Friday

தேசிய பங்குச்சந்தை இனி வரும் நாட்களில் எப்படி நகரலாம் -29-01-10


NIFTY SPOT இனி வரும் நாட்களில் எப்படி செயல்படலாம் :-


கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியுள்ளபடி தற்பொழுது NIFTY SPOT க்கு சில முக்கியமான விஷயங்கள் அதன் CHART படங்களில் அமைந்து உள்ளது, அவைகளை பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்,,,

• கடந்த 2009 JUNE மாதம் முதல் NIFTY SPOT ஒரு CHANNEL என்ற அமைப்பில் தான் நகர்ந்து வருகிறது (CHART படத்தில் பச்சை நிறத்தில் C என்ற எழுத்தால் சுட்டி காட்டப்பட்டுள்ளது),


• கடந்த சில தினங்களுக்கு முன்பு 5190 என்ற புள்ளியில் ஒரு TRIANGLE என்ற அமைப்பு 4650 என்ற புள்ளியை கீழ் நோக்கிய இலக்காக வைத்து உடைபட்டுள்ளது, (CHART படத்தில் சிகப்பு நிறத்தில் "A & A1" என்ற எழுத்தால் சுட்டி காட்டப்பட்டுள்ளது),

• மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 4950 என்ற புள்ளியில் ஒரு CHANNEL அமைப்பு 4450 என்ற புள்ளியை கீழ் நோக்கிய இலக்காக வைத்து உடைபட்டுள்ளது, (CHART படத்தில் ஊதா நிறத்தில் B என்ற எழுத்தால் சுட்டி காட்டப்பட்டுள்ளது),

• தற்பொழுது 4650 என்ற புள்ளியில் CHART படத்தில் சுட்டி காட்டியுள்ள படி ஒரு CHANNEL அமைப்பின் SUPPORT உள்ளது (CHART படத்தில் சிகப்பு நிறத்தில் இடைவெளி விட்ட கோட்டினால் "A2" & "A" என்ற எழுத்தால் சுட்டி காட்டப்பட்டுள்ளது),

• 4640 என்ற புள்ளியில் 200 நாட்களுக்கான EMA SUPPORT உள்ளது,

•அடுத்து 4660 மற்றும் 4610 என்ற புள்ளிகளில் முக்கியமான FIBONACCI RETRACEMENT SUPPORT உள்ளது, (FROM 2540 TO 5310, AND FROM 3918 TO 5310),

• அடுத்து மிக முக்கியமான முதல் நிலை CHANNEL அமைப்பின் SUPPORT சரியாக 4550 TO 4540 என்ற புள்ளிகளில் உள்ளது, (CHART படத்தில் பச்சை நிறத்தில் C என்ற எழுத்தால் சுட்டி காட்டப்பட்டுள்ளது),

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் கீழே உள்ள படத்தில் இருப்பதை மெதுவாக பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள் …

NIFTY SPOT EOD CHART PICTURE





மேற்கண்ட விசயங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் விஷயங்கள் :-

NIFTY யின் வரைபடத்தில் அமைந்துள்ள மேற்கண்ட விசயங்களில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம், அதாவது NIFTY SPOT இன் வரைபடத்தில் எழு முக்கியமான விஷயங்கள் அமைந்துள்ளது, அதாவது TRIANGLE அமைப்பு , 2 CHANNEL அமைப்பு , EMA SUPPORT , மற்றும் FIBONACCI SUPPORT இந்த விசயங்களை வைத்து நாம் NIFTY யின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வரலாம் அவைகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்


முதலில் C என்று குறிப்பிடப்பட்டுள்ள CHANNEL அமைப்பை பற்றி பார்ப்போம்

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் தற்பொழுது வரை NIFTY யின் நகர்வுகள் இந்த CHANNEL அமைப்பிற்குள் தான் இருந்து வருகிறது, அதாவது ஒரு பலமான காம்பவுண்ட் சுவருக்குள் இருக்கும் வீட்டில் வாழ்வது போல, இந்த காம்பவுண்ட் சுவருக்குள் இருக்கும் வீட்டில் வாழ்பவர்கள் அந்த சுவற்றுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவர்களை தட்டி கேட்பவர்கள யாரும் கிடையாது,

ஒரு வேலை அந்த சுவற்றை தாண்டி அதில் வாழ்பவர்கள் ஏதாவது தவறு செய்ய நேர்ந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படும், தற்பொழுது அதே போன்றதொரு நிலையில் தான் NIFTY இருந்து வருகிறது, தற்பொழுது NIFTY SPOT இன் அந்த காம்பவுண்ட் சுவராக 4530 என்ற புள்ளி அமைந்துள்ளது,

ஒரு வேலை இந்த புள்ளி உடைக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் முடிவடயுமானால்! அடுத்து ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியை நாம் சந்திக்க நேரலாம், இன்னும் சொல்ல வேண்டுமானால் 3500 என்ற புள்ளி! கீழ் நோக்கிய இலக்காக இந்த C என்ற CHANNEL அமைப்பின் படி அமையும்,

ஆகவே இந்த 4530 என்ற புள்ளி உடைபடும் வாய்ப்புகள் உள்ளதா என்று பார்ப்போம், அதற்க்கு இந்த C என்ற CHANNEL அமைப்பிற்குள் இருக்கும் மற்ற அமைப்புகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்

