Friday

தேசிய பங்குச்சந்தை 15-01-10


உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்த இலக்கினை (above 10600 TR 10900) நோக்கி அமெரிக்க index Dow Jones நகர்ந்து வருகிறது, தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5301, 5320, 5340, 5375, 5390 என்ற புள்ளிகள் எல்லாம் Nifty Spot க்கு தடைகளை தரலாம், மேலும் 5259 support ஆக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5270 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும்! 5301 என்ற புள்ளியில் சில தடைகளை சந்திக்கலாம், இந்த புள்ளிக்கு மேல் சக்தியுடன் செயல்படும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்த இலக்காக 5370 to 5390 என்ற புள்ளிகளை சொல்லலாம், இருந்தாலும் 5320, 5340 என்ற புள்ளிகள் சில மெலிதான தடைகளை தரும் சக்திகளை பெற்றுள்ளது என்பதும் உண்மையே,,,

அதே போல் 5270 என்ற புள்ளியை தாக்கு பிடிக்காமல் இருந்தாலே வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்! இருந்தாலும் 5259 என்ற புள்ளிக்கு கீழ் இன்னும் சற்று உறுதி செய்து கொள்ளலாம், பொதுவில் சந்தை ஒரு திசையை அற்ற போக்கில் தான் இருக்கிறது என்று சொல்வது உண்மையே,

ஏதாவது ஒரு மிகப்பெரிய விஷயம் சந்தையில் நடக்கும்! அன்று முதல் சந்தையின் போக்குகளில் மாற்றங்கள் ஏற்படும், அதாவது திடீரென ஒரு நல்ல உயர்வோ! அல்லத்து நல்ல வீழ்ச்சியோ! ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது, அதன் பிறகு தான் அடுத்த கட்ட நகர்வுகள் சற்று தெளிவாக இருக்கும், அதுவரை இப்படி தான் மேலும் கீழும் அல்லது flat என்ற நிலையிலும் ஆடி வரும்,

கடந்த ஒரு மாதம் முன்பே mid cap & small cap பங்குகளில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லி இருந்தேன்! இன்று அனைத்து சிறிய வகை பங்குகளை எல்லாம் பாருங்கள், இப்பொழுது அனைவரும் இந்த வகை பங்குகளை கவனிக்க சொல்லி வருகிறார்கள், மேலும் 5170 to 5160 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி இருந்தோம்! அதன் படியே சந்தை திரும்பி இருக்கிறது, தற்பொழுது 5301, 5340 என்ற புள்ளிகள் முக்கியமானது


Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5270 Target 5285, 5301, 5315 to 5320, 5340 to 5344, 5359 to 5362,
5383, 5407, 5417, 5443, 5512

Nifty Spot below 5259 Target 5239, 5222, 5200, 5148, 5054

கவனிக்க வேண்டிய பங்குகள்

Rcom

Buy above 186.5 Target 196, 198, s/l 176 close (positional call 5 to 10 days)