Thursday

NIFTY ON THURSDAY

18-06-09

அமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்துள்ளன, ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடனும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் சற்று இறக்கத்துடனும் உள்ளது, ஆனால் அமெரிக்க FUTURE MARKET சற்று உயர்வுகளை காட்டுவது ஆசிய சந்தைகளில் ஒரு சிறிய உயர்வை ஏற்படுத்தலாம், அங்கு உயர்வுகள் ஏற்படும் பட்சத்தில் நமது சந்தைகளில் ஒரு DEAD RALLY இருப்பதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, இதனை உறுதி செய்யும் விதமாக SINGAPORE NIFTY 15 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து 35 புள்ளிகள் மேலே சென்று தற்பொழுது 20 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருக்கின்றது , உயர்வுகள் இருந்தாலும் அனைவரின் மத்தியிலும் ஒரு விதமான பயம் குழப்பம் , தெளிவின்மை எல்லாம் இருப்பதால் சந்தையிலும் இதன் வெளிப்பாடு VOLATILE என்ற நிலையில் இருக்கும் எப்படி பார்த்தாலும் இன்றைய சந்தை சற்று சுவாரசியாமானதாகவே இருக்கும் ...

நேற்று நாம் பதிவில் பார்த்தது போல் நமது சந்தைகளின் இக்கட்டான நிலைமை என்ன வென்று புரிந்து இருக்கும், அதாவது இன்னும் 2, 3 தினங்களுக்குள் சந்தை தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நாம் நேற்று பேசிக்கொண்டது போல் நேற்றே தனது நிலைப்பாட்டை சந்தை வெளிப்படுத்தியுள்ளது, தற்பொழுது ஒரு DEAD RALLY இறப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை, அப்படியே உயர்ந்தாலும் 4590 TO 4620 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது அதற்க்கு மேல் செல்லுமா என்பது கேள்விக்குறி தான்,

சரி இப்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன நமது முதலீடுகளை கைகளில் பத்திரமாக வைத்துக்கொண்டு நல்ல வாய்ப்புக்காக காத்து இறப்பதே நன்று, வித்த பணம் கையில் இருக்கு சந்தையும் கீழே இறங்கி இருக்கு SCRIPT எல்லாம் நல்லாவே இறங்கி இருக்கு இப்போ வாங்கிப்போட்டு வைப்போம் என்று நுழைந்து விட வேண்டாம், இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் BEAR MARKET இன்னும் முழு வீச்சுடன் ஆரம்பிக்க வில்லை, அப்படி ஆரம்பம் ஆகும்போது பங்குகள் நல்ல ஒரு விலைக்கு வரும் அப்பொழுது நான் ஒரு பங்குப்பட்டியல் தருகிறேன் அதில் விருப்பம் இருந்தால் முதலீடு செய்யுங்கள்,

நான் முன்னர் சொன்ன SUPPORTIVE TREND LINE இன்று 4265 என்ற புள்ளியில் உள்ளது மேலும் தற்பொழுது உள்ள நிலைமையை வைத்து பார்க்கும்போது NIFTY 3400 TO 3350 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர வாய்ப்புகள் உள்ளது உடனே வரும் என்று கூற வில்லை மெல்ல மெல்ல வரும், அதே நேரம் 4700 ஐ மேலே கடந்தால் இந்த வீழ்ச்சிகள் உருகுலைந்து விடும், உங்களை பயபடுத்த சொல்ல வில்லை இருந்தாலும் எச்சரிக்கை செய்ய வேண்டியது எனது கடமையாக நினைக்கின்றேன், ஆகவே அவசரப்பட்டு வாங்கி விட வேண்டாம் பொறுத்து இருங்கள்...

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4370 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் 4375 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை, இவ்வாறு ஏறும் உயர்வானது DEAD RALLY என்ற வகையில் இருக்கும் அதாவது அதிக பட்சமாக 4590 TO 4620 என்ற புள்ளிகளை நோக்கி செல்லலாம்

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4375 TARGET 4400, 4430, 4455, 4470, 4510 TO 4517, 4538, 4590 TO 4620

NIFTY SPOT BELOW 4320 TARGET 4272, 4240, 4223, 4200, 4153, 4117, 4092, 4054, 3980

கவனிக்க வேண்டிய பங்குகள்

REL CAP BUY ABOVE 941 TARGETS 969 TO 970, 985 TO 990, 1010, 1030, S/L 922

SELL BELOW 922 TARGETS 896, 869, 856, 846, S/L 941