Wednesday

NIFTY 30-09-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

எனது BROADBAND CONNECTION கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையினால் சுத்தமாக WORK ஆகாததினால் உலக சந்தைகளை என்னால் கவனிக்க முடியவில்லை, இப்பொழுது BROWSING CENTER இல் இருந்து தான் எழுதுகிறேன், ஆகவே உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்து நமது சந்தையின் நகர்வுகளை கவனித்து கொள்ளுங்கள்

NIFTY SPOT பொதுவாக

NIFTY SPOT 5055 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் நல்ல உயர்வையும் , 4890 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் 4750 என்று தொடர்ந்து வீழ்ச்சியையும் சந்திக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் தென்பட்டால் 4800 OR 4900 என்ற PUT OPTION களை வாங்கி உங்கள் LONG POSITION களை HEDGE செய்து கொள்ளுங்கள்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY SPOT ஐ பொறுத்தவரை 5013 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5055 என்ற புள்ளிக்கு மேல் தான் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அதே போல் 4993 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்புகளும் தெரிகிறது, மேலும் 4928 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5013 TARGET 5027, 5037, 5040, 5055, 5123 TO 126, 5142

NIFTY SPOT BELOW 5006 TARGET 4993, 4973, 4969, 4957, 4943, 4938, 4895,
4875, 4863, 4846, 4835

கவனிக்க வேண்டிய பங்குகள்

RELIANCE INDUSTRIES

இந்த பங்கில் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்கனவே உருவாக்கி இருப்பதும், சந்தையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தையும் முறியடுக்கும் விதமாக தொடர்ந்து முன்னேற முயற்சித்து வருவதும் கவனிக்க வேண்டிய விசயங்களாக கொண்டு இந்த பங்கை 2188 என்ற புள்ளியை மேலே கடந்தால் வாங்கலாம், இதன் இலக்காக 2320 TO 2330 என்ற புள்ளிகளை கொள்ளலாம், இதன் தின வர்த்தக நகர்வுகள் கீழ் கண்ட நிலையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

RIL ABOVE 2188 TARGET 2224, 2228, 2233, 2258, 2320, S/L 2156

SELL BELOW 2156 TARGET 2145 TO 144, 2141 TO 2138, 2086, 2063, S/L 2188

OPEN ஆகும் போது இந்த புள்ளிகளை கடந்தால் கணக்கில் கொள்ள வேண்டாம், அல்லது நல்ல சக்தியுடன் தொடர்ந்து முன்னேறினால் சரிதான் என்று வாங்கிவிடுங்கள் இதன் S/L சற்று கீழே இருப்பதையும் கவனித்து செயல்படுங்கள்

RIL CHART



ONGC

இந்த பங்கில் 1205 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது தொடர்ந்து இதன் இலக்காக 1240 என்ற புள்ளி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதன் S/L ஆக 1198 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள் தின வர்த்தக நகர்வுகள் இப்படி இருக்கலாம்

ONGC BUY ABOVE 1205 TARGET 1210, 1217, 1225, 1230, 1240, S/L 1198

SELL BELOW 1198 TARGET 1188, 1179, 1167, 1164 TO 1158, S/L 1203 OR 1205

ONGC CHART


Friday

NIFTY ON 25-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்துடன் உள்ளது, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY தொடக்கம் முதல் 60 புள்ளிகளை இழந்து தடுமாறி வருகிறது, இதன் எதிரொலியாக நமது சந்தைகளிலும் இந்த பதட்டம் இருக்கும் இருந்தாலும் VOLATILE என்ற நிலையும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, DOW 9650 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் இருக்கும்

NIFTY SPOT பொதுவாக

NIFTY SPOT ஐ பொறுத்த வரை 4887 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்ப்படும் வாய்ப்புகள் பிரகாசமாகும், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் GOLD 1040 $ ஐ மேலே கடந்தால் உயரும் வாய்ப்புகளும் CRUDE 66.5$ என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்ப்படும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் DOW நாம் எதிர்பார்த்தது போல 9900 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வந்து இருப்பதும் சற்று உறுத்தலாக உள்ளது, இதன் வெளிப்பாடாக நமது சந்தையில் பதட்டம் இருப்பதை நன்றாக உணரமுடிகிறது, ஆகவே சந்தையில் LONG POSITIONகளில் இருப்பவர்கள் உங்கள் POSITIONகளை HEDGING செய்து கொள்வது சிறந்தது,

ஆகவே NIFTY FUT இல் SHORT SELL செய்து HEDGE செய்து கொள்ளுங்கள் அல்லது 4800, OR 4900 என்ற PUT OPTION ஐ வாங்கி HEDGE செய்து கொள்வதானாலும் சரி தான், CRUDE ஏற்கனவே கீழே இறங்கியுள்ளதும், GOLD 1025$ என்ற புள்ளியில் தடைகளை பெற்றுள்ளதும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கி வந்தாலும் பெரிய அளவில் கீழே வர இன்னும் சில புள்ளிகளை இழக்க வேண்டி இருப்பதாலும் நமது சந்தைகளில் சற்று மேலும் கீழுமான நகர்வுகள் இன்னும் சில நாட்களுக்கு இருக்கலாம், ஆகவே 5050 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும், 4957 என்ற புள்ளியை கீழே கடந்தால் கீழே இறங்கும் வாய்ப்புகளும் உள்ளது

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY SPOT ஐ பொறுத்தவரை 5000 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5020, 5033, 5050 என்ற புள்ளிகள் தடைகளை தரும் வாய்ப்புகளும் உள்ளது ஆகவே இந்த 5050 என்ற புள்ளிக்கு மேல் தான் நல்ல உயர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம், அதே போல் 4957 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் அதிகமாகும் மேலும் 4920 TO 4987 என்ற புள்ளிகள் நேற்று நாம் எதிர்பார்த்தது போல் SUPPORT கொடுக்க முயலும். இந்த முயற்ச்சியில் தோல்வி அடைந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5033 TARGET 5113 TO 5115, 5151, 5191

NIFTY SPOT BELOW 4957 TARGET 4942, 4921, 4918, 4906,
4892 TO 4891, 4887, 4845, 4828 TO 4826, 4817, 4811, 4798,
4787, 4780, 4772, 4766

