04-08-09
அமெரிக்க சந்தைகள் நாம் எதிர்பார்த்தது போல 8880 என்ற புள்ளிகளில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இதன் எதிரொலியாக அனைத்து சந்தைகளும் உயர்வில் இருக்கின்றது, இருந்தாலும் அனைவரின் மனதிலும் ஒருவித பயம் தொற்றிக்கொண்டுள்ளது நன்றாகவே தெரிகிறது, இருந்தாலும் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருப்பதினால் சந்தைகளில் சிறிய சிறிய வீழ்ச்சிகள் வந்தால் நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம்,
நேற்றைய அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளது, இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயர்வுகளுடன் தொடங்கினாலும், தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று இறக்கத்துடன் காணப்படுவதால், ஆசிய சந்தைகளில் உயரங்களில் தடுமாற்றம் தென்படுகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 47 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் OPEN மற்றும் HIGH என்ற நிலைகளை ஒரே புள்ளியாக பெற்று தொடர்ந்து உயர முடியாமல் 0 என்ற நிலைமைக்கு வந்து தற்பொழுது 15 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் நடந்து வருவது நமது சந்தைகளில் PROFIT BOOKING வரும் வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்,
இருந்தாலும் நமக்கு இன்னும் 4780 TO 4815 என்ற புள்ளிகள் வரை உயரலாம் என்ற வாய்ப்புகள் இருப்பதினால், உலக சந்தைகள் உயரும் பட்சத்தில் இங்கும் உயர்வுகள் 4815 TO 4840 வரை இருக்கும், மேலும் STOCK SPECIFIC நகர்வுகள் கண்டிப்பாக இருக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது, பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்...
NIFTY ஐ பொறுத்த வரை நேற்று நாம் எதிர்பார்த்தது போல FLAT மற்றும் VOLATILE என்ற நிலையிலே இருந்து கடைசி அரை மணி நேரத்தில் புதிய உயரங்களை எட்டியது, மேலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக கடைசி நேரங்களில் சந்தை வலுவுடன் உயர்வது PROFIT BOOKING வருவதற்கான ஏற்பாடுகளாக கொள்ளலாம், அதே நேரம் NIFTY 4700 என்ற புள்ளியை கடந்து முடிந்து இருந்தாலும் அடுத்து 4800 TO 4840 என்ற புள்ளிகள் முக்கியமான தடையாக கொள்ளலாம்
அதாவது 2008 ஜனவரி HIGH புள்ளி முதல் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்ப்பட்ட LOW புள்ளியான 2252 என்ற இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட FIBONACCI அளவுகளில் முக்கியமான அளவான 61.8% என்ற அளவு சரியாக 4803 TO 4815 என்ற புள்ளிகளுக்கிடையே வருவதும் அடுத்து 4840 என்ற புள்ளியும் முக்கியமானதாக இருப்பதினால் நாம் தற்பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய புள்ளியாக 4780, 4803 TO 4815, 4840 இந்த புள்ளிகளை கொள்ளலாம், இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் உயர்வுகள் தொடரும்,
ஆனால் INDICATOR களின் நிலைமை தான் சற்று உறுத்தலாக இருக்கின்றது, அதே நேரம் NIFTY இன் PE RATIO 21 என்ற புள்ளியை கடந்து இருந்தாலும் 22 TO 23 க்கு மேல் சென்றால் கவலைபடலாம், ஆகவே தற்பொழுது 4780 TO 4840 என்ற புள்ளிகளை தொட்டு ஒரு சிறிய CORRECTION ஐ சந்தித்து மீண்டும் உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது, மேலும் NIFTY 5196 என்ற இலக்கை அடைவதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவே CHART படங்களில் தெரிகிறது,
NIFTY SPOT ஐ பொறுத்த வரை இன்று 4713 என்ற புள்ளியை கடந்தால் உயர்வதக்கான வாய்ப்புகள் உருவாகும், மேலும் 4772 TO 4780 என்ற புள்ளிகளில் சற்று தடை ஏற்படலாம், மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் அடுத்து 4803 TO 4815 என்ற புள்ளிகளில் நல்ல தடை வரலாம், அதே போல் NIFTY கீழ் இறங்க வேண்டுமாயின் 4689 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருந்தாலும் இந்த 4689 TO 4667 என்ற புள்ளிகளுக்கிடையே நல்ல SUPPORT இருப்பதினால் 4667 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் வீழ்ச்சிகள் விரைவாக வரும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4635, 4600 என்று கீழே வரும் வாய்ப்புகள் அதிகமாகும்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4713 TARGET 4735, 4747, 4772, 4811 TO 815, 4841, 4851 TO 854, 4872, 4890, 4910
NIFTY SPOT BELOW 4689 TARGET 4870 TO 4667, 4635, 4609 TO 4605, 4577 TO 576, 4545 TO 543,
கவனிக்க வேண்டிய பங்குகள்
அநேக பங்குகள் கவனிக்க வேண்டிய விதத்தில் தான் உள்ளது இருந்தாலும் கொடுப்பதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது, இருந்தாலும் கவனிக்க வேண்டிய பங்குகளாக கீழ் கண்டவைகளை பாருங்கள், மேலும் கடந்த வாரத்தில் AUTO வகை பங்குகளை கவனிக்க சொல்லி கொடுத்து இருந்தேன், அனைத்து பங்குகளும் 20 TO 30 % அளவிற்கு உயர்ந்துள்ளது, BHARAT FORGE, போன்ற பங்குகள்
CAIRN, STERLITE IND, ABAN, SAIL, APIL,