Friday

Nifty Spot on 09-10-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் போக்குகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தாலும் support எடுக்கும் புள்ளிகளுக்கு இடையே ஆடிவருவது எந்த நேரமும் உயரும் வாய்ப்புகளை தரும், இந்த volatile என்ற நிலையினால் நமது சந்தைகளிலும் சில பதட்டங்கள் இருந்தாலும், கீழே வந்தால் வாங்கியும், மேலே சென்றால் முழுவதையும் லாபம் பார்க்காமல் ஒரு 50% அளவிற்கு லாபம் பார்த்தும் வர்த்தகம் செய்யலாம், மேலும் 4900, மற்றும் 5111 இந்த இரண்டு புள்ளிகளில் எந்த புள்ளி உடைபடுகிறதோ அதன் திசையில் சந்தையின் பயணம் இருக்குமாதலால் 4900 s/l என்று வைத்துக்கொள்ளுங்கள் ,,,

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை 5003 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் சூழ்நிலைகள் உள்ளது, மேலும் 5041 to 5045 , மற்றும் 5067 என்ற புள்ளிகள் சில தடைகளை தரலாம், 5067 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும் அப்படி ஏற்படுமாயின் buying இல கவனம் செலுத்தலாம், அடுத்து 5002 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் 4980, 4963, 4950 என்ற புள்ளிகள் நல்ல support புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது, 4900 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் தொடர் வீழ்ச்சிகளும், 5111 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் தொடர் உயர்வுகளும் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளது, அது வரை இந்த புள்ளிகளுக்கிடையே உசலாட்டம் இருக்கும்

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5003 Target 5040 to 5043, 5061 to 5067, 5128, 5134, 5140, 5250

Nifty Spot below 5002 Target 4985, 4979, 4954 to 4953, 4935, 4900, 4888 to 4886,
4873

கவனிக்க வேண்டிய பங்குகள்

Tata Power

இந்த பங்கில் சந்தை துணை நின்றால் நல்ல உயர்வுகளை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 1312 to 1308 என்ற புள்ளிகளின் இடையே வாங்கலாம், இதன் s/l ஆக 1305 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், மேலும் சந்தையின் துவக்கத்தில் நடக்கும் விளையாட்டுகளில் இரண்டு பக்கமும் உடைபட்டால் சற்று பொறுத்து, மறுபடியும் எந்த புள்ளியை உடைத்து நகர்கிறதோ அதன் திசைகளில் உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள், இதன் இலக்குகளாக 1328, 1332 என்ற புள்ளிகளும், இந்த 1332 க்கு மேல் 1352 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, 1352 க்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கும் இலக்காக 1368, 1398 என்று கொள்ளலாம்.

Tata Power chart


நேற்றைய பரிந்துரை Crompton s/l hit ஆனது, இருந்தாலும் இந்த பங்கில் நல்ல உயர்வுகள் விரைவில் சாத்தியமாகும், வாங்கி இருப்பவர்கள் 318 என்ற புள்ளியில் Fibonacci support ம் , அதை கடந்தால் அடுத்து 305 என்ற புள்ளியில் நல்ல support ம் இருப்பதால் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம், நேற்று lose book செய்து இருந்தால் 318, 305 என்ற புள்ளிகள் வந்தால் மறுபடியும் வாங்குங்கள் இதன் s/l 295 இலக்கு 365