கவனிக்க வேண்டிய பங்குகள்

HCL TECH

BUY ABOVE 349 TARGET 352, 356, 364, 369, 377, S/L 346

SELL BELOW 346 TARGET 339.5, 327.5, 322, 320, S/L 349

Thursday

NIFTY 24-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகளை பொறுத்தவரை நாம் எதிர்பார்த்தது போல DOW 9900 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வந்துள்ளது, தொடர்ந்து இந்த 9900 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்தால் ஒரு வீழ்ச்சி இருக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது, அதே நேரம் 9900 என்ற புள்ளியை கடந்து மேலே முடிவடயுமானால் அடுத்து 10200 என்ற புள்ளியை நோக்கி நகரும்,

தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு இருக்கிறார்கள், இருந்தாலும் இறக்கங்கள் சாத்தியமாகும் வாய்ப்புகள் இருப்பது போல தான் தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY எந்த பக்கமும் நகரலாம் என்ற சூழ்நிலையில் இருந்தாலும் நமது சந்தை இன்று நல்ல பதட்டத்தை தரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பது உண்மையே, மொத்தத்தில் 4859 என்ற புள்ளி NIFTY யின் நகர்வை தீர்மானிக்கும் புள்ளியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை கீழே கடந்தால் SELL, தக்க வைத்துக்கொண்டால் BUY இரண்டையும் செய்தால் வேடிக்கை பார்ப்பது நல்லது

NIFTY SPOT பொதுவாக

NIFTY ஐ பொருத்த்தவரை இன்னும் TREND REVERSAL க்கான எந்த வித SIGNAL களையும் தரவில்லை என்பதே உண்மை, அந்த SIGNAL 4922 TO 4900 என்ற புள்ளிகளுக்கு கீழ் NIFTY முடிவடயுமானால் நமக்கு கிடைக்கும், அப்படி முடிவடயுமானால் அடுத்த இலக்காக 4822 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் இருக்கும், அதே நேரம் 4870 என்ற புள்ளியின் சுற்று வட்டாரத்தில் தற்பொழுது அமைந்து வரும் PRIMARY TREND LINE SUPPORT மற்றும் சில FIBONACCI SUPPORT ஆகியவைகள் அமைந்து இருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆகவே NIFTY கீழே இறங்க வேண்டுமாயின் சில முக்கியமான புள்ளிகளை கடக்க வேண்டும் அந்த மாதிரியான புள்ளிகளை இங்கு தருகிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

முதலில் 4922 TO 4900 என்ற புள்ளியை கடந்து முடிந்தால் அடுத்த இலக்கு 4870, 4822

இரண்டாவது 4822 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து மிகப்பெரிய SUPPORT ஆக 4770 என்ற புள்ளி இருக்கும், இந்த புள்ளி மிக முக்கியமான SUPPORT புள்ளியாகவே நான் கருதுகிறேன், இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்து 4530 TO 4500 என்ற புள்ளிகளை நோக்கி வரும், அதே போல் 5065 என்ற புள்ளியை மேலே கடந்து சென்றால் அடுத்து 5100, 5230 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே இந்த புள்ளிகளில் NIFTY யின் நகர்வுகளை கணித்து அடுத்த கட்ட முடிவுகளை எடுங்கள், மேற்கண்ட விஷயங்களின் விளக்கங்களை படத்தில் குடுத்துள்ளேன் பாருங்கள்

NIFTY SPOT CHART


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 5024 என்ற புள்ளியை கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 4959 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றாலே உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம் ஆகவே இந்த 4959 என்ற புள்ளியை கீழே கடக்கவில்லை என்றால் இந்த புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல கவனம் செலுத்தலாம், அதே போல் இந்த 4959 என்ற புள்ளிக்கு கீழ் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம், இலக்காக 4922 TO 4900 என்ற புள்ளிகள் இருக்கும் மேலும் தொடர்ந்து அருகருகே SUPPORT இருப்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5024 TARGET 5048, 5063, 5097, 5233

NIFTY SPOT BELOW 4969 TO 4959 TARGET 4922, 4909, 4904,
4900, 4874, 4870 TO 4868, 4860, 4839, 4814 TO 4810, 4786,
4775, 4773, 4751, 4742

Wednesday

NIFTY 23-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அதன் FUTURE சந்தைகள் இறக்கத்தில் இருப்பதால் ஆசிய சந்தைகளிலும் இறக்கம் தென்படுகிறது, எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரும் வாய்ப்புகள் உலக சந்தைகளுக்கு இருப்பதால் தொடர்ந்து கவனம் தேவை, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY இது வரை இருந்து வந்த OPEN / LOW ஒன்று என்ற நிலையில் இருந்து தற்பொழுது புதிய LOW புள்ளிகளை கண்டு மேலும் கீழும் ஆடி வருவது நமது சந்தையில் உள்ள பதட்டத்தை வெளிக்காட்டுவதாகவே எடுத்துக்கொள்ள்ளலாம், ஆகவே 4988, 5031 என்ற புள்ளிகள் முறையே SUPPORT, மற்றும் RESISTANCE புள்ளிகளாக செயல்படும் மேலும் எந்த புள்ளிகள் உடைபடுகிறதோ அதன் திசையில் நகர்வுகள் இருக்கும், இரண்டு புள்ளிகளும் உடை பட்டால் சந்தேகம் வேண்டாம் நல்ல VOLATILE கண்டிப்பாக இருக்கும்

NIFTY SPOT பொதுவாக

வரும் இரண்டு தினங்களும் சந்தையில் EXPIRY இன் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் உயர்வுகள் அல்லது திடீர் வீழ்ச்சிகள் இருக்கும், மேலும் எதற்கும் கட்டுபடாத சந்தையாக இருக்கும் வாய்ப்புகளும் இருப்பதால் சந்தையை சுத்தமாக தவிர்த்து இருந்தால் நிம்மதியாக இருக்கலாம், மொத்தத்தில் 4925 TO 4915 என்ற புள்ளிகளை கடந்து முடிவடைந்தால் சந்தையின் வீழ்ச்சியை உறுதி செய்யலாம், அதே போல் 5070 என்ற புள்ளிக்கு மேல் சந்தையின் உயர்வை உறுதி செய்யலாம்,

NIFTY SPOT இன்று

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5031 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5054, 5068 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக இருக்கும் ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் மேலே கடந்தால் தான் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், அதே போல் 4988 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து 4928 TO 4918 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் பெரிய வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5031 TARGET 5054, 5068, 5103, 5234

NIFTY SPOT BELOW 4993 TO 4988 TARGET 4963, 4947,

4925, 4881, 4874, 4809, 4780, 4775 TO 4770

கவனிக்க வேண்டிய பங்குகள்

MOSER BAER

நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு BREAK OUT என்ற நிலயை பெற்று உள்ளது மேலும் இதன் இலக்காக 113, 115 TO 118, 128 என்ற புள்ளிகள் இருக்கும், மேலும் சந்தை கீழே வந்தால் 95, 92 என்ற புள்ளிகள் வரைக்கும் கூட வாங்கலாம் இதன் S/L ஆக 89 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள்,

