உலக சந்தைகள்
உலக சந்தைகளில் ஏதும் பெரிய தாக்கங்கள் இல்லை, ஆனால் VOLATILE என்ற நிலையின் அடிச்சுவடுகள் மெல்ல எட்டி பார்ப்பது போல் தெரிகிறது. இன்று NIFTY SPOT க்கு 5303 தடை புள்ளியாகவும், 5270 நல்ல SUPPORT புள்ளியாகவும் செயல்படலாம் …
NIFTY SPOT
இன்று 5271 என்ற புள்ளியை நழுவ விடாமல் தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5290, 5303 என்ற புள்ளிகள் பலமாக உடைக்கப்பட்டு உலக சந்தைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்குமேயானால் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து அமையலாம். இது போன்று நிகழ்ந்து விட்டால்! அடுத்து ஒரு 20 நாட்களுக்குள் 5550 என்ற புள்ளியை அடையும் வாய்ப்புகள் நமது SPOT க்கு அதிகரிக்கும்.
அதே நேரம் தொடர்ந்து முன்னேறி வருவது "சங்கட்டமா இருக்காது" என்ற வடிவேலுவின் வார்த்தையினை ஞாபகம் செய்கிறது. இதன் உள் கருத்தை ஆழமாக சிந்தித்தோமேயானால் பயம் ஒரு பக்கம் இருந்து கொண்டே வருகிறது. அதே நேரம் சந்தை கீழே இறங்க முற்பட்டாலும் தற்பொழுது 5110 TO 5070 என்ற புள்ளிகள் அருமையான SUPPORT களை தரும் வாய்ப்புகளும் நிறைய உண்டு. குறைந்தது இந்த புள்ளிகள் வரைக்குமாவது வந்து விட்டு போனால் நல்லதாக இருக்கும்.
இன்று 5271 என்ற புள்ளிக்கு கீழ் நழுவும் சூழ்நிலை வந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகலாம், அதே நேரம் கீழ் நோக்கிய இலக்காக 5215 TO 5213 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. ஒரு வேலை தடை மற்றும் தாங்கு புள்ளிகள் இரண்டையும் NIFTY SPOT உடைத்து காண்பித்தால் VOLATILE என்ற நிலை சந்தையினை ஆட்சி செய்யலாம், ஏனெனில் அடுத்த வாரம் EXPIRY…
இன்று எப்படி சந்தையை எதிர்கொள்ளலாம்
திட்டம் 1 (NIFTY SPOT)
5270 க்கு கீழ் வந்தால் விற்று, பிறகு 5115 என்ற புள்ளியின் அருகில் வாங்க முயற்ச்சிக்கலாம் S/L 5303
5271 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டால் வாங்கி, 5303 என்ற புள்ளியின் அருகில் விற்கலாம் S/L 5270
திட்டம் 2
5303 என்ற புள்ளிக்கு மேல் வாங்கி இன்றைய நிலைகளை பொறுத்து விற்கலாம் S/L 5270
5303 என்ற புள்ளியை மேலே கடக்கவில்லை என்றால் இந்த புள்ளியின் அருகில் விற்று, 5271 என்ற புள்ளியின் அருகில் வாங்கி கொள்ளலாம் S/L 5303
இந்த சந்தையை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சொல்லுங்கள், இதனை தொடருவோம் …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5280 TARGET 5290, 5303, 5345, 5355, 5372, 5411, 5480
NIFTY SPOT BELOW 5271 TARGET 5215 TO 5213, 5194, 5183, 5175, 5160
கவனிக்க வேண்டிய பங்குகள்
RANBAXY
Buy above 449 Target 460, 465, 478, s/l 431 positional call