Tuesday

Nifty Spot on 18-05-10


கோவை வகுப்பிற்கு இன்னும் 4 இடங்கள் எஞ்சி உள்ளன, விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் குழப்பங்கள் தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளிலும் இருக்கும், இன்றைய சந்தை தின வர்த்தகர்களுக்கு சற்று சிரமத்தை தரும் சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம், எந்த பக்கமும் அதிக சக்திகள் இருப்பது போல் தெரியவில்லை, அதே நேரம் அந்த நேர உலக சந்தைகளின் நிலையை பொறுத்து மாற்றங்களும் வரலாம், ஆகவே அவ்வப்போது அங்கும் ஒரு பார்வை இருப்பது நலம் பயக்கும்

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5066 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் மேல் நோக்கிய நகர்வுகள் மெல்ல நிதானமாகவே செல்லும் சூழ்நிலைகளும் தெரிகிறது, மேலும் 5154 என்ற புள்ளியை மேலே கடந்து செல்வது சற்று கடினமான விசயமாகவே இருக்கும் போல் உள்ளது,

அதே போல் இன்று 5059 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆனாலும், இன்றைய நிலைகளை பொறுத்து நகர்வுகள் இருக்கும், பொதுவில் இன்றைய சந்தை தெளிவில்லாமல் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது, பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்,

பொதுவாக 4950 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் ஒவ்வொரு DOWN TREND லும் முக்கியமான SUPPORT ஆக செயல்பட்டு வருகிறது, இந்த புள்ளி FIBONACCI அளவுகளில் முக்கியமான 61.8% இல் அமைந்து உள்ளது, ஆகவே இந்த புள்ளியை கடந்து ஒரு இரண்டு நாட்கள் எதிர்மறையான போக்கில் முடிவடைந்தால்! அடுத்து நல்ல தொரு வீழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம், அப்படி இல்லாத சூழ்நிலையில் 5250 TO 4950 என்ற புள்ளிகளின் இடையே தொடர்ந்து ஆடும் வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கும்...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5066 TARGET 5085, 5094, 5117, 5132, 5154

NIFTY SPOT BELOW 5059 TARGET 5046, 5031, 5021, 4990, 4971, 4954, 4940, 4916 TO 4909, 4895