Monday

NIFTY ON MONDAY

14-09-09

நீண்ட பதிவு ஆனால் தேவையான ஒன்று பொறுமையாக படியுங்கள்

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க FUTURE MARKET இல் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சிகள் ஆசிய சந்தைகளில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது, மேலும் DOW JONES 9430 TO 9400 என்ற புள்ளிகளை கீழே கடந்து செல்லும் வாய்ப்புகள் வந்தால் வீழ்ச்சிகள் தொடர்ந்து இருக்கும் அதே நேரம் 9320 TO 9300 என்ற புள்ளிகள் SUPPORT தரலாம் மேலும் 9200 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடையும் வாய்ப்புகள் வந்தால் மிகப்பெரிய வீழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும் சூழ்நிலைகள் வரலாம்,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை உலக சந்தைகளின் போக்குகளை பின்பற்றி 70 புள்ளிகளுக்கு மேல் இழந்து தொடங்கினாலும், தொடர்ந்து இறங்காமல் மேலும் கீழும் ஆடிவருவது நமது NIFTY க்கு 4765 TO 4760 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஐ கொடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், இந்த புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும், மேலும் 4830 என்ற புள்ளி தடைகளை தரலாம்

NIFTY SPOT பொதுவாக

நாம் முன்னர் பார்த்தது போல உலக சந்தைகள் இறக்கத்தின் இருக்கும் எதிரொலியாக வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் இந்த 4765 TO 4760 என்ற புள்ளியை கடந்து கீழே முடிவடைந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் அதிகமாகும் மேலும் தற்பொழுது 4930 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து 2 நாட்கள் மேலே NIFTY SPOT முடிவடயுமானால் இந்த வீழ்ச்சிகள் சற்று தள்ளிப்போகும் வாய்ப்புகள் ஏற்ப்படும், ஆகவே தற்பொழுது நாம் பார்க்க வேண்டிய முக்கியமான புள்ளிகள் 4760 என்ற புள்ளி இறக்கத்திற்கும் , 4930 என்ற புள்ளி உயர்வதற்கும்,

மேலும் தற்பொழுது ஏற்ப்படும் இந்த இறக்கம் நல்ல முறையில் இருக்குமா அல்லது சிறிய வீழ்ச்சிகளுடன் திரும்புமா என்பதை கீழே கொடுத்துள்ள சில விளக்கங்களை வைத்து முடிவு செய்யலாம்

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக:-

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதினால் சந்தையில் எப்பொழுதும் FII களின் வாங்கும் சக்தி அதிகமாகும், அதே நேரம் ருபாய் மதிப்பு கீழ் இறங்கும் போது FII களின் விற்கும் சக்தி அதிகமாகும், இதை இப்பொழுது விளக்கமாக் சொல்வது பயனுள்ளதாக் இருக்கும் என்றே கருதுகிறேன்,

அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்வதாக வைத்துக்கொள்ளுங்கள்(அதாவது 1 டாலர் = 50 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள்) , அப்படியானால் அவர்கள் 1 டாலர் நம்மிடம் கொடுத்தால் நாம் அவர்களுக்கு 50 ரூபாய் இந்திய பணம் தரவேண்டும் இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பங்குகளை வாங்குவார்கள், அதே நேரம் இந்திய மதிப்பு டாலருக்கு எதிராக 43 ரூபாயாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது அவர்கள் 43 ருபாய் நம்மிடம் கொடுத்தால் நாம் அவர்களுக்கு 1 டாலர் தர வேண்டும், இப்படி இருக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள் 50 ருபாய் இருக்கும் போது நம்மிடம் டாலரை தந்து பணம் வாங்கி பங்குகளை வாங்குவார்கள், 43 ருபாய் இருக்கும் போது பங்குகளை விற்று 43 ரூபாயை கொடுத்து 1 டாலரை வாங்கிக்கொள்வார்கள், பாருங்கள் சும்மாவே அவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கின்றது என்று,

