Friday

NIFTY ON FRIDAY

07-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

நேற்றைய அமெரிக்க சந்தைகளில் வீழ்ச்சி மேலும் தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKETலும் சிறிய வீழ்ச்சி, இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளும் நேற்றைய நிலயை தொடர்ந்து இறங்கிக்கொண்டுள்ளது, ஆசிய சந்தைகளை பொறுத்தவரை HANG SENG 20200 என்ற புள்ளியில் நல்ல SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் இந்த புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும், அதே போல் NIKKEI ஐ பொறுத்த வரை 10220, 10190, 10120 என்ற இந்த புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகளும் 10120 ஐ கீழே கடந்தால் மேலும் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே ஆசிய சந்தைகளின் இந்த புள்ளிகளை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்,DOW JONES 9190 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் நல்ல SUPPORT உள்ளது இந்த புள்ளியை சக்தியுடன் கடந்தால் அடுத்து 9050 TO 9040 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 35 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கினாலும் OPEN மற்றும் LOW என்ற நிலைகளை ஒரே புள்ளியாக பெற்று இன்னும் அந்த புள்ளிகளை கீழே உடைக்க முடியாமல் மேலும் கீழும் ஆடி வருகிறது, இந்த நிலைகளை எல்லாம் வைத்து பார்க்கும் பொது நமது சந்தையில் உயரும் வாய்ப்புகள் உள்ளது, அதற்க்கு மேலே சொன்ன புள்ளிகளில் உலக சந்தைகள் SUPPORT எடுக்க வேண்டும், மேலும் SINGAPORE NIFTY OPEN மற்றும் LOW என்ற நிலைகளை உடைக்காமல் இருக்க வேண்டும், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று, மேலும் இன்று வாரத்தின் கடைசி நாள் பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY - பொதுவான கண்ணோட்டம்

வரும் வரும் என்றும் வந்தால் நல்லது என்றும் நாம் எதிர்பார்த்த CORRECTION வந்தே விட்டது அந்த வகையில் மகிழ்ச்சியே, இனி INDICATOR களில் OVER BOUGHT என்ற சூழ்நிலைகள் இல்லாமல் இருக்கும், மேலும் தற்பொழுது ஏற்ப்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சி NIFTY ஐ பொறுத்தவரை 4370, 4325 என்ற இந்த இரண்டு புள்ளிகளின் இடையே எங்காவது SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது இந்த 4325 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்தார்ப்போல் 2, 3 நாட்கள் முடிவடைந்தால் NIFTY இன அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 4000 என்ற புள்ளி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் தற்பொழுது FIBONACCI அளவுகளின் படி 4540, 4420 TO 4400, 4377, 4325 என்ற இந்த புள்ளிகள் NIFTY க்கு நல்ல SUPPORT கொடுக்கலாம்,

NIFTY இன்று

NIFTY ஐ பொறுத்த வரை இன்று தொடர்ந்து உயர வேண்டுமானால் 4601 என்ற புள்ளியை கடந்தாலே போதுமானதாக இருந்தாலும் சில தடைகள் அருகில் இருப்பதினால் 4631 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து ஒரு விரைவான உயர்வுகள் இருக்கும் சூழ்நிலைகள் வருவதால் இந்த புள்ளிக்கு மேல் LONG POSITION ஐ எடுக்கலாம், மேலும் 4683 TO 4695 என்ற புள்ளிகளின் இடையே சில தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த 4695 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து 4723 TO 4730, 4750 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது அப்படி ஏற்படுமாயின் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

அதே போல் NIFTY கீழே தொடர்ந்து வீழ்ச்சியடைய வேண்டுமாயின் 4574 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4554 TO 4549 என்ற புள்ளிகளை இடையே சப்போர்ட் எடுக்கும் வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது, அதே நேரம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4500, 4470 TO 4445, 4410 என்று செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, அப்படி ஏற்படுமாயின் அதையும் பயன்படுத்துங்கள்..

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4615 TARGET 4631, 4683, 4690 TO 4695, 4723, 4730 TO 4734, 4738, 4752

NIFTY SPOT BELOW 4574 TARGET 4555 TO 4549, 4505, 4466, 4453, 4446, 4413, 4387, 4372

கவனிக்க வேண்டிய பங்குகள்

RCOM

இந்த பங்கு அதன் 200 DEMA க்கு அருகில் உள்ளது ஆகவே 268 என்ற புள்ளியை S/L வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்காக 274, 276, 280, 285, 290 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள், மேலும் 268 என்ற புள்ளிக்கும் கீழ் SHORT SELL பண்ணலாம் இலக்காக 264, 261, 257, 253, 243 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள் இதன் S/L 275


R.POWER, SUZLON, DR REDDY, JP ASSOCIATE

இந்த பங்குகள் முக்கியமான SUPPORT இன் அருகில் இருப்பதால் சந்தை சாதகாமாக இருக்கும் பட்சத்தில் உயரும் வாய்ப்புகள் உள்ளது, சூழ்நிலை பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்