Tuesday

இந்திய பங்குச்சந்தை - செவ்வாய் கிழமை

30-06-09

அமெரிக்க சந்தைகளின் உற்சாகமான முடிவு ஆசிய சந்தைகளில் தொத்தி கொண்டுள்ளது ஆசிய சந்தைகளின் முக்கியமான INDEX களின் வரைபடங்கள் இந்த உற்சாகம் தொடரும் என்ற என்னத்தை ஏற்படுத்துகிறது, இந்த உற்சாகம் தொடக்கத்தில் நமது சந்தைகளிலும் இருக்கும், அதே நேரம் SINGAPORE NIFTY ஐ பார்க்கும்போது தொடக்கத்தில் 55 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் அதற்க்கு மேல் தொடர்ந்து செல்லமுடியாமல் திணறி வருவதும் மேலும் கீழுமான ஆட்டம் இருப்பதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்..

இன்று GAP UP OPEN இருந்தாலும் அந்த நேர உலக சந்தைகளின் நிலைகளை வைத்து சற்று பொறுத்து வர்த்தகத்தை துவங்கலாம், மேலும் NIFTY க்கு 4450 என்ற புள்ளி உயருவதற்கும், 4350 என்ற புள்ளி கீழே வருவதற்கும் ஏற்ற புள்ளிகளாக இருப்பதால் இந்த புள்ளிகள் வரும் போது சற்று கவனமாக இருங்கள்

NIFTY யில் நாம் நேற்று எதிர்பார்த்து போல 4350 என்ற புள்ளியில் சரியாக SUPPORT எடுத்து மேலே நன்றாக உயர்ந்தது, இருந்தாலும் 4440 என்ற புள்ளியின் அருகில் திடீரென்று வந்த SELLING PRESSURE NIFTY ஐ பழைய நிலைக்கே கொண்டு வந்தது, ஆகவே உயரங்களில் SELLING PRESSURE இனி அடிக்கடி வரும் வாய்ப்புகள் இருப்பதால் உங்கள் லாபங்களில் எப்பொழுதும் கவனமாக இருப்பது சிறந்தது, அதிகமாக ஆசைப்படாமல் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்,

இனி வரும் நாட்களில் BUDGET இன் தாக்கம் இருக்கும் புரளிகளின் அடிப்படையில் சில பங்குகள் திடீரென உயரும், சந்தை மேடுபள்ளங்களை சந்திக்கும், முக்கியமாக POWER SECTOR மற்றும் வங்கிகளுக்கு நல்ல செய்திகள் இருப்பதாக சந்தையில் செய்திகள் உலா வருவதால் இந்த பங்குகள் ஆடி கொண்டுள்ளது, ஆகவே BUDGET முடியும் வரை சந்தை இங்கிருந்து திரும்பும், இல்லை இல்லை தொடர்ந்து உயரும் என்று அறுதி உறுதி இட்டு சொல்வது தவறாகவே இருக்கும்,

எது எப்படி இருந்தாலும் NIFTY TECHNICAL ஆக 4520 என்ற புள்ளியை அடைய வேண்டும் என்று நேற்று நாம் பார்த்து போல கண்டிப்பாக அடையும் வாய்ப்புகள் இருக்கும், மேலும் உயரங்களில் எதிர்பார்க்காத தருணங்களில் SELLING PRESURE வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் STOCK SPECIFIC நகர்வுகளும் இருக்கும், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

நிபிட்டி ஐ பொறுத்த வரை இன்று 4400 என்ற புள்ளிகளுக்கு மேல் உயருவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் வெகு அருகருகே தடைகளும் உள்ளதை குறிப்பிட வேண்டியுள்ளது அதாவது 4420, 4433, 4444, 4450 என்ற புள்ளிகளில் தடைகள் இருப்பதாக தெரிகிறது ஆகவே இந்த 4450 என்ற புள்ளியை மேலே கடந்தால் தான் அடுத்து 4485, 4520 என்றும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது,

அதே போல இன்று நிபிட்டி தொடர்ந்து கீழ் இறங்க வேண்டுமாயின் நேற்று சொன்னது போல 4350 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், அப்படி கீழே கடந்து உலக சந்தைகளும் இறங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துமாயின் NIFTY 4260 TO 4250 என்ற புள்ளிகள் வரை இன்றே வரலாம், ஆகவே இந்த புள்ளிகளில் நீங்கள் சற்று கவனமுடன் செயல் படவேண்டிய சூழ்நிலைகள் வரும் கவனமாக இருங்கள்....

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4420 TARGET 4433, 4450, 4478 TO 485, 4515 TO 4530, 4550, 4600

NIFTY SPOT BELOW 4368 TARGET 4350, 4310, 4293 TO 289, 4260, 4230 TO 228, 4206, 4168

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY ABB ABOVE 811 TARGET 829 TO 830, 834, 840, 844, 851, S/L 802

SELL ABB BELOW 802 TARGET 795, 789 TO 786, 784, 762, S/L 811

BUY BANK OF BARODA ABOVE 458 TARGET 463, 475, 478, 485, S/L 446

BUY BANK OF INDIA ABOVE 365 TARGET 376 TO 378, 388, S/L 356