Wednesday

NIFTY ON 16-09-09 WEDNESDAY

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகள் எல்லாம் உயர்ந்து வருகிறது மேலும் DOW JONES 9650 என்ற புள்ளியை கடந்து முடிவடயுமானால் தொடர்ந்து 9800, 9900 என்ற புள்ளிகளை நோக்கி உயரும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் 9400 என்ற புள்ளியை கீழே கடந்து முடிந்தால் மட்டுமே வீழ்ச்சிகள், ஆசிய சந்தைகள் VOLATILE என்ற நிலையில் உயர்ந்து வருகிறது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 78 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி OPEN மற்றும் LOW என்ற புள்ளிகளை ஒன்றாக பெற்று நடந்து வந்த நிலை தற்பொழுது மாறி புதிய LOW புள்ளியை கண்டு இருப்பது, நமது சந்தைகளில் தடுமாற்றமான சூழ்நிலைகள் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் வாய்ப்புகள் இருப்பதாக கொள்ளலாம் திடீர் வீழ்ச்சிகள், திடீர் உயர்வுகள் இப்படி மாறி மாறி வந்து ஏமாற்றி மறுபடியும் எந்த பக்கம் வேண்டுமானாலும் தனது நிலயை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் நமது சந்தைகளில் இருப்பது உண்மையே, ஆகவே கவனமாக இருப்பது சிறந்தது

NIFTY பொதுவாக

NIFTY அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேறி வருகிறது எது எப்படி போனாலும் சில முக்கியமான புள்ளிகளை நாம் கவனித்து கொண்டு அதன் படி நமது வர்த்தகத்தை திசை மாற்றிக்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும், அதன் படி 4956 என்ற புள்ளி தடைகளை தரலாம், மேலும் 4886 என்ற புள்ளி SUPPORT தரலாம் இதில் எந்த புள்ளிகளை கடந்தாலும் அந்த திசையில் சந்தையின் நகர்வுகள் இருக்கும், ஆனால் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது, எந்த பக்க நகர்வுக்கும் தயாராக இருப்பது சிறந்தது

NIFTY SPOT இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 4900 என்ற புள்ளிக்கு மேல் உயர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் 4931 என்ற புள்ளியை கடந்து அடுத்து அருகருகே உள்ள தடைப்புள்ளிகளான 4946, 4956 என்ற புள்ளிகளை கடந்து நல்ல சக்தியுடன் மேலே சென்றால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் அடுத்து 5067 என்ற புள்ளியை இலக்காக கொண்டு நகரும் வாய்ப்புகளும் உருவாகும் அப்படி ஏற்படுமாயின் பயன் படுத்திக்கொள்ளுங்கள்,

மேலும் 4956 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்து தொடர்ந்து உயருமானால் 4928 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள், அதே போல் நிபிட்டி கீழே இறங்க வேண்டும் என்ற சூழ்நிலை 4886 என்ற புள்ளியை கீழே கடந்தால் உருவாகும் வாய்ப்புகள் இருக்கும் என்றே தோன்றுகிறது மேலும் தொடர்ந்து 4822 ++ என்று இறங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4854 TO 4822 என்ற புள்ளிகள் அருகருகே சில SUPPORT இருப்பதால் இந்த புள்ளிகளுக்கிடையே சந்தை சற்று திணறலாம் பார்த்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4900.5 TARGET 4910, 4914, 4923.5, 4931, 4946, 4956, 5067

NIFTY SPOT BELOW 4886 TARGET 4822, 4754, 4726, 4697, 4682, 4665

கவனிக்க வேண்டிய பங்குகள்

CENTURY TEX

இந்த பங்கில் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகள் CHART படங்களில் தெரிவதை படத்தில் குறிப்பிட்டுள்ளேன், மேலும் இந்த வகை பங்குகள் எல்லாம் உயருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதையும் கவனிக்கலாம், ஆகவே இந்த பங்கை 512 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 560, 640 என்ற புள்ளிகள் இருக்கும்,

தின வர்த்தகர்கள் 520 TO 523, 528 TO 530, 535, 550, 561 என்ற புள்ளிகளை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள் இதன் S/L 506 என்ற புள்ளி இருக்கும், POSITIONAL TRADER க்கான S/L 455 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள் மேலும் 506 என்ற புள்ளியை கீழே கடந்தால் SHORT SELL பண்ணலாம் இலக்காக 492, 488, 483, 480, 473, 466 என்ற புள்ளிகள் இருக்கும், ஆகவே POSITIONAL TRADER 506 என்ற புள்ளியை கீழே கடந்தால் வாங்கியதை விற்று விட்டு மறுபடியும் 470 TO 465 என்ற புள்ளிகள் வந்தால் மறுபடியும் வாங்கலாம் கண்டிப்பாக S/L ஐ கடைபிடியுங்கள், சந்தையின் போக்கு எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறும் வாய்ப்புகள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்

CENTURY TEX CHART