ஆகவே தான் எப்பொழுதெல்லாம் இந்திய மதிப்பு டாலருக்கு எதிராக உயர்கிறதோ அப்பொழுதெல்லாம் பங்கு சந்தை உயர்ந்து கொண்டுதான் இருக்கும் எப்பொழுதெல்லாம் இந்திய மதிப்பு வீழ்கிறதோ அப்பொழுதெல்லாம் பங்கு சந்தை செமையாக அடி வாங்கும், சரி இப்பொழுது நமது சந்தைகள் TECHNICAL ஆக இறங்கும் வாய்ப்புகள் உள்ளது இதற்க்கு ருபாய் மதிப்பு ஒத்துளைக்கின்றதா என்று பார்த்து விடுவோம் வாருங்கள்,

கீழே கொடுத்துள்ள படத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் நகர்வுகளுக்கான வரைபடம் கொடுத்துள்ளேன் அதில் உள்ள படி தற்பொழுது இந்திய மதிப்பு 48.5 என்ற அளவுகோலின் சுற்று வட்டாரங்களில் உள்ளது, இந்த TECHNICAL வரை படத்தின் படி இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூபாயை கடந்தால் சந்தையில் வீழ்ச்சிகள் அதிகமாக இருக்காது உயரத்தான் செய்யும் ஏன் எனில் FII களின் வாங்கும் திறன் அதிகமாகும்,

அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 48.2 என்ற புள்ளியை கடந்து அடுத்து 47.3 என்ற முக்கியமான SUPPORT ஐ கீழே கடந்து 46 என்ற புள்ளியை உடைத்தால் சந்தையில் சொல்லிக்கொள்ளும் படியான வீழ்ச்சிகள் இருக்கும் அதாவது 3918 ஐ நோக்கி கூட வரலாம் (வாய்ப்புகள் உள்ளது என்று தான் சொல்கிறேன் அடித்து சொல்ல வில்லை), ஆகவே இந்திய ரூபாயின் மதிப்புகளை கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் , படத்தை பாருங்கள்

INR CHART AGAINST DOLLAR


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4830 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4865 TO 4875 என்ற புள்ளிகள் சற்று முக்கியமான தடைபுள்ளிகளாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் உலக சந்தைகளின் போக்குகள் இறக்கத்தில் இருப்பதினால் இந்த புள்ளிகளை நோக்கி வருமா என்பதும் சற்று சந்தேகம் தான், அதேபோல் NIFTY கீழே வீழ்ச்சியடைய 4812 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருந்தாலும் 4764 என்ற புள்ளி முக்கியத்த்துவம் வாய்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் இந்த புள்ளியை கீழே கடந்தால் அடுத்து ஒரு 100 புள்ளிகளை NIFTY இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளியை சற்று கவனமாக பார்க்கலாம்

NIFTY SPOT முக்கியமான நிலைகள்

NIFTY SPOT ABOVE 4830 TARGET 4865, 4875, 4929, 4951, 4964, 4996, 5025

NIFTY SPOT BELOW 4823 TARGET 4812, 4809 TO 4805, 4795, 4765, 4746,
4734, 4712, 4707, 4699, 4690, 4660

கவனிக்க வேண்டிய பங்குகள்

SBI FOR TRADING

SELL IF NOT CROSS 1941 TARGET 1888, 1882 TO 1880, 1866 TO 1864, 1856 S/L 1947

BUY ABOVE 1947 TR 1955, 1984, 2046, 2147, S/L 1933 0R 1941

SBI FOR SHORT TERM INVESTMENT

இந்த பங்கில் கீழே கொடுத்துள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள படி 1958 TO 1964 என்ற புள்ளிகளில் நல்ல தடைகள் இருப்பதினால் இந்த புள்ளிகளில் இருந்து கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் இந்த புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் இதன் அடுத்த இலக்காக 2280 TO 2300 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 1864 என்ற புள்ளியில் நல்ல SUPPORT இருக்கும் காரணத்தாலும் சந்தையில் இறக்கம் வரும் வாய்ப்புகள் இருப்பதாலும் இந்த 1855 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 1865 TO 1855 என்ற புள்ளிகளில் இருந்து மீட்சி அடையுமானால் வாங்கலாம், கண்டிப்பாக S/L கடை பிடியுங்கள், இல்லையே வாங்காதீர்கள் , படத்தை பாருங்கள்


SBI CHART