உலக சந்தைகள்
உலக சந்தைகளில் பதட்டம் தென்படுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு 5215, 5196 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் 5160, 5120 என்ற புள்ளிகளை நோக்கி மெல்ல இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, அதே போல் 5257 என்ற புள்ளி உயரங்களில் தடையாக செயல்படலாம்,,,
NIFTY SPOT
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 5257 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 5280 வரைக்குமான உயர்வுகள் சற்று பதட்டத்துடனும், ஒரு மாதிரியான FLAT என்ற நிலையிலும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே 5280 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் மேலே கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட உயர்வுகளை பற்றி சிந்திக்கலாம்,
அதே போல் இன்று 5233 என்ற புள்ளி உடைக்கப்பட்டால் கீழ் நோக்கிய நகர்வுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகும் என்றே தெரிகிறது, மேலும் 5215 என்ற புள்ளி கீழே உடைக்கப்பட்டால் முதல் இலக்காக 5160 என்ற புள்ளியும், அடுத்ததாக இரண்டு நாட்களுக்கு முன் உள்ள LOW புள்ளியையும் உடைத்து செல்லும் வாய்ப்புகள் இனி வரும் தினங்களில் ஏற்படலாம், அதாவது 5120 என்ற புள்ளியை நோக்கி,
இது போன்ற தருணங்கள் வந்தால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், மேலும் இன்றைய சந்தை இறங்கும் சந்தையாக இருக்குமேயானால் சற்று மந்தமாகவே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது…
NIFTY CHART
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5257 TARGET 5272, 5280, 5341, 5365, 5380
NIFTY SPOT BELOW 5233 TARGET 5215, 5196, 5175, 5166, 5145, 5115