Monday

தேசிய பங்குச்சந்தை 15-02-10


உடல்நிலை இன்னும் சற்று சிரமத்துடன் இருப்பதினால், மேலும் இரு தினங்கள் சற்று ஓய்வு தேவைபடுகிறது, ஆகவே சுருக்கமான பதிவு, மேலும் இந்த மாதம் 20 -02 -10  மற்றும் 21 - 02 - 10 ஆகிய தேதிகளில் கோவையில் நடத்தலாம் என்று இருந்த TECHNICAL வகுப்புகள் 27 - 02 -10  மற்றும் 28 - 02 - 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைத்துள்ளோம் உடல் நிலையின் காரணமாக ,  இனி இன்றைய விசயத்திற்கு வருவோம் 


NIFTY SPOT

4830 க்கு மேல் உயர்வுகள் இருந்தாலும் ஒவ்வொரு 20 புள்ளிகளிலும் தடைகள் இருப்பது தொடர் உயர்வில் மந்தமான போக்கை ஏற்படுத்தலாம், மேலும் 4920, 5000 என்ற புள்ளிகள் சற்று முக்கியமான தடை நிலைகள்,

4811 க்கு கீழ் வீழ்ச்சிகள் இருந்தாலும் ஒவ்வொரு 20 to 30 புள்ளிகள் இடைவெளியில் support உள்ளதால்!, கீழ் நோக்கிய நகர்வும் அதே மந்த கதியில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4720 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று நல்ல முறையில் இருக்கலாம், (அதாவது 4676, 4642, 4627, 4593)

WIPRO 665 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது இலக்கு 677, 686, (உங்கள் சொந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளுங்கள்)