தின வர்த்தகர்கள்

102.5 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 106.2, 107.6, 110, 113, 115 TO 118, 128, S/L 101.5 102.5 என்ற புள்ளியை கடந்து மேலே சென்று தாக்கு பிடிக்க முடியாமல் கீழே 101.5 என்ற புள்ளியை உடைத்து சென்றால் அடுத்து நல்ல SUPPORT 92 என்ற புள்ளிக்கு அருகில் இருப்பதால் இந்த 101.5 என்ற புள்ளியை கீழே கடந்தால் SHORT SELL பண்ணலாம் இலக்கு 92

MOSER BAER


Tuesday

NIFTY ON 22-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் நேற்று கலந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது ஒரு சிறிய உயரத்தில் இருப்பதும், அருகிலேயே தடைகள் இருப்பதையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம், இதன் வெளிப்பாடாக இன்னும் 50 புள்ளிகள் மேலே கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் அப்படி இல்லாமல் தடுமாறினால் தொடர்ந்து கீழே வரும் வாய்ப்புகளும் உள்ளது, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயரத்தில் தான் உள்ளது, இருந்தாலும் அமெரிக்க சந்தைகளை போல் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை,

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை பெரிய நகர்வுகள் ஏதும் இருப்பதாக தெரிய வில்லை இந்த வாரம் EXPIRY வாரமாக இருப்பதாலும் இன்னும் 2 தினங்களே எஞ்சி இருப்பதாலும் சந்தை தொடர்ந்து உயர்ந்து இருப்பதாலும் மேடு பள்ளங்கள் அதிகமாகவோ அல்லது திடீர் திடீர் நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகளோ அல்லது FLAT என்ற நிலையிலோ இருக்கும் மொத்தத்தில் தின வர்த்தகர்கள் சந்தையின் போக்குகளை கணித்து வர்த்தகம் செய்யுங்கள் அல்லது தவிர்த்து விடுங்கள்

NIFTY இன்று

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்த வரை 5000 TO 5003 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் தொடர்ந்து 5062 என்ற புள்ளிகள் வரை உயரும் வாய்ப்புகளும் இந்த 5065 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும், அதே போல் NIFTY வீழ்ச்சியடைய 4977 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து தொடர்ந்து கீழே வரும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் 4930 என்ற புள்ளி நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5003 TARGET 5021 TO 5022, 5034 TO 5035, 5061 TO 5062, 5137 TO 5138, 5147, 5152, 5180 TO 5181, 5188 TO 5189, 5275

NIFTY SPOT BELOW 4977 TARGET 4947, 4932, 4840, 4795, 4768, 4743, 4737 TO 4735, 4722, 4702

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

இந்த பங்கில் தொடர்ந்து 900 புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, மேலும் இந்த வாரம் F&O EXPIRY வேறு இருப்பதால், மேலும் கீழுமான நகர்வுகள் இருந்தால் கீழ் கண்ட புள்ளிகள் வரும் போது வாங்கலாம் அதாவது 774, 750, 730, 710, S/L 707 CLOSING BASIS , மேலும் தின வர்த்தகர்கள் 805 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 808, 812, 821, 829 TO 831, 836, 845, 851, 860, 897, S/L 803, மேலும் 803 என்ற புள்ளிக்கு கீழ் SHORT SELL பண்ணலாம் இலக்காக 787, 785, 780 என்று வைத்துக்கொள்ளுங்கள் S/L 805

ABB CHART




DR REDDY

BUY AB 875 TR 883, 896, 902, 910, 925, S/L 874

SELL BL 874 TR 860, 856, 854, 848, 841

Saturday

TRACK RECORDS

கடந்த வாரம் 14-09-09 முதல் 18-09-09 வரைக்குமான தின வர்த்தக பரிந்துரைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது அதனை காண இங்கே அழுத்துங்கள்

Friday

NIFTY ON 18-09-09


உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் உயரங்களில் தடுமாறி வருவது ஆசிய சந்தைகளிலும் பதட்டங்களை உருவாக்கியுள்ளது, மேலும் கீழுமான ஆட்டம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, NIKKEI ஐ பொறுத்தவரை 10000 என்ற புள்ளியும் DOW JONES ஐ பொறுத்தவரை 9550, 9500 என்ற புள்ளிகளும் முக்கியமான SUPPORT புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை பெரிய நகர்வுகள் ஏதும் இல்லாமல் 10, TO 20 புள்ளிகள் இறக்கம் என்ற நிலையில் இருந்து வருகிறது,

அந்த வகையில் நமது NIFTY க்கு 4959, 4930, 4910 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக செயல்படும் மேலும் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும், அதே போல் 5000 TO 5025 என்ற புள்ளிகள் நல்ல தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது, மொத்தத்தில் பதட்டம் இன்னும் நீடிக்கின்றது எச்சரிக்கை தேவை

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4968 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் உருவாகும் மேலும் 5000 TO 5025 என்ற புள்ளிகளில் தடைகள் சற்று பலமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிகளை கடந்தால் உயவுகள் தொடரும், அதே போல் நிபிட்டி கீழ் இறங்க 4959 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருந்தாலும் அடுத்து 4915 TO 4900 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே இந்த நிலைகளை பொறுத்து வர்த்தகத்தை வழி நடத்திக்கொள்ளுங்கள், உயரங்களில் எப்பொழுதும் கவனமாக இருப்பது நன்று சந்தையில் இன்னும் பதட்டம் குறைய வில்லை என்பதை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்வதும் பாதுகாப்பாக இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4968 TARGET 4986, 4996 TO 5000, 5021, 5068, 5117, 5123 TO 5127

NIFTY SPOT BELOW 4959 TARGET 4930, 4915, 4849, 4780, 4751, 4722

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

BUY ABOVE 830 TARGET 839, 859, 865, S/L 827

SELL BELOW 827 TARGET 821, 818, 809, 790, 779, S/L 830

Thursday

NIFTY ON 17-09-09


உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வை சந்தித்து மேலும் தொடர்ந்து 9900 TO 9960 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி உள்ளது, அதே போல் ஆசிய சந்தைகள் NIKKEI 10500 என்ற புள்ளியை கடந்தால் 11000 என்ற புள்ளியை நோக்கியும், HANG SENG 23000 என்ற புள்ளியை நோக்கியும் நகரும் வாய்ப்புகளை பெற்றுள்ளது, இதனை ஒட்டியே உலக சந்தைகளின் போக்குகள் இருக்கும், மேற்கண்ட இலக்குகள் எல்லாம் சில தினங்களில் கூட அடைந்து விடலாம், அதற்க்கு பின் ?

