Thursday


Expiry தினங்களில் வர்த்தகத்தை தவிர்க்கலாம் என்று கடந்த மாதத்தில் இருந்து முடிவு எடுக்கப்பட்டு, அதை கடை பிடித்தும் வருகிறேன், ஆகவே இன்று வேறொரு சுவாரசியமான விஷயம் உங்களுக்காக, கண்டிப்பாக பாருங்கள் ,,,

THE GREAT INDIAN

முதலில் TED என்ற அமைப்பை பற்றி சொல்லி விடுகிறேன், புதுமையான கருத்துகள், கண்டுபிடிப்புகள், அனுபவங்கள் யாருக்கேனும் தோன்றினால், அதை உங்களால் நிரூபிக்க முடியுமானால், இந்த அமைப்பில் உங்கள் கருத்துகள், கண்டுபிடிப்புகள், அனுபவங்களை சொல்லலாம், இதன் மூலம் உங்கள் விஷயம் உலகிற்கு அழுத்தமாக சொல்லப்படும், சிறந்தவைகளுக்கு பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன,

சரி விசயத்திற்கு வருவோம், நமது இந்தியர் திரு பிரணாவ் மிஸ்ட்ரி என்பவர் சமீபத்தில் Computer சார்ந்த சில விசயங்களை கண்டுபிடித்து உள்ளார், அதற்க்கு அவர் வைத்த பெயர் Sixth Sense Technology, இவரின் கண்டுபிடிப்பின் படி இனி Computer பயன் படுத்துபவர்களுக்கு Monitor, Key Board, Mouse போன்ற எந்த சாதனங்களும் தேவைபடாது போல,

ரோட்டில் கிடக்கும் காகிதங்களை கூட Computer Monitor ஆக பயன்படுத்தலாம் போல, கைகளிளாலே கேமரா இல்லாமல் படம் பிடிக்கிறார்! புத்தகங்களில் உள்ள படங்களை கைகளிளாலே அப்படியே கில்லி Computer க்குள் விசுகிறார்! மறு நொடி அங்கு தெரிகிறது (copy & paste), பேப்பர்களில் TV பார்க்கின்றார், இப்படி அனேக விசயங்களை செய்து கொண்டு இருக்கிறார்,

இவை எல்லாம் Magic இல்லை! உண்மையான அவரின் கண்டு பிடிப்பு, ஏது Bill Gates எல்லாம் காலின்னு நினைக்கும் போது! இந்த விஷயத்தை Open Source இல் வெளியிடப்போவதாக சொல்லி புல்லரிக்க வைக்கின்றார்! Really Great Indian, நீங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ,


Video :