Thursday

Nifty Spot on 08-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம், இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு 5367, 5341, 5325 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் வீழ்ச்சிகள் எளிதாக இருக்கும், மேலும் 5408 TO 5433 வரைக்கும் தடைகள் இருக்கும்

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5367 TO 5370 என்ற புள்ளிகளில் SUPPORT எடுத்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும், அடுத்து தடையாக 5408, 5429 TO 5433 என்ற புள்ளிகளும் செயல்படும், இந்த புள்ளிகளுக்கு மேல் நல்ல உயர்வுகள் 5470 TO 5480 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை,

பொதுவாக நாம் ஒரு நல்ல உயர்வான பயணத்தின் இறுதி கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை மனதில் கொள்ளுங்கள், 5470 TO 5480 அல்லது 5500 என்ற புள்ளிகள் அதிக பலம் வாய்ந்த தடைகளை தன்னகத்தே கொண்டுள்ளது, இந்த புள்ளிகள் பலமாக உடைக்கப்பட்டு தொடர்ந்து முன்னேறினால் அடுத்து ஒரு 700 அல்லது 800 புள்ளிகளை மேலே கடக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு விடும்,

ஆனால் அதற்க்கான சூழ்நிலைகள் இப்பொழுது இருப்பது போல் தெரியவில்லை, மேலும் நமது முழு இலக்குகளான 5470 TO 5500 என்பது சற்றேறக்குறைய நிறைவடையும் நிலைக்கு அருகில் இருப்பதும், இந்த புள்ளிகளை ஒட்டியே தடைகள் வருவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை பறை சாற்றுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்,

மேலும் இந்த முக்கியமான தடை நிலைகள் வரைக்கும் செல்ல வேண்டும் என்ற எந்த வித அவசியமும் NIFTYக்கு இல்லை, அதே நேரம் உடனடியாக பெரிய இறக்கங்களை காட்டாமல் மெதுவாக இறக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது, ஆகவே குறிப்பிட்ட வகை பங்குகளை உயர்த்தி சந்தையை ஒரு மாதிரி தடுமாற வைத்து தின வர்த்தகத்திற்கு வாய்ப்புகளை வழங்கி ஏமாற்றுவார்கள்,

எச்சரிக்கையாக குறைந்த லாபங்களை மட்டும் இலக்காக வைத்து வெளியேறுங்கள் S/L களை கண்டிப்பாக கடைபிடியுங்கள், குறைந்த நட்டங்களுக்கு பயந்தால் பெரிய அளவிலான பயங்கரங்களை சந்திக்க வேண்டி வரும், மேலும் உங்களின் வர்த்தக அளவுகளையும் குறைத்து கொள்ளுங்கள், சிறிய வகை பங்குகள் நல்ல உயர்வுகளை அடைந்து வருவது கவனிக்க வேண்டிய விஷயம்,

இறந்க்கங்கள் வரும் சூழ்நிலைகள் இந்த மாத இறுதியில் வரும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது அதற்க்கா அலட்சியமாக இருந்து விடாதீர்கள் , இன்றைக்கு 5367 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகளும் தொடர்ந்து 5320 க்கு கீழ் தான் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளதாக தெரிகிறது …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5408 TARGET 5412, 5418, 5422, 5429, 5433, 5496 TO 5503

NIFTY SPOT BELOW 5367 TARGET 5354, 5342, 5432, 5325, 5260, 5243, 5225

கவனிக்க வேண்டிய பங்குகள்

இனி வரும் தினங்களில் சிறிய வகை பங்குகளில் கவனம் செலுத்தாலாம், அவைகளில் தான் நல்ல முன்னேற்றங்கள் தெரிகிறது, அந்த வகையில் BAJAJ HOLD, ABG SHIPYARD, PRISM CEM, INDIA CEM, PFC, BHARAT FORGE, போன்ற பங்குகளை கவனிக்கலாம, சந்தையில் இன்னும் சில நாட்களுக்கு மேடுபள்ளங்கள் உடன் கூடிய நகர்வுகள் இருப்பதால் அதிக நாட்கள் எந்த பங்குகளிலும் தங்கவேண்டாம், S/L ஐ கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய தருணம் இது ...