Wednesday

Nifty Spot on 26-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு VOLATILE என்ற நிலையை தரலாம், மேலும் இது EXPIRY வாரம் வேடிக்கை பார்ப்பது சால சிறந்தது .

NIFTY SPOT

இன்று 4799 என்ற புள்ளி தக்கவைக்கப்படுமானால் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் சற்று அதிகம் என்றே சொல்லும் அளவிற்கு சூழ்நிலைகள் தெரிகிறது, மேலும் 4851, 4885 என்ற இந்த இரண்டு புள்ளிகளும் மேலே கடக்கப்பட்டால், அடுத்து ஒரு உயர்வு சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை.

அதே நேரம் இன்று 4799 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால் வீழ்ச்சிகள் ஏற்படுவதற்கான முதல் படியாக அது செயல்படும். மேலும் இன்றைய நிலைகளை பொறுத்து மெல்ல கீழிறங்கி, 4723 என்ற புள்ளியில் நல்ல SUPPORT எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளது.

ஒரு வேலை இந்த 4723 என்ற புள்ளி பலமாக உடைப்படுமானால், அடுத்து ஒரு நல்ல வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம்.

தற்பொழுது இனி வரும் நாட்களில் NIFTY SPOT இன் நிலைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம். கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடியும், முன்னரே நாம் பார்த்தது போலவும், 4800 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டுள்ளது. “அதே நேரம் இன்னும் இந்த புள்ளிக்கு கீழ் முடிவடைய வில்லை”

அடுத்து இந்த CHANNEL அமைப்பின் படி BREAK DOWN ஆனது, ஆனது தான். ஆகவே என்னை பொறுத்தவரை மீண்டும் நேற்றைய LOW புள்ளி உடைபட்டு, 4800 க்கு கீழ் முடிவடைந்தால், நாம் முன்னர் எதிர்பார்த்த 4100, 3700 என்ற புள்ளிகள் கண்டிப்பாக சாத்தியமாகும். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கூட இது சாத்தியம் என்றே சொல்ல தோன்றுகிறது.

அதே நேரம் இந்த CHANNEL அமைப்பு உடைபட்டு நல்ல கீழ் இறக்கத்தை நமக்கு தெரிவித்தாலும், சில INDICATOR கள் OVER SOLD என்ற நிலையில் இருப்பதை பார்க்க வேண்டியுள்ளது. இந்த படத்தில் உள்ள ADX என்ற INDICATOR ஐ பாருங்கள், இதில் சிகப்பு நிற கொடு உயரத்தில் இருப்பது சற்று நெருடலை தருகிறது, மேலும் RSI, STS போன்றவைகளும் உடனடி இறக்கத்தை குறிக்க வில்லை,

ஆகையால் மறுபடியும் ஒரு சிறிய உயர்வு இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது, அப்படியே உயர்ந்தாலும் 5050, 5130 என்ற புள்ளிகள் வரைக்கும் வரும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

இது போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் நீங்கள் முன்னர் வாங்கிய பங்குகளை விற்று விட்டு வெளியேறுங்கள். நாம் எதிர்பார்த்த 4100, 3700 என்ற புள்ளிகள் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி வருவதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆகவே எச்சரிக்கை தேவை...

NIFTY CHART


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4810 TARGET 4852, 4885, 4905, 4923, 4964 TO 4970, 4978, 5022, 5060,5130

NIFTY SPOT BELOW 4799 TARGET 4768 TO 4760, 4747, 4723, 4659, 4573, 4530, 4445

கவனிக்க வேண்டிய பங்குகள்

Zee ent support at 270 s/l 269 tr 280, 290

Wipro support at 624 tr 647, s/l 623