Monday

Dow Jones ஒரு பார்வை – 02-11-09


அமெரிக்க சந்தைகள் தடுமாற்றக்த்துடன் இருக்கும் இந்த நேரத்தில், அதன் அடுத்த கட்ட நகர்வுகள் Technical ஆக எப்படி இருக்கலாம் என்பதினை வரை படங்களுடன் காணலாம், கீழே உள்ள Dow Jones இன் படத்தை பாருங்கள், இந்த படத்தில் சில அமைப்புகள் உடைபட்டு இருப்பதும், சில அமைப்புகள் இன்னும் உடைபடாமல் support கொடுத்து கொண்டு இருப்பதும் தெரியும், ஆகவே எந்த எந்த விஷயங்கள் சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கின்றது என்பதினை பார்ப்போம்,

கீழே கொடுத்துள்ள முதல் படத்தில் கீழ் கண்ட விஷயங்கள் அமைந்துள்ளன

Rising Wedge - Red Colour

Channel - Green Colour

Trend line - Blue Colour

Moving Ave - Black Colour

Dow 1st picture


Dow Jones 2nd picture (enlarge picture of squared area of 1st picture)




Rising Wedge:-

கடந்த 27-10-09 அன்று 9850 என்ற புள்ளியை உடைத்து கீழே கடந்து இருப்பதை பாருங்கள், இந்த அமைப்பின்படி Dow Jones கீழ் இறங்க வேண்டுமாயின், இதன் கீழ் நோக்கிய இலக்கு 8470 என்ற புள்ளி இருக்கலாம், (இவ்வாறு இறங்க இன்னும் சில விஷயங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்)…

Channel:-

செப்டம்பர் மாதத்தில் இருந்து Dow Jones, பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள channel என்ற அமைப்பில் நகர்ந்து வருவதை படத்தில் பாருங்கள், இந்த அமைப்பின் படி channel support ஆக 9689 என்ற புள்ளியில் support பெற்றுள்ளது, (கடந்த வெள்ளியன்று (30-10-09) இந்த புள்ளியில் support எடுத்து, அந்த புள்ளியில் முடிந்துள்ளது, இந்த அமைப்பின் படி 9680 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து முடிவடைந்தால், இதன் கீழ் நோக்கிய இலக்காக 9200 என்ற புள்ளி இருக்கும்…

Trend Line Support:-

நீல நிறத்தில் அமைந்துள்ள channel support line ஐ ஒட்டியே அமைந்து இருக்கும் இந்த Trend line support ஆனது, 9678 என்ற புள்ளியில் அமைந்து உள்ளது,

Moving Average supports:-

கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள இரண்டு Moving average கோடுகள் முறையே 50 நாள் DEMA ஆகவும் மற்றது 200 DEMA ஆகவும் செயல்படுகிறது, இந்த புள்ளிகள் முறையே 9678 இல் 50 DEMA support ம் 9200 to 9180 என்ற புள்ளிகள் 200 DEMA support ஆகவும் இருந்து வருகிறது, இந்த support புள்ளிகள் முக்கியமானது

Fibonacci Support :-

இதனை தொடர்ந்து Fibonacci support களாக 9642, 9346, 9255, 9109, 8863, என்ற புள்ளிகள் இருக்கும்

மேற்கண்டவைகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது :-

மேற்கண்ட விசயங்களில் இருந்து நாம் சில விசயங்களை உறுதி செய்து கொள்ளலாம், அதாவது 9670, மற்றும் 9640 என்ற புள்ளிகளை கீழே கடந்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் எதிர்மறையான போக்கில் Dow Jones முடிவடயுமானால், அதன் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 9345, 9250 to 9200 என்ற புள்ளிகள் அமையலாம், அதே போல் தொடர்ந்து 9100 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடயுமானால், அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 8860, 8470 என்ற புள்ளிகள் அமையலாம் மேலும் 8300 to 8275 என்ற புள்ளிகளுக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இவைகள் என் ஆய்வின் அடிப்படையில் ஏற்ப்பட்ட கருத்துகளே...