Monday

NIFTY ON MONDAY

03-08-09

அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளியன்று கலந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளும் தொடக்கம் முதல் +, - என்று மாறி மாறி மேலும் கீழும் ஆடி வருகிறது, இது போன்ற சூழ்நிலைகளில் TREND முடிவு செய்யப்படும் வரை சந்தைகளில் பதட்டம் மேலோங்கி நிற்கும், அந்த வகையில் DOW JONES FUTURE 9070, 9050 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் அதிகமாகும் போல் உள்ளது, அதே போல் 9140, 9175, 9205 என்ற புள்ளிகளை மேலே கடந்து சென்றால் உயர்வுகள் தொடரும், இதனை பின்பற்றியே அனைத்து சந்தைகளும் நகரும் வாய்ப்புகள் இருப்பதினால் இதில் ஒரு கண் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்,

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 6 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் OPEN AND HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தற்பொழுது 35 புள்ளிகளுக்கு மேல் இழந்து வர்த்தகம் செய்து வருகிறது இருந்தாலும் அடிக்கடி மேலும் கீழும் அடி வருவது நமது சந்தைகளிலும் பதட்டமான VOLATILE என்ற நிலையினை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது, இன்றைய சந்தையை பொறுத்த வரை பெரிய நகர்வுகள் எதிர்ப்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது மேலும் கீழும் ஆடி அடங்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே என்ன வேண்டியுள்ளது இருந்தாலும் உலக சந்தைகளின் நிலை எப்படியோ அப்படியே நாமும் தொடருவோம்,

NIFTY கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் எப்பொழுது கீழே வரலாம் அல்லது இன்னும் தொடர்ந்து முன்னேறுமா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் பலமாக இருந்து வரும் இந்த சூழ்நிலையில் NIFTY அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதினை தெளிவாக கூறவேண்டுமானால் கீழே உள்ள படத்தில் சுட்டிக்காட்டியுள்ள படி முதலில் 4700 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து சென்றால் அடுத்து 4800 TO 4840 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் அதிகமாகும்

NIFTY CHART


அதே நேரம் அதிகமான INDICATOR கள் OVER BOUGHT என்ற சூழ்நிலையில் இருப்பது ஒரு விதமான நெருடலை தந்தாலும் இந்த 4700 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் தொடரும் அதே நேரம் INDICATOR களை சரி செய்துகொள்ள அடிக்கடி ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அளவிற்கு சிறிய சிறிய CORRECTION ம் வரலாம் அதே நேரம் தபொழுது 4550 TO 4500 என்ற புள்ளி சற்று முக்கியமானதாக இருப்பதினால் இந்த புள்ளிகளை தொடர்ந்து கீழே கடந்து அதிக VOLUME உடன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் முடிவடைந்தால் சந்தை தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தான் (REFERSH) பின்னர் உயர முற்ப்படும்

NIFTY ஐ பொறுத்த வரை இன்று தொடர்ந்து உயர்வதற்கான புள்ளியாக 4665 என்ற புள்ளியை கொள்ளலாம் இந்த புள்ளியை நல்ல சங்கதியுடன் கடந்து உலக சந்தைகள் துணையாக இருக்கும் சூழ்நிலை வந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது அதே போல் NIFTY கீழே விழ வேண்டும் என்றால் 4626 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதும் என்ற சூழ்நிலைகள் இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பதின் காரணமாக இறக்கங்கள் வரும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின் FLAT மற்றும் VOLATILE என்ற முறையில் இறங்கும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் உலக சந்தைகளில் வேகமான வீழ்ச்சிகள் இருந்தால் இங்கும் அப்படியே நடக்கும் சூழ்நிலைகள் வரலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4651 TARGET 4465, 4688, 4696, 4720. 4735, 4754 TO 4764, 4773 TO 4776, 4801, 4820, 4842

NIFTY SPOT BELOW 4626 TARGET 4616, 4604, 4589 TO 4580, 4570 TO 4563, 4547 TO 4538, 4520, 4505, 4497, 4486

கவனிக்க வேண்டிய பங்குகள்

INFOSYS

இந்த பங்கை 2073 என்ற புள்ளியை S/L ஆக வைத்து SHORT SELL பண்ணலாம் இலக்காக 2047, 2039 TO 2028 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம், மேலும்2063 TO 2067 இந்த புள்ளிகள் அருகே SELL பண்ணலாம், கண்டிப்பாக S/L கடை பிடியுங்கள் மேலும் லாபங்களில் வேகமாக இருங்கள்