Monday

NIFTY ON MONDAY

22-06-09

உலக சந்தைகளில் ஆசிய சந்தைகள் உயரங்களில் உள்ளது, தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 25 புள்ளிகளை இழந்து தொடங்கினாலும் மறுபடியும் 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலைக்கு வந்து (LOW புள்ளியில் இருந்து 45 புள்ளிகள் உயர்வு ) தற்பொழுது 20 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் உள்ளது, இதன் தாக்கமாக நமது சந்தைகளிலும் நல்ல தொடக்கம் இருக்கும், இருந்தாலும் சில தடுமாற்றங்கள், திடீரென உயர்வு இப்படி மாறி மாறி வரும் மேலும் F&O EXPIRY வேறு அருகில் இருப்பதானாலும் தொடர்ந்து கீழே இறங்கி வந்த சந்தை தற்பொழுது இந்த EXPIRY ஐ எப்படி முடிக்கும் என்ற குழப்பங்களினாலும் சில தடுமாற்றங்கள் இருக்கும் இருந்தாலும் உயர்வுகளில் முடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம், பார்த்து வர்த்தக் செய்யுங்கள்...

NIFTY கடந்த வெள்ளியன்று தொடர்ந்து கீழே இறங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தி தொடர்ந்து உயர்ந்துள்ளது, இதே போல தான் 2539 என்ற புள்ளியில் தொடர்ந்து இறங்குவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உயர்ந்தது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, சரி தற்பொழுது NIFTY இன் நிலை என்ன அது தொடர்ந்து என்ன செய்யும் அதில் நாம் எப்படி பங்கு கொள்வது என்று பார்ப்போம், அதாவது கீழே NIFTY இன் CHART படம் கொடுத்துள்ளேன், அந்த படத்தில் இரண்டு FIBONACCI அளவுகளும், இரண்டு MOMENTUM TREND LINE உம் கொடுத்துள்ளேன், இந்த விசயங்களை நாம் இப்பொழுது மிகவும் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டியுள்ளது,

அதாவது NIFTY யில் 2539 என்ற புள்ளியில் இருந்து 4693 என்ற புள்ளி வரைக்குமான FIBONACCI அளவுகளின் படி 23.6% SUPPORT புள்ளி சரியாக 4185 என்ற புள்ளியில் இருக்கின்றது, அதே நேரம் NIFTY யில் 4092 என்ற புள்ளியில் இருந்து 4693 என்ற புள்ளி வரைக்குமான FIBONACCI அளவுகளின் படி 85.4% SUPPORT புள்ளி சரியாக 4180 என்ற புள்ளியில் இருக்கின்றது, இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த இரண்டு புள்ளிகளையும் இன்னும் NIFTY கீழே கடக்கவில்லை, தற்பொழுது அருகில் வந்து SUPPORT (4205) எடுத்து பலமாக திரும்பியுள்ளது,

மேலும் நான் முன்னர் MOMENTUM TREND LINE பற்றி சொல்லி அதை NIFTY 4250 என்ற புள்ளிகளில் கீழே கடந்துள்ளது என்று சொல்லி இருந்தேன் இல்லையா, இந்த TREND LINE ஐ CHART இல் நாம் இரண்டு முறையில் வரையலாம் அதாவது SEMI LOG TREND LINE TOOL மூலமாகவும் AND NORMAL TREND LINE TOOL மூலமாகவும், அப்படி SEMI LOG TREND LINE TOOL ஐ பயன்படுத்தி நான் வரைந்ததில் 4250 என்ற புள்ளி SUPPORT ஆக இருந்தது ஆனால் NORMAL TREND LINE TOOL மூலம் வரைந்ததில் தற்பொழுது NIFTY க்கு 4202 என்ற புள்ளி இந்த MOMENTUM TREND SUPPORT ஐ தருகிறது மேலும் அந்த கோட்டினை NIFTY இன்னும் கீழே உடைக்க வில்லை, இந்த இரண்டு படங்களையும் கொடுத்துள்ளேன் பாருங்கள், நான் பொதுவாக SEMI LOG TREND LINE TOOL ஐ தான் பயன் படுத்துவது மேலும் அதன் ACCURACY நன்றாக இருக்கும், அதன் படி பார்த்தால் MOMENTUM TREND LINE ஏற்கனவே உடைபட்டுள்ளது(பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று),

ஆகவே இந்த உயர்வானது 4460, 4520, 4550 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரலாம், இதில் முக்கியமானது என்ன வென்றால் NIFTY 4693 என்ற புள்ளியை மேலே கடந்தால் NIFTY புதிய உயரங்களை அடையும் அதாவது 4800, 4900 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது, அப்படி இல்லாமல் கீழே வந்து இந்த முக்கியமான புள்ளிகளான 4150, 4090 என்ற புள்ளிகளை எல்லாம் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் நாம் எதிர்பார்த்தது போல 3500 ஐ நோக்கி வரும், ஆகவே இப்பொழுது உங்களின் SHORT POSITION களை முடித்துக் கொள்ளுங்கள் மறுபடியும் CONFORMATION கிடைத்த பிறகு மாறிக்கொள்ளலாம்...

NIFTY CHART



NIFTY இன்றைக்கு பொறுத்த வரை 4445 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து 4375 என்ற புள்ளிகள் வரை உயரும் அதே நேரம் இந்த புள்ளிகளுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும், அதே நேரம் கீழே 4295 TO 4280 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் மேலும் 4220, 4200, 4180, 4160 என்று வரிசையாக அருகருகே SUPPORT இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4337 TO 4345 TAR 4375, 4406 TO 4415, 4446, 4520, 4535 TO 4550

NIFTY SPOT BELOW 4295 TARGET 4275, 4255TO 4245, 4220, 4200, 4188, 4160, 4150, 4100 TO 4090

கவனிக்க வேண்டிய பங்குகள்

INDIA INFO LINE

இந்த 120 க்கு அருகில் வந்தால் வாங்கலாம் இதன் S/L ஆக 109 என்று வைத்துக்கொள்ளுங்கள் 120 க்கு கீழ் 115, 112 என்று கீழ் வரவும் வாய்ப்புகள் இருப்பதால் கீழே வந்தாலும் வாங்கலாம் இதன் இலக்கு 135, 145, 155 என்று இருக்கும் இதை SWING TREAD என்ற முறையில் வர்த்தகம் செய்யலாம் (1 WEEK HOLDING)

COLGATE ABOVE 556 TR 567, 572, S/L 543

வங்கி பங்குகள் மற்றும் IT பங்குகளில் கவனம் செலுத்தலாம்