Monday

NIFTY ON MONDAY

29-06-09

அமெரிக்க சந்தைகள் வெள்ளியன்று கலந்து முடிந்திருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் நடந்து வருகிறது, இதனை பின் தொடர்ந்து ஆசிய சந்தைகளும் தொடக்கத்தில் உயர்ந்து காணப்பட்டாலும் தற்பொழுது கீழ் இறங்கியே நடந்து வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் ஒரு வித பதட்டம் ஏற்ப்படும், மேலும் இன்றைய சந்தைகள் VOLATILE என்ற முறையில் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தென்படுகிறது, மேலும் SINGAPORE NIFTY இன நிலையிலும் இது வெளிப்படுகிறது,

இன்றைய சந்தைகளில் NIFTY க்கு 4350 TO 4330 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது, ஆகவே இந்த புள்ளிகளில் NIFTY SUPPORT எடுக்கும் பட்சத்தில் இந்த புள்ளியின் அருகில் பங்குகளை வாங்கலாம் இன்று NIFTY க்கு 4350 TO 4330 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும், அதே போல் உயருவதற்கான ஏற்பாடாக NIFTY இன INTRADAY CHART இல HEAD & SHOULDER அமைப்பு உருவாகியுள்ளதை படத்தில் குறிப்பிட்டு உள்ளேன், மேலும் நமது சந்தைகளில் இறக்கங்கள் வந்தால் 4140 என்ற புள்ளியை S/L ஆக வைத்து நல்ல பங்குகளை வாங்கலாம், ஆனால்

NIFTY INTRA DAY CHART


கடந்த இரண்டு தினங்களாக சந்தைகளில் சொல்லிக்கொள்ளும்படியான VOLUME உடன் எந்த பங்குகளும் ஏற வில்லை, மேலும் MIDCAP மற்றும் SMALL CAP பங்குகள் சுத்தமாக உயரவில்லை, மொத்தத்தில் வெள்ளியன்றைய உயர்வு எதோ வலுக்கட்டாயமாக உயர்த்தி வைத்தது போல் தான் அமைந்தது. முக்கியாமான கீழ் இறங்கியுள்ள பங்குகளை VOLUME மே இல்லாமல் உயர்த்தி இருந்தது சற்று கவலை கொள்ள செய்கிறது, ஆகவே நீங்கள் வாங்கிய பங்குகளில் லாபங்கள் வரும் போது அடிக்கடி லாபம் பார்த்துவிடுங்கள், தின வர்த்தகர்கள் S/L ஐ கண்டிப்பாக கடை பிடியுங்கள்

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4390 க்கு மேல் உயர்வுகள் இருக்கும் அதாவது4520 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் 4450, 4480 என்ற புள்ளிகள் தடைகளையும் தரலாம், அதே போல் 4350 க்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் மேலும்4290 என்ற புள்ளிகள் வரைக்கும் விரைவான வீழ்ச்சிகள் இருந்தாலும் அதன் பிறகு4200 வரைக்கும் ஒரு மந்தமான போக்குகளும் தெளிவற்ற நகர்வுகளுமே காணப்படும், இந்த புள்ளிகளுக்கு இடையே சந்தை மாட்டிக்கொண்டால் ஒரு போரான சந்தையை சந்திக்க வேண்டிவரும், மேலும் இது போன்ற சூழ்நிலைகள் இருப்பதானால் சந்தையில் வீழ்ச்சிகள் இருப்பதை விட உயர்வுகள் சாத்தியமானதாக தெரிகிறது இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்தே நமது சந்தைகளிலும் இன்றைய நகர்வுகள் இருக்கும்

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4390 TARGET 4420 TO 421, 4450, 4480, 4520, 4537, 4550, 4580

NIFTY SPOT BELOW 4352 TARGET 4332, 4293, 4280, 4273, 4260, 4243, 4223 TO 220, 4214 TO 4206, 4155, 4150, 4143, 3985

கவனிக்க வேண்டிய பங்குகள்

STRIDES ARCO LAB (STAR)

இந்த பங்கில் தொடர்ந்து நல்ல VOLUME மற்றும் மேலும் தொடர்ந்து உயருவதற்கான அமைப்புகள் உள்ளதால் இந்த பங்கை 156 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 165, 180 என்று வைத்துக்கொள்ளுங்கள் S/L 151