Tuesday

NIFTY ON TUESDAY

08-09-09

உலகசந்தைகள் ஒரு கண்ணோட்டம்

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE சந்தைகள் உயர்வுகளில் இருப்பதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் கீழிருந்து மேலே வந்து கொண்டிருக்கிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY மேலும் கீழும் ஆடி வருவது நமது சந்தைகளில் VOLATILE என்ற நிலையினை தரும் வாய்ப்புகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் தற்பொழுது NIFTY க்கு 4806 என்ற புள்ளி முக்கியமான தடைகளை தரும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதினால் இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 4835, 4890, 4928 என்று உயரும் வாய்ப்புகள் உள்ளது...

NIFTY SPOT பொதுவாக

கீழே உள்ள படத்தில் தற்போதைய NIFTY யின் நிலையினை குறிப்பிட்டு உள்ளேன், அதாவது NIFTY SPOT ஐ தற்பொழுது உள்ள நிலையினை வைத்து பார்க்கும் பொழுது நல்ல BREAK OUT பெற்றுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது அதாவது 5630 என்ற புள்ளியை இலக்காக கொண்டு TRIANGLE BREAK OUT பெற்றுள்ளது, ஆனால் கடந்த 2008 ஜனவரியில் இப்படிதான் RAISING WEDGE என்ற முறையில் BREAK OUT பெற்று பிறகு பெரிய CORRECTION ஐ சந்தித்தது,

ஆகவே இப்பொழுது உள்ள சூழ்நிலையில் NIFTY தொடர்ந்து உயர்ந்து வருவதால் சில இளைப்பாறல் தேவையானதாக உள்ளது, ஆகவே இந்த உயர்வு தொடர்ந்து இருக்குமா அல்லது தடைபட்டு கீழே வருமா என்பதை நாம் சற்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ஆகவே இந்த வார NIFTY யின் நகர்வுகளை வைத்து நாம் ஒரு சரியான முடிவுக்கு வரலாம்,

NIFTY CHART

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4792 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருந்தாலும் 4806 என்ற புள்ளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியில் சரியாக NIFTY யின் 6357 TO 2250 என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட FIBONACCI அளவில் 61.8% என்ற அளவு 4806 என்ற புள்ளியில் வருகிறது, ஆகவே இந்த புள்ளியை மேலே நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது அப்படி ஏற்படுமாயின் BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே போல் 4778 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் அருகருகே SUPPORT இருப்பதினால் கீழ் நோக்கிய நகர்வுகள் உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்தே இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4792 TARGET 4806, 4831.5, 4899, 4928, 4956, 5036.8

NIFTY SPOT BELOW 4778 TARGET 4768, 4757, 4750, 4713, 4699, 4691, 4684, 4670, 4664, 4658, 4642, 4615, 4608, 4586

கவனிக்க வேண்டிய பங்குகள்

KOTAK MAHINDRA BANK

இந்த பங்கில் 725 என்ற புள்ளியில் TREND LINE தடைகள் இருப்பதை படத்தில் காட்டியுள்ளேன் பாருங்கள், மேலும் கீழே இறக்கம் வந்தால் 715 என்ற புள்ளி வந்தாலும் வாங்கலாம், விரைவான உயர்வு வேண்டும் என்பவர்கள் 735 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 825 என்ற புள்ளி இருக்கும் இதன் S/L ஆக710 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்,

KOTAK BANK CHART


REL CAP, REL போன்ற பங்குகள் நல்ல உயர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவே தெரிகிறது மேலும் சந்தைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் நல்ல உயர்வுகள் இருக்கும் அதாவது தற்பொழுதுள்ள புள்ளிகளில் இருந்து ஒரு250 TO 300 புள்ளிகளை மேலே கடக்கும் வாய்ப்புகள் உள்ளது