Thursday

தேசிய பங்குச்சந்தை 21-01-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் நேற்றைய முடிவுகள் பதட்டத்தை தந்தாலும், தற்பொழுதைய உலக சந்தைகளின் நிலை பதட்டத்தை சற்று தணிக்கும் வகையில் தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக nifty spot க்கு இன்று 5205, 5175, 5166 என்ற புள்ளிகள் நல்ல support ஆகவும், 5227, 5243, 5266 என்ற புள்ளிகள் நல்ல தடைகளாகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty spot ஐ பொறுத்தவரை இன்று 5227 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், தொடர்ந்து 5243, 5266 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும் உள்ளது, இந்த புள்ளிகளுக்கு மேல் நல்ல உயர்வுகள் தொடரும்,

அதே போல் 5207 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 5175 to 5160 என்ற புள்ளிகள் வரை கீழே வரும் வாய்ப்புகளும் உள்ளது, பொதுவாக கீழே உள்ள படத்தில் காட்டியுள்ள படி பெரிய அளவிலான இறக்கங்கள் சந்தையில் வர வேண்டுமாயின் கீழே படத்தில் கொடுத்துள்ள முக்கியமான மூன்று support களை Nifty spot உடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்,

அதாவது

5190 என்ற புள்ளியில் உள்ள rising wedge bottom trend line support
5170 to 5160 இல் உள்ள trend line support மற்றும் bottom support
5125 என்ற புள்ளியில் உள்ள Fibonacci support

இந்த மூன்று support களையும் உடைத்து சக்தியுடன் தொடர்ந்து இறங்கினால் நமது சந்தையில் இறக்கங்கள் 5040 to 4950 என்ற புள்ளிகளை நோக்கி வரலாம், அதே நேரம் இவ்வாறு இல்லாமல் தொடர்ந்து flat மற்றும் volatile என்ற நிலையிலே இருந்தால் உயர்வுகள் தொடரும், பொதுவில் 5325 என்ற புள்ளிக்கு மேல் தான் உயர்வுகள் சாத்தியம், இந்த மாதம் சற்று சரி இல்லாத மாதம் என்றே தோன்றுகிறது,

Nifty Spot chart


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5227 Target 5243, 5266, 5311, 5333, 5353, 5389

Nifty Spot below 5207 Target 5175, 5166, 5155, 5146, 5132, 5118, 5114, 5040

கவனிக்க வேண்டிய பங்குகள்

சந்தை தனது சரியான பயண திசையை காட்டாமல் இருப்பதினால், இன்னும் சில நாட்களுக்கு பங்குகளின் பரிந்துரைகள் தவிர்க்கலாம் என்று இருக்கின்றேன்,