Tuesday

NIFTY ON TUESDAY

18-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம் அமெரிக்க சந்தைகள் நேற்று இறக்கத்துடன் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET ஏற்றத்தில் உள்ளது இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் அதிகமாக தென்படுகிறது, இதன் தாக்கம் அப்படியே ஆசிய சந்தைகளிலும் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY OPEN மற்றும் LOW நிலைகளை ஒன்றாக பெற்று சற்று உயர்வுடன் தொடங்கினாலும் தற்பொழுது புதிய LOW புள்ளிகளை பெற்று மறுபடியும் உயர்ந்து உள்ளது,

மேலும் உலக சந்தைகளின் மேலும் கீழுமான ஆட்டம் இங்கும் தொடர்வதால் நமது சந்தைகளிலும் இது போன்ற ஆட்டம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் நமது தொடக்கம் உலக சந்தைகளின் அப்போதைய நிலையினை ஒட்டியே தொடங்கும் வாய்ப்புகள் இருப்பதினால், நாம் 4374, 4350, 4315 என்ற புள்ளிகளை நல்ல SUPPORT புள்ளியாகவும் 4403 TO 4410, 4425 TO 4430, 4450 என்ற புள்ளிகளை நல்ல RESISTANCE புள்ளிகளாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4403 TO 4410 என்ற புள்ளிகளுக்கு மேல் 4425 TO 4430 என்ற புள்ளிகளை நோக்கி நகரும், மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் 4450 என்ற புள்ளி அடுத்த தடையாக இருக்கலாம், ஆகவே 4450 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும், மேலும் தொடர்ந்து 4490 TO 4500 என்ற புள்ளியில் அடுத்த தடை வரும், மற்றும் இந்த 4500 என்ற புள்ளி முக்கியமானதும் கூட ஆக இந்த 4500 ஐ கடந்தால் அடுத்து 4600 TO 4620 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகும், அப்படி ஏற்படும் சூழ்நிலை வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

NIFTY தொடர்ந்து வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் 4374 என்ற புள்ளியை வலுவாக கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4350, 4320 TO 4310 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆக 4310 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் மேலும் இலக்காக 4215 TO 4200, 4148, 4107, 4050 TO 4030 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளதால் அதுபோன்ற சூழ்நிலைகள் வந்தால் அதனையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

NIFTY LEVELS

இன்று CHART UPDATE ஆவதில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப்ப கோளாறினால் UPDATE ஆகவில்லை, இதனால் NIFTY இன் நிலைகள் திருப்திகரமாக வரவில்லை ஆதலால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று தவிர்த்து விட்டேன்,

கவனிக்க வேண்டிய பங்குகள்

NDTV

169 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருப்பதால் இந்த புள்ளியை கடந்து CLOSE ஆனால் S/L ஆக வாங்கலாம் இலக்காக 191 என்ற புள்ளியை கொள்ளலாம், மேலும் இதற்க்கு சந்தை SUPPORT செய்யவேண்டும்