Friday

NIFTY ON FRIDAY

21-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

நேற்றைக்கு அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள் உயர்வுகளுடன் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்துடன் இருப்பதின் காரணமாக ஆசிய சந்தைகள் மேலும் கீழுமாய் ஆடி வருகிறது, இருந்தாலும் சில முக்கியமான புள்ளிகளை கீழே கடந்தால் மட்டுமே வீழ்ச்சிகள் என்ற நிலையில் இருப்பது சாதகமான விஷயம், அந்த வகையில் NIKKEI 10140 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், அடுத்து HANG SENG 19770 TO 19600 என்ற புள்ளிகளை கடக்க வேண்டும், DOW JONES ஐ பொறுத்தவரை 9230 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 9070, மற்றும் 9030 என்ற புள்ளிகள் வரைக்கும் மீண்டும் வரலாம் மேலும் 9030 என்ற புள்ளியை கீழே கடந்தால் மட்டுமே பெரிய அளவில் வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளிகளை எல்லாம் பார்த்துக்கொண்டே வர்த்தக முடிவுகளை எடுப்பது நல்லது (FOR POSITIONAL TRADE),

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 30 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி சற்று உயர்ந்து தற்பொழுது 14 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருப்பது நமது சந்தையில் VOLATILE மற்றும் FLAT நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் உலக சந்தைகள் உயர முற்ப்பட்டால் இங்கும் உயர்வுகள் கண்டிப்பாக இருக்கும், மேலும் இப்பொழுதைய சூழ்நிலையை வைத்து பார்த்தால் 4440 என்ற புள்ளிகள் NIFTY க்கு SUPPORT கொடுக்கலாம் இருந்தாலும் அந்த நேர சூழ்நிலைகளை பொறுத்து தொடக்கமும் நகர்வுகளும் இருக்கும்

NIFTY பொதுவாக

முன்னர் சொன்னதையே தற்பொழுதும் சொல்லவேண்டியுள்ளது கீழே 4300 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து முடிவடைந்தால் மட்டுமே TREND REVERSAL ஆகும் வாய்ப்புகளும் 4520 என்ற புள்ளியை மேலே கட்ந்தால் உயர்வுகள் 4580, 4620 என்று தொடர்ந்து செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, இந்த 4630 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்தால் அடுத்து 4730 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4452 என்ற புள்ளியை கீழே உடைக்காமல் இருந்தாலே உயரும் வாய்ப்புகள் இருக்கும் சூழ்நிலைகள் உள்ளது மேலும் 4467 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சற்று எளிதாக வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் அடுத்து முக்கியமான தடையாக 4507 என்ற புள்ளி இருக்கலாம் இந்த புள்ளியையும் மேலே கடந்தால் அடுத்து உயர்வுகள் நல்ல முறையில் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 4520 என்ற புள்ளி FIBONACCI அளவுகளின் படி ஒரு சிறிய தடைகளை தரலாம்,

NIFTY கீழே இறங்குவதற்கு 4442 என்ற புள்ளிகளை கடக்க வேண்டும் அப்படியே கடந்தாலும் வெகு அருகருகே நல்ல நல்ல SUPPORT இருப்பதயும் கவனிக்க வேண்டியுள்ளது இந்த அனைத்து SUPPORT களையும் கடந்து சக்தியுடன் கீழே வரவேண்டுமாயின் உலக சந்தைகளும், RELIANCE IND 1880 என்ற புள்ளியையும் சக்தியுடன் கடந்து உறுதுணையாக இருக்கவேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில் வீழ்ச்சிகள் விரைவாகவும் VOLATILE என்ற முறையிலும் இருக்கும், அப்படி இல்லாமல் வீழ்ச்சிகள் வந்தால் FLAT மற்றும் VOLATILE என்ற முறையில் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4467 TARGET 4485, 4507, 4548.5, 4553.5, 4560, 4567, 4603.5, 4654

NIFTY SPOT BELOW 4442 TARGET 4432, 429, 427, 4421, 4407 TO 4405, 4396, 4391, 4384, 4377, 4362 TO 360, 4354, 4349, 4334, 4319, 4278

கவனிக்க வேண்டிய பங்குகள்

IDEA CELLULAR

இந்த பங்கில் உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவருகிறது, மேலும் 83 என்ற புள்ளியை நல்ல முறையில் கடந்து முடிவடைந்தால் உயர்வுகள் தொடர்ந்து நடைபெறும் அந்த வகையில் 83 என்ற புள்ளி முக்கியமான தடையாகவும், கடந்தால் BREAK OUT புள்ளியாகவும் அமையும் வாய்ப்புகள் உள்ளதை படத்தில் காட்டியுள்ளேன், மேலும் சந்தையில் இறக்கங்கள் வந்தால் 75 என்ற புள்ளியில் நல்ல SUPPORT இருப்பதினால் 79 TO 77, மற்றும் 75 என்ற புள்ளிகள் வந்தாலும் வாங்கலாம் இதன் S/L ஆக 75 என்ற புள்ளியை கடந்து முடிவடையவேண்டும் என்று வைத்துக்கொண்டு வாங்கலாம், இலக்காக 88 TO 89, 92, 98 TO 100 என்ற புள்ளிகள் அமையும்....

IDEA CELL CHART