03-09-09
உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்
நாம் எதிர்பார்த்தது போல DOW JONES 9440 என்ற புள்ளிக்கு கீழ் அடுத்த இலக்கான 9250 TO 9200 என்ற புள்ளிகளின் அருகே வர்த்தகம் செய்து வருகிறது தற்பொழுது 9190 என்ற புள்ளி முக்கியமாக கவனிக்க வேண்டிய புள்ளியாக கொள்ளலாம், இந்த புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் அடுத்து 8800, 8700, 8450 என்று வருசயாக கீழே வர வாய்ப்புகள் உள்ளது அப்படி ஏற்ப்பட்டால் நமது சந்தைகளில் வீழ்ச்சிகள் உண்டாகும், அதே நேரம் 9200 என்ற புள்ளியின் அருகே SUPPORT எடுத்து திரும்பினால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஏற்ப்படும்…
தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலும் கீழும் ஆடிக்கொண்டுள்ளது, இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளிலும் இதே வெளிப்பாடு நடந்து வருகிறது, இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 30 புள்ளிகளை இழந்து தொடங்கி இருந்தாலும் தற்பொழுது வீழ்ச்சிகளை மீட்டெடுத்து உயர்ந்து வருகிறது, இந்த சூழ்நிலை நிலை கொண்டால் நமது சந்தைகளில் உயர்வுகள் இருக்கும், மேலும் NIFTY க்கு 4592 TO 4589 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கலாம் அப்படி ஏற்ப்பட்டால் இந்த புள்ளியை (NIFTY SPOT PRICE) S/L ஆக வைத்துக்கொண்டு NIFTY FUT வாங்கலாம், 4589 க்கு (NIFTY SPOT PRICE) கீழ் SHORT SELL
NIFTY SPOT பொதுவாக
தற்பொழுது NIFTY SPOT இல் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய புள்ளிகளை கொஞ்சம் பார்ப்போம், உயர்வதற்கு 4750 என்ற புள்ளியை கடந்து இரண்டு நாட்களாவது நல்ல சக்தியுடன் முடிவடைய வேண்டும் (சக்தி என்றால் INDEX பங்குகள் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகளை நல்ல VOLUME உடன் பெற்று இருப்பது), இப்படி ஏற்ப்படும் சூழ்நிலைகள் வந்தால் தொடர்ந்து உயரலாம் இருந்தாலும் என்னை பொறுத்தவரை 4800, 4890 என்ற புள்ளிகளில் தடைகள் வரலாம் என்று தோன்றுகிறது, ஆகவே இந்த 4890 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த உயர்வுகள் தொடரும்,
அதே போல் தற்பொழுது NIFTY கீழே வருவதற்கு 4540 TO 4500 என்ற புள்ளிகளை கடந்து தொடர்ந்து எதிர்மறையான போக்குகளை கடைப்பிடித்து முடிவடைந்தால் பெருமளவிலான வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதேநேரம் 4300 என்ற புள்ளி SUPPORT கொடுக்க முயலும் என்பதினையும் நாம் மனதில் கொள்ள வேண்டும், அப்படி ஏற்ப்பட்டால் அடுத்த கீழ் நோக்கிய இலக்கு 3918, 3750 என்ற வகையில் இருக்கலாம்
NIFTY SPOT இன்று
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4592 என்ற புள்ளியை கீழே கடக்காமல் இருந்தாலே உயர்வுகள் 4667 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4667 என்ற புள்ளிக்கு மேல் அடுத்த இலக்குகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் சற்று பிரகாசமாகும், அப்படி ஏற்ப்படும் சூழ்நிலைகள் வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதே போல் 4589 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, மேலும் 4558 TO 4540 என்ற புள்ளிகள் சற்று முக்கியமான SUPPORT புள்ளிகளாக எடுத்துக்கொள்ளலாம் மேலும் இந்த புள்ளிகளுக்கு கீழ் கடந்து 4500 என்ற புள்ளிக்கு கீழ் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் முடிவடைந்தால் நல்ல வீழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4667 TARGET 4675, 4700, 4717, 4766
NIFTY SPOT BELOW 4589 TARGET 4559 -558, 4529, 4504, 4499 -490, 4473, 4461, 4444, 4430, 4414
கவனிக்க வேண்டிய பங்குகள்
HERO HONDA
BUY ABOVE 1566 TARGET 1588, 1593 TO 1596, 1615, S/L 1562
SELL BELOW 1562 TARGET 1556, 1545, 1543 TO 1541, 1527, S/L 1566
STERLITE
இந்த இந்த பங்கில் 626, 616 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே இந்த புள்ளிகளை கடந்து முடிவடைந்தால் S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்குகள் 700, 740 என்ற புள்ளிகளில் தடைகள் உள்ளது 740 என்ற புள்ளியை கடந்து 2 நாட்கள் முடிவடைந்தால் அடுத்து பெரிய உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதற்க்கெல்லாம் சந்தை உறுதுணையாக இருக்க வேண்டும், ஆகவே SWING TRADE செய்பவர்களை 5% லாபத்துடன் வெளியே வருவதானாலும் சரிதான்
HPCL, BPCL போன்ற OIL வகை பங்குகளில் அருமையான உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, இந்த வகை பங்குகளில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்