Tuesday

NIFTY SPOT ON 26-10-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஒரு சிறிய இறக்கத்திற்கு உட்பட்டு உள்ளது, இந்த நிலை தொடருமானால் இன்று நமக்கு உயர்வுகளில் SHORT SELLING செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், கூடவே EXPIRY நெருங்குவதால் மேடுபள்ளங்களுக்கும் பஞ்சம் இருக்காது, இருந்தாலும் இனிவரும் தினங்களில் உயர்வுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதால்; இறக்கங்களில் BUYING இல் கவனம் செலுத்தலாம்.

NIFTY SPOT இன்று

இன்று 6117 என்ற புள்ளி மேலே பலமுடன் கடக்கப்பட்டால் தொடர் உயர்வுகளை எதிர்பார்க்கலாம் இருந்தாலும் தடைகள் வெகு அருகருகே இருப்பதினால் தொடர் உயர்வுகளில் அவளவு சுவாரஸ்யங்கள் இருப்பது போல் தெரியவில்லை, அதே நேரம் உயர்ந்தே ஆக வேன்டியாய கட்டாயம் ஏற்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் மேடுபள்ளங்களுடன் கூடிய மெதுவான நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.

இன்று 6104 என்ற புள்ளி கீழே உடைக்கப்பட்டு; அதற்கும் கீழ் சற்று நேரம் நிலை கொண்டால் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், இருந்தாலும் 6066, 6040 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்பட வாய்ப்புகள் உள்ளது, ஒருவேளை இந்த புள்ளிகள் பலமுடன் கீழே கடக்கப்பட்டால் இன்றே நல்லதொரு இறக்கம் இன்றைய நிலைகளை பொறுத்து கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு.

பொதுவில் NIFTY SPOT இன் TECHNICAL நிலைகள் தொடர்ந்து 6280 க்கு மேல் செல்லும் வாய்ப்புகள் இனி வரும் தினங்களில் ஏற்படலாம் என்ற நிலை இன்னும் தொடருவதினால் 6060 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆக இருக்கும், இந்த புள்ளியை கீழே உடைத்து அதற்கும் கீழ் முடிவடையாமல் இருக்கும் வரை தொடர்ந்து மேல் நோக்கி நகர ஆனேக வாய்ப்புகள் உண்டு என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது,

ஆகவே 6060 தற்பொழுது NIFTY SPOT க்கு ஒரு நல்ல SUPPORT இதற்க்கு S/L ஆக 6040 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், ஆகவே இந்த EXPIRY யின் தாக்கத்தில் சந்தை கீழே வந்தால் மேற்கண்ட புள்ளிகளை மனதில் கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம் …

NIFTY SPOT CHART



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6117 TARGET 6127, 6144, 6158 TO 6162, 6175, 6190, 6224, 6239

NIFTY SPOT BELOW 6104, 6089, 6083, 6074, 6066, 6020 TO 6012, 5990, 5949

கவனிக்கவேண்டிய பங்குகள்

JINDAL STEEL
Buy above 723 Targets 733, 736, s/l 707

STERLITE IND
Buy above 174.5 Targets 178, 181, s/l 171

TATA STEEL
Buy above 614 Targets 625 to 628, 635, 646, s/l 605

AXIS BANK
Support at 1450, buy near this with s/l of 1450 close Target 1467, 1484, 1495, and 1530