Tuesday

தேசிய பங்குச்சந்தை 24 - 11 - 09


இன்றைய பதிவு 300 என்ற எண்ணை பூர்த்தி செய்கிறது, இது வெறும் எண்களின் கடத்தலா, அல்லது சில நண்பர்களுக்காவாவது உதவியாக உள்ளதா என்பதினை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.....

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய நிலை சற்று பதட்டம் மிகுந்ததாக உள்ளது, இதனை ஒட்டி ஆசிய சந்தைகளிலும் இதே நிலைமை தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளிலும் இந்த பட்டத்திற்கு குறைவில்லாமல் நகர்வுகள் இருக்கும் என்றே என்ன தோன்றுகிறது, முக்கியமான தடையாக 5112, 5121, 5138 என்ற புள்ளிகள் செயல்படலாம் ….

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5106 க்கு மேல் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும், நல்ல உயர்வு 5138 என்ற புள்ளிக்கு மேல் தான் கிடைக்கலாம் என்ற சூழ்நிலைகள் தெரிகிறது, தொடர்ந்து nifty யின் இன்றைய நிலைகளை ஒட்டி மேல் நகரும் வாய்ப்புகளும் தென்படுகிறது, அதே போல் 5112 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றாலே! கீழ் வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம், தொடர்ந்து nifty இன் இன்றைய நிலைகளை ஒட்டி கீழே இறங்கவும் வாய்ப்புகள் தெரிகிறது,

அப்படியே கீழ் நோக்கி வந்தாலும் 5018 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் ஏற்படலாம், மேலும் இது expiry வாரமாக இருப்பதினால் எந்தளவிற்கு இது போன்ற நுட்பக்கூறுகள் தனது வேலையே சரியாக செய்யும்! என்பது அனுபவத்தினால் சிறு சந்தேகமும் ஏற்படுகிறது! ஆகவே பார்த்து வர்த்தகம் செய்யுங்கள், இருந்தாலும் நமது சந்தை தொடர்ந்து உயருவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது, expiry முடிந்த பின் உறுதியான போக்குகளை நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம் ,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5106 Target 5121, 5138, 5180, 5189, 5213, 5254, 5267

Nifty Spot below 5091 Target 5083, 5078, 5061, 5052 to 50, 5037, 5018, 4975, 4968, 4959, 4934, 4805

கவனிக்க வேண்டிய பங்குகள்

CAIRN INDIA

Buy above 288 Target 296, 300, 303, 317, s/l 275 positional call, add on decline around 280 to 276 also