09-09-09
உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்
DOW JONES ஐ பொறுத்தவரை 9560 என்ற புள்ளி நல்ல தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிகளை கடந்தால் தான் அடுத்த உயர்வுகள் பற்றி யோசிக்க முடியும், அமெரிக்க FUTURE MARKET சற்று கீழே இருப்பதால் ஆசிய சந்தைகள் தடுமாறி வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை OPEN / LOW ஒன்றாக இருந்தது தற்பொழுது புதிய LOW புள்ளிகளை கண்டிருப்பது நமது சந்தைகளில் இறக்கங்கள் இருப்பதற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் உலக சந்தைகளின் போக்குகளை கடைப்பிடிக்கும் வாய்ப்புகளும், திடீர் உயர்வுகள் ஏற்ப்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது, பொதுவாக NIFTY க்கு 4828 TO 4838 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிக்கு மேல் உயர்வுகள் 4860, 4880, 4914 என்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 4770 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகளும் உள்ளது
NIFTY SPOT பொதுவாக
நேற்று நாம் பார்த்தது போல் நமது சந்தைகளில் ஒரு சில பதட்டங்கள் இருப்பதை அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள், பொதுவாக ஒரு குறிப்பிட்ட பங்கிலோ அல்லது சந்தைகளிலோ BREAK OUT எனும் வாய்ப்புகள் ஏற்ப்பட்ட பின் சந்தையின் அல்லது அந்த பங்கின் நகர்வுகளில் நல்ல விரைவான உயர்வுகள் இருக்கும், பங்குகளை வாங்குவதற்கு போட்டா போட்டி இருக்கும், ஆனால் நமது சந்தை இரண்டு நாட்களுக்கு முன் BREAK OUT பெற்றுள்ளதை படமிட்டு காட்டி இருந்தேன்,
நமது சந்தையில் நேற்றைய நகர்வை சற்று யோசித்து பாருங்கள், இப்படியா BREAK OUT பெற்ற சந்தை நகரும், (ELECTION RESULT வெளியான உடன் சந்தை எப்படி நகர்ந்தது, STT ஐ நீக்க பிரதம மந்திரி ஒப்புக்கொண்டார் என்றவுடன் எப்படி நகர்ந்தது (4580 ), ஆகவே இந்த உயர்வுகளில் எனக்கு சற்று பயம், பதட்டம் தெரிகிறது, அதே நேரம் RIL பங்கு நல்ல நிலையில் இருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது, ஆகவே இந்த வாரம் சந்தையின் மொத்த நகர்வையும் வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று நான் இருக்கின்றேன், உங்களின் கருத்துகளையும் நீங்கள் சொல்லலாம்
NIFTY SPOT இன்று
இன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4803 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து 4837 என்ற புள்ளியில் தடைகள் உள்ளது இந்த புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் தொடர் உயர்வுகள் இருக்கும், அப்படி ஒரு வாய்ப்புகள் ஏற்படுமாயின் அதனை பயன் படுத்திக்கொள்ளுங்கள், மேலும் 4787 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும் இருந்தாலும் 4770 என்ற புள்ளிக்கு மேல் நல்ல வீழ்ச்சிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் இந்த புள்ளிகளுக்கு கீழ் SHORT SELL இல் கவனம் செலுத்தலாம் மேலும் 4750 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சிகள் இருக்கும்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4803 TARGET 4823, 4828.5, 4836.7, 4859.8, 4880, 4889, 4915
NIFTY SPOT BELOW 4799 TARGET 4779, 4772, 4755, 4694, 4680, 4662, 4647, 4597, 4569, 4489
கவனிக்க வேண்டிய பங்குகள்
RELIANCE IND
இந்த பங்கில் 2550 என்ற புள்ளியை இலக்காக கொண்டு நல்ல BREAK OUT கிடைத்துள்ளது, மேலும் இதன் S/L ஆக 1975 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம், மேலும் 2090 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் மெல்ல மெல்ல இருக்கும், தின வர்த்தகத்திற்காக வாங்குவோர்கள் 2085 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்காக 2100, 2106, 2114, 2120, 2122, 2155, 2182, 2242 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்,
ALERT NOTE:
தற்பொழுது BREAK OUT பெற்றுள்ளதை போலவே 2008 ஜனவரியிலும் RIL BREAK OUT ஆனது என்பதை இங்கு நான் சொல்லிக்கொள்வதை முக்கியமாக கருதுகிறேன்
RIL CHART