532

Sell below 532 Targets 522, 517 to 515, 510, s/l 533

Tuesday

தேசிய பங்குச்சந்தை - 10-11-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை Dow Jones க்கு 10400 என்ற புள்ளிகள் அடுத்த இலக்காக இருக்கலாம், தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகளின் நிலையை வைத்து பார்க்கும் போது, நமது சந்தைகளுக்கு 4959 to 4961 என்ற புள்ளிகள் சற்று தடையை தரலாம், இந்த புள்ளிகளுக்கு மேல் தொடர் உயர்வுகளும், இந்த புள்ளிகளை கடக்க முடிய வில்லை என்றால் மேலும் கீழுமான ஆட்டங்களும் இருக்கலாம்,,,

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4910 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் அடுத்த முக்கியமான தடையாக 4959 to 4961 என்ற புள்ளிகள் செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, இந்த புள்ளிகளையும் தொடர்ந்து கடந்தால் உயர்வுகள் Nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும், அதே போல் Nifty spot 4924 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து கீழே இறங்கும் வாய்ப்புகள் உருவாகலாம்,

பொதுவில் 4950 to 4961 என்ற புள்ளிகளை கடந்து தொடர்ந்து முடிவடைந்தால் உயர்வுகள் முந்தய High புள்ளிகளை நோக்கி அமையும் வாய்ப்புகளும், இந்த High புள்ளிகளை கடந்தால் அடுத்து 5350 to 5400 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், அதே போல் இந்த புள்ளிகளுக்கு (4950 to 4961) மேல் தொடர்ந்து 2 நாட்கள் சக்தியுடன் முடிவடையாமல் இறங்க முற்ப்பட்டால், 4818, 4760, 4722, 4680, என்ற புள்ளிகளை நோக்கி வரும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4910 Target 4926, 4959 to 4961, 4980, 4989, 5009, 5014, 5032, 5039, 5048

Nifty Spot below 4924 Target 4881, 4867, 4855, 4832, 4823 to 4820, 4801, 4791 to 4789, 4774,
4749, 4713, 4707 to 4700, 4636, 4628 to 4622, 4596

கவனிக்க வேண்டிய பங்குகள்

Grasim Industries

Buy above 2254 Target 2264 to 66, 2304, 2310, 2328, 2350, 2385 to 90, s/l 2220

Sell below 2220 Target 2188, 2179, 2170, 2155, s/l 2254

Monday

தேசிய பங்குச்சந்தை 09-11-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை Dow Jones நாம் எதிர்பார்த்தது போல 9850 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்ததால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, அடுத்த தடையாக 10120 என்ற புள்ளிகள் இருக்கலாம், இந்த புள்ளிகளில் அதன் நகர்வுகளை வைத்து அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கும் படி இருக்கும், தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க future market, ஆசிய சந்தைகள் , Singapore nifty இவைகளின் நிலைமையை பார்க்கும் போது, உயர்வுகளுடன் கூடிய volatile என்ற நிலைமை நமது சந்தைகளுக்கு ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம்

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4835 மற்றும் 4841 என்ற புள்ளிகளை கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் உருவாகலாம், தொடர்ந்து 4867, 4880, 4905, 4940 என்ற புள்ளிகளில் சில தடைகளை பெறுவதற்குமான வாய்ப்புகளும் தெரிகிறது, இந்த எல்லா புள்ளிகளையும் சக்தியுடன் கடந்தால், உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் உருவாகலாம்,

இதே போல் இன்று Nifty Spot தொடர்ந்து இறங்கும் வாய்ப்புகள் 4790 க்கு கீழ் இருந்தாலும், சக்தியுடன் கூடிய இறக்கம் 4754 என்ற புள்ளியை கீழே கடந்தால் உருவாகும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4729 to 4715 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களை, அடுத்த முக்கியமான support பகுதிகளாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நல்ல திடம் உடன் இருப்பது போல் தெரிகிறது, மேலும் இந்த புள்ளிகளையும் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் சொல்லிக்கொளும் படி உருவாகலாம், இலக்காக 4537 என்ற புள்ளியாக கூட இருக்கலாம்,

மொத்தத்தில் கவனிக்க வேண்டிய புள்ளிகள் என்ற வரிசையில் 4880 என்ற புள்ளி தொடர்ந்து உயருவதற்கும், 4754, 4729 to 4715 என்ற புள்ளிகள் தொடர்ந்து கீழ் வருவதற்கும் உதவிகள் செய்யலாம், ஆகவே இந்த புள்ளிகளில் nifty இன நகர்வுகளை வைத்து உங்கள் வர்தகத்தை தீர்மானித்து கொள்ளுங்கள்,,,

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4841 Target 4874 to 4877, 4983 to 4986, 5003

Nifty Spot below 4790 Target 4778, 4769, 4754, 4729, 4715, 4691,
4680, 4666, 4649, 4636, 4582, 4537

கவனிக்க வேண்டிய பங்குகள்

Axis Bank

Buy above 938 Targets 947, 950, 956, 960, 965, 975, 986, s/l 935

Sell below 935 Targets 927, 923, 919, 915, 905, 895, s/l 938