Thursday

NIFTY 24-09-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகளை பொறுத்தவரை நாம் எதிர்பார்த்தது போல DOW 9900 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வந்துள்ளது, தொடர்ந்து இந்த 9900 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்தால் ஒரு வீழ்ச்சி இருக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது, அதே நேரம் 9900 என்ற புள்ளியை கடந்து மேலே முடிவடயுமானால் அடுத்து 10200 என்ற புள்ளியை நோக்கி நகரும்,

தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு இருக்கிறார்கள், இருந்தாலும் இறக்கங்கள் சாத்தியமாகும் வாய்ப்புகள் இருப்பது போல தான் தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY எந்த பக்கமும் நகரலாம் என்ற சூழ்நிலையில் இருந்தாலும் நமது சந்தை இன்று நல்ல பதட்டத்தை தரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பது உண்மையே, மொத்தத்தில் 4859 என்ற புள்ளி NIFTY யின் நகர்வை தீர்மானிக்கும் புள்ளியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை கீழே கடந்தால் SELL, தக்க வைத்துக்கொண்டால் BUY இரண்டையும் செய்தால் வேடிக்கை பார்ப்பது நல்லது

NIFTY SPOT பொதுவாக

NIFTY ஐ பொருத்த்தவரை இன்னும் TREND REVERSAL க்கான எந்த வித SIGNAL களையும் தரவில்லை என்பதே உண்மை, அந்த SIGNAL 4922 TO 4900 என்ற புள்ளிகளுக்கு கீழ் NIFTY முடிவடயுமானால் நமக்கு கிடைக்கும், அப்படி முடிவடயுமானால் அடுத்த இலக்காக 4822 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் இருக்கும், அதே நேரம் 4870 என்ற புள்ளியின் சுற்று வட்டாரத்தில் தற்பொழுது அமைந்து வரும் PRIMARY TREND LINE SUPPORT மற்றும் சில FIBONACCI SUPPORT ஆகியவைகள் அமைந்து இருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆகவே NIFTY கீழே இறங்க வேண்டுமாயின் சில முக்கியமான புள்ளிகளை கடக்க வேண்டும் அந்த மாதிரியான புள்ளிகளை இங்கு தருகிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

முதலில் 4922 TO 4900 என்ற புள்ளியை கடந்து முடிந்தால் அடுத்த இலக்கு 4870, 4822

இரண்டாவது 4822 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து மிகப்பெரிய SUPPORT ஆக 4770 என்ற புள்ளி இருக்கும், இந்த புள்ளி மிக முக்கியமான SUPPORT புள்ளியாகவே நான் கருதுகிறேன், இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்து 4530 TO 4500 என்ற புள்ளிகளை நோக்கி வரும், அதே போல் 5065 என்ற புள்ளியை மேலே கடந்து சென்றால் அடுத்து 5100, 5230 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே இந்த புள்ளிகளில் NIFTY யின் நகர்வுகளை கணித்து அடுத்த கட்ட முடிவுகளை எடுங்கள், மேற்கண்ட விஷயங்களின் விளக்கங்களை படத்தில் குடுத்துள்ளேன் பாருங்கள்

NIFTY SPOT CHART


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 5024 என்ற புள்ளியை கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 4959 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றாலே உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம் ஆகவே இந்த 4959 என்ற புள்ளியை கீழே கடக்கவில்லை என்றால் இந்த புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல கவனம் செலுத்தலாம், அதே போல் இந்த 4959 என்ற புள்ளிக்கு கீழ் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம், இலக்காக 4922 TO 4900 என்ற புள்ளிகள் இருக்கும் மேலும் தொடர்ந்து அருகருகே SUPPORT இருப்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5024 TARGET 5048, 5063, 5097, 5233

NIFTY SPOT BELOW 4969 TO 4959 TARGET 4922, 4909, 4904,
4900, 4874, 4870 TO 4868, 4860, 4839, 4814 TO 4810, 4786,
4775, 4773, 4751, 4742