மற்ற அமைப்புகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5190 என்ற புள்ளியில் ஒரு TRIANGLE அமைப்பு 4650 என்ற புள்ளியை கீழ் நோக்கிய இலக்காக வைத்து உடைபட்டுள்ளது, இதன் படி NIFTY SPOT 4650 என்ற புள்ளியை கீழ் நோக்கி வர வேண்டும், இந்த கீழ் நோக்கிய இலக்கு நமது காம்பவுண்ட் சுவரான 4530 என்ற புள்ளிக்குள் வருகிறது,

ஆனால் அடுத்து 4950 என்ற புள்ளியில் ஒரு CHANNEL அமைப்பு 4450 என்ற புள்ளியை கீழே நோக்கிய இலக்காக வைத்து உடைபட்டுள்ளது, இந்த கீழ் நோக்கிய இலக்கு நமது காம்பவுண்ட் சுவரான 4530 என்ற புள்ளிக்கு வெளியே வருகிறது, இங்கு தான் நமக்கு சற்று பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புகள் தெரிகிறது,

ஒருவேளை இந்த CHANNEL அமைப்பின் படி NIFTY SPOT 4450 என்ற புள்ளியை நோக்கி நகருமானால் நமது காம்பவுண்ட் சுவரான 4530 என்ற புள்ளியும் உடைபடும், அவ்வாறு உடைபட்டால் இந்த C என்ற CHANNEL அமைப்பின் படி கீழ் நோக்கிய இலக்காக 3500 என்ற புள்ளி அமையும்,

இவ்வாறு இந்த 4530 என்ற புள்ளி உடைபடுவது காம்பவுண்ட் சுவருக்குள் வாழ்பவர்கள் பக்கத்தில் வசிக்கும் நண்பரின் கண்ணாடி மாளிகையை நோக்கி கல்லெறிவதற்கு சமம், இவ்வாறு நடந்தால் என்ன நடக்கும் யோசித்து பாருங்கள் பக்கத்து வீட்டு நண்பர் போலிஷ், கேஸ் என்று செல்லும் வைப்புகளும் அல்லது பஞ்சாயத்து பெனால்டி என்று ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படும்,

அதே நேரம் இந்த காம்பவுண்ட் சுவரான 4530 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு சில முக்கியமான் SUPPORT இருப்பதை பற்றி கொஞ்சம் பார்ப்போம்,

அதாவது TRIANGLE அமைப்பின் படி கீழ் நோக்கிய இலக்கு 4640, அடுத்து 4660 TO 4610 என்ற புள்ளிகளில் FIBONACCI SUPPORT, 4660 என்ற புள்ளியை BOTTOM SUPPORT ஆக பெற்றுள்ள CHANNEL BOTTOM LINE (A&A2),

ஆகவே இந்த 4650 TO 4610 என்ற புள்ளிகள் வரை மிக முக்கியமான மேலும் அதிக எண்ணிக்கையிலான SUPPORT கள் அமைந்துள்ளது, ஆகவே இங்கிருந்து சந்தை உயர ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஒரு வேலை இந்த 4600 என்ற புள்ளியும் உடைப்படுமானால், அடுத்து மிக முக்கியமான SUPPORT ஆக நமது காம்பவுண்ட் சுவரான 4530 என்ற புள்ளி செயல்படும்,

கவலை படாதீர்கள் ஏற்கனவே 4450 என்ற புள்ளியை கீழ் நோக்கிய இலக்காக வைத்து ஒரு CHANNEL FORMATION உடைபட்டு இருந்தாலும், தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஜான் டி ரோட்ஸ் போன்ற திறமையான் FIELDER நமது காம்பவுண்ட் சுவரை தாண்டி இந்த 4450 என்ற புள்ளியை நோக்கி NIFTY SPOT இன் CHANNEL அமைப்பு எறிந்துள்ள கல்லை பிடிப்பதற்காக இருப்பதாக நம்புவோம்,

ஏனெனில் ஐந்தாறு பேர் சேர்ந்து SUPPORT கொடுக்கும் போது ஒரே ஒருவரால் அத்தனை பேருடைய பலத்தையும் முறியடிக்க முடியாது இல்லையா, ஆகவே 4650 TO 4600 என்ற புள்ளிகள் வரும் போது நாம் நமக்கான பங்குகளை வாங்க ஆரம்பிக்கலாம்,

ஒரு வேலை இந்த புள்ளி உடைபட்டால் அடுத்து 4530 என்ற புள்ளி வரை வரும் வாய்ப்புகள் இருப்பதால் அங்கும் கொஞ்சம் வாங்கும் அளவுக்கு கையில் பணம் வைத்துக்கொள்வது நல்லது,

ஒரு வேலை 4530 என்ற புள்ளி உடைபட்டு தொடர்ந்து முடிவடயுமானால்! இதற்க்கு உலக சந்தைகளும் துணை நின்றால்! அடுத்த கீழ் நோக்கிய இலக்கு 3500 தான் மேலும் இந்த 3500 என்ற புள்ளி ELECTION RESULT வந்த பொழுது உயரத்தொடங்கிய இடம் இதையும் மனதில் கொள்ளுங்கள்

சரி மறுபடியும் படத்தினை பாருங்கள், உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்