Wednesday

NIFTY ON WEDNESDAY

19-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் உயர்வுகளில் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET சற்று இறக்கத்துடனும், VOLATILE என்ற நிலையிலும் இருப்பதின் காரணமாக ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி சற்று இறக்கத்துடன் நடந்து வருகிறது, மேலும் உலக சந்தைகளை பொறுத்தவரை இன்னும் ஒரு 50 TO 100 புள்ளிகளை இழந்தாலும் OR பெற்றாலும் அதனை பொறுத்து எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற நிலையில் தான் உள்ளது, ஆகவே அங்கு VOLATILE என்ற மேடுபள்ளங்களுடனான நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY மேலும் கீழும் 20 புள்ளிகள் வித்தியாசத்தில் VOLATILE என்ற சூழ்நிலையில் ஆடி வருகிறது, இந்த நிலைகளை வைத்து பார்க்கும் பொது நமக்கு 4430 மற்றும் 4420 என்ற புள்ளிகள் முக்கிய SUPPORT தரலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4370, 4350, 4330 TO 4320, 4313 என்ற இந்த புள்ளிகள் முக்கிய SUPPORT கொடுக்கலாம், இந்த அனைத்து புள்ளிகளையும் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் அது வரைக்கும் உயர்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும் சாத்தியம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது, ஆகவே இந்த நிலைகளில் கவனமாக பார்த்து முக்கியமான முடிவுகளை எடுங்கள்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 4497 TO 4500 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் சாத்தியமாகும் மேலும் 4530 TO 540, 4557 TO 561, 4581 TO 586, 4611 TO 4615, என்று உயர வாய்ப்புகள் ஏற்ப்படும், ஆகவே 4500 க்கு மேல் BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே நேரம் நேற்றைய இறுதி நேரத்து சந்தை சற்று VOLATILE என்ற நிலையை எடுத்து இருப்பதாலும், இந்த மாதத்தில் உயர்வு தாழ்வுகள் அதிகமாக இருந்ததாலும், வரும் வாரம் சந்தையில் F&O EXPIRY இருப்பதினாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் இரண்டு பக்கமும் S/L HIT ஆகி வேதனையை தரும் சந்தையாக மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யவேண்டிய நேரம் இது,

NIFTY தொடர்ந்து கீழ் இறங்க வேண்டுமாயின் 4435 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4420 என்ற புள்ளியை கீழே கடந்தால் மட்டுமே நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் 4420 என்ற புள்ளியை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் அடுத்து SUPPORT 4375 TO 4370, என்ற புள்ளியிலும் அடுத்து 4350 என்ற புள்ளியிலும் உள்ளது, இதனை தொடர்ந்து 4330, 4320, 4310 இந்த புள்ளிகளை கீழே கடந்தால் மட்டுமே MARKET TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளது, இந்த 4310 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் இலக்காக 4030 என்ற புள்ளியை கொள்ளலாம், ஆகவே 4310 என்ற புள்ளிக்கு கீழ் NIFTY முடிவடையும் வாய்ப்புகள் ஏற்ப்படுமாயின் உங்கள் LONG POSITION களில் இருந்து வெளியேறிவிடுவது சிறந்ததாக இருக்கும்,

NIFTY SPOT இன் இன்றைய முக்கியமான நிலைகள்

தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை ஆதலால் இன்றும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன், சிரமத்திற்கு வருந்துகிறேன்

கவனிக்க வேண்டிய பங்குகள்

UFLEX (I FLEX)

இந்த பங்கில் ஒரு நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதற்கு சந்தை உறுதுணையாக இருக்க வேண்டும், மேலும் இறக்கம் வந்தால் 80 என்ற புள்ளி வரை வாங்கலாம், மேலும் இந்த 80 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் S/L என வைத்துக்கொள்ளலாம், இதன் இலக்காக 97, 103 TO 107 என்ற புள்ளிகள் இருக்கும்