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை உலக சந்தைகளின் உற்ச்சாகம் தென்படவில்லை என்றே தோன்றுகிறது வெறும் 30 புள்ளிகள் உயர்ந்து தற்பொழுது 12 புள்ளிகள் உயர் என்ற நிலையில் மேலும் கீழும் ஆடி வருகிறது, அந்த வகையில் நமது NIFTY க்கு 4996 என்ற புள்ளி முக்கிய தடைகளை தரலாம், இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 5023, 5105 என்று செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் ஒரு நிச்சிய மற்ற போக்கினை SINGAPORE NIFTY கடை பிடிப்பதனால் 4910 என்ற புள்ளிகள் வரை வந்து மீளுமோ என்ற சந்தேகமும் உள்ளது, அதே நேரம் இந்த 4910 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று அதிகமாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது

NIFTY SPOT பொதுவாக

இனி வரும் நாட்களில் NIFTY க்கு 5100 TO 5150 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் வாய்ந்த புள்ளிகளாக இருக்கும் மேலும் இந்த புள்ளிகளில் NIFTY யின் நகர்வுகளை வைத்து அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம், அதே போல் 4770 மற்றும் 4700 என்ற புள்ளிகள் NIFTY யின் வீழ்ச்சிகளை தீர்மானிக்கும் புள்ளிகளாக இருக்கும் இந்த புள்ளிகளை கடக்காத வரை காளைகளுக்கு கவலை இல்லை

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY 4965 என்ற புள்ளியை கடந்து சென்றால் உயர்வுகள் தொடரும், மேலும் 5024 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகும், NIFTY வீழ்ச்சியை சந்திக்க வேண்டுமாயின் 4941 என்ற புள்ளிக்கு கீழ் கடந்தால் போதுமானதாக இருந்தாலும் நல்ல வீழ்ச்சியை சந்திக்க 4910 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடக்க வேண்டும் அப்படி ஏற்படுமாயின் இலக்காக 4867, 4800 என்று கீழே வரும் வாய்ப்புகள் உருவாகும்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4965 TARGET 4983.7, 4996, 5023.5, 5105 TO 5107.5, 5140

NIFTY SPOT BELOW 4941.5 TARGETS 4927, 4921, 4910, 4867, 4809, 4792.5, 4771

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY JSW STEEL ABOVE 815 TARGETS 823.5, 830.5, 838.5, 848.5, 855.5, 864.5, S/L 812

SELL BELOW 811 TARGETS 800, 785, 782 TO 780, 774, 766, S/L 815

Wednesday

NIFTY ON 16-09-09 WEDNESDAY

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகள் எல்லாம் உயர்ந்து வருகிறது மேலும் DOW JONES 9650 என்ற புள்ளியை கடந்து முடிவடயுமானால் தொடர்ந்து 9800, 9900 என்ற புள்ளிகளை நோக்கி உயரும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் 9400 என்ற புள்ளியை கீழே கடந்து முடிந்தால் மட்டுமே வீழ்ச்சிகள், ஆசிய சந்தைகள் VOLATILE என்ற நிலையில் உயர்ந்து வருகிறது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 78 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி OPEN மற்றும் LOW என்ற புள்ளிகளை ஒன்றாக பெற்று நடந்து வந்த நிலை தற்பொழுது மாறி புதிய LOW புள்ளியை கண்டு இருப்பது, நமது சந்தைகளில் தடுமாற்றமான சூழ்நிலைகள் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் வாய்ப்புகள் இருப்பதாக கொள்ளலாம் திடீர் வீழ்ச்சிகள், திடீர் உயர்வுகள் இப்படி மாறி மாறி வந்து ஏமாற்றி மறுபடியும் எந்த பக்கம் வேண்டுமானாலும் தனது நிலயை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் நமது சந்தைகளில் இருப்பது உண்மையே, ஆகவே கவனமாக இருப்பது சிறந்தது

NIFTY பொதுவாக

NIFTY அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேறி வருகிறது எது எப்படி போனாலும் சில முக்கியமான புள்ளிகளை நாம் கவனித்து கொண்டு அதன் படி நமது வர்த்தகத்தை திசை மாற்றிக்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும், அதன் படி 4956 என்ற புள்ளி தடைகளை தரலாம், மேலும் 4886 என்ற புள்ளி SUPPORT தரலாம் இதில் எந்த புள்ளிகளை கடந்தாலும் அந்த திசையில் சந்தையின் நகர்வுகள் இருக்கும், ஆனால் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது, எந்த பக்க நகர்வுக்கும் தயாராக இருப்பது சிறந்தது

NIFTY SPOT இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 4900 என்ற புள்ளிக்கு மேல் உயர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் 4931 என்ற புள்ளியை கடந்து அடுத்து அருகருகே உள்ள தடைப்புள்ளிகளான 4946, 4956 என்ற புள்ளிகளை கடந்து நல்ல சக்தியுடன் மேலே சென்றால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் அடுத்து 5067 என்ற புள்ளியை இலக்காக கொண்டு நகரும் வாய்ப்புகளும் உருவாகும் அப்படி ஏற்படுமாயின் பயன் படுத்திக்கொள்ளுங்கள்,

மேலும் 4956 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்து தொடர்ந்து உயருமானால் 4928 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள், அதே போல் நிபிட்டி கீழே இறங்க வேண்டும் என்ற சூழ்நிலை 4886 என்ற புள்ளியை கீழே கடந்தால் உருவாகும் வாய்ப்புகள் இருக்கும் என்றே தோன்றுகிறது மேலும் தொடர்ந்து 4822 ++ என்று இறங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4854 TO 4822 என்ற புள்ளிகள் அருகருகே சில SUPPORT இருப்பதால் இந்த புள்ளிகளுக்கிடையே சந்தை சற்று திணறலாம் பார்த்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4900.5 TARGET 4910, 4914, 4923.5, 4931, 4946, 4956, 5067

NIFTY SPOT BELOW 4886 TARGET 4822, 4754, 4726, 4697, 4682, 4665

கவனிக்க வேண்டிய பங்குகள்

CENTURY TEX

இந்த பங்கில் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகள் CHART படங்களில் தெரிவதை படத்தில் குறிப்பிட்டுள்ளேன், மேலும் இந்த வகை பங்குகள் எல்லாம் உயருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதையும் கவனிக்கலாம், ஆகவே இந்த பங்கை 512 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 560, 640 என்ற புள்ளிகள் இருக்கும்,

