Monday

Nifty Spot on 03-05-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் சலசலப்பால் சற்று பயம் தெரிந்தாலும் இன்று NIFTY SPOT க்கு 5215 முக்கியமான SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிகளுக்கும் கீழ் சற்று சிரமமான சூழ்நிலைகள் காளைகளுக்கு ஏற்படலாம், மேலும் DOW JONES க்கு 10950 என்ற புள்ளிக்கு கீழ் தான் பிரச்சனைகள்! அது வரைக்கும் கவலை இல்லை, விவரமான பதிவுகள் உள்ளே…



NIFTY SPOT

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தையை அணுகுவதால், சந்தையின் தற்பொழுதைய நிலையை தெளிவாக அறிய வேண்டி ஒரு ஆழமான பார்வை பார்த்துவிடுவோம்,

கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளபடி NIFTY SPOT தற்பொழுது இரண்டு விதமான CHANNEL என்ற வடிவங்களுக்குள் நகர்ந்து வருகிறது, இதில் UPWARD RISING CHANNEL என்ற வடிவத்தின் SUPPORT பகுதிகளின் வெகு அருகில் தற்பொழுது NIFTY SPOT நகர்ந்து வருகிறது, மேலும் கடந்த வாரம் 5170 TO 5160 வரைக்கும் கீழே வரலாம் என்ற நிலை இருந்த பொழுதும்! இந்த UPWARD RISING CHANNEL என்ற வடிவத்தில் SUPPORT 5200 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் இருந்ததினால் இங்கிருந்து கடந்த வியாழன் அன்று உயர ஆரம்பித்து உள்ளது,

மேலும் தொடர்ந்து வந்த வர்த்தக தினங்களிலும் இந்த வடிவத்தின் SUPPORT பகுதிகளை தக்க வைத்து வந்துள்ளதையும் கவனித்தாக வேண்டியுள்ளது, தற்பொழுது இந்த CHANNEL அமைப்பின் SUPPORT பகுதிகளாக 5225 TO 5215 என்ற புள்ளிகள் செயல்படுகின்றன, ஒருவேளை இந்த புள்ளிகளை கீழே நழுவ விடும் சூழ்நிலை வருமேயானால் அடுத்து ஒரு 300 புள்ளிகளுக்கும் மேலான இழப்புகளை சந்திக்க வேண்டி வரும்,

அதே நேரம் DOWN WARD SLOPING HNS என்ற வடிவம் தற்பொழுது NIFTYல் அமைந்து வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம் கூட, மேலும் இந்த HNS அமைப்பு 5320 என்ற புள்ளிக்கு மேல் தான் BREAK OUT என்ற நிலையை பெரும் என்பதும் மற்றொரு விஷயம், இவைகளின் ஊடே சில INDICATOR களும் POSITIVE நிலையில் இருப்பதையும் கவனித்தால், நாம் கீழ் கண்ட முடிவகளுக்கு வரலாம்,

அதாவது தற்பொழுதைய சூழ்நிலையில் 5225 TO 5215 என்ற புள்ளிகளில் SUPPORT இருப்பதினால், இந்த புள்ளிகளின் அருகே NIFTY SPOT வரும் போது சற்று எச்சரிக்கையாக தொடர் உயர்வுகளுக்கு பயன்படுத்தலாம் , மேலும்  5215 என்ற புள்ளியை கடந்து ஒரு நாள் முடிவடைந்தால் S/L என்று வைத்துக்கொள்ளலாம், (கண்டிப்பாக S/L ஐ கடைபிடிக்க வேண்டும், ஒரு வேலை 5210 க்கு கீழ் முடிவடைந்தால் அடுத்து 4865 ஐ நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது),

அடுத்த CHANNEL இன் SUPPORT பகுதி 4850 என்ற புள்ளியில் உள்ளது, இதன் தடை பகுதி 5220 என்ற புள்ளியில் உள்ளது, சரி இன்றைய நிலைகளுக்கு வருவோம், இன்று 5284 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து இருக்கும், அதே நேரம் 5309 TO 5320 முக்கியமான தடையாக செயல்படலாம், இதற்க்கு மேல் நல்ல உயர்வு ஏற்படலாம்,

இதே போல் 5276 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளது, மேலும் 5222 TO 5215 முக்கியமான SUPPORT புள்ளிகளாக செயல்படலாம், இந்த புள்ளிகளுக்கு கீழ் சற்று எளிதான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்

NIFTY SPOT CHART




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5284 TARGET 5301 TO 5310, 5318 TO 5320, 5332, 5342, 5395 TO 5400, 5440, 5522

NIFTY SPOT BELOW 5276 TARGET 5264, 5244, 5222, 5215, 5187, 5151, 5125, 5115, 5058

கவனிக்க வேண்டிய பங்குகள்

HINDALCO

Buy around 177 to 175 Target 187 to 188.5, above 189 Target 198 to 200, s/l 173 close - positional call