Monday

NIFTY SPOT ON 07-06-10


NIFTY SPOT

டாலருக்கு எதிரான ஈரோவின் மதிப்பு வெகுவாக இறங்கியதன் எதிரொலி, அமெரிக்க சந்தைகளை தொடர்ந்து, உலக சந்தைகளும் தவிப்பில் உள்ளது. TECHNICAL ஆக பார்த்தோமேயானால் அமெரிக்க குறியீடு DOW தொடர்ந்து 9400 என்னும் புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது. (8000 புள்ளிகளை நோக்கி விரைவில் வரும் என்று நாம் முன்னர் பார்த்து இருந்தோம், இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது ).

மேற்கண்ட விசயங்களின் வெளிப்பாடாக நமது சந்தைகளும் GAP DOWN இல் தொடங்கும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து 4994, 4968* TO 4965*, 4934, 4924*, 4902** TO 4895** என்ற புள்ளிகள் எல்லாம் பலம் பொருந்திய SUPPORT புள்ளிகளாக NIFTY SPOT க்கு செயல்படும். ஒரு வேலை 4895 என்ற புள்ளி உடைபட்டால்? அடுத்து நல்லதொரு வீழ்ச்சிகள் நமது சந்தைகளுக்காக காத்து இருக்கும். அதே நேரம் 4780 என்ற புள்ளி NIFTY SPOT இன் நகர்வுகளின் அடுத்த கட்ட திசையினை முடிவு செய்யும் முக்கியம்மான KEY புள்ளியாக செயல்படும்.

இன்று 5006 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டாலோ, அல்லது இந்த புள்ளியை கீழிருந்து பலமாக மேலே கடந்து வந்தாலோ, அடுத்து ஒரு உயர்வுகள் கீழ் கண்ட புள்ளிகளை நோக்கி இருக்கலாம். அதாவது 4960, 4990, 5114, 5135 என்ற புள்ளிகளை நோக்கி உயர்வுகள் இருக்கலாம்...

சில தினங்களுக்கு முன்பாக அதாவது இந்த உயர்வின் தொடக்கத்தில் (4786) NIFTY SPOT ஆனது 5130 TO 5170 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக நாம் முன்னர் பார்த்து இருந்தோம். அதே போல் வெள்ளி அன்றைய சந்தையில் நல்ல உயர்வுகள் இருக்கும் சூழ்நிலைகள் TECHNICAL ஆக இருந்தாலும், சந்தையின் வெளிப்பாடு தினரலாகவே இருந்து வந்தது. ஆகவே நாங்கள் அனைவரும் எங்களது நிலைகளில் லாபங்களை உறுதி செய்து கொண்டு புதிதாக 5100 PUT ஐ 85 ரூபாய்க்கு வாங்கி வைத்து இருக்கின்றோம். நல்ல லாபத்திற்காக காத்தும் இருக்கின்றோம்…