தின வர்த்தகர்கள் 520 TO 523, 528 TO 530, 535, 550, 561 என்ற புள்ளிகளை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள் இதன் S/L 506 என்ற புள்ளி இருக்கும், POSITIONAL TRADER க்கான S/L 455 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள் மேலும் 506 என்ற புள்ளியை கீழே கடந்தால் SHORT SELL பண்ணலாம் இலக்காக 492, 488, 483, 480, 473, 466 என்ற புள்ளிகள் இருக்கும், ஆகவே POSITIONAL TRADER 506 என்ற புள்ளியை கீழே கடந்தால் வாங்கியதை விற்று விட்டு மறுபடியும் 470 TO 465 என்ற புள்ளிகள் வந்தால் மறுபடியும் வாங்கலாம் கண்டிப்பாக S/L ஐ கடைபிடியுங்கள், சந்தையின் போக்கு எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறும் வாய்ப்புகள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்

CENTURY TEX CHART


Tuesday

NIFTY ON TUESDAY

15-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் உயர்வு என்ற நிலையில் தான் முடிந்துள்ளது மேலும் DOW JONES 9635 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும் அதே போல் 9420 TO 9400 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் நல்ல வீழ்ச்சிகள் இருக்கும், ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடிவந்தாலும் இன்னும் ஒரு சில 100 புள்ளிகளை இழந்தால் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் ஏற்படலாம், தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை ஒரு 7, 8 புள்ளிகளுக்குள் மேலும் கீழும் ஆடிவருவது நேற்றைய சந்தையை போல் நடக்கும் வாய்ப்புகள் உள்ளதோ என்ற ஐய்யப்பாட்டை தருகிறது இது போன்ற பதட்டமான சூழ்நிலைகளில் இந்த மாதிரியான சந்தையின் நகர்வுகள் தவறான முடிவுகளை எடுக்க வைத்து விடும் TENTION ஆகி ஏதும் செய்யவேண்டாம், பொறுமையாக இருப்பதே சிறந்தது இல்லையேல் ஒரு இரண்டு நாட்கள் சந்தையை விட்டு விலகி இருப்பது சிறந்தது

NIFTY SPOT பொதுவாக

NIFTY 4770 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்த நல்ல SUPPORT ஆக 4685 TO 4675 என்ற புள்ளியை சொல்லலாம் அடுத்து 4560, 4520 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகளாக இருக்கும் இந்த புள்ளிகளையும் கீழே கடந்தால் அடுத்து 4320 TO 4300 என்ற புள்ளிகள் மிகப்பெரிய பலமான SUPPORT ஆக விளங்கும் இந்த புள்ளிகளை கீழே கடந்து தொடர்ந்து முடிவடயுமானால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் இலக்காக 3900, 3700 என்ற வகையில் இருக்கும் (மேலே உள்ள புள்ளிகளை எல்லாம் கடந்தால் தான் இது போன்று நடக்கும் கவலை கொள்ள வேண்டாம் நான் சொல்லி வருவது TECHNICAL விதிகளின் படி எந்த புள்ளிகளை கடந்தால் அடுத்து என்ன நடக்கும் என்ற விளக்கத்தை, அப்படி ஒரு வேலை அது போன்று நடக்கும் என்ற சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக எச்சரிக்கை செய்துவிடுவேன், ஆகவே நிம்மதியாக இருங்கள்),

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4815 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்தால் உயர்வுகள் அடுத்து 4850, 4867, 4876 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், மேலும் இந்த புள்ளிகளில் 4867, 4876 என்ற புள்ளிகள் முக்கியமான புள்ளிகளாக நாம் எடுத்துக்கொள்ளலாம், 4876 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடக்கும் பட்சத்தில் அடுத்த உயர்வுகள் 4980 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், அதே போல் நேற்று நடந்த சந்தை போல் இருக்கும் சூழ்நிலை வந்தால் இந்த புள்ளிகள் உதவாது.

NIFTY வீழ்ச்சியடைய வேண்டுமாயின் 4801 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் தொடர்ந்து 4780 TO 4770 என்ற புள்ளிகள் SUPPORT குடுக்கும் வாய்ப்புகள் தெரிகிறது ஆகவே இந்த 4770 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் இரண்டு புள்ளிகளையும் மேலேயும் கீழேயும் கடந்து நின்றால் VOLATILE என்ற நிலையில் இன்றைய தினம் நகரலாம்


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4815 TARGET 4849, 4856, 4875.6, 4982

NIFTY SPOT BELOW 4801 TARGET 4780, 4743.8, 4737.6, 4707, 4696.7
4687.3 TO 4684.5, 4612, 4604

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY ABB ABOVE 757 TARGETS 760 TO 762, 771.5, 776.5, 785, 790, 816, S/L 749

OR

BUY NEAR 750 S/L 749 FIRST TARGETS 756 TO 758

Monday

NIFTY ON MONDAY

14-09-09

நீண்ட பதிவு ஆனால் தேவையான ஒன்று பொறுமையாக படியுங்கள்

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க FUTURE MARKET இல் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சிகள் ஆசிய சந்தைகளில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது, மேலும் DOW JONES 9430 TO 9400 என்ற புள்ளிகளை கீழே கடந்து செல்லும் வாய்ப்புகள் வந்தால் வீழ்ச்சிகள் தொடர்ந்து இருக்கும் அதே நேரம் 9320 TO 9300 என்ற புள்ளிகள் SUPPORT தரலாம் மேலும் 9200 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடையும் வாய்ப்புகள் வந்தால் மிகப்பெரிய வீழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும் சூழ்நிலைகள் வரலாம்,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை உலக சந்தைகளின் போக்குகளை பின்பற்றி 70 புள்ளிகளுக்கு மேல் இழந்து தொடங்கினாலும், தொடர்ந்து இறங்காமல் மேலும் கீழும் ஆடிவருவது நமது NIFTY க்கு 4765 TO 4760 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஐ கொடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், இந்த புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும், மேலும் 4830 என்ற புள்ளி தடைகளை தரலாம்

