Thursday

NIFTY ON THURSDAY

20-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

உயர்ந்து முடிந்துள்ள அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து அதன் FUTURE MARKET லும் சற்று உயர்வை காட்டிக்கொண்டுள்ளது, மேலும் உலக சந்தைகளின் சில முக்கியமான புள்ளிகளை பார்ப்போம், அதாவது DOW 9300 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 9080, 9030 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆசிய சந்தைகளை பொறுத்தவரை NIKKEI 10320 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 10140 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து HANG SENG ஐ பொறுத்தவரை 20400 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 19700 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகளில் இந்த சந்தைகள் என்ன விதமான நிலைகளை எடுக்கின்றதோ அதனை பொறுத்தே நமது சந்தைகளின் நகர்வுகள் இருக்கும்,

மேலும் அனைத்து சந்தைகளும் வீழ்ச்சிகளை சந்தித்து தற்பொழுது மீள முயற்சி செய்வது கவனிக்க வேண்டிய விஷயம், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை உலக சந்தைகளை தொடர்ந்து தொடக்கம் முதல் உயர்ந்து வருவது நமது சந்தைகளில் உயர்வுகளுக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கும் அதேநேரம் உலக சந்தைகள் இன்னும் முழு வீச்சிலான உயர்வுக்கு தேவையான சக்திகளை பெறாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும் ஆகவே இந்த நிலை தொடருமானால் NIFTY க்கு 4442, 4457 என்ற புள்ளிகள் ஒரு சிறிய தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் மேலும் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, அங்கு ஏதும் பிரச்சனை என்றால் 4350, 4320, 4310 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கும்...

NIFTY பொதுவாக

NIFTY ஐ பொறுத்தவரை தற்பொழுது முக்கியமான SUPPORT புள்ளியாக இருப்பது 4320 TO 4310 என்ற புள்ளிகள் என்று நாம் கடந்த சில தினங்களாக பார்த்து வருகிறோம், மேலும் இந்த புள்ளிகளை நல்ல முறையில் கீழே கடந்து முடிவடைந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும், மேலும் தற்பொழுது NIFTY 4730 என்ற புள்ளியில் இருந்து தடைகளை சந்தித்து கீழே வந்து கொண்டுள்ளது, இந்த 4730 என்ற புள்ளி 2008 ஆண்டு நடைபெற்ற பெரிய வீழ்ச்சியில் முக்கியமான FIBONACCI அளவான 61.8% என்ற அளவின் மிக அருகில் உள்ள (4800) புள்ளி ஆகவே இங்கிருந்து நல்ல CORRECTION ஐ சந்திக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அதற்க்கு ஒரு சில முக்கியமான புள்ளிகளை கடந்து ஒரு பெரிய CORRECTION வரப்போகிறது என்று வெளிப்படுத்த வேண்டும்

அவ்வகையில் முக்கியமான புள்ளிகளாக நாம் கருதும் புள்ளிகள் 4300, 4200, 3900 இந்த புள்ளிகளை எல்லாம் கடந்து முடிவடைந்தால் 3200 TO 3100 என்ற புள்ளியை நோக்கி வந்துவிடும், ஆகவே தற்பொழுது நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய புள்ளி 4300 இதற்கான படம் கீழே கொடுத்துள்ளேன் மேலும் NIFTY இந்த 4320 என்ற புள்ளியை SUPPORT ஆக பெற்று உயர முற்ப்பட்டால் கீழே வரும் புள்ளிகள் சில தடைகளை கொடுக்கலாம் அதாவது 4520, 4580, 4620 TO 4630 இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல முறையில் கடந்து சென்றால் தான் அடுத்த உயர்வை பற்றி நாம் சிந்திக்க முடியும், மேலும் அடுத்த வாரம் F&O EXPIRY வேறு உள்ளது ஆகவே தின வர்த்தகர்களும் SWING TRADE செய்பவர்களும் எப்பொழுதும் உங்கள் லாபங்களில் உறுதியாக இருப்பது சிறந்தது.... கீழே உள்ள படத்தை பாருங்கள்

NIFTY EOD CHART



NIFTY WEEKLY CHART


NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY யை பொறுத்த வரை 4403 என்ற புள்ளியை மேலே கடந்தாலே தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் 4442 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதின் காரணமாக 4443 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து 4475, 4498 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகளும் 4500 என்ற அடுத்த தடைப்புள்ளியை கடந்தால் மேலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் உள்ளது, அது போன்று நிகழும் வாய்ப்புகள் உருவானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

அதேபோல் NIFTY வீழ்ச்சியடைய வேண்டுமாயின் 4381 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருக்கும் இருந்தாலும் தொடர்ந்து SUPPORT இருப்பதினால் 4350, 4326, 4311 என்ற புள்ளிகள் எல்லாம் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளலாம், இந்த புள்ளியை கடந்தால் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவோம் என்பதினையும் மனதில் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள், இன்றைக்கு பொறுத்தவரை மேடுபள்ளங்களுடனான சந்தையாகவும் சற்று வேகம் குறைந்த சந்தையாகவும் இருக்குமோ என்று ஒரு ஐயமும் உள்ளது, ஆகவே நகர்வுகளை கவனித்து பின் வர்த்தகத்தை துவங்குங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4403 TARGET 4415, 4421, 423, 426, 4436, 4442, 4457.7, 4476, 4498, 4538, 4543, 4551 TO 4557, 4592, 4641

NIFTY SPOT BELOW 4381, TARGET 4373, 4363, 4350, 4326, 4311, 4306, 4283, 4273, 4260, 4255, 4189

கவனிக்க வேண்டிய பங்குகள்

IFCI

இந்த பங்கில் உயர்வதக்கான வாய்ப்புகள் உருவாக்கி வருவதை அதன் CHART படங்களில் பாருங்கள் மேலும் நல்ல VOLUME நடந்து வருவதையும் கவனிக்கலாம், மேலும் இந்த பங்கில் 57, 58 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினாலும், தற்பொழுதைய சந்தையின் நிலையில் கீழே வந்தால் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் இந்த பங்கில் முதலீடு செய்யலாம், மேலும் 48, 47 என்ற புள்ளிகளில் நல்ல SUPPORT இருப்பதினால் இந்த புள்ளியின் அருகில் வந்தால் வாங்கலாம் இதன் S/L ஆக 44 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொண்டு வாங்கலாம், இலக்காக 60, 67, 77 என்ற புள்ளிகள் இருக்கும், சந்தை உயர ஆரம்பிக்கும் பொது எளிதாக இலக்குகளை அடைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து 4300 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் NIFTY க்கு நல்ல SUPPORT இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்...

IFIC CHART