Thursday

Nifty Spot on 20-05-10

உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகளில் ஒரு பதட்டம் இல்லா நிலை தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு சுதந்திரம் கிடைக்கலாம், நல்ல பங்குகளில் கவனம் செலுத்தும் நேரம் என்று சொல்வது சரியாக இருக்கும், விவரங்கள் உள்ளே ,,,


NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 4928 க்கு மேல் உயர்வு இருக்கும் வாய்ப்புகளும் அப்படியே சிறிய மேடு பள்ளங்களுடன் கூடிய நகர்வுகளும் ஏற்போடலாம், அதே நேரம் சக்தியுடன் நகர தொடங்கினால் நல்ல உயர்வு ஏற்படுவதில் சிக்கல்கள் அதிகம் ஏதும் இருக்காது என்றே தோன்றுகிறது,

அடுத்து இன்று 4905 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் இருந்தாலும், 4896 TO 4872 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் வரைக்கும் நகர்வுகள் படு மந்தமாக தான் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் அதி முக்கியமான SUPPORT நிலைகள் இங்கு இருப்பதால், உயர முற்படலாம், ஒரு வேலை கீழே வந்தாலும் இந்த புள்ளிகளுக்கு கீழ் இன்றைய NIFTY யின் நிலையினை பொறுத்து நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

முக்கியமான விஷயம் :

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இருந்து இன்று வரை NIFTY SPOT ஒரு குறிப்பிட்ட CHANNEL அமைப்பில் தான் நகர்ந்து வருகிறது என்பது நாம் அறிந்ததே, இந்த CHANNEL அமைப்பின் இடையே NIFTY இது வரை மூன்று உயர்வுகளையும் மூன்று வீழ்ச்சிகளையும் சந்தித்து உள்ளது, இதில் ஒவ்வொரு முறையும் CHANNEL அமைப்பின் BOTTOM புள்ளிகளில் SUPPORT எடுத்து திரும்பி இருப்பதை நாம் கவனிக்கலாம்,

மேலும் இந்த CHANNEL BOTTOM LINE கூட 200 நாள் EMA ம் சேர்ந்து இருந்தால், அந்த இடத்தில் இருந்து நல்ல தொரு முன்னேற்றத்தை கடந்த முறை கொடுத்து இருப்பதையும் கவனிக்கலாம், அதே போல் CHANNEL BOTTOM LINE உடன்  இப்பொழுது 200 EMA சரியாக 4894 என்ற புள்ளியில் உள்ளது, மேலும் இது நேற்றைய இறக்கத்தில் உடைபடாமல் இருப்பதையும் படத்தில் சிகப்பு நிற கோட்டின் மூலம் அறியலாம், ஆகவே இங்கிருந்து ஒரு உயர்வு வரும் வாய்ப்புகள் மிக அதிகமாக தெரிகிறது, ஆகவே அதிக அளவு இறக்கம் கண்ட நல்ல பங்குகளாக பார்த்து வாங்கலாம்,

உதாரணமாக ICICI BANK, BHARATI TEL, HERO HONDA, REL INFRA, RIL, TISCO, KARNATAKA BANK, MARUTI, MM, SRI INFRA, LT, UNITED PHOS, RENUKA SUGAR போன்ற பங்குகளை கவனிக்கலாம், இந்த உயர்வுகள் NIFTY யில் 5200, 5250 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் இதற்க்கு S/L ஆக 4800 என்ற புள்ளியை கடந்து முடிய வேண்டும் என்று வைத்து கொள்ளலாம்,

ஒரு வேலை இந்த 4800 என்ற புள்ளியை கீழே கடந்து ஒரு இரண்டு நாள் முடிவடைந்தால் அடுத்து NIFTY யில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிகள் நடந்தே தீரும், ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நண்பர்கள் கண்டிப்பாக S/L ஐ கடை பிடியுங்கள், சரி கீழே உள்ள படத்தினை பாருங்கள்

NIFTY CHART




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4928 TARGET 4967, 4982 TO 4987, 5006, 5011 TO 5020, 5049, 5058 TO 5065, 5076, 5086, 5103

NIFTY SPOT BELOW 4905 TARGET 4896 TO 4892, 4883, 4872, 4823, 4816, 4752

கவனிக்க வேண்டிய பங்குகள்

அதிகமாக கீழ் இறங்கிய INDEX பங்குகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள், விரைவில் ஒரு நல்ல உயர்வு 5200 TO 5250 என்ற அளவுக்கு இருக்கலாம், இதற்க்கு S/L 4800 CLOSE