NIFTY SPOT பொதுவாக

நாம் முன்னர் பார்த்தது போல உலக சந்தைகள் இறக்கத்தின் இருக்கும் எதிரொலியாக வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் இந்த 4765 TO 4760 என்ற புள்ளியை கடந்து கீழே முடிவடைந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் அதிகமாகும் மேலும் தற்பொழுது 4930 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து 2 நாட்கள் மேலே NIFTY SPOT முடிவடயுமானால் இந்த வீழ்ச்சிகள் சற்று தள்ளிப்போகும் வாய்ப்புகள் ஏற்ப்படும், ஆகவே தற்பொழுது நாம் பார்க்க வேண்டிய முக்கியமான புள்ளிகள் 4760 என்ற புள்ளி இறக்கத்திற்கும் , 4930 என்ற புள்ளி உயர்வதற்கும்,

மேலும் தற்பொழுது ஏற்ப்படும் இந்த இறக்கம் நல்ல முறையில் இருக்குமா அல்லது சிறிய வீழ்ச்சிகளுடன் திரும்புமா என்பதை கீழே கொடுத்துள்ள சில விளக்கங்களை வைத்து முடிவு செய்யலாம்

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக:-

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதினால் சந்தையில் எப்பொழுதும் FII களின் வாங்கும் சக்தி அதிகமாகும், அதே நேரம் ருபாய் மதிப்பு கீழ் இறங்கும் போது FII களின் விற்கும் சக்தி அதிகமாகும், இதை இப்பொழுது விளக்கமாக் சொல்வது பயனுள்ளதாக் இருக்கும் என்றே கருதுகிறேன்,

அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்வதாக வைத்துக்கொள்ளுங்கள்(அதாவது 1 டாலர் = 50 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள்) , அப்படியானால் அவர்கள் 1 டாலர் நம்மிடம் கொடுத்தால் நாம் அவர்களுக்கு 50 ரூபாய் இந்திய பணம் தரவேண்டும் இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பங்குகளை வாங்குவார்கள், அதே நேரம் இந்திய மதிப்பு டாலருக்கு எதிராக 43 ரூபாயாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது அவர்கள் 43 ருபாய் நம்மிடம் கொடுத்தால் நாம் அவர்களுக்கு 1 டாலர் தர வேண்டும், இப்படி இருக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள் 50 ருபாய் இருக்கும் போது நம்மிடம் டாலரை தந்து பணம் வாங்கி பங்குகளை வாங்குவார்கள், 43 ருபாய் இருக்கும் போது பங்குகளை விற்று 43 ரூபாயை கொடுத்து 1 டாலரை வாங்கிக்கொள்வார்கள், பாருங்கள் சும்மாவே அவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கின்றது என்று,

ஆகவே தான் எப்பொழுதெல்லாம் இந்திய மதிப்பு டாலருக்கு எதிராக உயர்கிறதோ அப்பொழுதெல்லாம் பங்கு சந்தை உயர்ந்து கொண்டுதான் இருக்கும் எப்பொழுதெல்லாம் இந்திய மதிப்பு வீழ்கிறதோ அப்பொழுதெல்லாம் பங்கு சந்தை செமையாக அடி வாங்கும், சரி இப்பொழுது நமது சந்தைகள் TECHNICAL ஆக இறங்கும் வாய்ப்புகள் உள்ளது இதற்க்கு ருபாய் மதிப்பு ஒத்துளைக்கின்றதா என்று பார்த்து விடுவோம் வாருங்கள்,

கீழே கொடுத்துள்ள படத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் நகர்வுகளுக்கான வரைபடம் கொடுத்துள்ளேன் அதில் உள்ள படி தற்பொழுது இந்திய மதிப்பு 48.5 என்ற அளவுகோலின் சுற்று வட்டாரங்களில் உள்ளது, இந்த TECHNICAL வரை படத்தின் படி இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூபாயை கடந்தால் சந்தையில் வீழ்ச்சிகள் அதிகமாக இருக்காது உயரத்தான் செய்யும் ஏன் எனில் FII களின் வாங்கும் திறன் அதிகமாகும்,

அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 48.2 என்ற புள்ளியை கடந்து அடுத்து 47.3 என்ற முக்கியமான SUPPORT ஐ கீழே கடந்து 46 என்ற புள்ளியை உடைத்தால் சந்தையில் சொல்லிக்கொள்ளும் படியான வீழ்ச்சிகள் இருக்கும் அதாவது 3918 ஐ நோக்கி கூட வரலாம் (வாய்ப்புகள் உள்ளது என்று தான் சொல்கிறேன் அடித்து சொல்ல வில்லை), ஆகவே இந்திய ரூபாயின் மதிப்புகளை கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் , படத்தை பாருங்கள்

INR CHART AGAINST DOLLAR


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4830 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4865 TO 4875 என்ற புள்ளிகள் சற்று முக்கியமான தடைபுள்ளிகளாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் உலக சந்தைகளின் போக்குகள் இறக்கத்தில் இருப்பதினால் இந்த புள்ளிகளை நோக்கி வருமா என்பதும் சற்று சந்தேகம் தான், அதேபோல் NIFTY கீழே வீழ்ச்சியடைய 4812 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருந்தாலும் 4764 என்ற புள்ளி முக்கியத்த்துவம் வாய்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் இந்த புள்ளியை கீழே கடந்தால் அடுத்து ஒரு 100 புள்ளிகளை NIFTY இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளியை சற்று கவனமாக பார்க்கலாம்

NIFTY SPOT முக்கியமான நிலைகள்

NIFTY SPOT ABOVE 4830 TARGET 4865, 4875, 4929, 4951, 4964, 4996, 5025

NIFTY SPOT BELOW 4823 TARGET 4812, 4809 TO 4805, 4795, 4765, 4746,
4734, 4712, 4707, 4699, 4690, 4660

கவனிக்க வேண்டிய பங்குகள்

SBI FOR TRADING

SELL IF NOT CROSS 1941 TARGET 1888, 1882 TO 1880, 1866 TO 1864, 1856 S/L 1947

BUY ABOVE 1947 TR 1955, 1984, 2046, 2147, S/L 1933 0R 1941

SBI FOR SHORT TERM INVESTMENT

இந்த பங்கில் கீழே கொடுத்துள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள படி 1958 TO 1964 என்ற புள்ளிகளில் நல்ல தடைகள் இருப்பதினால் இந்த புள்ளிகளில் இருந்து கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் இந்த புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் இதன் அடுத்த இலக்காக 2280 TO 2300 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 1864 என்ற புள்ளியில் நல்ல SUPPORT இருக்கும் காரணத்தாலும் சந்தையில் இறக்கம் வரும் வாய்ப்புகள் இருப்பதாலும் இந்த 1855 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 1865 TO 1855 என்ற புள்ளிகளில் இருந்து மீட்சி அடையுமானால் வாங்கலாம், கண்டிப்பாக S/L கடை பிடியுங்கள், இல்லையே வாங்காதீர்கள் , படத்தை பாருங்கள்


