Tuesday

Nifty Spot on 13-04-10


உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்த இடத்தில் DOW JONES (11030) சற்று தடுமாறி நகர்ந்து வருகிறது, உலக சந்தைகளின் தற்பொழுதைய போக்குகள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY யின் நிலையும் தடுமாற்றத்துடனே காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது NIFTY SPOT க்கு 5330, 5323 TO 5320 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும், 5338, 5378, 5405 என்ற புள்ளிகள் தடைகளாகவும் செயல்படலாம்...

NIFTY SPOT

இன்றய சூழ்நிலைகளில் நமது NIFTY SPOTக்கு 5330, 5323 TO 5320 என்ற புள்ளிகள் முக்கியமான CHANNEL SUPPORT ஆக அமைந்து வருவதால், இந்த புள்ளிகள் கீழே பலமுடன் உடைபடுதல் என்பது சற்று சிரமமான காரியமாக தெரிகிறது, ஒருவேளை இந்த புள்ளிகள் உடைக்கப்பட்டால் தொடர் வீழ்ச்சிகள் இலகுவாக ஏற்படும் வாய்ப்புகள் கிடைக்கலாம்,

அதே நேரம் இந்த புள்ளிகளை தக்க வைத்து கொண்டால் எளிமையான ஒரு உயர்வுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல தோன்றுகிறது, இது போன்ற ஒரு சூழ்நிலைகள் வந்தால் 5320 என்ற புள்ளியை S/L ஆக கொண்டு BUYING ல் கவனம் செலுத்தலாம், உயர்வில் தடைகளாக கீழ் கண்ட புள்ளிகள் அணிவகுத்து நிற்கும்,

அதாவது 5338 முதல் தடையாகவும், 5378 இரண்டாவது தடையாகவும் செயல்படும், இறுதியாக 5405 என்ற புள்ளி நமது NIFTY யின் வர்த்தக பாதையையே தீர்மானிக்கும் பலமான தடையாக செயல்படும்,

அதே போல் இன்று 5318 என்ற புள்ளியை பலமாக கீழே உடைத்து தொடர்ந்து செல்லுமானால்! வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகளும், நாம் முன்னர் பார்த்தது போல் 5285 TO 5280 என்ற புள்ளிகளை கடந்தால் எளிமையான வீழ்ச்சிகள் NIFTY யின் இன்றைய நிலைகளை பொறுத்து அமைந்து விடும் வாய்ப்புகள் உண்டு, இது போல் ஏற்படின் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT IF HOLDS 5320 TO 5323 TARGET 5338, 5378 TO 5385, 5392 TO 5405, 5452, 5474, 5493

NIFTY SPOT BELOW 5318 TARGET 5296, 5285, 5224 TO 5218, 5205, 5189, 5177

கவனிக்க வேண்டிய பங்குகள்

INDIA CEMENT

Buy above 145.5 target 150, 154 to 156, 161, 170 s/l 142 positional call (always keep s/l, nervous market)