SBI CHART

Saturday

தினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்

தின வர்த்தகத்தை கட்டண சேவையாக ஆரம்பித்த நாள் முதல் எனக்கு ஒரு எண்ணம் இருந்து வந்தது, இன்று நாம் பரிந்துரைத்த பங்குகள், அவற்றின் நகர்வுகள் பற்றி அனைவருக்கும் அறிய தரவேண்டும் என்பதே அந்த எண்ணம், ஆகவே தினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அனைவரும் பார்வை இடுவதற்காக தனியே ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி விட வேண்டும் என்று முயற்ச்சி செய்து வேலைப்பழுவினால் தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருந்தது இன்று சாத்தியமாகியது, அந்த வகையில் சந்தோசம்,

நமது தின வர்த்தக பரிந்துரையை பார்வை இட இங்கே அழுத்துங்கள், TO SEE WHAT WE ARE DOING IN DAY TRADING - CLICK HERE ...

தின வர்த்தக பரிந்துரை வேண்டுவோர், இந்த மின் அஞ்சலுக்கோ (saravanabalaaji@gmail.com) அல்லது இந்த எண்ணுக்கோ தொடர்பு கொள்ளுங்கள் (9486518735)

Friday

NIFTY ON FRIDAY

11-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகள் அனைத்தும் எந்த பக்கம் நகர்வது என்று தடுமாறி கொண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித பயத்தை தந்து கொண்டுள்ளது, வாங்கலாமா, இல்லை காத்து இருக்கலாமா என்று அனைவரும் ஆளாளுக்கு ஒன்றை சொல்லி குழப்பி வருகின்றனர், என்ன செய்வது சந்தை அப்படி இருக்கின்றது, நேற்று நாம் எதிர்பார்த்த 4820 க்கு அருகில் NIFTY முடிந்து இருப்பதும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள், என்னை பொறுத்த வரை அடுத்த வாரத்தில் CORRECTION வரும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே புதுசாக எதையும் வாங்காதீர்கள் பழைய நிலைகளை முடித்துக்கொள்ளுங்கள், எது நடந்தாலும் நல்ல முடிவை நாம் எடுப்போம்,

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 60 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருந்தாலும் தற்பொழுது 35 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் உள்ளது, மேலும் முக்கியமான புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டுள்ளது, ஆகவே உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் உயரங்களில் மறுபடியும் SELLING PRESURE வரும் வாய்ப்புகளும் இருக்கும் என்றே தோன்றுகிறது ஆகவே உயரங்களில் கவனமாக இருங்கள்

NIFTY SPOT பொதுவாக

நேற்று நாம் எதிர்பார்த்தது போல நல்ல உயரங்களை கொடுத்து பிறகு DAY LOW வை கீழே கடந்து மறுபடியும் 4820 என்ற புள்ளியின் வாக்கில் முடிவடைந்து இருப்பது CORRECTION வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் தற்பொழுது தினமும் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை தந்து வருகிறேன் அந்த புள்ளிகளை மேலே கடந்து முடிவடைந்தால் மட்டுமே CORRECTION வராமல் போகும் வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளுங்கள், இந்த புள்ளியில் தினமும் மாற்றங்கள் வரும் வாய்ப்புகள் இருப்பதால் தினமும் தருகிறேன்,

இன்றைக்கு 4912 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடைந்தால் CORRECTION வராது, அதே போல் 4770 என்ற புள்ளி முக்கியமான SUPPORT புள்ளியாகும், விருப்பம் உள்ளவர்கள் இன்று அல்லது நாளை 4700, 4500 PUT OPTION ஐ சந்தை உயரங்களில் இருக்கும் போது வாங்குங்கள் நேற்றைய உயரம் தான் அளவுகோல் அதற்க்கு மேல் செல்லும் வாய்ப்புகள் குறைவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று, இதற்க்கு S/L ஆக இன்று 4912 என்ற புள்ளியை NIFTY SPOT கடந்து முடிய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4816 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டாலே உயருவதற்கான வாய்ப்புகள் உருவாகும், அதே நேரம் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, அதே போல் 4815 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை தற்பொழுது 4770 என்ற புள்ளி NIFTY யின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் புள்ளியாக இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4816 TARGET 4857 TO 4859, 4869, 4873, 4882, 4903, 4911.6, 5029

NIFTY SPOT BELOW 4816 TARGET 4807, 4796, 4793, 4789, 4750, 4734, 4731, 4726, 4719,

4704, 4698, 4692, 4684, 4675

Thursday

NIFTY ON THURSDAY

10-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகளில் ஏற்ப்பட்ட உயர்வு, அதனை தொடர்ந்து அமெரிக்க FUTURE MARKET அந்த உயரத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பது இவை எல்லாம் ஆசிய சந்தைகளை உயர்த்தி வைத்துள்ளது, மேலும் NIKKEI 10550 என்ற புள்ளியையும், HANG SENG 21150 என்ற புள்ளியையும், DOW JONES 9400 என்ற புள்ளியை தாக்கு பிடித்து 9580 என்ற புள்ளியையும் கடந்தால் உயர்வுகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும்,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கமே 55 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி அதனை தக்க வைத்துக்கொண்டிருப்பது நமது சந்தைகளில் உயர்வுகள் வரும் வாய்ப்புகள் அதிகமாக்கும் அதே நேரம் 4885 TO 4894 என்ற புள்ளிகளில் தடைகள் இருக்கும் வாய்ப்புகளும் இதனை கடந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அப்படி வந்தால் பயன் படுத்திக்கொள்ளுங்கள் அதே நேரம் 4830, 4770 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கலாம்

NIFTY SPOT பொதுவாக

NIFTY ஐ பொறுத்தவரை தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் இருப்பது போல் இருந்து வந்தாலும் அந்த பதட்டம் நீடித்துக்கொண்டு இருப்பதும் உண்மையே, மேலும் நாம் CORRECTION MARKET சந்திக்கப்போகிறோம் என்பது உண்மையானால் இன்று ஒரு நல்ல உயர்வு இருக்கும் அதே நேரம் இன்றைய முடிவு 4820 TO 4830 என்ற அளவில் இருக்கும் என்றே நினைக்கின்றேன் அப்படி நடந்தால் CORRECTION அடுத்த வார நடுவிலோ அல்லது தொடக்கத்திலோ வரும் வாய்ப்புகள் அதிகம், அதே நேரம் 4770 க்கு கீழ் இன்று சந்தை வராமல் இருக்க வேண்டும், அப்படி நடக்க வில்லை என்றாலும் என்னால் உறுதியாக நல்ல உயர்வு வரும் என்று அடித்து சொல்ல முடிய வில்லை (பயமூட்டுகிறேன் என்று எண்ணாதீர்கள்), ஆகவே தான் அடுத்த வாரம் நமது சந்தையின் நகர்வுகளை தீர்மானிக்கலாம் என்று நினைக்கின்றேன்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்த வரை 4842 என்ற புள்ளியை கடந்தால் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4894, 4940 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகளும் இருப்பது போல தெரிகிறது, அப்படி வரும் சூழ்நிலையில் 4841 என்ற புள்ளிக்கு மேல் BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே போல் NIFTY 4841 என்ற புள்ளியை கடக்க வில்லை என்றால் வீழ்ச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும் அதே நேரம் 4778 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது, ஆகவே இந்த 4778 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம், மேலும் இன்று எப்பொழுது வேண்டுமானாலும் சந்தை தன்னை திருப்பிக்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதினால் உங்கள் லாபங்களில் எப்பொழுதும் உறுதியாக இருங்கள், சிறிய நட்டத்திர்க்காக எதையும் டெலிவரி எடுக்க வேண்டாம், DELIVERY BUYING செய்பவர்களை கொஞ்ச நாள் பொறுத்து இருங்கள்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4842 TARGET 4850 TO 4855, 4864 TO 4869, 4885, 4893, 4940, 4987

NIFTY SPOT BELOW 4797 TARGET 4781TO 4778, 4768, 4754 TO 4749, 4742, 4723, 4701,
4697, 4672, 4675, 4665, 4646 TO 4639, 4618, 4594

கவனிக்க வேண்டிய பங்குகள்

HDFC LTD

BUY ABOVE 2536 TARGET 2545 TO 2548.5, 2564 TO 2566.5, 2574 TO 2577, 2584, 2605, S/L 2524

SELL BELOW 2524 TARGET 2503, 2500, S/L 2536

Wednesday

NIFTY ON WEDNESDAY

09-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

DOW JONES ஐ பொறுத்தவரை 9560 என்ற புள்ளி நல்ல தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிகளை கடந்தால் தான் அடுத்த உயர்வுகள் பற்றி யோசிக்க முடியும், அமெரிக்க FUTURE MARKET சற்று கீழே இருப்பதால் ஆசிய சந்தைகள் தடுமாறி வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை OPEN / LOW ஒன்றாக இருந்தது தற்பொழுது புதிய LOW புள்ளிகளை கண்டிருப்பது நமது சந்தைகளில் இறக்கங்கள் இருப்பதற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் உலக சந்தைகளின் போக்குகளை கடைப்பிடிக்கும் வாய்ப்புகளும், திடீர் உயர்வுகள் ஏற்ப்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது, பொதுவாக NIFTY க்கு 4828 TO 4838 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிக்கு மேல் உயர்வுகள் 4860, 4880, 4914 என்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 4770 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகளும் உள்ளது

NIFTY SPOT பொதுவாக

நேற்று நாம் பார்த்தது போல் நமது சந்தைகளில் ஒரு சில பதட்டங்கள் இருப்பதை அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள், பொதுவாக ஒரு குறிப்பிட்ட பங்கிலோ அல்லது சந்தைகளிலோ BREAK OUT எனும் வாய்ப்புகள் ஏற்ப்பட்ட பின் சந்தையின் அல்லது அந்த பங்கின் நகர்வுகளில் நல்ல விரைவான உயர்வுகள் இருக்கும், பங்குகளை வாங்குவதற்கு போட்டா போட்டி இருக்கும், ஆனால் நமது சந்தை இரண்டு நாட்களுக்கு முன் BREAK OUT பெற்றுள்ளதை படமிட்டு காட்டி இருந்தேன்,

நமது சந்தையில் நேற்றைய நகர்வை சற்று யோசித்து பாருங்கள், இப்படியா BREAK OUT பெற்ற சந்தை நகரும், (ELECTION RESULT வெளியான உடன் சந்தை எப்படி நகர்ந்தது, STT ஐ நீக்க பிரதம மந்திரி ஒப்புக்கொண்டார் என்றவுடன் எப்படி நகர்ந்தது (4580 ), ஆகவே இந்த உயர்வுகளில் எனக்கு சற்று பயம், பதட்டம் தெரிகிறது, அதே நேரம் RIL பங்கு நல்ல நிலையில் இருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது, ஆகவே இந்த வாரம் சந்தையின் மொத்த நகர்வையும் வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று நான் இருக்கின்றேன், உங்களின் கருத்துகளையும் நீங்கள் சொல்லலாம்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4803 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து 4837 என்ற புள்ளியில் தடைகள் உள்ளது இந்த புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் தொடர் உயர்வுகள் இருக்கும், அப்படி ஒரு வாய்ப்புகள் ஏற்படுமாயின் அதனை பயன் படுத்திக்கொள்ளுங்கள், மேலும் 4787 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும் இருந்தாலும் 4770 என்ற புள்ளிக்கு மேல் நல்ல வீழ்ச்சிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் இந்த புள்ளிகளுக்கு கீழ் SHORT SELL இல் கவனம் செலுத்தலாம் மேலும் 4750 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சிகள் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4803 TARGET 4823, 4828.5, 4836.7, 4859.8, 4880, 4889, 4915

NIFTY SPOT BELOW 4799 TARGET 4779, 4772, 4755, 4694, 4680, 4662, 4647, 4597, 4569, 4489

கவனிக்க வேண்டிய பங்குகள்

RELIANCE IND

இந்த பங்கில் 2550 என்ற புள்ளியை இலக்காக கொண்டு நல்ல BREAK OUT கிடைத்துள்ளது, மேலும் இதன் S/L ஆக 1975 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம், மேலும் 2090 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் மெல்ல மெல்ல இருக்கும், தின வர்த்தகத்திற்காக வாங்குவோர்கள் 2085 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்காக 2100, 2106, 2114, 2120, 2122, 2155, 2182, 2242 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்,

ALERT NOTE:

தற்பொழுது BREAK OUT பெற்றுள்ளதை போலவே 2008 ஜனவரியிலும் RIL BREAK OUT ஆனது என்பதை இங்கு நான் சொல்லிக்கொள்வதை முக்கியமாக கருதுகிறேன்

RIL CHART